Sunday, 29 May 2011

கதை சொல்லி

அலுவலகத்தில் என் இருக்கைக்கு எதிரே சுவற்றில் ஒரு பெரிய சைஸ் இந்தியன் பொலிட்டிக்கல் மேப் தொங்கிக் கொண்டிருக்கும். நான் கணிணித் திரையில் இருந்து கண் விலக்கி எதிரே நோக்கும் போதெல்லாம் என்னுடன் மானசீகமாக உரையாடும். அதில் இருக்கும் மாநிலப் பரப்புகளின் மீது என் கண்கள் பயணம் செய்யும் போதெல்லாம் அந்தந்த மாநிலத்தில் யாருடனெல்லாம் உரையாடியிருக்கின்றேன் என அசை போடுவேன்.

என் தொழில் ரீதியான உரையாடலின் தொடர்ச்சியாக ,'தமிழ்நாடு என்றதும் உங்களுக்கு என்ன நினைக்கத் தோன்றும்' எனும் கேள்விக்கு கிடைத்த பதிலில் அதிகம் இடம் பெற்றது எம்.ஜி.ஆர், ஸ்ரீதேவி, ரஜினி காந்த், கமல்ஹாசன், இளையராஜா எனும் திரை அடையாளங்கள், ஜெ, கருணாநிதி எனும் அரசியல் பிரமுகர்கள் என்பது போக எப்போதாவது அபூர்வமாக பாரதி என்ற பதில் கூடக் கிடைத்திருக்கிறது.

சென்னையின் புவியியல் பரப்புகளை நபர்களைக் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்ளும் தனது வழக்கத்தினை எழுத்தாளர் எஸ்.ரா தனது வாசகர் பர்வத்தில் சொல்லியிருப்பார்


பொதுவாக ஒரு நாட்டின் அட்லஸை கவனித்தீர்கள் என்றால் அவை மாநில எல்லை, பருவ நிலை, நதிகள், மலைகள், தொழில், மண் வளம் என்பதாய் வகைப்பத்தப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கும் இவற்றில் மாநிலங்களின் கலாச்சார அடையாளம் தெரியவருவதில்லை

ஏகே இராமானுஜன் தொகுத்த Folk Tales From India எனும் பெங்குவின் பதிப்பகம் பதிப்பித்த புத்தகம் இப்படியான அடையாளம நல்கும் ஒரு பொக்கிஷம்.

தமிழ், கொண்டி, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி, மால்வி, ராஜஸ்தானி, ஒரிய ,கன்னடம், தெலுங்கு, காஷ்மீரி,சண்டாலி, உருது, அஸ்ஸாமி, குஜராத்தி, துளு, தித்யாதி, மலையாளம், மராத்தி,கும்மோனி, சிந்தி எனும் பல்வேறு மொழிகளில் விளங்கும் நாட்டுப் புறக் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தந்திருக்கும் தொகுப்பு

சமீபத்தில் வாசித்த மிகவும் பயனுள்ள புத்தகம் எனச் சொல்வேன். கதைகளை தொகுத்திருக்கும் நேர்த்தியினைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்

இந்திய நாகரீகத்தின் பிரதிபலிப்பு அச்சில் வந்து பிரபலமான புத்தகங்களினால் மட்டுமல்ல வாய்மொழியாக சொல்லப்படும் நாட்டுப் புறக் கதைகளின் மூலமாகவும் கிடைக்கும்

இந்த தொகுப்பு ஒருவிதமான பாலம் அமைக்கும் பணி. ஒவ்வொரு மொழியினைச் சேர்ந்தவரும் இதைப்படிக்கும் போது பிற மொழிகளின் நாட்டுப்புற வழக்கில் விளங்கும் இயல்பை புரிந்து கொள்ள சான்ஸ் கிடைக்கிறது.

