12 மே 2007 அன்று சட்ட மன்றத்தில் நடைபெற்ற தனது சட்ட மன்ற பொன் விழாப் பேருரையில் தமிழக்த்துக்கென புதிய சட்ட மன்ற வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பினை திரு கருணாநிதி வெளியிட்டார். அதனைத் செயல்படுத்தும் விதமாக உரிய அரசாணை பொதுப்பணித் துறையால் 04 ஜூலை 2007 அன்று வெளியானது . அரசாணை எண் 209. அதன் படி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்
சுமார் எட்டு லட்சம் சதுர அடிப் பரப்பில் சுமார் 200 கோடி செலவில் சட்ட மன்ற வளாகம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது . அதன் படி புதிய வளாகத்தில் சட்ட மன்றம், முதல்வரின் அறை/ அலுவலகம், பிற அமைச்சரின் அறைகள், தலைமச் செயலர் அறை/ அலுவலகம், உள்துறை நிதி போன்ற முக்கிய துறைச் செயலர்களின் அறைகள் அலுவலகங்கள் அமைக்க்க ஆணையிடப்பட்டது
பணியினைத் தொடங்க ஏதுவாக பொதுப்பணித் துறை தலைமப் பொறியாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்திட அரசு 5 நவம்பர் 2007 அன்று அரசாணை வெளியிட்டது . இதன்படி அந்தக் குழு இந்த கட்டிடப் பணிக்கான டென்டரை இறுதி செய்யும் குழுவாகவும். கட்டிட வடிவமைப்பினை இறுதி செய்யும் குழுவாகவும் அதிகாரம் கொண்டதாக ஆக்கப்பட்டது
இந்த உயர் நிலைக் குழு கட்டிட வடிவமைப்புக்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களை பரிசீலித்து ஜி.எம்.ப் இன்டர்நேஷனல் எனும் ஜெர்மன் நிறுவனத்தை அங்கீகரித்து அதனை ஆர்கிடெக்சுரல் பணிக்கான கல்சல்டன்டாக அங்கீகரித்தது
அரசாணை எண் 371 பொதுப் பணித் துறை நாள் 10 டிசம்பர் 2007ன் படி அரசு செயலர்கள் கொண்ட குழுவினை அமைத்து அந்தக் குழு கட்டிடப் பணியில் பொதுப்பணித் துரையின் கட்டிடப் பிரிவு தலைமப் பொறியாளருக்கு ஆலோசனை வழங்கிட ஆணையிட்டது
26 மார்ச் 2008 அன்று முதல்வர் கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் இந்த வளாகத்திலேயே தலைமைச் செயலகத்தினை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு அதன் பின்பு அதன் வழியே பணிகள் தொடங்கப்பட்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பிரதமர் கலந்து திறப்பு விழா நடைபெற்று .. சட்ட மன்ற கூட்டத் தொடரும் நிகழ்ந்து கவர்னர் உரை நிகழ்த்தப்பட்டு அங்கே தலைமைச் செயலகப் பணிகள் இயங்கத் தொடங்கின.
ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த தொன்மையான சட்ட மன்ற பேரவை கூடம் , அதுவரை சென்னை காமராஜர் சாலை பாலாறு கட்டிடத்தில் இயங்கிய மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் நூலத்தின் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்டமன்ற செயலக ஆணை எண் 90 நாள் 02 ஜூன் 2010ன் படி ஆணையிடப்பட்டு அந்த நூலகம் அங்கே செயல்படவும் தொடங்கியுள்ளது
ஆனால் தற்போது ஆட்சி அமைக்க உள்ள செல்வி ஜெயலலிதா அவர்கள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள் புதிய சட்ட மன்ற வளாகத்தினையும் தலைமைச் செயலக வளாகத்தினையும் பயன்படுத்தப் போவதில்லை எனவும் பழைய படி இவற்றினை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்கே இட மாற்றம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன
புதிய கட்டிடங்கள் இனி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு காலத்திற்கு கிடப்பிடலிடப்படுமா
காரணம் வெகு சிம்பிள் : இந்தக் கட்டுரையின் முதல் வரியினைப் மீண்டும் படிக்கவும் காரணம் தெரிந்து விடும்
செலவு சுமார் 430 கோடி
எல்லாம் குடியரசே
8 comments:
கிடப்பி"ட"லிடப்படுமா
தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு முன் எப்படி? செல்வி ஜெயலலிதாவிற்காக புதியதாக கட்டப்பட்டதும், இந்தியப்பிரதமரால் திறந்து வைத்து செயல்படுத்தப்பட்டதுமான, ஒமந்தூரார் தலைமைச்செயலகத்தை, ஒரு தனிநபருக்காக மாற்ற முடியும்?
