Showing posts with label தலைமைச் செயலகம். Show all posts
Showing posts with label தலைமைச் செயலகம். Show all posts

Sunday, 5 June 2011

தலைமைச் செயலகம் பார்ட் 4



இப்படியாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது என அப்போதைய ஜெ அரசு முடிவு செய்த இடத்தில் அமைய உள்ள கட்டிடத்தின் வடிவமைப்பினை தயார் செய்யும் நிறுவனத்தினை இறுதி செய்ய டென்டர் விடப்பட்டு அதில் ஆறு பேர் கலந்து கொண்டு அதில் சி.ஆர் நாரயண ராவ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அரசாணையும் வெளியடப்பட்டது .
பொதுப்பணித் துறை கட்டிடங்கள் பிரிவு அரசாணை எண் : 1184 நாள் 8 அக்டோபர் 2003

கட்டுமானப் பணிகள் தொடங்க இருந்த நிலையில் இந்த திட்டத்தினை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இப்படி கட்டிடம் கட்டுவது சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் புறக்கணிப்பதாக உள்ளது, ஏற்கனவே மஹாபலிபுரம் அருகே அரசு நிர்வாக நகரம் அமைக்க அரசு உத்தேசித்துள்ள நிலையில் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது ஒரு தற்காலிக முயற்சி இதற்கு இத்தனை செலவு தேவையா, உள்ளிட்ட பல கோணங்களில் பலர் இதனை நீதி மன்றத்தில் எதிர்த்தனர்

நீதி மன்றம் அரசு கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்க தடையேதும் இல்லை என சொல்லி மனுவைத் தள்ளுபடி செய்தது

ஆனாலும் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தினை ஜெ அரசு தொடரவில்லை

இதற்கு முன் இராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் அந்த கல்லூரியினை இடித்து விட்டு அங்கே தலைமைச் செயலக வளாகம் அமைக்கலாம் எனும் முந்தைய ஜெ அரசின் திட்டம் ( ?! ) குறித்துப் பார்க்கலாம்

1914 ம் வருடம் மதராஸ் பெண்கள் கல்லூரி எனத் தொடங்கப்பட்ட மிகப் பழமையானதொரு கல்வி நிறுவனம் சென்னைக் கடற்கரைக்கு எதிரே தமிழக காவல் துறை தலைமை அலுவலகத்தின் அருகே உள்ள இராணி மேரிக்கல்லூரி. இப்படியானதொரு சரித்திரப் புகழ்வாய்ந்த கட்டிடம் முந்தைய ஜெ அரசின் பார்வையில் விழுந்தது. தலைமைச் செயலகம் கட்ட இந்த வளாகம் தேர்வானது ; இருக்கும் கட்டிடம் இடிக்கப்படவும் ஆணை பிறந்தது

(தொடரும்)

Saturday, 28 May 2011

தலைமைச் செயலகம் பார்ட் 3


தமிழக அரசுக்கான புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணியின் வரலாற்றினை சில முக்கிய ஆதாரங்களுடன் தொட்டுச் செல்லும் தொடர் பதிவு இது.


இந்த வரலாற்றினை பின்னோக்கிய பயணத்தில் கவனிக்கலாம்.

இப்போது அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எதற்கு அது தான் ஏற்கனவே ஜார்ஜ்

கோட்டையில் ஒன்று இருக்கும் போது புதிதாக ஒன்றை ஏன் கட்டினார்கள் என கேட்பவர்களுக்கு இந்த பின்னோக்கிய வரலாற்றுப் பயணத்தில் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியினைத் தெரிந்து கொண்டால் கொஞ்சம் விளக்கம் கிடைக்கலாம்.

புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலக இயங்க போதுமான இட வசதி இல்லை எனும் அவலத்தினை நானே பல முறை கண்டிருக்கிறேன்

அரசின் இணைச் செயலர் அந்தஸ்த்தில் பணியாற்றும் சில அதிகாரிகளின் அறைகள் வரான்டாவில் மரத்தால் தடுப்பு அமைக்கப்பட்டு இருப்பதை உங்களில் பலர் கவனித்திருக்கலாம். அந்த அளவுக்கு இடப் பற்றாக் குறை

ஜெ ஆட்சியில் 2003ல் செப்டம்பர் முதல் தேதி பொதுப்பணித் துறை (கட்டிடங்கள் பிரிவு) சென்னையில் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்க ஏற்பாடுகள் செய்திட அரசாணை வெளியிடுகிறது . அரசாணை எண் 1080

அந்த அரசாணையின் தொடக்க வரிகளை இங்கே அப்படியே தருகிறேன்

PUBLIC (BUILDINGS) DEPARTMENT
G.O. Ms. No.1080 Dated the 1st September, 2003
ORDER:-
The present Secretariat consists of the main building constructed in 1781 A.D. and the Namakkal Kavignar Maaligai constructed in 1975. The Namakkal Kavignar Maligai building was designed and constructed just as an office accommodation without any of the state-of-the-art facilities that are required of a modern Secretariat. The interior of the Namakkal Kavignar Maligai building has developed cracks and leakages at several places putting the staff to great difficulty in attending to their work. There is no space to put up any new building in the existing campus. In view of the major problem of shortage of space, structural defects and the lack of other facilities in the existing buildings of the Secretariat, the Government has been considering the construction of a new Secretariat Complex for some time past.

ஆக புதிய கட்டிடம் வேண்டும் எனும் தேவையைக் கருத்தில் கொண்டு இடம் தேடும் வேலை தொடங்கியது. புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் எல்லா வசதியும் இருப்பதாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அந்த கட்டிடம் அமைவதற்கு மத்திய , மாநில அரசின் எந்த ஒரு விதிய் மூலமும் தடை சொல்வதாக அமைந்துவிடலாகது என்பதில் அப்போதைய ஜெ

அரசு சற்று எச்சரிக்கையாக இருந்தது.( காரணம் அதற்கு முன்பு தான் சென்னை கடற்கரை சாலையில் இராணி மேரிக் கல்லூரியினை இடித்து விட்டு அங்கே தலைமைச் செயலக வளாகம் கட்டுவது என்ற முயற்சிக்கு நீதி மன்றத்திடம் கண்டனம் வாங்கியிருந்தது ஜெ அரசு. அந்த குட்டு வாங்கிய வரலாற்றினையும் இந்த தொடரில் பார்க்கத் தான் போகிறோம்)

இப்படி தேடியதில் கோட்டூர்புரத்தில் அரசு தகவல் மையத்தினை ஒட்டிய இடத்தில் அமைக்கலாம் என உத்தேசித்தார்கள்

அரசு ஆவணங்களில் சென்னை மாவட்டம் மைலாப்பூர் திருவல்லிக்கேணி வருவாய் தாலுகாவில் கோட்டூர் கிராமம் என அடையாளமிடப்பட்ட அந்த இடம் 43.20 ஏக்கர் இடப்பரப்பு கொண்டது. அரசு தகவல் மையம், சென்னை பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் என மூன்று அரசு அமைப்புகளுக்கு சொந்தமான இடப்பரப்பு அது

சென்னை பல்கலைக் கழகத்திற்கு சொந்தமானது 2.64 ஏக்கர்

அண்னா பல்கலைக் கழக்த்திற்கு சொந்தமானது 22.16 ஏக்கர்

தமிழக அரசின் தகவல் மையத்திற்கு சொந்தமானது 18.40 ஏக்கர்


அண்ணா பல்கலைக்க்ழகம், சென்னைப் பல்கலைக் கழக நிர்வாகம் அவர்களுக்கு சொந்தமான இடத்தினை தமிழக அரசுக்கு தலைமச் செயலகம் அமைக்க தருவதற்கு தேவையான தீர்மானங்களை நிறைவேற்றின‌

(இதன் தொடர்ச்சி தலைமைச் செயலகம் பார்ட் 4 ல்)

Monday, 16 May 2011

தலைமைச் செயலகம் - பார்ட் 2


தலைமைச் செயலகம் எனும் எனது பதிவினை ஒரு சிறு தொடர் பதிவாக தொடரப் போகின்றேன்.
எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா, கருணாநிதி இவர்கள் ஆட்சிக் காலங்களில் புதிய வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த தகவல்களுடன் எழுத யோசித்து விபரங்கள் சேகரித்துள்ளேன்
அடுத்த பகுதி தலைமைச் செயலகம் - பார்ட் 3

