Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Sunday, 3 August 2008

கடிதம்-3


நான் படித்த காதல் கதைகளிலே மிகவும் சுவாரசியமானதென ”ஸ்வர்ணகுமாரி” யைச் சொல்லலாம். ஸ்வதந்திர போராட்ட காலத்திய கதை. பாரதியார் சுபாவமாகவே ரசனை கொஞ்சம் ஜாஸ்தியான பேர்வழிதான் என நம்பத் தகுந்த மாதிரியான கதை.

கதையின் க்ளைமாக்ஸ் ஒரு கடிதம். ஸ்வர்ணகுமாரி எழுதும் கடிதம்

அதை அப்படியே தருகிறேன்..

“எனது காதலாராயிருந்த மனோரஞ்சனுக்கு,

நெடுங் காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாத இப்போது கண் விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வகால மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இம் முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்தே போய்விட்டது. இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும்வரை உன் முகத்திலே விழிக்க மாட்டேன். பெற்ற தாய்க்கு சமானமான தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தாத நீ, என் மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்?. நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்து கொள்ளலாம். நான் காசியிலே என அத்தை வீட்டிற்கு சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே வந்து நீ என்னைப் பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.”

இந்தச் சின்னக் கடிதம் மட்டுமே மொத்தக் கதையையும் ஓரளவு யூகிக்க வழி செய்யும்படியாக எழுதினது தான் பாரதியின் சாமர்த்தியம்.

இந்தக் கதையை எனது 12 ம் பிராயத்திலிருந்து தொடங்கி இதோ இப்போது வரை எத்தனையோ தடவை படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் என் கற்பனையில் கதை மாந்தரை சில நடிகர் நடிகைகளாக உருவகப்படுத்தி மனதுக்குள் ஒரு சின்னத் திரை வெள்ளோட்டம் விட்டிருக்கிறேன்


(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Sunday, 13 July 2008

கடிதம்-1


பேப்பர் பேனா எடுத்து கடிதம் எழுதி தபாலில் சேர்த்து, பின்னர் பதில் வந்து அதை சிலாகித்து இல்லை வருந்தி பதில் போட்டு... இப்போதெல்லாம் இந்த சுவாரசியம் வழக்கொழிந்தே விட்டது எனச் சொல்லலாம். எல்லாம் இமெயில், எஸ்.எம்.எஸ் புண்ணியம்.

இந்த நவீன சாதனங்கள் நேரக் குறைப்பு செய்திருக்கின்றன.. நேரத்தோடு சுவாரசியக் குறைப்பும், அந்நியோந்யக் குறைப்பும் சேர்ந்து விட்டது

கடிதம் என்று சொன்னாலே எனக்கு பண்டித நேருவின் ஞாபகம் தான் வரும். அவரின் Glimpses of World History இந்திரா காந்தி அவர்களுக்க் நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. அதில் ஒரு கடிதம்.. நான் அடிக்கடி குறிப்பிடும் வரிகள்

It was about a man from South India who came to Kraunasuvarna, it was a city somewhere near modern Bhagalpur in Bihar.

This man, it was written, wore round his waist copper plates and on his head he carried a lighted torch. Staff in hand, with proud bearing a lofty steps, he wandered about in this strange attire and anyone asked him the reason for his curious get-up he told that his wisdom was sop great that he was afraid his belly would burst if he did not wear copper plates round it; and because he was moved with pity for the ignorant people round about him who lived in darkness he carried the light on his Head.

(நேருவை முழுசாத் தெரிஞ்சிக்க அவரோட இந்த புத்தகத்தை படிக்க சிபாரிசு செய்கிறேன்)

இந்த கடித வரிகளை படிக்கும் போதெல்லாம் எனக்கு தியாகராஜரின் வரராக லயஜ்ஞுலு என்ற கீர்த்தனை வரிகள் ஞாபகம் வரும்


“ஸ்வரஜாதி மூர்ச்சநா பேதமுல் ஸ்வாந்த மந்து தெலியக யுண்டிந
வரராக லயஜ்ஞுலு தாமநுசு வதரேரயா”

அதாவது ஸ்வரம், ஜாதி மூர்ச்சனை ஆகியவற்றின் வேறுபாடுகளைத் தம் உள்ளத்தில் அறியாதவர்களாயினும் சிறந்த ராக தாள வித்வான் மாதிரி பிதற்றி திரிகின்றனர் என்று அர்த்தம். இது ஸங்கீத லோகத்திற்கானது மட்டுமல்ல.

சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதம்

இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்

மாதவியை கணிகையர் குலத்தவளாகவே இளங்கோ அறிமுகம் செய்கிறார். ஆயினும் தான் பண்பு நெறி தவறாதவளே என அவளே கடிதம் வழி சொல்வதாகவும் காட்சி அமைக்கிறார்

நான் இந்த சுவாரசியங்களை இன்னும் விடாமல் வைத்திருக்கிறேன்.

ராஜீவ் காந்தி அவர்களின் மரணத்தின் போது அதற்கு வருந்தி ஓர் இரங்கல் கடிதம் சோனியா காந்தி அவர்களுக்கு எழுதியதும் அவர் அதற்குக் கைப்பட எழுதிய கடிதத்தில் ,’ நான் உங்கள் அன்பிற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உங்களுக்கு நானும் பிரியங்காவும், ராகுலும் நன்றி சொல்கிறோம்” என்று எழுதியது இப்போதும் எனது சேகரிப்புப் பொக்கிஷத்தில்

மொரார்ஜி தேசாய் அவர்களின் சுய சரிதையில், அமெரிக்க தூதுவர் ஒருவரிடம் பண்டித நேரு அவர்களின் முகம் காட்டாப் பேச்சுதான் அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரிப்பதற்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்து ஆவல் காரணமாக அவருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு அவர் சாதாரண Inland லெட்டரில் தன் கைப்பட எனக்கு எழுதிய பதில் கடிதமும் (விளக்கக் கடிதம்) என் பொக்கிஷத்தில் ஒரு முத்து

நான் வியந்த சட்ட நிபுணர்களில் மறைந்த நீதியரசர் M. ஸ்ரீநிவாசன் அவர்களும் ஒருவர். அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசராக இருக்கும்போது நான் அனுப்பிய தீபாவளி வாழ்த்துக்கு தன் கைப்பட பாராட்டியும் வாழ்த்தியும் எழுதிய கடிதம், பின்னர் ஹிமாசல பிரதேச உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றிருந்த அவர் என் திருமணத்திற்கு அனுப்பிய ஆசிர்வாதக் கடிதம்.. என் நினைவில் நீங்கா இடம் பெற்றவை

(கடித சுவாரசியம் இன்னும் தொடரும்)

Friday, 18 April 2008

கமல்ஹாசன் கோபித்துக் கொள்ள மாட்டார்


காதலி காதலன் உரையாடல் ஒன்று பாருங்கள.

”அங்கே என்னப்பா டிரம் சத்தம் ?”
“அது ஒண்ணுமில்லமா சிப்பாய்ங்க மார்ச் பாஸ்ட்”
“என்னெவோ ஒரு வெளிச்சம் சரக் சரக்னு கண்ணுல அடிக்குது ?”
“அவங்க கத்தி வச்சிருக்காங்கல்ல அதுல வெளிச்சம் பட்டு எதிரொளிக்குது”
”இங்க மலைக்கு அடியில என்ன பண்றாங்க”
“அதும்மா. அவங்க இப்படித்தான் டெய்லி பிராக்டிஸ் பண்ணுவாங்க”
“அங்க பாருப்பா. சடனா கிளம்பிட்டாங்க.... எங்க போவாங்க”
“ஏதாவது செய்தி வந்திருக்கும்மா... நீ ஏன் முட்டிபோட்டு எம்பி பார்க்கிற.... நேரா உக்காரு”
“வழில டாக்டர் வீட்ட தாண்டி இந்த பக்கமாதான் வராங்கப்பா”
“ அங்க ஏதாவது வேலை இருக்கும்மா”
“அய்யோ இங்க தான் வராங்க .. நீ எங்க எழுந்து போறே... என்ன விட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணிருக்கே.... ஞாபகம் இருக்கா?”
”ஆமாம் சத்தியம் பண்ணேன்.. இப்பவும்.. சொல்றேன்.. நான் உன்னை ரொம்ப விரும்பறேன்.. ஆனா இப்ப இவங்க கூட போய் பட்டாளத்தில் சேரத்தான் வேணும்... வரேன்”

நிலம் அதிர வேகமாய் அவர்களுடம் போனான்

சரியாக 25 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த ஆங்கில கவிதை.

