Sunday, 18 September 2011
கீதை இடைச் செருகலா- பகுதி 2
Sunday, 11 September 2011
கீதை இடைச் செருகலா- பகுதி 1
ஜெயமோகனின் பதிவினை அடைய இங்கே சுட்டவும்
சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்
இதைப் சற்று பதம் பிரித்துச் சொன்னால் எளிதாகி விடும்
மந்யே = நினைக்கிறேன்
நிக்ரஹம்= அடக்குவது
வாயோரிவ= காற்றைப் போல
ஸூதுஷ்கரம்= சாத்தியம் இல்லாத விஷயம்
தஸ்ய= மனதின்
க்ருஷணா இந்த மனதின் சஞ்சலம் என்பது காற்றை அடக்குவது போல சாத்தியமில்லாத சங்கதி என்று நினைக்கிறேன் என சொல்கிறான் .
மாதி என்றால் கலக்குவது, கடைவது ( அம்ருத மதனம் என்றால் பார்க்கடலைக்
கடைவது)
கொடுத்தான் ?
அர்ஜுனன் சொல்வதை ஆமோதிக்கிறான் கண்ணன்
”அஸம்சயம் மஹாபஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்”
அஸம்சயம் = சந்தேகமில்லை
சலம் = சஞ்சலம்
மஹாபஹோ= மாவீரனே
துர்நிக்ரஹம் = கெட்டதை அடக்குதல்/ அழித்தல்
ஆனால் இது சாத்தியமில்லாத விஷயமில்லை
Conviction, persistence இரண்டும் இருந்தால் சாத்தியம்
வைராக்கியமும் , விடா முயற்சியும் தேவை அதான் Conviction, persistence
மனசு அது கட்டுப்படாமல் அங்கே இங்கே எனத் தாவும் இயல்பானது தான்
அது நிலையில்லாத அஸ்திரம் ( அஸ்திரம் என்ற வார்த்தைக்கு நிலையில்லாதது,
எய்வதற்குண்டானது என பொருள்)
“யதோ யதோ நிச்ரதி மநச சஞ்சலம் அஸ்திரம்
ததஸ்தோ நியமயைத ஆத்மந யேவ வசம் நயேத்”
மனதிற்கு தன்னைத் தவிர மற்றதையெல்லாம் தெரியும். அது மற்றதைக் கண்டு நாடி
ஓடிடும் இயல்பானது மனதுக்கு மனது தெரியும் போது ஆத்மாவின் தரிசனம் கண்டு
அது அடங்கிவிடும் ;அதனால் மனதை மனதிலே அது அதையே அறியச் செய்ய வேண்டும்
அதுதான் மனதை வசப்படுத்தும் வழி
அதற்கு வைராக்கியமும் விடாமுயற்சியும் தான் வழி
இங்கே இப்படி இருக்கும் அர்ஜுனனுக்கு பக்குவம் வரும் இடமும் இருக்கு
யுத்தம் முடிந்த பின் இருதரப்பிலும் இறந்துபட்ட குருவம்சத்தாரின் உடல்களின் அடக்கம் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்கடன்களை மஹரிஷி தௌம்மியரைக் கொண்டு தர்மன் செய்கிறான். ஈமக் கடன்கள் செய்து முடித்த நிலையிலே அவன் மிகுந்த சோகத்திலே இருக்கிறான், இத்தனை மரணங்களா என்ற எண்ணம் அவனை மிகவும் துயரப்படுத்துகிறது
இந்நிலையில் தான் அரசனாகப் பொறுப்பும் ஏற்க வேண்டும். உறவினர்களின் மரணம்
என்ற கவலை ராஜ்யப் பொறுப்பேற்க்க வேண்டிய கடமைமையினையும் தாண்டி அவனை
வாட்டுகிறது.
தனக்கு அரசப் பதவி வேண்டாம். காட்டுக்குப் போய் தவ வாழ்க்கை மேற்கொண்டு
அங்கேயே மடிகிறேன் என்ற நிலைக்கு வருகிறான்
அவனை திருதராஷ்டிரன், தௌம்மியர், வியாசர், க்ருஷ்ணர், அர்ஜுனன், பீமன்,
நகுலன், சகாதேவன், திரௌபதி எல்லோரும் தேற்றுகின்றனர்
இதிலே மற்றெல்லோரது அறிவுரைகளைவிட அர்ஜுனனது அறிவுரை முற்றிலும்
வேறுபட்டு நிற்கிறது (க்ருஷ்ணனிடம் கீதை கேட்ட Effect !!!!)
