Saturday, 15 October 2011

தாவுதல்


ஒரு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி, அதிலிருக்கும் சங்கதிகளை உறுதி செய்து கொள்ள, அங்கிருந்து இன்னொரு புத்தகத்திற்கு தாவி, இப்படியாக ரிலே ரேஸ் போன்றது என்னுடைய படிக்கும் வாடிக்கை.. ஆனால் இதெல்லாம் புத்தகத்தின் உள்ளே பல பக்கங்கள் கடந்த பின்பு நடக்கும், தாவுதல் மீண்டு வருதல் எனும் எனும் நடவடிக்கைகள்

ஆனால் ஒரு புத்தகத்தின் முகப்பிலேயே இப்படி தாவும் சாத்தியம் உண்டானது, The Emperor of All Maladies - by Sidhartha Mukherjee எனும் புத்தகத்தில்..

கான்சர் குறித்ததான இந்த புத்தகத்தை எழுதிய‌ கான்சருக்கான வைத்தியரான முகர்ஜி இருப்பது நியூயார்க்கில்.

இந்தப் புத்தகத்தின் முகப்பில் ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் A Study in Scarlet எனும் கதையிலே ஷெர்லக் ஹோம்ஸ் பேசுவதான வசனம் , In Sloving a Problem of this sort, the grand thing is to be able to reason backgrounds. That is a very useful accomplishment, and a very easy, but people do not practice it much என்று படித்தவுடன்,ஷெர்லக் ஹோம்ஸ் கதைத் தொகுப்புகளுக்குப் தாவிபோய் மீண்டும் ஒரு முறை சிலாகித்துப் படித்துவிட்டு மீண்டும் இப்போது மறுபடி கான்சர் புத்தகத்துக்கு வந்திருக்கேன்

ஆனாலும் ஷெர்லக் ஹோம்ஸ் ஆச்சரியத்தினையும் விட மனசில்லாமால், பத்ரி சேஷாத்திரி, A Study in Scarlet ஐ ஒரு மோதிரம் இரு கொலைகள் என்று மொழி பெயர்த்திருக்கின்றார். அதனை மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கின்றேன். மேலே சொன்ன ஷெர்லக் ஹோம்ஸ் ஆங்கிலத்தை பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்ப்பில் , இது போன்ற சிக்கலைத் தீர்ப்பதில் முக்கியமானது பின்னோக்கியபடி காரணங்களைச் சொல்லிக் கொண்டு போவது தான். இது உபயோகமானது, எளிதானதும் கூட. ஆனால் மக்கள் இதை அவ்வளவாக
செய்வதே இல்லை...

என்பது வரை வந்துவிட்டேன்...

இதை இங்கே ஏன் எழுதுகிறேன் என்றால்,, சித்தார்த்த முகர்ஜி , வி எஸ் ராமசந்திரன் போன்றோரின் புத்தகங்களையும் எளிமையான தமிழில் கொண்டு வர வேண்டும்...

...

ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் என்னிடம் முழுமையாக இருந்தாலும்.. பிடிஎஃப் வடிவத்தில் கிடைக்குமே என இணையத்தில் தேட நவீன நாலந்தாவின் வலைத் தளம் சிக்கியது

http://www.nalanda.nitc.ac.in/

இதில் Classic Fiction கிடைக்கும் என உப சுட்டி

http://www.nalanda.nitc.ac.in/index.html

Tuesday, 4 October 2011

மனிதர்கள்-1

என்னோடு தொடர்பில் இருக்கும் மனிதர்களை வகைப்படுத்துவது என்பது சிக்கலான சங்கதி என்றாலும், இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டேன்.

1. நான் உதவி கேட்பவர்கள் அல்லது நான் நாடிச் சென்று விபரம் கேட்பவகள்

2. என்னிடம் உதவி கேட்பவர்கள் அல்லது என்னை நாடி வந்து விபரம் கேட்பவர்கள்
இந்த வியாஜ்யம் 2 வது வகையினரைப் பற்றியது. முதல் வகையில் பிராதன இடத்தில் என் மனைவி இருப்பதால் அந்த வகையினரைக் குறித்து எழுதப் போய் உண்டாகும் சிக்கல்களைத் தவிர்க்கவே இப்படி ஏற்பாடு.
என்னிடம் உதவி கேட்பவர்கள் அல்லது என்னை நாடி வந்து விபரம் கேட்பவர்களை இன்னும் சின்ன சின்ன உப பிரிவுகளாக பிரித்துக் கொள்கிறேன்

1. நான் மனித வள மேம்பாட்டுத் துறையில் இருப்பதால் தனது, அல்லது தெரிந்தவர்களின், அல்லது உறவினர்களின் கரிகுலம் விட்டே தந்து இவனுக்கு / இவளுக்கு ஒரு நல்ல வேலை இருந்தா பாரேன்... இப்படியானவை

2. என் தம்பி பையன் + 2 படிக்கிறான்.. உனக்குத் தெரியுமே ...படிப்பிலே கவனமே இல்லை...உன்னண்டை அழைச்சிண்டு வரேன். கொஞ்சம் கௌன்சிலிங் செய்யணும்.. அதுவரை என்னிடம் திரிஷா, சமீரா என பேசிக் கொண்டிருந்த அந்த தம்பி பையனை தர்ம சங்கடப்படுத்தும் அண்ணன்கள்

3. என் மச்சினி ரயில்வே பரிட்சை எழுதறா வரும் ஞாயித்துக் கிழமை பரிட்சை. ந்யூமரிக்கல் எபிலிட்டி, லாஜிக்கல் ரீசனிங் இதுக்கெல்லாம் க்ளாஸ் எடுக்கிறாய் உங்கிட்ட ட்ரெயினிங் எடுத்தால் நல்லது என சாமிநாதன் சொன்னான், என அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தின வெள்ளிக்கிழமை நடு ராத்திரி போன் செய்பவர்கள்