1934 ல் W. H AUDEN எழுதிய பாலட் வகைக்கவிதை- (ஒரிஜினல் கடைசியில் கொடுத்துள்ளேன்)

எனக்கு இந்த கவிதையை சொல்லிக் கொடுத்த செரியன் ஜேக்கப் ஒரு அபார ஞானஸ்தன். ஆங்கில வகுப்பு ஒரு டிராமா மாதிரி நடத்துவார். மலையாள வாசனை இல்லாமல் ஆங்கிலம் பேசும் சில அபூர்வ மலையாளிகளில் ஒருவர்.

அவர்... அவர் சொல்லிக் கொடுத்த சில ஆங்கில அபூர்வங்கள்.. பக்கத்தில் வந்தால் அவரிடமிருத்து வரும் சார்மினார் சிகரெட் வாசம் எல்லாம் ஞாபகம் இருக்கு

இந்தியன் படத்தில் கமல்ஹாசன் சுகன்யாவுக்கு பொட்டுவைத்துவிட்டு தாவிப் போய் ஐ. என் . ஏ வில் சேருவதாய் வரும் காட்சி... இந்த கவிதையிலிருந்து உண்டான இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்ள மாட்டார்.

இப்போதெல்லாம் மெரினாவில், ரொம்ப நெருக்காமாய் ஒருவித “பச்சக்” ஸ்திதியில் ஆலிங்கன சொரூபமாய் காட்சி தரும் காதலன்கள் தேசபக்தி காரணமாய் சடக்கென்று வெட்டிவிட்டு காதலியை பிரிந்து போவார்கள் என்று தோன்றவில்லை.
----
O what is that sound which so thrills the ear
Down in the valley drumming drumming?
Only the scarlet soldiers, dear,
The soldiers coming

O what is that light I see flashing so clear
Over the distance brightly, brightly?
Only the sun on their weapons, dear,
As they step lightly.

O what are they doing with all that gear,
What are they doing this morning, this morning?
Only their usual manoeuvres, dear.
Or perhaps a warning.

O why have they left the road down there,
Why are they suddenly wheeling, wheeling?
Perhaps a change in their orders, dear.
Why are you kneeling?

O haven't they stopped for the doctor's care,
Haven't they reined their horses, their horses?
Why, they are none of them wounded, dear.
None of these forces.

O is it the parson they want, with white hair,
Is it the parson, is it, is it?
No, they are passing his gateway, dear,
Without a visit.

O it must be the farmer who lives so near.
It must be the farmer so cunning, so cunning?
They have passed the farmyard already, dear,
And now they are running.

O where are you going? Stay with me here!
Were the vows you swore deceiving, deceiving?
No, I promised to love you, dear,
But I must be leaving.

O it's broken the lock and splintered the door,
O it's the gate where they're turning, turning;
Their boots are heavy on the floor
And their eyes are burning.

Friday, 11 April 2008

CBSE ம் பல் பிடுங்குதலும்


நம்மூர் கவிஞர்கள் யாராவது பல்பிடுங்குவதைப் பற்றி கவிதை எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. அமெரிக்க கவிஞர் ஆக்டன் நாஷ் எங்கேயோ வசமாய் ஒரு டெண்டிஸ்டிடம் மாட்டியிருக்கிறார் போலும்

பல் பிடுங்க வைக்க நீர் யானை மாதிரி ”ஆ” என்று வாயைத் திறந்திருப்பதிலிருந்து நையாண்டியை ஆரம்பிக்கிறார் பாருங்கள்

நெஞ்சில் தாடை இடிக்க ( கொஞ்சம் பெரிய ”ஆ”) வாயை திறந்து காட்டிக் கொண்டு ரொம்ப நேரம் சமாதானமாய் இருப்பது கஷ்டம் தான்.

ரோடு ரிப்பேர் கணக்காக சில சமயம் வாய்க்குள் பள்ளம் மேடுகள் திருத்தி அமைக்க வேண்டியிருக்கும்....

