Wednesday, 8 June 2011

கலைஞருக்கு ஒரு கடிதம்


அன்பின் கலைஞருக்கு. வணக்கம். இது வரை நீங்கள் தான் பிறருக்கு கடிதம் எழுதி அது முரசொலியில் பதிவாகும் ஆனால் இன்றைக்கு நீங்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை இந்தக் கடிதம் எழுத தூண்டியது. இப்படி சங்கதிகளை நினைவு வைத்திருப்பதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்

அண்ணா ஹசாரே, பாப ராம்தேவ் இவர்களின் போராட்டங்கள், லோக் பால் மசோதா இவற்றையெல்லாம் குறிப்பிட்டு இன்றைய அறிக்கையில் 1973 ல் திமுக ஆட்சியில் இருக்கும் போது பொது ஊழியர் ஊழ்ல் தடுப்பு சட்டம் கொண்டு வந்ததை குறிப்பிட்டுள்ளீர்கள்;

அதுவும் எப்படி ஊழல் ஒழிப்பிலே தமிழகம் இந்தியாவுக்கு முன்னோடியாக இருக்கிறது என

ரொம்ப வாஸ்தவம் தான்

அந்த சட்டம் ஒட்டிய வரலாற்றினையும் கொஞ்சம் பார்க்கலாம்

டிசம்பர் 1973 நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது Tamil Nadu Public Men (Criminal Misconduct) Act, 1973 என்ற பெயரில் வந்த சட்டம் அது பின்னர் செப்டம்பர் 6 1977 அன்று அப்போதைய எம் ஜி ஆர் அரசால் ரத்தானது இதல்லாம் நீங்கள் மிகச் சரியாக நினைவில் வைத்திருப்பீர்கள்

கோதுமை பேர ஊழல் வழக்கில் தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது நீங்கள் வழக்காடீனீர்கள்... என்னவென்று ஒரு மாநில முதல்வர் பொது ஊழியரே இல்லையென அதற்காக உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று 20 பிப்ரவரி 1979 உச்ச்நீதிமன்றம் முழு பெஞ் உங்கள் வாதத்தினை ஏற்காது உங்கள் மனுவினைத் தள்ளுபடி செய்ததையும் நினைவில் வைத்திருப்பீர்கள். ஆனால் நீங்களாக வெளியில் சொல்ல மாட்டீர்கள்

உங்களைக் கடலில் தூக்கி போட்டாலும்.. என ஒரு சின்ன ப்ளாஷ் கலைஞர் தொலைக் காட்சியில் வரும் போதெல்லாம் இந்த வழக்கினையும் அதில் உங்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களையும் நினைத்துக் கொள்வேன். ஒரு மாநில முதல்வர் பொது ஊழியர் அல்ல எனும் வாதத்தினை இந்திய நீதி மன்றத்தில் ஒலிக்கச் செய்த பெருமையும் நமக்கு தானே

என்ன செய்வது அந்த 28 பக்க உச்ச நீதி மன்றத் தீர்ப்பு மிக நிரந்தரமான் சட்ட ஆவணம்

கூடா நட்பு மட்டும் கேடு தராது .. இப்படி மறக்க கூடா நிகழ்வுகளும் கேடு தரும்


அன்புடன்
மௌளீ

13 comments:

BalHanuman said...

அன்புள்ள மௌளீ,

மிக அருமையான கடிதம்.

வேண்டாத விஷயங்களை எல்லாம் நினைவில் வைத்திருந்து கடிதம் எழுதி நம் கழுத்தை அறுப்பார்.

திருடனுக்குத் தேள் கொட்டிய விஷயங்களை வெளியில் சொல்வாரா ?

உடனே நினைவுக்கு வரும் இரண்டு பாடல்கள்...

திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம் ?

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?

Venkat said...

Sir,
Please provide link for the judgement's text,if you have.
Thanks.

Amirthanandan said...

இது போன்ற சம்பவங்களை மறக்கப்பட வேண்டும்.. இல்லாவிடில் உங்களுக்கும் நோட்டீஸ் விடுவோம்- நாளை முரசொலியில் வரலாம்...

உங்கள் பக்கங்கள், சமீப வரலாற்றினை அறிய விரும்புவோர்க்கு நல்ல களம். நன்றி சகோ!

மாலன் said...

1973ல் கலைஞர் கொண்டு வந்த சட்டத்தில், குற்றம் மெய்ப்பிக்கப்படாவிட்டால் புகார் அளித்தவர் தண்டிக்கப்படுவார் என்று ஒரு பிரிவு இருந்ததாக ஞாபகம். அப்போது எம்.ஜி.ஆர் திமுக மீது சரமாரியாக ஊழல் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு வந்தார். அவருக்கு வாய்ப்பூட்டுப் போட இப்படிச் சட்டம் கொண்டு வந்ததாகவும் ஓர் விமர்சனம் உண்டு
மாலன்

Rajasurian said...

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?

இரா கி இராம் மோகன் said...

தகவல் செறிந்த இடுகை.. நன்றி...

இரா கி இராம் மோகன் said...

தகவல் செறிந்த இருகை... நன்றி...

பாலா said...

//அண்ணா ஹசாரே, பாப ராம்தேவ் இவர்களின் போராட்டங்கள், லோக் பால் மசோதா இவற்றையெல்லாம் குறிப்பிட்டு இன்றைய அறிக்கையில் 1973 ல் திமுக ஆட்சியில் இருக்கும் போது பொது ஊழியர் ஊழ்ல் தடுப்பு சட்டம் கொண்டு வந்ததை குறிப்பிட்டுள்ளீர்கள்//சட்டத்தையும் கொண்டு வந்துடு பெரிய அளவுல ஊழலையும் பண்ணிடீங்க .....இதுல பெருமை வேற !!! என்ன கொடும ........சார் ...

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அரிய தகவல்கல் - எல்லோரும் மறந்து போன தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா

Ashwin-WIN said...

வழமையா கலைஞர்தான் கடிதம் எழுதுவார் இப்போ அவருக்கே கடிதமா. அருமையான தகவல்களோட கலக்கீர்ரீங்க. நன்றி....
நேரம் இருந்தா இங்கயும் வாங்க..
சிறையிலிருந்து ராசா எழுதிய கடிதம்

Ganpat said...

Dear BalHanuman,

If A cheats B once then punish A.

After the punishment,if he cheats B again then punish him(A) again..

But even after the second punishment,if he cheats B again then punish B!!(for being a sucker)

A=Karunanithi
B=Those who have voted for him
No.of times=Twelve!

So the right lyric is NOT
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?
but IS
எத்தனைக் காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே ?

Ganpat said...

நாம் மறக்கக்கூடாத, ஆனால் எப்பவோ மறந்துவிட்ட, ஒரு வழக்கை இவ்வளவு சிரத்தையாக பதிவிட்ட CM சார்,
நீவிர் வாழ்க!நும் குலம் வாழ்க!!

BalHanuman said...

Dear Ganpat,

Very well said. I totally agree with you :-)