4. என் ஆத்துக்காரியோட பெரியப்பா.. ரிட்டயர் ஆய்ட்டார் .. அவருக்கு பென்ஷன் நிர்ணயம் ஆனதிலே நிறைய குழப்பம். ஏஜிஎஸ் ஆபிசிலே சரியாகவே பதில் சொல்ல மாட்டேங்கறா . ஒரு பெட்டிஷன் தயார் செய்யனும். அல்லது ஒரு ரிட் பெட்டிஷனே போட்டாலும் தேவலை என ஹை கோர்ட்டை லீசுக்கு எடுக்கும் உத்தேசத்துடன் வரும் அழைப்புகள்

5. என்னிடம் புத்தகங்கள் குறித்து பேசுபவர்கள்

கரிகுலம் விட்டே தந்து வேலை கேட்பவர்களை முதலில் கவனிக்கலாம்

என்னிடம் வரும் விண்ணப்பங்களின் மீது கராறான பார்வை கொண்டவன் என்பது இப்படி ககுவி தருபவர்களுக்கு முதலில் தெரிவதில்லை. இந்த சமரசம் இல்லாத என் குணம் , என் வேலையினைப் பத்திரப்படுத்திக் கொள்வதிலும் இருக்கிறது. வரிசையாகச் சொன்னால் புரிந்துவிடும்
காலேஜ் வாசல் விட்டு வெளியே வந்த உடன், கம்பெனி வாசலுக்கு வேலைக்குப் போகும் உத்தேசம் உள்ள இளைஞர்களை, சந்திரமௌளீக்கிட்ட சொல்லிருக்கேன். நீ போய் பாரு என அனுப்பி வைக்கின்றார்கள். இப்படியானவர்களை, என்னை, ஆபிசிலே வந்து பாருங்கள் என சொன்னால் கேட்க மாட்டேன் என அழிச்சாட்டியமாக ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் மிகச் சரியாக 3 மணிக்கு, என் வீட்டுக்கு வந்து டிங் டாங் என காலிங் பெல் அடிக்கிறார்கள். என் ப்ளாட்டில் காலிங் மணி வைத்தவர் போன ஜென்மாவிலே கோவிலில் மணி அடிக்கும் வேலை செய்திருக்கனும். கொஞ்ச வால்யூமில் அழைப்பு மணி அடிப்பதன் சாத்தியத்தினைத் தெரியாமலே இருந்தவரால் தான் , ரூமைப் பூட்டிக் கொண்டு, தூங்குபவனிக் காதுக்குப் பக்கத்திலும் அதிக டெசிபலில் மணி சத்தம் கேட்க வைக்க முடியும்
(தொடரும்)

Sunday, 2 October 2011

அக்டோபர் -2 2011



My Dear Bapu, Today the nation and the world celebrate your birthday, Oct 2; In the morning I
happened to read few articles, the authors of those were of course have got the expected

disability of understandings. I always wonder your saying , " My life is my message".

I always preferred to refer you from your own life and writings. I avail this day as a golden

opportunity to request the friends to read Complete Writings of Mahatma Gandhi (available

for free-download in pdf form) and then start reading any interpretations, at least to know


their disability of understanding you Bapu. In your writings you have given clear guidance,

how to understand and approach you, which again confirms your saying , " My Life is my

message"


தேசப்பிதாவே ! இன்றைக்கு நாடும் உலகமும் உங்கள் பிறந்த நாளைக்

கொண்டாடுகிறது. அக்டோபர் 2.. இன்றைக்கு காலையில் சில கட்டுரைகளை

வாசித்தேன். எதிர்பார்த்தது போலவே, அந்தக் கட்டுரை ஆசிரியர்களுக்கு

உங்களைப் புரிந்து கொள்வதில் குறைபாடுகள் இருக்கின்றன. நீங்கள், “ எனது

வாழ்க்கை எனது செய்தி” எனச் சொன்னதை நான் வியந்திருக்கின்றேன்.

அதனால் தான் நான் உங்களை குறித்து சொல்லும் போது உங்கள்

வாழ்க்கையிலிருந்தும், உங்கள் எழுத்துக்களை மேற்கோளிடுவதையே

விரும்பியிருக்கின்றேன். இந்த நாளில் என் நண்பர்களுக்கு ஒரு


வேண்டுகோள் வைப்பதை மகிழ்ச்சியாக நினைக்கின்றேன். உங்களது எழுத்துத்

தொகுதி இப்போது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அதனை

முழுமையாகப் படித்துவிட்டு , உங்களை விமர்சனம் செய்யும் நூல்களைப்

படிக்க என் நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன், அது அவர்கள் உங்களைப்

புரிந்து கொள்வதில் கொண்டுள்ள குறைபாட்டினை அறிந்து கொள்ள உதவும்.

உங்களை அணுகவும், உங்களைப் புரிந்து கொள்ளவும்

உங்கள் எழுத்துக்களிலேயே தெளிவான் வழிகாட்டுதல் இருக்கிறது. அது

நீங்கள், “ எனது வாழ்க்கை எனது செய்தி” என சொன்னதை உறுதி செய்கிறது

Sunday, 18 September 2011

கீதை இடைச் செருகலா- பகுதி 2


ஜெயமோகனின் பதிவில் உள்ள வினாக்களை அடுக்கி அதற்குரிய பதிலைத் தருவதன் மூலம், இந்தப் பதிவினைப் படிப்பவர்களுக்கு வசதி செய்து தரலாம்

வினா எண் :1

காவியகர்த்தன் ஒரு போர் தொடங்கப் போகும் தருணத்தில் பல்லாயிரம் பேர் ஆயுதங்களுடன் போர் வெறியுடன் திரண்டிருக்கும் முனையில் நிதானமாக தத்துவ விவாதம் புரிவதாக எழுதுவானா என்ன?