சில கதைகள் எல்லா மொழியிலும் சொல்லப்படுவதுண்டு. எந்த மொழியில் தோன்றி எந்த மொழிக்கு வாக்க்ப்பட்டு ( வார்க்கப்பட்டு ?) பின்னர் எல்லா மொழிக்கும் பரவியது எனத் தெரியவில்லை

அடுத்த முறை அஸ்ஸாமில் இருக்கும் ஒருவரிடம் பேசும் போது உங்கள் வட்டாரக் கதைகள் சில படித்தேன் என கதை சுருக்கம் சொல்லும் போது, எனக்கு காணக் கிடைக்காத மறு முனைப் புன்னகை, கதை சொல்லி இராமானுஜம் பெற்ற வெற்றி

சக பயணி 6


இந்த தொடரில் இந்த குறிப்பிட்ட பதிவு இடைச் செருகல் போலத் தெரியலாம். காரணம் தொடர்ச்சியில் இல்லாமல் சற்றே நிரடுவது போலவும் எனக்குத் தோன்றியது. இந்தப் பதிவு இத் தொடரின் முதல் பதிவாக வந்திருக்கலாம்.. ஆங்கிலத்தில் ப்ரொலாக் எனச் சொல்லுவார்களே அது போல. ஆனால் அப்படி அல்லாமல் இடையில் வந்துவிட்டது


ஒரு பகல் நேர இரயில் பயணத்தின் போது இரண்டு சக பயணிகளுக்கிடையேயான உரையாடலாக இந்த தொடர் இருந்தாலும் , அது தவிர காந்தியார் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் பிறருடன் விவாதித்துக் கற்றுக் கொண்டவை, அவர்களுக்கு பதில் சொல்வதற்காக பிரத்தியேகமாக தேடிப்படித்தவை என்பதையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதையும் சொல்லி விடுகிறேன். அவை அனைத்தினையும் படைப்பின் சௌகரியத்துக்காக ஒரே உரையாடலாக மெர்ஜ் செய்து கொண்டேன்.

ஆனாலும் என்னுடன் உரையாடிய அவர்களைக் குறித்து சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு என் நன்றியினைத் தெரிவிக்கும் விதமாகவும் இந்த பதிவினை கருதலாம்

மூத்த இதழாளர் திரு மாலன் அவர்களின் நூல் ஜனகனமண வுக்கு நான் விமர்சனம எழுதிய போது அதனைப் படித்து விட்டு என்னைத் தொடர்பு கொண்ட பிரதாப் இராஜெந்திரன் எனும் மாணவரை முதன்மையாகச் சொல்ல வேண்டும். காந்தியாரின் பிற மதக் கொள்கைகளை முன்பு எத்தனையோ முறை படித்திருந்தாலும் அவற்றை மாற்றுக் கருத்துகளுக்கு எதிர் உரை போல சமைத்துக்
கொண்டு கற்றுக் கொள்ள சந்தர்ப்பம் தந்தவர் என சொல்ல வேண்டும்

இணையத்தில் உள்ள சௌகர்யங்களை சொல்லும் போது நட்பு வட்டம் பெருகும் என்பதை முதலில் சொல்லுவார்கள். அதனை நிஜமாக்கிய கார்த்திக் சுப்ரமணியன் பெங்களூருவில் மிகப் பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்கிறார். சுஜாதாவின் மரணத்தின் போது பல தளங்களில் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆறுதல் மொழிகளின் வழி தொடர்பு கொண்ட மிக நல்ல நண்பர். அந்த
வகையில் செத்தும் கொடுத்த சீதக்காதி ஆனார் சுஜாதா . அவர் உயிரோடு இருக்கும் போது அறிமுகம் செய்த புத்தகங்களால் அவர் புரவலனாகவும் நான் பெறும் நிலையிலிருந்தேன். அவருடைய மறைவில் கூட நல்ல புத்தக அறிமுகங்கள் எனக்கு கிடைக்க கார்த்தி கிடைத்தார்

கூகிள் சாட்டினை நான் எனது மெயில் அக்கௌண்டில் சேமிப்பது வழக்கம் . அவற்றினை லேபிள் அடையாளம் வைத்து வகைப்படுத்தியும் வைத்திருக்கிறேன்;

காந்தி எனும் பொருண்மையில் கூகிள் சாட்டில் நான் பிறருடன் செய்த உரையாடல்களை காண்பி என நான் கூகிளுக்கு உத்தரவிட்டால் அது இதோ என விளக்கில் இருந்து வந்த பூதம் செய்வது போலவே உடனே நிறைவேற்றியது. அந்த உரையாடல்களில் பெரும்பான்மை கார்த்தியுடன் நான் செய்த உரையாடல்கள் தான். பிப்ரவரி 2009 தொடங்கி நேற்று வரை இருக்கும் அவருடன் நடந்து கூகிள் சேமித்துள்ள உரையாடலில் காந்தி இல்லாத உரையாடல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவற்றினையும் மீண்டும் படித்து லேபிள் செய்தால் அவை காந்தி எனும் லேபிள் கொடுக்க நான் மறந்திருப்பேன் என்பது தெரிந்து விடும். அப்படி எல்லா உரையாடலிலும் காந்தி
காந்தி எனும் அவரின் வியப்பு