Saturday, 14 May 2011

தலைமைச் செயலகம்


12 மே 2007 அன்று சட்ட மன்றத்தில் நடைபெற்ற தனது சட்ட மன்ற பொன் விழாப் பேருரையில் தமிழக்த்துக்கென புதிய சட்ட மன்ற வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பினை திரு கருணாநிதி வெளியிட்டார். அதனைத் செயல்படுத்தும் விதமாக உரிய அரசாணை பொதுப்பணித் துறையால் 04‍ ஜூலை 2007 அன்று வெளியானது . அரசாணை எண் 209. அதன் படி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்
சுமார் எட்டு லட்சம் சதுர அடிப் பரப்பில் சுமார் 200 கோடி செலவில் சட்ட மன்ற வளாகம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது . அதன் படி புதிய வளாகத்தில் சட்ட மன்றம், முதல்வரின் அறை/ அலுவலகம், பிற அமைச்சரின் அறைகள், தலைமச் செயலர் அறை/ அலுவலகம், உள்துறை நிதி போன்ற முக்கிய துறைச் செயலர்களின் அறைகள் அலுவலகங்கள் அமைக்க்க ஆணையிடப்பட்டது

பணியினைத் தொடங்க ஏதுவாக பொதுப்பணித் துறை தலைமப் பொறியாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்திட அரசு 5 நவம்பர் 2007 அன்று அரசாணை வெளியிட்டது . இதன்படி அந்தக் குழு இந்த கட்டிடப் பணிக்கான டென்டரை இறுதி செய்யும் குழுவாகவும். கட்டிட வடிவமைப்பினை இறுதி செய்யும் குழுவாகவும் அதிகாரம் கொண்டதாக ஆக்கப்பட்டது

இந்த உயர் நிலைக் குழு கட்டிட வடிவமைப்புக்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களை பரிசீலித்து ஜி.எம்.ப் இன்டர்நேஷனல் எனும் ஜெர்மன் நிறுவனத்தை அங்கீகரித்து அதனை ஆர்கிடெக்சுரல் பணிக்கான கல்சல்டன்டாக அங்கீகரித்தது

அரசாணை எண் 371 பொதுப் பணித் துறை நாள் 10 டிசம்பர் 2007ன் படி அரசு செயலர்கள் கொண்ட குழுவினை அமைத்து அந்தக் குழு கட்டிடப் பணியில் பொதுப்பணித் துரையின் கட்டிடப் பிரிவு தலைமப் பொறியாளருக்கு ஆலோசனை வழங்கிட ஆணையிட்டது

26 மார்ச் 2008 அன்று முதல்வர் கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் இந்த வளாகத்திலேயே தலைமைச் செயலகத்தினை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு அதன் பின்பு அதன் வழியே பணிகள் தொடங்கப்பட்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பிரதமர் கலந்து திறப்பு விழா நடைபெற்று .. சட்ட மன்ற கூட்டத் தொடரும் நிகழ்ந்து கவர்னர் உரை நிகழ்த்தப்பட்டு அங்கே தலைமைச் செயலகப் பணிகள் இயங்கத் தொடங்கின.

ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த தொன்மையான சட்ட மன்ற பேரவை கூடம் , அதுவரை சென்னை காமராஜர் சாலை பாலாறு கட்டிடத்தில் இயங்கிய மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் நூலத்தின் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்டமன்ற செயலக ஆணை எண் 90 நாள் 02‍ ஜூன் 2010ன் படி ஆணையிடப்பட்டு அந்த நூலகம் அங்கே செயல்படவும் தொடங்கியுள்ளது

ஆனால் தற்போது ஆட்சி அமைக்க உள்ள செல்வி ஜெயலலிதா அவர்கள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள் புதிய சட்ட மன்ற வளாகத்தினையும் தலைமைச் செயலக வளாகத்தினையும் பயன்படுத்தப் போவதில்லை எனவும் பழைய படி இவற்றினை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்கே இட மாற்றம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன‌

புதிய கட்டிடங்கள் இனி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு காலத்திற்கு கிடப்பிடலிடப்படுமா

காரணம் வெகு சிம்பிள் : இந்தக் கட்டுரையின் முதல் வரியினைப் மீண்டும் படிக்கவும் காரணம் தெரிந்து விடும்


செலவு சுமார் 430 கோடி

எல்லாம் குடியரசே