வினா எண் : 2

அந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் கூறும் அத்தனை விரிவான வேதாந்தக் கருத்துக்கள் அந்த நேரத்துத் தேவைக்குப் பொருத்தமாகவே இல்லை. போர் புரியமாட்டேன் என்பவனிடம் ஆத்மாவின் அழிவின்மை பற்றி பேசுவது சரிதான். பக்தி, யோகம், விபூதி பற்றிய நுண்ணிய விளக்கங்கள் எதற்கு?

கீதையின் கால கட்டத்திற்கு ஜெயமோகன் துணைக்கு அழைக்கும் வாதம்

நடராஜ குரு அவரது நூலின் முன்னுரையில் ஜெ.என்.·பார்குஹார் (J.N.Farquhar) கூறிய வரிகளை இதற்கு மேற்கோள் காட்டுகிறார்.

‘ஸ்வேதாஸ்வேதர உபநிடதத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்ட ஒரு பழங்கால உபநிடதம் பிற்காலத்தில் கீதையாக உருமாற்றம் செய்யப்பட்டு கிருஷ்ண பக்தர்களால் மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டது. கிறிஸ்துவ யுகத்தின் தொடக்கத்தில் இது நடந்தது.’

இந்தியவியலாளரான ரிச்சர்ட் கார்பே கீதையின் காலகட்டம் கி.மு.2ம் நூற்றாண்டு என்று கூறுகிறார். நடராஜகுரு இதை தர்க்கப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாகவே படுகிறது. டி.டி.கோசாம்பி முதலியோர் கி.பி.5ம் நூற்றாண்டில், அதாவது குப்தர் காலகட்டது இந்து எழுச்சியின்போது, கீதை உருவாகி மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டது என்று எண்ணுகிறார்கள்;என் நோக்கில் முக்கியமான இந்தியவியலாளர்களான லாக்கோம்ப், கார்பே போன்றவர்களே பெருமளவு நடுநிலையில் நின்று காலக்கணிப்புகளைச் செய்துள்ளார்கள். எப்போதும் கறாரான புறவயத் தருக்கத்திற்கு முக்கியத்துவம் தரும் அறிவியலாளரான நடராஜகுருவும் இவர்களையே ஏற்கிறார்

இந்த மூன்று கருத்துகளுக்கும் இருக்கும் சாத்தியத் தரப்பினை வரிசையாகப் பார்க்கலாம்

முதலில் கார்பேயின் & ஜெ.என்.·பார்குஹார் கருத்திலிருந்து தொடங்கி பின்னர் ஜெமோவின் வினா எண் 2 அடுத்து வினா எண் 1 எனச் செல்லுவோம்


"an Old verse upanishad written later than the sevtasvatra and worked upon into the gita in the interest of krisnaism by a poet after the christian era

இது Farquhar (Religions of India Page 389)

இதே கருத்தை தனது Outlines of the Religious Literature of India வில் பின்னரும் Farquhar சொல்கிறார்

இந்தக் கருத்துகளில் இருக்கும் ஏனைய கண்ணோட்டங்கள் குறித்து எதையுமே குறிப்பிடாது தன் தரப்பிற்கு ஒத்து வரும் கண்ணோட்டத்தினை மட்டும் குறிப்பிடும் வண்ணமாகத்தான் இந்தக் கருத்தினை ஏற்கலாம்

கார்பே எழுதுவதைக் கவனியுங்கள் நண்பர்களே

It is difficult to determine the period of composition of the work ; We shall not however go materially wrong if we assign composition of the Original Gita to 2nd Century BC its redecation to the 2nd century of our own era

(R. Garbe -Bhagavad Gita Hastings of Enclyclopedia of Religion and Ethics Volume II page 538)

அதாவது கீதை எழுதப்பட்ட காலத்தினை கணிப்பது சிரமம் எனினும் அதனை கி.மு 2 ம் நூற்றாண்டு என சொன்னால் தவறாக இருக்காது எனச் சொல்லும் கார்பேயின் தடுமாற்றத்தினைத்தான் முன் வைக்கிறார் நம் எழுத்தாளர்

கார்பே அதே நூலில் சொல்கிறார் It has long been known that we do not posses the Bhavad-Gita in its Original Form , but in a form which is the result of essential Modification

நீதியரசர் காசிநாத் திரிம்பக் திலங், சட்டமும் தத்துவமும் பயின்றவர். கீதைக்கு உரையெழுதியவர்களில் மிகவும் முக்கியமானவனர் .

மும்பை உயர்நீதி மன்றத்தில் நீதியரசராக பணியாற்றியவர். மிக இளம் வயதிலேயே ( 36 வயதிலேயே) மும்பை பல்கலைக் கழக்த்தின் துணை வேந்தராக பதவி வகித்தவர்

அவர் கார்பேயின் உரைக்கு தெரிவிக்கும் மறுப்பினைக் கவனிக்கலாம்


It appears to me, I own , very difficult to accept that as satisfactory argument , amounting , as it does to no more that is that interpolation which must needs to be referred to in narrating the main story even to make it intelligible, are nevertheless to be regarded as evidently the
product of brahamanical age' and presumably also a later age because , forsooth, they are irrelevant and incongruous according the 'tastes and ideas' not of the time , be it remembered when the main story is supposed to have been written but of this enlightened 19th century


The Bagavadgita is later than the great movement represented by the early upanishads and earler than the period of development of philosophic systems and their sutras. From the archaic constructions and the internal references, we may infer that is definitively a work of pre-christian era. Its date may be assigned to the fifth century BC though the text may have received many alternations in subsequent times