எனது தந்தை இயற்கை எய்தி அதற்காக ஓராண்டு நிறைவில் செய்யும் க்டமைகளை செய்வதற்காக எனது மூத்த சகோதரர் இல்லத்திற்கு மதுரை சென்றிருந்தேன். அப்போது எனது சகோதரியின் கணவருக்கு நண்பரான பல மருத்துவர் ஒருவரை சந்திக்க அவர் சென்ற போது நானும் உடன் சென்றேன். அப்போது அந்த மருத்துவர் இந்தியாவின் இன்றைய அவல நிலைக்கு காந்திதான் காரணம் என்று சொன்னார். அவருக்கு நான் உரைத்த பதிலை இந்த தொடரில் தகுந்த இடத்தில் மெர்ஜ் செய்திருக்கிறேன்


பதிவுகளின் வழக்கமான இலக்கணமான படம் சேர்த்தல் இல்லாது தான் இந்த தொடரை எழுத்த் தொடங்கினேன். ஆனால் காந்தியாரின் படம் இல்லாமல் இருப்பது ஒரு குறை போலவே நெருடலாக இருந்தது. அதே நேரம் இதற்காக இணையத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட படங்களை இதற்காக உபயோகிப்பதில்லை என எனது ஆழ்மனம் ஒரு தீர்மானத்தினை அதுவாகவே நிறைவேற்றிக் கொண்டுவிட்டது. ஒரு ரயில் பயணத்தில் இரண்டு பேர் பேசிக் கொண்டு வருவது போல் கருப்பு வெள்ளை போட்டோ கிடைக்குமா என உமாநாத் எனும் இணைய நண்பரிடம் கேட்டேன். இவர் விழியன் எனவும் அறியப்படுவார் . இவரது புகைப்பட கலை மீது எனக்கு தனி
ப்ரேமை உண்டு ; அவர் சில நாட்கள் அவகாசத்தில் செய்து தருவதாக சொன்னார்.

இணையம் வழி அறிமுகம் ஆனவர் ஜீவா நாதன். சட்டம் பயின்ற ஓவியர். கோவையில் வசிக்கிறார். ஃபேஸ் புக் மூலம் அறிமுகம் ஆனவர். எனக்கு ஒரு காந்தி படம் வேண்டும் எனறவுடன் நோக்கத்தினைக் கேட்டுக் கொண்டு சம்மதித்து 24 மணி நேரத்தில் எனது மெயில் பாக்ஸிற்கு டெலிவரியும் செய்து விட்டார். இங்கே இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள காந்தி

ஜீவா நாதன் தனது திரைச்சீலை எனும் திரைப்படங்கள் தொடர்பான நூலுக்காக தேசிய விருது பெற்றவர் என்பதில் அவருக்கு இருக்கும் மகிழ்ச்சியை விட தேசிய விருது எனும் பெருமைக்குரியவர் என் பதிவுக்கு என பிரத்தியேகமாக வரைந்து தந்திருக்கிறார் என்பதில்
எனக்கு இருக்கும் மகிழ்சியும் பெருமையும் ஜாஸ்தியாக இருக்கும் என்பது நிச்சயம் .. அவருக்க் என் மனமார்ந்த நன்றி

(பயணம் தொடரும்)

Saturday, 28 May 2011

தலைமைச் செயலகம் பார்ட் 3


தமிழக அரசுக்கான புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணியின் வரலாற்றினை சில முக்கிய ஆதாரங்களுடன் தொட்டுச் செல்லும் தொடர் பதிவு இது.


இந்த வரலாற்றினை பின்னோக்கிய பயணத்தில் கவனிக்கலாம்.

இப்போது அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எதற்கு அது தான் ஏற்கனவே ஜார்ஜ்

கோட்டையில் ஒன்று இருக்கும் போது புதிதாக ஒன்றை ஏன் கட்டினார்கள் என கேட்பவர்களுக்கு இந்த பின்னோக்கிய வரலாற்றுப் பயணத்தில் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியினைத் தெரிந்து கொண்டால் கொஞ்சம் விளக்கம் கிடைக்கலாம்.

புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலக இயங்க போதுமான இட வசதி இல்லை எனும் அவலத்தினை நானே பல முறை கண்டிருக்கிறேன்

அரசின் இணைச் செயலர் அந்தஸ்த்தில் பணியாற்றும் சில அதிகாரிகளின் அறைகள் வரான்டாவில் மரத்தால் தடுப்பு அமைக்கப்பட்டு இருப்பதை உங்களில் பலர் கவனித்திருக்கலாம். அந்த அளவுக்கு இடப் பற்றாக் குறை

ஜெ ஆட்சியில் 2003ல் செப்டம்பர் முதல் தேதி பொதுப்பணித் துறை (கட்டிடங்கள் பிரிவு) சென்னையில் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்க ஏற்பாடுகள் செய்திட அரசாணை வெளியிடுகிறது . அரசாணை எண் 1080

அந்த அரசாணையின் தொடக்க வரிகளை இங்கே அப்படியே தருகிறேன்

PUBLIC (BUILDINGS) DEPARTMENT
G.O. Ms. No.1080 Dated the 1st September, 2003
ORDER:-
The present Secretariat consists of the main building constructed in 1781 A.D. and the Namakkal Kavignar Maaligai constructed in 1975. The Namakkal Kavignar Maligai building was designed and constructed just as an office accommodation without any of the state-of-the-art facilities that are required of a modern Secretariat. The interior of the Namakkal Kavignar Maligai building has developed cracks and leakages at several places putting the staff to great difficulty in attending to their work. There is no space to put up any new building in the existing campus. In view of the major problem of shortage of space, structural defects and the lack of other facilities in the existing buildings of the Secretariat, the Government has been considering the construction of a new Secretariat Complex for some time past.

ஆக புதிய கட்டிடம் வேண்டும் எனும் தேவையைக் கருத்தில் கொண்டு இடம் தேடும் வேலை தொடங்கியது. புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் எல்லா வசதியும் இருப்பதாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அந்த கட்டிடம் அமைவதற்கு மத்திய , மாநில அரசின் எந்த ஒரு விதிய் மூலமும் தடை சொல்வதாக அமைந்துவிடலாகது என்பதில் அப்போதைய ஜெ

அரசு சற்று எச்சரிக்கையாக இருந்தது.( காரணம் அதற்கு முன்பு தான் சென்னை கடற்கரை சாலையில் இராணி மேரிக் கல்லூரியினை இடித்து விட்டு அங்கே தலைமைச் செயலக வளாகம் கட்டுவது என்ற முயற்சிக்கு நீதி மன்றத்திடம் கண்டனம் வாங்கியிருந்தது ஜெ அரசு. அந்த குட்டு வாங்கிய வரலாற்றினையும் இந்த தொடரில் பார்க்கத் தான் போகிறோம்)

இப்படி தேடியதில் கோட்டூர்புரத்தில் அரசு தகவல் மையத்தினை ஒட்டிய இடத்தில் அமைக்கலாம் என உத்தேசித்தார்கள்

அரசு ஆவணங்களில் சென்னை மாவட்டம் மைலாப்பூர் திருவல்லிக்கேணி வருவாய் தாலுகாவில் கோட்டூர் கிராமம் என அடையாளமிடப்பட்ட அந்த இடம் 43.20 ஏக்கர் இடப்பரப்பு கொண்டது. அரசு தகவல் மையம், சென்னை பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் என மூன்று அரசு அமைப்புகளுக்கு சொந்தமான இடப்பரப்பு அது

சென்னை பல்கலைக் கழகத்திற்கு சொந்தமானது 2.64 ஏக்கர்

அண்னா பல்கலைக் கழக்த்திற்கு சொந்தமானது 22.16 ஏக்கர்

தமிழக அரசின் தகவல் மையத்திற்கு சொந்தமானது 18.40 ஏக்கர்


அண்ணா பல்கலைக்க்ழகம், சென்னைப் பல்கலைக் கழக நிர்வாகம் அவர்களுக்கு சொந்தமான இடத்தினை தமிழக அரசுக்கு தலைமச் செயலகம் அமைக்க தருவதற்கு தேவையான தீர்மானங்களை நிறைவேற்றின‌

(இதன் தொடர்ச்சி தலைமைச் செயலகம் பார்ட் 4 ல்)

சமச்சீர் கல்வி

அதிக அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு இப்போது அதிகப் பிரபலமாகியிருக்கும் சங்கதி.