பார்க்கவ என்ற அஸ்திரத்தால் கர்ணம் பாண்டவர்களை மிகவும் தொந்தரவு
செய்துவிட்டான் ;கர்ணனை வெல்வது கடினம் என்ற முடிவுக்கு தர்மன் வருகிறான்
(இவர் இப்படி அடிக்கடி அவரை வெல்வது கடினம் இவனை வெல்வது கடினம் என்ற சஞ்சலமனத்துடனே போர் நடக்கும் எல்லா நாட்களிலும் தவறாமல் குழம்பியிருக்கிறார்)
அதனால் போர்க்களத்திலிருந்து பாசறைக்குத் திரும்புகிறான். போர்களத்தின் வேறுபக்கத்தில் வேறு பக்கம் இருந்த அர்ஜுனன் பின்னர் தர்மன் பாசறைக்குத் திரும்பியதை அறிந்து அவருக்கு என்ன ஆனதென்று அறியும் அவாவில் அவனும் கண்ணனும் தர்மனின் பாசறைக்கு வருகின்றனர். தர்மன் படுகாயம் அடைந்திருக்கலாமோ என வரும் வழியில் அர்ஜுனனும் க்ருஷணனும் சொல்லிக் கொண்டே வருகின்றனர்
இருவரையும் பார்ர்கும் தர்மனின் மனதில் இப்படி ஓர் எண்ணம் : “போரின் இடையிலே தாம் தான் மனக் கலக்கத்தில் இருந்தோம். பாசறைக்கு வந்துட்டோம் ஆனால் அர்ஜுனன் அப்படி பாதியிலே வரக் கூடியவனில்லையே அதுவும் கண்ணனும் உடன் வருகிறான். ஒரு வேளை அர்ஜுனன் கர்ணனை மாய்த்து விட்டானோ அதை நேரில் என்னிடம் சொல்ல ஓடோடி வந்திருப்பானோ”
இந்த எண்னம் தோன்றியவுடன் அது நிஜமாக இருக்க வேண்டும் என்ற ஆவலும் அவனுக்குத் தோன்றியது. ஆகவே அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் வரவேற்க பாசறை வாசலுக்கே வந்துவிடுகிறான் தர்மன் தர்மன் காயம் அடைந்திருக்கலாம் என நினைத்த அர்ஜுனனுக்கும்
கிருஷ்ணனுக்கும் ஓடி வரும் தர்மனைப் பார்த்து மிக்க சந்தோஷம். ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை பூக்கின்றனர்.
இந்த சந்தோஷப் புன்னகையும் பார்த்த தர்மன், ”நாம் கொண்ட எண்ணம் சரிதான் போலிருக்கு. யுத்தத்திலே கர்ணனனை வென்று கொன்றே இங்கு என்னிடம் ஆசி வாங்க வந்துள்ளான் தம்பி” என தன்னுடைய யூகத்தை தனக்குள்ளேயே வலுப்படுத்துகிறான்
அண்ணன் தர்மனுக்கு காயமில்லை அவர் நன்றாகவே இருக்கிறார் எனத் தெரிந்த அர்ஜுனன் சந்தோஷ மிகுதியில் ,” அண்ணா என்னை ஆசிர்வதியுங்கள்” என தர்மன் காலில் பணிகிறான்
இப்போது தர்மன் நிலையினைப் பாருங்கள். கர்ணன் மடிந்தான் என நிச்சயமே செய்து கொண்டான் தர்மன்.
‘அர்ஜுனா கர்ணனை நீ எப்படி கொன்றாய் விஸ்தாரமாக எனக்குச் சொல்ல வேண்டும் “ என கேட்கவும் செய்தான்
தான் இன்னும் கர்ணனைக் கொல்ல வில்லை என்பதை அர்ஜுனன் சொல்கிறான் வந்ததே தர்மனுக்குக் கோபம். கர்ணன் மடிந்தான் என்பது தன் யூகமே என்பதை மறந்தான். அர்ஜுனனை கண்டபடி ஏசினான்
“நீயா சிறந்த வில்லாளி உன் காண்டீபத்தை யாரிடமாவது கொடுத்துவிடு அதை நீ இன்னமும் ஆயுதமாகத் தரிப்பதை நான் சகிக்கமாட்டேன் “ என்ற அளவுக்குப் போய்விட்டது தர்மனின் கோபம்
அர்ஜுனனும் சும்மா இல்லை , “ என் காண்டீபத்தைப் பழிப்பவர் உயிரை எடுப்பேன் இல்லையேல் என்னை நானே மாய்த்துக் கொள்வேன் “ என சபதம் செய்திருக்கிறேன். இதோ உங்களைக் கொல்கிறேன்” என்ற அளவுக்கு அவனும் சூடாகிவிட்டான்
என்ன நடந்திருக்கும்
அதான் ட்ரிக் மாஸ்டர் பக்கத்திலேயே இருக்காரே
இருவரையும் சமாதானம் செய்கிறார் ஆனாலும் அர்ஜுனன் தான் காண்டீபத்தை அவமதித்தவரை கொல்லாமல் விட்டால் தன் சபதம் என்னாவது எனக் கேட்க அதற்கும் கண்ணன் வழி சொல்கிறான்
“அர்ஜுனா. நீ உன் அண்ணன் தர்மனை. நன்றாகப் பழித்துப் பேசு அது அவனைக் கொல்வதற்குச் சமம்”
