
ஹசாரேவும் ஊழல் செய்தார் முறைகேடுகள் செய்தார் என்று தீர்ப்பு சொன்னது Justice Sawant Commission of Enquiry
அவர் மீது கமிஷன் விசாரணை முடிவு சொன்ன தீர்ப்ப் விபரங்கள்
1. ஹிந்து ஸ்வராஜ் டிரஸ்ட் எனும் அமைப்பின் நிதியிலிருந்து 2.20 லட்சம் ரூபாய் தனது பிறந்த நாள் கொண்டாட்ட்த்திற்கு செலவு செய்தார். இந்த ட்ரஸ்ட் பெயரில அரசு நிலத்தை அபகரித்தார்
2. சந்த யாதவ பாப சிக்ஷான் மண்டல் எனும் அமைப்பின் கணக்கு வழக்குகளை தணிக்கைக்கு தரவில்லை; வருமான வரித்துறை சட்டங்களுக்கு புறம்பாக ட்ரஸ்ட் பணம் அதன் நிர்வாகிகளுக்கு கடன் எனும் பெயரில் தரப்பட்ட்து என்பன போல பல நுணுக்கமான முறைகேடுகளை ஹசாரேவுக்கு எதிராக கமிஷன் தீர்ப்பு சொன்னது
3. ராலேகான் சித்தி கிராமத்தில் ட்ரஸ்ட் பெயரில் நிலங்கள் பெறப்பட்டதும், பின்னர் கட்டிடங்கள் எழுப்பப்பட்டதும் இதற்கான அரசு அமைப்பிடம் தெரிவிக்கப்பட வேண்டும் எனும் அடிப்படை விதிகள் பின்பற்றப்படவில்லை
4. டிரஸ்ட் பணம் ரூபாய் ஒரு லட்சம் சுவாமி விவேகாநந்த க்ருதி என்பவருக்கு வட்டியில்லாக் கடனாக கொடுக்கப்பட்டது. இதற்கு ட்ரஸ்ட் விதிமுறைகளில் எந்த இடமும் இல்லை
5. டிரஸ்ட் நிதியிலிருந்து யாதவா பாப கோவில் பணிகளுக்கென ரூ 46 374 செலவிடப்பட்டுள்ளது. ஆனால் டிரஸ்ட் நிதி கல்வி தொடர்பான பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என டிரஸ்டினை பதிவு செய்யப்படும் போது கொடுத்த உறுதிகளுக்கு இது முரணானது
6. மும்பை டிரஸ்ட் சட்டத்திற்குப் புறம்பாக டிரஸ்ட் பணம் ஷெட்யூலில் இல்லாத வங்கிகளிலேயே பெருமளவு முதலீடு செய்யப்பட்டது
7. இப்படி முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி என்ன ஆனது எனும் கேள்விக்கு டிரஸ்ட் நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை
8. தாக்டு கிசன் மன்பாரி என்பவருடன் அண்ணா ஹசாரே இணைந்து இயக்கி வந்த வங்கிக் கணக்கு வரவு செலவுகளைக் குறித்து இருவரும் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.
9. பாரத்சார் விரோதி ஜனந்தோலன் எனும் அமைப்பினை ட்ரஸ்ட் என அண்ணா ஹசாரே தரப்பு சொல்லியது. ஆனால் அப்படி அமைப்பு ட்ரஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவே செய்யப்படவில்லை
10. இந்த ட்ரஸ்ட்க்கு மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமித்ததில் முறைகேடுகள் நடந்துள்ளது
11. இந்த டிரஸ்ட்டுக்கு நன்கொடை வசூல் செய்த பல ரசீது புத்தங்கள் தொலைந்து போயின
12. இந்த டிரஸ்டின் உறுப்பினர்கள் வன்முறை , ரௌடித்தனம், நில அபகரிப்பு என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனும் புகாருக்கு சிலர் தங்கள் ட்ரஸ்ட் உறுப்பினர் இல்லை என ஹசாரே சொன்னார். புகாருக்கு உள்ளானவரில் பலர் டிரஸ்ட் உறுப்பினர்கள் என்பதையும் அவர்கள் டிரஸ்ட்டின் பெயரிலேயே இதனைச் செய்தனர் எனும் குற்றச்சாட்டையும் அவர் மறுக்கவில்லை
13. க்ருஷ்ணா பாணி பூர்வத யோஜனா எனும் சங்கத்தின் சட்ட திட்டங்களின் படி அந்த சங்க விவகார எல்லைக்குள் சொந்த நிலம் வைத்திருப்பவரே அதன் அங்கத்தினராக இருக்கலாம். ஆனால் இந்த தகுதி இல்லாத ஹசாரே 2001 முதல் 2003 வரை அதன் உறுப்பினராக மட்டுமல்ல தலைவராகவும் இருந்திருக்கின்றார்
14. இந்த சங்கத்தின் கணக்கினை தணிக்கை செய்த தணிக்கை அதிகாரியின் மறுப்புரைகளுக்கு எந்த பதிலும் தராது இருந்தனர்
மேலும் விபரமாக படிக்க
கிழக்கு பதிப்பகம் வெளியீடு
அறியப்படாத அண்ணா ஹசாரே
https://www.nhm.in/shop/978-81-8493-509-7.html
போன் செய்து இந்தப் புத்தகத்தை வாங்கிட
கிழக்குப் பதிப்பகம்
டயல் ஃபார் எ புக் சேவை எண்கள்
94459 01234
9445 97 97 97