இது ராதாகிருஷ்ணன் (Indian Philosophy Volume 1 page 522-525)

It is argued that the teacher, Krsna could not have recited the seven hunderd verses to arjuna on the battle field. He must have said a few pointed things which were later aloborated by the narrator into an extensive work; According to Garbe, the bhavadgita was orinally a samkhya
yoga treatise with which krishna-vasudeva cult got mixed up and in the third century BC it became adjusted to the vedic tradition by the identification of krishna and vishnu. The original work arose about 200 BC and it was worked into its present form by some follower of vedanta in the Second century AD. Garbe's theory is genrally rejected

RadhaKrishnan (Introductory Essay- The BaghavadGita page 14)

கார்பேயின் கருத்து பொதுவில் நிராகரிக்கப்பட்டது என ராதாகிருஷ்ணன் சொல்வதைக் கவனிக்கவும்

ஜெயமோகன் மேற்கோளிட்டு துணைக்கு அழைத்த வாதங்களை மறுத்து முன்னரே அறிஞர்கள் உரைத்துள்ளார்கள் என்பதை குறிப்பிட்ட

நூல்களின் தரவுகளுடன் சொல்லி இந்தப் பகுதியினை நிறைவு செய்து இனி வினா எண் 1 மற்றும் வினா எண் 2 க் கான் மறுப்புகளைக் அடுத்த பாகத்தில் கவனிக்கலாம்

(தொடரும்)

Sunday, 11 September 2011

கீதை இடைச் செருகலா- பகுதி 1

கீதை இடைச் செருகல் என விவாதிக்கும் ஜெயமோகனின் பதிவினைப் படித்த பின் அதற்கு பொதுவில் இணையத்தில் மறுப்பினை பதிவது நலம் என நினைக்கின்றேன்

ஜெயமோகனின் பதிவினை அடைய இங்கே சுட்டவும்


போதனை கேட்ட பின்னாலும் சஞ்சலப் பட்டான் என்பதால் போதனை நடக்க வில்லை எனச் சொல்ல முடியுமா என்ன‌

சஞ்சலத்தின் தன்மையினைக் கவனிக்கலாம். கீதையிலிருந்தே

அர்ஜுனன் கேட்கிறான் அலுப்புடன்

சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்

இதைப் சற்று பதம் பிரித்துச் சொன்னால் எளிதாகி விடும்
மந்யே = நினைக்கிறேன்
நிக்ரஹம்= அடக்குவது
வாயோரிவ= காற்றைப் போல
ஸூதுஷ்கரம்= சாத்தியம் இல்லாத விஷயம்
தஸ்ய= மனதின்

க்ருஷணா இந்த மனதின் சஞ்சலம் என்பது காற்றை அடக்குவது போல சாத்தியமில்லாத சங்கதி என்று நினைக்கிறேன் என சொல்கிறான் .

இந்த மாதியிலிருந்து தான் கடையும் உபகரணம் மத்து ) இப்படி முடியாது எனச் சொன்னால் க்ருஷ்ணன் விடப் போகிறானா என்ன; ரொம்ப சுலபமான வழியினை சொல்லித் தருகிறான் 
இந்த ஸ்லோகத்திலே ப்ரமாதி என்ற சொல்லை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கலாம்
மாதி என்றால் கலக்குவது, கடைவது ( அம்ருத மதனம் என்றால் பார்க்கடலைக்
கடைவது) 


அப்படி என்ன சுலபமான வழியினைக் க்ருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்லிக்
கொடுத்தான் ?



அர்ஜுனன் சொல்வதை ஆமோதிக்கிறான் கண்ணன் 
மனசை அடக்குவது அத்தினி சுலபமில்லை தான் ; ”ஆமாம்பா நீ சொல்றது வாஸ்தவம் தான் ;


”அஸம்சயம் மஹாபஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்”
அஸம்சயம் = சந்தேகமில்லை
சலம் = சஞ்சலம்
மஹாபஹோ= மாவீரனே
துர்நிக்ரஹம் = கெட்டதை அடக்குதல்/ அழித்தல்


ஆனால் இது சாத்தியமில்லாத விஷயமில்லை


Conviction, persistence இரண்டும் இருந்தால் சாத்தியம்


வைராக்கியமும் , விடா முயற்சியும் தேவை அதான் Conviction, persistence


மனசு அது கட்டுப்படாமல் அங்கே இங்கே எனத் தாவும் இயல்பானது தான்
அது நிலையில்லாத அஸ்திரம் ( அஸ்திரம் என்ற வார்த்தைக்கு நிலையில்லாதது,
எய்வதற்குண்டானது என பொருள்)


“யதோ யதோ நிச்ரதி மநச சஞ்சலம் அஸ்திரம்
ததஸ்தோ நியமயைத ஆத்மந யேவ வசம் நயேத்”


மனதிற்கு தன்னைத் தவிர மற்றதையெல்லாம் தெரியும். அது மற்றதைக் கண்டு நாடி
ஓடிடும் இயல்பானது மனதுக்கு மனது தெரியும் போது ஆத்மாவின் தரிசனம் கண்டு
அது அடங்கிவிடும் ;அதனால் மனதை மனதிலே அது அதையே அறியச் செய்ய வேண்டும்
அதுதான் மனதை வசப்படுத்தும் வழி


அதற்கு வைராக்கியமும் விடாமுயற்சியும் தான் வழி


இங்கே இப்படி இருக்கும் அர்ஜுனனுக்கு பக்குவம் வரும் இடமும் இருக்கு






யுத்தம் முடிந்த பின் இருதரப்பிலும் இறந்துபட்ட குருவம்சத்தாரின் உடல்களின் அடக்கம் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்கடன்களை மஹரிஷி தௌம்மியரைக் கொண்டு தர்மன் செய்கிறான். ஈமக் கடன்கள் செய்து முடித்த நிலையிலே அவன் மிகுந்த சோகத்திலே இருக்கிறான், இத்தனை மரணங்களா என்ற எண்ணம் அவனை மிகவும் துயரப்படுத்துகிறது
இந்நிலையில் தான் அரசனாகப் பொறுப்பும் ஏற்க வேண்டும். உறவினர்களின் மரணம்
என்ற கவலை ராஜ்யப் பொறுப்பேற்க்க வேண்டிய கடமைமையினையும் தாண்டி அவனை
வாட்டுகிறது.