பல் பிடுங்கியபின் எல்லோரும் நினைப்பது ஒரே மாதிரி தான் போலும். சாமி இனிமே இங்க வரப்படாது

CBSE பத்தாம் கிளாசில் இந்த கவிதையை வைத்திருக்கிறார்கள். ஆனால் குடலாப்பிரேஷன் கணக்காய் ,

ஆக்டன் நாஷ் காட்ட விழையும் காட்சி என்ன ?
பல் பிடுங்கும் போது ஏன் அமைதியாக இருக்க முடியாது
கவிதையில் கவிஞர் ONE என்று எதைக் குறிப்பிடுகிறார்

கேள்விகளை கேட்டு பிள்ளைகள் கவிதை சைடு தலைவைத்துக் கூட படுக்காதமாதிரி செய்திருக்கிறார்கள்... கொடுமை டா சாமி.

இந்த மாதிரி படம் வரைந்து பாகம் குறிக்கும் வகையில் கவிதையை புரிந்து கொள்ள முடியும் என்று நினைத்த அந்த மேதாவிக் குழுவில் எல்லோருக்கும் எல்லா வகை பல் வலியும் வந்து இதே மாதிரி ஒரு டாக்டரிடம் போக தகுந்த ஏற்பாடு செய்ய எல்லாம் வல்ல மதுரை சொக்கநாதனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

அந்த கவிதை வரிகளை அப்படியே தந்துள்ளேன்....

One thing I like less than most things is sitting in a dentist chair with my mouth wide open.

And that I will never have to do it again is a hope that I am against hope hopen.

Because some tortures are physical and some are mental,

But the one that is both is dental.

It is hard to be self possessed

With your jaw digging into your chest,

So hard to retain calm

When your fingernails are making serious alterations in your life line or love line or some other important line in your palm,

So hard to give your usual cheerful effect of benignity

When you know your position is one of the two or three in life most lacking in dignity

And your mouth is like a section of road that is being worked on
And it is cluttered up with stone crushers and concrete mixers and drills and steam rollers and there isn't a nerve on your head that aren't being irked on.

Oh some people are unfortunate to be worked on by thumbs,

And others have things done to their gums,

And your teeth are supposed to being polished

But you have reason to believe they are being demolished.

And the circumstances that adds to your terror

Is that it's all done with a mirror,

Because the dentist may be a bear, or as the Romans used to say, only they were referring to a feminine bear when they said it, an ursa,

But all the same how can you be sure when he takes his crowbar in one hand and mirror in the other he won't get mixed up, the way you do when try to tie a bow tie with the aid of a mirror, and forget that left is right and vice versa

And then at last he says, that will be all, but it isn't because he then coats your mouth from cellar to roof

With something I suspect is generally used to put shine a horse's hoof,

And you totter to your feet and think, well it's over now and after all it was only this once,

And he says come back in three monce.

And this O Fate, is I think the most vicious that thou ever sentest,

That Man has to go continually to the dentist to keep his teeth in good condition

When the chief reason he wants his teeth to be in good condition is so that he won't have to go the dentist.

Wednesday, 19 March 2008

நளவெண்பா-1




இன்று ஒரு நாள் லேசான ஜுரம் வந்து , லீவு போட்டுவிட்டு டாக்டரிடம் போய் பாராசிட்டமால் இன்ன இதர இத்தியாதி சின்னதும் பெரிசுமாய் மாத்திரைகள் முழுங்கிவிட்டு அவரது அட்வைஸ்படி முழு ஓய்வு எடுத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்கு ஆபிஸ் மெயில் செக் செய்து நாளைக்கு மனதளவில் தயாராகி எதாவது படிக்கலாம் என புத்தக அலமாரியில் கண்ணை ஓட்டி "புகழேந்தி"யில் நிறுத்தினேன்.