” சரி கண்ணா அப்படி நான் பேசிய பின் அண்ணனை இழித்துப் பேசிய எனக்கு என்ன தண்டனை”
“அது சரி அண்ணனைக் கொன்றாலும் தப்பில்லை ஆனால் இழித்துப் பேச மறுக்கும் பாசக்காரத் தம்பிதானே நீ அதற்கும் ஒரு மாற்று வழி வைத்திருக்கேன். தர்மனைத் தீட்டி இழித்துப் பேசியபின் நீ உன்னை நீயே புகழ்ந்து கொள் அதுவும் மரணத்திற்குச் சமம்” அர்ஜுனன் அப்படியே பர நிந்தை ஆத்ம ஸ்துதி செய்தான்
இந்த யோசனைப்படி கிருஷ்ணன் அந்த இக்கட்டான சூழலை சமாளித்தான் என காட்டுகிறார் வியாசர்
ஆத்ம ஸ்துதி, பர நிந்தை- அதாவது தற்புகழ்ச்சியும், பிறரை இகழ்வது
இரண்டுமே ஒரே மாதிரி தான்
தர்ம்ம் எது என அவர் கேட்கும் கேள்விகளுக்கு பலர் விடை சொல்லுகின்றனர். ஏன் தர்மர் இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்பதைக் கவனிக்கையில் சரியானது எது எனத் தெரிந்து கொள்வதில் அவருக்கு இருந்த முனைப்பு என்றே நினைக்கத் தோன்றுகிறது.
பெட்ரண்ட் ரஸ்ஸலின் Outline of Philosophy எனும் நூலில் படித்த்து நினைவுக்கு வருகிறது. அதை அப்படியே இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்
Philosophy arises from an unusually obstinate attempt to arrive at real knowledge. Where passed for knowledge in ordinary life suffers from three defects: it is cocksure, vague and self-contradictory. The first step towards philosophy consists in becoming aware of these defects, not in order to rest content with lazy sceptisim, but in order to substitute an amended kind of knowledge which shall be tentative, precise and self-consistent. There is of course another quality which we wish our knowledge to posses namely comprehensiveness; we wish the area of our knowledge to be wide as possible.
தர்மனிடம் கேட்பதற்கு பொறுமை இருந்தது எல்லாவற்றையும் விட தெரிந்தது போதும்
எனும் lazy Sceptisim இல்லை. Cocksure இல்லை; vague இல்லை
இந்த விஷயத்தில் அர்ஜுனன் எப்படி என கவனிக்கலாம்....ஒரு வேளை கேள்விக்கு விடை கிடைக்கலாம்
அர்ஜுனன் ,க்ருஷ்ணன், கீதை , சண்டை எனும் இந்த சப்ஜெக்ட்டை பாரத் நிகழுவுகளைக் கொண்டே அணுக வேண்டும் எனும் முயற்சியாகத் தான் பாரதத்தின் நிகழ்வுகளை மேற்கோள் காட்டினேன். அதன் தொடர்ச்சியாக இன்னுமொரு சம்பவத்தினைக் கவனிக்கலாம்
இப்ப என்ன செய்றேன் பார் என பெரியவர்கள் மிரட்டுவதில்லையா
கத்தும் குயிலோசை
Saturday, 10 September 2011
Wednesday, 7 September 2011
Friday, 29 July 2011
Thursday, 28 July 2011
இன்றைக்கு என்ன ஆனது 28-ஜூலை-2011
Friday, 22 July 2011
Monday, 18 July 2011
கமல்ஹாசனும் பெருமாளும்

கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம் படித்த அனைவருக்கும் திருவெண்காடு , நமச்சிவாய வைத்தியர், பரஞ்சோதி எனும் பெயர்கள் நினைவிருக்கும்
தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே
இது திருவெண்காடு தலத்திலே அப்பர் பாடிய பதிகம்
நல்லாத் திரியைக் கிள்ளி தூண்டி விடப்பட்ட விளக்கின் சுடர் போல உடம்பு அதும் சுத்தபத்தமா குளிச்ச உடம்பு
சூலத்தைக் கையிலேந்திக் கொண்டு.. பாம்பை உடம்பிலே சுத்திக்கிட்டு,, காதிலேயும் பாம்பையே அணிகலனாக சூடிக்கிட்டு