தனக்கு அரசப் பதவி வேண்டாம். காட்டுக்குப் போய் தவ வாழ்க்கை மேற்கொண்டு
அங்கேயே மடிகிறேன் என்ற நிலைக்கு வருகிறான்


அவனை திருதராஷ்டிரன், தௌம்மியர், வியாசர், க்ருஷ்ணர், அர்ஜுனன், பீமன்,
நகுலன், சகாதேவன், திரௌபதி எல்லோரும் தேற்றுகின்றனர்


இதிலே மற்றெல்லோரது அறிவுரைகளைவிட அர்ஜுனனது அறிவுரை முற்றிலும்
வேறுபட்டு நிற்கிறது (க்ருஷ்ணனிடம் கீதை கேட்ட Effect  !!!!)

பாரதத்தில் முழுக்க முழுக்க போதனை தான். திருதராஷ்ட்ரன் கேட்காத அறிவுரையா / அறவுரையா. ஆனாலும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆகவே அவனுக்கு எந்த அறிவுரையும் நடக்கவில்லை எனும் புல்லரிக்கும் லாஜிக்கிற்கு வரலாம்




கீதோபதேசத்துக்குப் பின் அர்ஜுனன் தர்மரிடம் சண்டை போட்ட சந்தர்ப்பங்களை ஜஸ்ட் தகவல்களாகப் பார்க்கலாம் 

சம்பவம் ஒன்று : அபிமன்யு மரணத்திற்கு பின்.. அப்போதும் அவன் தனது சகோதரர்கள் அனைவரையும் ஏனைய உறவினர்களையும் திட்டுகிறான். இத்தனை பேர் இருந்தும் ஒரு சின்னப் பையனை சிக்க வச்சிட்டீங்களே என. மயக்கம் போட்டும் விழுவதாக வியாசர் பதிவு செய்திருக்கார். தர்மனின் ஆறுதல் மொழிகளில் தேறுகிறான் .பின்னர் செய்யும் சபதம் தான் , நாளை சூர்யோதயத்திற்குள் அந்த ஜயத்ரதன.... எக்ஸட்ரா

அடுத்த சம்பவத்தை விரிவாகப் பார்க்கலாம்

போரில் கர்ணனின் மறைவுக்கு முந்தைய நிகழ்வுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று

பார்க்கவ என்ற அஸ்திரத்தால் கர்ணம் பாண்டவர்களை மிகவும் தொந்தரவு
செய்துவிட்டான் ;கர்ணனை வெல்வது கடினம் என்ற முடிவுக்கு தர்மன் வருகிறான்


(இவர் இப்படி அடிக்கடி அவரை வெல்வது கடினம் இவனை வெல்வது கடினம் என்ற சஞ்சலமனத்துடனே போர் நடக்கும் எல்லா நாட்களிலும் தவறாமல் குழம்பியிருக்கிறார்) 

அதனால் போர்க்களத்திலிருந்து பாசறைக்குத் திரும்புகிறான். போர்களத்தின் வேறுபக்கத்தில் வேறு பக்கம் இருந்த அர்ஜுனன் பின்னர் தர்மன் பாசறைக்குத் திரும்பியதை அறிந்து அவருக்கு என்ன ஆனதென்று அறியும் அவாவில் அவனும் கண்ணனும் தர்மனின் பாசறைக்கு வருகின்றனர். தர்மன் படுகாயம் அடைந்திருக்கலாமோ என வரும் வழியில் அர்ஜுனனும் க்ருஷணனும் சொல்லிக் கொண்டே வருகின்றனர்

இருவரையும் பார்ர்கும் தர்மனின் மனதில் இப்படி ஓர் எண்ணம் : “போரின் இடையிலே தாம் தான் மனக் கலக்கத்தில் இருந்தோம். பாசறைக்கு வந்துட்டோம் ஆனால் அர்ஜுனன் அப்படி பாதியிலே வரக் கூடியவனில்லையே அதுவும் கண்ணனும் உடன் வருகிறான். ஒரு வேளை அர்ஜுனன் கர்ணனை மாய்த்து விட்டானோ அதை நேரில் என்னிடம் சொல்ல ஓடோடி வந்திருப்பானோ”

இந்த எண்னம் தோன்றியவுடன் அது நிஜமாக இருக்க வேண்டும் என்ற ஆவலும் அவனுக்குத் தோன்றியது. ஆகவே அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் வரவேற்க பாசறை வாசலுக்கே வந்துவிடுகிறான் தர்மன் தர்மன் காயம் அடைந்திருக்கலாம் என நினைத்த அர்ஜுனனுக்கும்

கிருஷ்ணனுக்கும் ஓடி வரும் தர்மனைப் பார்த்து மிக்க சந்தோஷம். ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை பூக்கின்றனர்.