தமிழ்நாடு புதிய ஒமந்தூரார் தலைமைச்செயலகம், பழைய ஜார்ஜ் கோட்டை தலைமச்செயலக சட்டமன்றத்தில், நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்றப் பிரதிநிதிகள் முன்பு வைக்கப்பட்ட தீர்மானத்தின் படியும், அத்னபடி ஒதுக்கப்பட்ட தமிழக அரசு (மக்கள் பணம்) நிதியைக் கொண்டு, அரசாணை மற்றும் அரசிதழில் வெளியிடப்பட்டு தானே கட்டப்பட்டது.
அப்படி முறையாக கட்டப்பட்டதை எப்படி? பதவி ஏற்பதற்கு முன்பே, அதை சட்டமன்றத்தில் பிரதிநிதிகள் முன்பு வைத்து விவாதம் நடத்தி, நியாயமான முடிவு எடுக்காமல், ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கிற செந்தமிழ் நூலகத்தின் இடத்தை மாற்றியும், அதற்கான இடத்தையும், தேர்வு செய்யாமல், ஒரு தனி நபர் மாற்ற முடியும்?
அதற்கான உத்தரவையும் ஒரு தனிநபர் எப்படி போட முடியும்?
இன்னும் எவருமே பதவியேற்கவில்லையே? அவர் இன்னும் தனி நபர் தானே!?
அப்படியென்றால் நாடு, அரசு என்பது ஒரு தனிநபருக்காகவா? யார் வேண்டுமானால் மாற்றலாமே? இங்கு மக்கள் தானே எஜமானர்கள். ஆரம்பத்திலேயே அத்துமீறல், அரசியல் சட்டமீறல் அராஜகமா?, இன்னும் என்னென்ன? விபரீதங்களோ? அட்டகாசங்களோ?
அன்பின் மௌளி - புதிய முதல்வரின் விருப்பம் தலைமைச் செயலகம் எங்கு எப்படி இருக்க வேண்டும் என்பது. இப்பொழுது இயங்கும் புதிய கட்டிடம் இடிக்கப்படலாம் - அங்கு ஒரு பறவைகள் சரணாலயம் அமைக்கப் படலாம். இதற்கு ஒரு 500 கோடி அனுமதிக்கலாம். தவறே இல்லை.
இது மிகவும் மோசம் . புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் நடந்தால் தமிழக சட்டமன்ற வளாகத்தை கருணாநிதி கட்டினார் என்று வரலாறு சொல்லும் . அப்படி ஒரு வரலாறு வந்து விடக்கூடாது என்பதற்காகவே செய்யும் வேலை இது .
அடையாறு நூலகம் , பள்ளி பட புத்தகங்கள் எல்லாம் என்ன ஆகுமோ ?
சரி புதிய சட்டமன்ற கட்டிடத்தை என்ன செய்வார்கள் ?
விஎஸ்கே
நன்றி ; தட்டச்சுப் பிழை
சுட்டியமைக்கு நன்றி
கமெண்ட் எழுதிய அனைவருக்கும் ந்னறி
இது ஒரு ஆரம்பம்தான்....
We have to form a strong civil society to question this
This would mean loss of 430 crores as well as monthly rentals paid for the st.goerge fort space.
Mowlee Saar!
Request you to please enlighten us with modalities that would be followed to change the place.
Would there be a GO signed for this?doesnt this require majority votes in assembly?can we aqpproach DMDK people like MAFOI Pandiyarajan to raise this issue?
Post a Comment