சடை முடி தாழ்ந்து புரள,, வெண்நூல் அணிந்து பிறை நிலவை சூடிக்கொண்டு வீதி வழியா நடந்து வந்து வேறெங்கேயோ போவாரானு பார்த்தா என் நெஞ்சத்துக்குள் அல்லவா புகுந்தார்;யாருனு கேட்றீங்களா;எருது வாகனம் கொண்ட சிவபெருமான்
இதே சாயலில்
நம்மாழ்வாரின் பெரிய திருமொழியிலிருந்து-
பருவக் கருமுகி லொத்து
முத்துடை மாகட லொத்து
அருவி திரள்நிகழ் கின்ற
வாயிரம் பொன்மலை யொத்து
உருவக் கருங்குழ லாய்ச்சி
திறத்தின் மால்விடை செற்று
தெருவிள் திளைத்து வருவான்
சித்திரக் கூடத்துள் ளானே
நல்ல மழை மேகம் கணக்கா, கடல் கணக்கா, அருவியாலே தினம் குளிக்கும் மலை கணக்கா இருக்கும் இந்த சித்திரக் கூடத்தான் வீதில நடந்து வரான்
இது சித்திர கூடம் என்பது சிதம்பரம்.. இந்தக் கோவில் தான் தசாவதாரம் படத்தின் முதல் காட்சி
ஆனால் தசாவதாரம் பட்த்திலே ஒரு பிசகு செய்துவிட்டார்கள் உற்சவர் பெருமாளை நின்ற திருக்கோலத்திலே காட்டிவிட்டார்கள் ஆனால் அங்கெ உற்சவர் அமர்ந்த திருக்கோலம்..
கமல்ஹாசனுக்கும் விஷ்ணுவுக்கும் என்ன பொருத்தமோ தெரியவில்லை . இப்படித்தான் குருதிப்புனல் படத்திலே க்ருஷ்ண ஜெயந்தி மே மாத்த்திலேயே வருவதாக காட்சி இருக்கும்
அருவி திரளாக விழும் என நம்மாழ்வார் படித்துக் கொண்டே வந்தால் குறுந்தொகை நினைவுக்கு வருகிறது
கோவேங்கை பெருங்கதவனார் பாடல் பார்க்கலாம்
அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவு இன்று ஆயின் அன்று மற்றில்லை
குறும் பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்
பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கி
கல் பொருது இரங்கு கதழ் வீழருவி
நிலங்கொள் பாம்பிம் இழிதரும்
இதுக்கு என்னப்பா அர்த்தம்னு யாரும் கேட்பதற்குள் சொல்லிடலாம்
தோழி ! பாறை மீது வேர் படர்ந்து பரவி கிளைகளில் மலர் நிரம்பியுள்ள வேங்கை மரம் அதிரும் வண்ணம் பெரும் சப்தத்துடன் விழுந்து கற்களில் மோதி நுரைத்து சமவெளிக்கு வந்து பாம்பு போல நெளிந்து போகும் ஆறு உற்பத்தியாகும் மலையின் தலைவன் ஒரு போதும் பிரியாமல் இருக்கனும்
இந்த இரண்டு பாட்டுமே சங்கமம் குறித்து தான்
இது கடவுள் நம்பிக்கை குறித்த பாடல்களை குறித்தானதாயினும் நான் அந்த நோக்கம் குறித்த சிந்தனைகளை ஆராயப் போவதில்லை. மொழி வளம். ஒத்த கருத்துள்ள பாடல்கள் அவ்வளவே
இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஆர். கே நாராயணன் அவர்களின் சிறு கட்டுரைத் தொகுப்பான Writerly Life என்ற தொகுதியில் இருக்கும் God and the Atheist எனும் தலைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்க சிபாரி செய்கிறேன்
அது கடவுளுக்கும் கடவுள் மறுப்பவர் ஒருவருக்கும் இடையேயான உரையாடல் ஸ்டைலில் எழுதியிருக்கார். அதிலே கடவுள் தான் இருப்பதற்கான சாட்சிகளாக சிலவற்றைச் சொல்வதும் அதை கடவுள் மறுப்பவர் மறுத்து உரையாடுவதுமாக வரும். அதன் இறுதி சில வரிகளை மட்டும் தருகிறேன்
கடவுள் கேட்கிறார்
Are you now convinced of my existence?
கடவுள் மறுப்பவர் சொல்கிறார்
Not Yet. How am I to be sure that our talk is real and not just a piece of self-deception
மீண்டும் கடவுள் கேட்கிறார்
What does it matter; what difference could it make
Sunday, 17 July 2011
திரைச்சீலை - ஜீவா