இந்த சந்தோஷப் புன்னகையும் பார்த்த தர்மன், ”நாம் கொண்ட எண்ணம் சரிதான் போலிருக்கு. யுத்தத்திலே கர்ணனனை வென்று கொன்றே இங்கு என்னிடம் ஆசி வாங்க வந்துள்ளான் தம்பி” என தன்னுடைய யூகத்தை தனக்குள்ளேயே வலுப்படுத்துகிறான்

அண்ணன் தர்மனுக்கு காயமில்லை அவர் நன்றாகவே இருக்கிறார் எனத் தெரிந்த அர்ஜுனன் சந்தோஷ மிகுதியில் ,” அண்ணா என்னை ஆசிர்வதியுங்கள்” என தர்மன் காலில் பணிகிறான்

இப்போது தர்மன் நிலையினைப் பாருங்கள். கர்ணன் மடிந்தான் என நிச்சயமே செய்து கொண்டான் தர்மன்.

‘அர்ஜுனா கர்ணனை நீ எப்படி கொன்றாய் விஸ்தாரமாக எனக்குச் சொல்ல வேண்டும் “ என கேட்கவும் செய்தான்

தான் இன்னும் கர்ணனைக் கொல்ல வில்லை என்பதை அர்ஜுனன் சொல்கிறான் வந்ததே தர்மனுக்குக் கோபம். கர்ணன் மடிந்தான் என்பது தன் யூகமே என்பதை மறந்தான். அர்ஜுனனை கண்டபடி ஏசினான்

“நீயா சிறந்த வில்லாளி உன் காண்டீபத்தை யாரிடமாவது கொடுத்துவிடு அதை நீ இன்னமும் ஆயுதமாகத் தரிப்பதை நான் சகிக்கமாட்டேன் “ என்ற அளவுக்குப் போய்விட்டது தர்மனின் கோபம்

அர்ஜுனனும் சும்மா இல்லை , “ என் காண்டீபத்தைப் பழிப்பவர் உயிரை எடுப்பேன் இல்லையேல் என்னை நானே மாய்த்துக் கொள்வேன் “ என சபதம் செய்திருக்கிறேன். இதோ உங்களைக் கொல்கிறேன்” என்ற அளவுக்கு அவனும் சூடாகிவிட்டான்

என்ன நடந்திருக்கும்


அதான் ட்ரிக் மாஸ்டர் பக்கத்திலேயே இருக்காரே 

இருவரையும் சமாதானம் செய்கிறார் ஆனாலும் அர்ஜுனன் தான் காண்டீபத்தை அவமதித்தவரை கொல்லாமல் விட்டால் தன் சபதம் என்னாவது எனக் கேட்க அதற்கும் கண்ணன் வழி சொல்கிறான்

“அர்ஜுனா. நீ உன் அண்ணன் தர்மனை. நன்றாகப் பழித்துப் பேசு அது அவனைக் கொல்வதற்குச் சமம்”

” சரி கண்ணா அப்படி நான் பேசிய பின் அண்ணனை இழித்துப் பேசிய எனக்கு என்ன தண்டனை”

“அது சரி அண்ணனைக் கொன்றாலும் தப்பில்லை ஆனால் இழித்துப் பேச மறுக்கும் பாசக்காரத் தம்பிதானே நீ அதற்கும் ஒரு மாற்று வழி வைத்திருக்கேன். தர்மனைத் தீட்டி இழித்துப் பேசியபின் நீ உன்னை நீயே புகழ்ந்து கொள் அதுவும் மரணத்திற்குச் சமம்” அர்ஜுனன் அப்படியே பர நிந்தை ஆத்ம ஸ்துதி செய்தான்

இந்த யோசனைப்படி கிருஷ்ணன் அந்த இக்கட்டான சூழலை சமாளித்தான் என காட்டுகிறார் வியாசர்

ஆத்ம ஸ்துதி, பர நிந்தை- அதாவது தற்புகழ்ச்சியும், பிறரை இகழ்வது
இரண்டுமே ஒரே மாதிரி தான்


அடையாறு தியோசபிகல் சொஸைட்டியோடு தொடர்புடைய ட்டி. சுப்பா ராவ் என்பாரின் கருத்துக்களை இந்த சுட்டியில் படிக்கலாம்



சுவாரசியமாக இருக்கிறது. அவருடைய சிந்தனை ஓட்டம் எனக்கு பிடித்திருக்கிறது





இவையெல்லாம் 1912 லேயே பதிப்பாகியிருக்கிறது என்று வலை சொல்லுது

பாரத்த்திலே தர்மன் பலரிடம் ஆலோசனை கேட்பதாக சம்பவங்கள் வருவதைக் காணலாம். அது

தர்ம்ம் எது என அவர் கேட்கும் கேள்விகளுக்கு பலர் விடை சொல்லுகின்றனர். ஏன் தர்மர் இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்பதைக் கவனிக்கையில் சரியானது எது எனத் தெரிந்து கொள்வதில் அவருக்கு இருந்த முனைப்பு என்றே நினைக்கத் தோன்றுகிறது.
பெட்ரண்ட் ரஸ்ஸலின் Outline of Philosophy எனும் நூலில் படித்த்து நினைவுக்கு வருகிறது. அதை அப்படியே இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்

Philosophy arises from an unusually obstinate attempt to arrive at real knowledge. Where passed for knowledge in ordinary life suffers from three defects: it is cocksure, vague and self-contradictory. The first step towards philosophy consists in becoming aware of these defects, not in order to rest content with lazy sceptisim, but in order to substitute an amended kind of knowledge which shall be tentative, precise and self-consistent. There is of course another quality which we wish our knowledge to posses namely comprehensiveness; we wish the area of our knowledge to be wide as possible.