புகழேந்தியின் நளவெண்பா ரசிக்க வியக்கவைக்கும் நாலுவரி வெண்பா. சில சாம்பிள் பார்க்கலாம்
அள்ளிக் கொளலாய், அடையத் திரண்டு ஒன்றாய்
கொள்ளிக்கும் விள்ளாத கூர் இருளாய், உள்ளம்
புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்
இதயமே போன்றது - இரா


இரவை வருணிக்கும் பாடல் இது



இரவின் இருட்டு அள்ளிக் கொள்ளத்தக்க மாதிரி ஒன்றாய் திரண்டு , வெளிச்சத்தால் விண்டு போகாததாய் இருக்கிறது எனச் சொல்லி அத்தோடு விடாமல் அது விலைமாதர் மனசு போல புதைந்த இருட்டாய் இருந்ததாய் சொல்லுகிறான் புகழேந்தி

சாயங்காலம் வருவதை எப்படிச் சொல்கிறான் கவனியுங்கள்
மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத வான்கருப்பு
வில்லிகணை தெரிந்து மெய்காப்ப முல்லைஎனும்
மென்மாலை தோளசைய மெல்ல ந்டந்ததே
புன்மாலை அந்திப் பொழுது

வண்டுகள் மல்லிகை அரும்பையே வெண்ணிறச்சங்காகக் கொண்டு ஊதவும் , சிறந்த கரும்பு வில்லையுடைய மன்மதனானவன் மலர் அம்புகளை ஆராய்ந்து எடுத்துத் தன் உடம்பைப் பாதுகாத்துக்கொண்டு வரவும், முல்லை மலர் என்னும் மென்மையான மாலை தன் தோள்களில் அணியப் பெற்று அசைந்துகொண்டிருக்கவும் சிறிய மாலைக்காலம் என்னும் அரசு, மெல்ல நடந்து வந்தது.



இந்த பாட்டின் முதல் வரி நீங்கள் ஏற்கனவே ராகவேந்திரா படத்தில் ரஜினி வாயசைக்க ஜேசுதாஸ் பாடும் "ஆடல் கலையே தேவன் தந்தது " என்ற பாட்டில் கேட்டதுதான்.



படித்துகொண்டே வந்த நான் "நள தமயந்தி இன்ப வாழ்க்கை " என்ற TITLEலிட்ட பாடல்களில் ஸ்தம்பித்து நிற்கிறேன்.



"ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி ", "கால் வளைத்து " போன்ற சென்சார் பதங்கள் அந்த இரண்டு பாடல்களில் மிகுதியாய் காணப்படுவதாலும், பாடல்களை விளக்க முனைந்தால் இந்த போஸ்டிங் ADULTS ONLY CERTIFY செய்யப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாலும், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இது போன்ற ஜிகினா சங்கதிகளை அவர்களே தேடிப் படித்து விடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாகவும் மிக முக்கியமாக இதுபோன்ற சங்கதிகளை ராத்திரி 10 மணி வாக்கில் படித்தால் உண்டாகும் ______ களை கருத்தில் கொண்டு போதுமென வருணனைகளை நிறுத்திக் கொள்கிறேன்.

Thursday, 6 March 2008

கம்ப ரசம்-1

கம்பன் என்றைக்குமே ஒரு வியப்பு ! சொல்லாட்சி, உவமைகளில்

சாம்பிளுக்கு ஒரு பாட்டு பார்ப்போமா

அனுமன் வைத்த நெருப்பால் இலங்கை எரிகிறது. இதனைச் சொல்ல வரும் கம்பன்

வினைஉடை அரக்கராம் இருந்தை வெந்துகச்

சனகி என்றோர்தழல் நடுவண் தங்கலால்

அனகன் கை அம்பெனும் ஊதையால்

கனகம் நீடிலங்கை நின்று உருகக் காண்டியால்

அர்த்தம்

ஜானகி நெருப்பு / - அரக்கர்கள் கரித்துண்டுகள் - ராமனின் வில் /வீரம் காற்று - இலங்கை தங்கம் - அந்த தங்கம் இப்போது இந்த நெருப்பில் உருகுகிறது

Tuesday, 4 March 2008

சில குறள்கள்

குறள் வெண்பா எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ! ! sample க்கு நான் எழுதிய இரண்டு

அச்சம் தவிர்த்து அறிவை வளர்த்திட்டால்
மெச்சா திருப்பவர் இல்

ஆதாயம் தேடாது செய்த உதவியினால்
பாதாளம் மட்டும் பயன்

நண்பர்கள் தங்கள் குறள் வரிசையை காட்டினால் இந்த தமிழ் பக்கத்தில் சந்தோஷமாக வெளியிடுவேன்