தர்மனிடம் கேட்பதற்கு பொறுமை இருந்தது எல்லாவற்றையும் விட தெரிந்தது போதும்
எனும் lazy Sceptisim இல்லை. Cocksure இல்லை; vague இல்லை

இந்த விஷயத்தில் அர்ஜுனன் எப்படி என கவனிக்கலாம்....ஒரு வேளை கேள்விக்கு விடை கிடைக்கலாம்

அர்ஜுனன் ,க்ருஷ்ணன், கீதை , சண்டை எனும் இந்த சப்ஜெக்ட்டை பாரத் நிகழுவுகளைக் கொண்டே அணுக வேண்டும் எனும் முயற்சியாகத் தான் பாரதத்தின் நிகழ்வுகளை மேற்கோள் காட்டினேன். அதன் தொடர்ச்சியாக இன்னுமொரு சம்பவத்தினைக் கவனிக்கலாம்

போருக்கு முன்பான நிகழ்வுகளில் மிக முக்கியமானது க்ருஷ்ணனின் தூது. தூதுக்கு புறப்படும் ரோகிணி நஷத்திரத்து நாள் ( அந்த மாயக் கண்ணனின் ஜன்ம நஷத்திரம் !!!) பாண்டவர் அனைவரிடமும் ஆலோசிக்கிறான் க்ருஷ்ணன் . தர்மன், அர்ஜீனன், பீமன், நகுலன், சகாதேவன் இவர்கள் சமாதானம் சமாதானம் என்றே சொன்னார்கள், சாத்யகியும். திரௌபதி மட்டும் ஆவேசமாக சண்டை சண்டை என்றாள் . புறப்படும் சமயத்தில் கூட அர்ஜூனன் சமாதானம் சாத்தியமே இல்லை என்றால் தான் சண்டை என சொல்லி அனுப்புகிறான்

எப்படியாவது சமாதானத்தினை சாத்தியமாக்கிடணும் என க்ருஷ்ணன் கர்ணனை சந்தித்து அவன் பிறப்பின் மர்மத்தை சொல்லுகிறான். குந்தியை கர்ணனிடம் அனுப்றான். ஒரு படி மேலே போய் (கீழிறங்கி !!) யுத்தகளத்தில் பீஷ்மர், துரோணர்,க்ருபர் போன்ற பெரியவர்களிடம் ஆசி வாங்க தர்மன் போனபோது க்ருஷ்ணன் யுத்த களத்தில் இல்லாத கர்ணனிடம் சென்று ( பீஷமர் இருக்கும் வரை யுத்தம் செய்ய வர மாட்டேன் என்ற சபதம் கொண்டு இருக்கிறான் கர்ணன் என்பதனை நினைவில் கொள்க) மீண்டும் அவனை பாண்டவர் தரப்புக்கு வருமாறு சொல்கிறான்; ஒரு படி மேலே போய் பீஷ்மர் இறக்கும் வரை நீ பாண்டவர் பக்கம் இரு பின்னர் வேண்டுமானால் கௌரவர் சேனைக்குப் போகலாம் எனவும் சொல்கிறான்



இனி விஸ்வரூபங்களைக் குறித்து பார்ப்போம்

செய்வது தவறு எனத் தெரிந்தும் செய்து கொண்டே இருக்கும் குழந்தைகளிடம்,”

இப்ப என்ன செய்றேன் பார் என பெரியவர்கள் மிரட்டுவதில்லையா

கண்ணை உருட்டி பல்லைக் கடித்து குரலை உயர்த்தி

அது போல ஒரு மிரட்டல் துரியோதனனுக்கு

எனக்கு இதெல்லாம் எப்படி செய்வது என்பதில் குழப்பமாக இருக்கிறது என
பாடத்திலோ அல்லது வேறெதாகிலும் பிள்ளைகள் சந்தேகம் கேட்கும் போது
பெரியவர்கள் அவர்களுடனே கலந்து இது இப்படி இது அப்படி எனத் தெளிவு
செய்வார்கள். அப்போது தமது அனுபவங்களையும் சொல்லி குழந்தைகளை
ஊக்கப்படுத்துவார்கள். நானிருக்கிறேன் உன்னை வழி நடத்த. கவலைப்படாமல் உன் பாடத்தைப்படி, அந்த வேலையைச் செய் எல்லாம் சரியாக வரும்

அது போல அர்ஜுனனுக்கு 


கீதைக்குப் பின்னும் அர்ஜுனன் சஞ்சலம் அடைந்தான் அதனால் கீதை ஒரு இன்செர்ஷன் எனும் லாஜிக்கிற்கு, அது ஏற்கத்தகுந்தந்த லாஜிக் இல்லை என்பதனை சம்பவங்களைக் கொண்டு பட்டியல் இடலாம்



1. அறிவுரை / அறவுரை கேட்ட பின் சஞ்சலமே வரலாகாது என்பது ஏற்புடையது அல்ல‌



2. போர் முடிந்து இராஜ்யம் ஏற்க தயங்கும் தர்மனுக்கு அர்ஜுனன் சொல்லும் ஆறுதல், அறிவுரை அதில் காணப்படும் கீதை சாயல்

3. அர்ஜுனன் சமாதனமே விரும்பனான். க்ருஷ்ண தூதின் போது இதையே அவன் சொல்லுகின்றான். 

4. அர்ஜுனன் தர்மனிடம் வாதம் செய்த (சண்டை போட்ட ) சம்பவங்களைச் சொல்லியாயிற்று. க்ருஷ்ணர் உடனிருந்தார் என்ற தகவலுடன்

5. கீதையைக் கேட்டவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் கீதை சொன்ன க்ருஷ்ணன். கீதை சொன்ன கொஞ்ச நேரத்திலேயே போர்க்களத்தில் இல்லாத கர்ணனை தேடி சென்று இந்தப் பக்கம் வந்துடு எனச் சொன்ன சம்ப்வமும் எடுத்துக் காட்டியாகி விட்டது . அதனால் க்ருஷ்ணனுக்கு சஞ்சலம் இருந்தது என சொல்லலாமா?

போர்க்களத்தில் இப்படி 700 ஸ்லோகங்கள் எப்படி சாத்தியம் எனும் வினாவினைக் கவனிக்கலாம்...

(தொடரும்)

கத்தும் குயிலோசை


அது எந்த மலை எனத் தெரியவில்லை. அங்கே தனிமையாக இருந்த சமயம். ஒரு வேளை பெங்களூரு லால் பாக் தோட்டத்துள் இருக்கும் சின்னக் குன்று போலவே இருக்கின்றது. அங்கே நான் அமர்ந்த நிகழ்வு கனவு போலவும் நிஜம் போலவும் இருக்கின்றது

ஒற்றைப் பாதையில் முண்டாசு ஏறி வந்து என் பக்கம் அமர்ந்தான்

" என்ன ஏதோ பலமான யோசனை போலிருக்கின்றது.. முகமும் மிகவும் வாட்டமாக இருக்கின்றது"

"அதெல்லாம் ஒன்றுமில்லை; நீங்கள் திடீரென வந்ததை நினைத்துக் கொண்டிருக்கின்றேன்"

"உங்களுக்கு பொய் உரைக்க வாராதே ஏன் கஷ்டப்படுகின்றீர். ஒன்றுமில்லை என நீர் உரைப்பதும் , நான் தீடீரென வந்ததாய் சொல்வதும் பொய். நான் இது வரை உம்மை நாடி வந்ததருணங்களையெல்லாம் நினைவு கூர்ந்து பார்க்கலாம்"

சிரித்துக் கொண்டே, " உங்களிடம் பொய் சொல்லி அதை நிறுவ இயலுமோ; நீர் மனிதராய்ப் பிறந்த பராசக்தியே தான்"

" ஹா ஹா ... சரி உமக்கு ஐயம் வர வழைத்த பாடலைப் பாடும் கேட்போம்"

காணி நிலம் வேண்டும் பராசக்தி

காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்தினிடையே ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் அங்கு
கேணியருகினிலே தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு தென்னைமரம்

பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர்போலே நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும் எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டுதர வேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.


நல்லதொரு குரல் வளம் தந்தாள் அந்த சக்தி உமக்கு.. எமை மறந்தோம் சில கணம். என்ன உமக்கு ஐயம்"

"குயில் கூவும் என்று தானே இருக்க வேண்டும். எதுகைக்கு இசைந்து வர வேண்டும் என கத்தும் என சமைத்திருக்கின்றீரோ என ஐயம்"

"எதுகைக்குப் பாட்டெழுதும் உங்கள் சினிமாக் கவிஞர் என நினைத்தீர் போலும் என்னை"

" விளக்கம் சொன்னால் சமாதானம் ஆகின்றேன்.. எதிர் கேள்வி ஏன் கேட்கின்றீர்"

வந்ததையா அவனுக்குப் கோபம். குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி பேசினான்

”நீர் இசைத்தீரே அந்தப் பாடல் அதில் இரவு நேரம் என்பதை சொல்லியதைக் கவனிக்கவில்லையோ நீர். மூடரே உமக்குப் புரியவைக்க வேண்டும் என்பதற்காகவே நிலவின் ஒளி முன்பு வர வேண்டும் என சொல்லியிருக்கின்றேன்.

குயிலினம் பகற்பொழுதில் குரல் எழுப்ப்பவதிலும் இரவில் குரல் எழுப்புவதிலும் இருக்கும் வேறுபாடு உமக்கு தெரிந்திருக்கின்றதா என எனக்குத் தெரியவில்லை. பகலில் அதன் குரல் அது இருக்குமிடம் தனது என பறை சாற்றவும் , தன் துணையினை அழைக்கவும் வெளிப்படும். அது குழலோசைக்கு ஒத்து இருப்பதால் கூவும் என சொல்கின்றோம்.. நீர் இரவு என்றாவது குயிலின் குரலைக் கேட்டதுண்டா .. அது பகலில் எழுப்பும் குரல் போலவே இருக்காது , மிகவும் வேறுபட்டு இருக்கும் என தெரியுமா"

ஓரளவு அவனுக்கு கோபம் குறைந்தது தெரிந்தது

" சரி சரி விளக்கியதும் புரிந்தது இதற்கு ஏன் கோபம்.."

"உமது ஒரு ஐயத்துக்கு விளக்கம் சொன்னோம். உமக்கு இன்னொரு சங்கதி கேட்க வேணும்.. நீரே சொல்லுகின்றீரா அல்லது நானே சொல்லவா"

"உங்களிடம் மறைக்க இயலுமா. ஏமாற்றம் ஒன்று.. மனது சஞ்சலம் கொண்டது.. கண்ணனை நினைத்தும் மனம் சலிப்பிலிருந்து மீள்வதாயில்லை"

"கண்ணனை என்னவாய் நினைத்துக் கேட்டீரோ தெரியவில்லை.. கண்ணனைத் தாய் என்று நினையும்.. உமது உள்ளத்தே எரியும் தீயை அணையும்

இன்பமென சில கதைகள்  எனக்
கேற்றமென்றும் வெற்றியென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் கெட்ட‌
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் எனும்
இவற்றினுக் கிணங்க வென்னுள மறிந்தே
அன்போடவள் சொல்லி வருவாள் அதில்
அற்புத முண்டாய்ப் பரவச மடைவேன்

கண்ணன் உரைப்பது கதைகள்.. அதனை அவனேயறிவான்..

ஓம் ஓம் ஓம் என்று குரல் தந்து காற்றிலே கலந்தான்

Wednesday, 7 September 2011