தமிழ்நாட்டில் ஸ்டேட் போர்ட், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என நான்கு வழிகளில் பள்ளிக் கல்வி திட்டம் இயங்குவதால் பள்ளிக் கல்வியிலேயே முரண்பாடான நிலையினை சீர் செய்திடும் நோக்கமாக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வண்ணமாக இதனை ஆய்வு செய்து அறிக்கை அளித்திட பாரதி தாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவினை அமைத்தது. அரசாணை எண் 159 நாள் 08-செப்டம்பர் 2006. இந்த குழுவில்
மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி, ஓரியண்ட்ல் பள்ளியினைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்

திரு முத்துக் குமரன் தலைமையிலான குழு தனது அறிக்கையினை அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையினை பரீலிக்க ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு எம்பி விஜய குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது அந்த குழுவில் இடம் பெற்ற கல்வியாளர்கள் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா , குஜராத் மாநிலங்களில் பள்ளிக் கல்வித் திட்டம் செயல்படும் விதம் குறித்து
அறிந்து வந்து தமிழ்நாட்டில் மாநிலமெங்கும் பள்ளிக் கல்வி ஒரே பாடத்திட்டம் , பாட நூல்கள் , தேர்வு முறை அமைய வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்தது

அதன் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் விவாதிக்கப்பட்டு சமச்சீர் கல்வித் திட்டமும் அதனை நிர்வகிக்க நிர்வாக அமைப்பும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அதன் பின் சட்ட மன்றத்தில் சட்ட முன் வடிவாக விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டு அது மன்றத்தில் விவாதிக்கப்பட்டு பின்னர் Tamil Nadu Uniform System of School Education Act 2010 எனும் சட்டம் பிறந்தது. கவனிக்க சட்டம் பிறந்தது

இந்த சட்டம் 30 நவம்பர் 2009 முதல் முன் தேதியிட்டு அமுலுக்கு வர சட்ட மன்றம் அனுமதி வழங்கி முறையாக ஆளுநரின் அனுமதியும் பெற்று சட்டமானது

இதற்கான அரசாணை பள்ளிக் கல்வித் துறை 01‍ பிரப்ரவரி 2010 அன்று பிறப்பிக்கப்பட்டது இந்த சட்டத்தினை எதிர்த்து நீதி மன்ற வழக்கு தொடரப்பட்டது

உயர் நீதி மன்றத்தில் இந்த சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு அளிப்பதாக இருப்பதால் இந்த சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது

மேலும் அரசு இந்த திட்டத்தின் வழி செயல் படுத்த முனையும் சமூக நீதி வெறும் மாயை காரணம் சிபிஎஸ்சி ஐசிஎஸ்ஸி என இன்னும் இரண்டு பாடத் திட்டங்கள் இந்தியாவில் இருக்கிறது அவை தமிழகத்திலும் செயல்படுகின்றன எனவும் வாதிடப்பட்டது

அரசு உத்தேசிக்கும் ஒரே பாடத்திட்டம் தரமற்றதாக இருக்கும் எனவும் வாதிடப்பட்டது. அரசின் பாடத்திட்டம் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தினை விட மிகவும் தரம் தாழ்ந்ததாக இருக்கும் என வாதிடப்பட்டது

இந்த சட்டத்தின் சில ஷரத்துகள் இந்திய குடியரசு தலைவரின் அனுமதி பெறத்தக்கவை ஆனால் அரசு ஆளுநரின் அனுமதி மட்டுமே பெற்றுள்ளது என வாதிடப்பட்டது

இந்த வாதங்களுக்கு அரசு தரப்பில் மிகச் சரியானதொரு கோணத்தில் உரிய சான்றுகளுடன் மறுப்பு தெரிவிக்கப்பட்டு நீதிமன்றம் அரசின் திட்டம் சரியானது தான் என மிக தெளிவான விவாதங்களுடன் விளக்கங்களுடன் தீர்ப்பளித்தது. இந்த விளக்கங்களை எல்லோரும் அவசியம் படிக்க வேண்டும். தீர்ப்பின் அதிகார பூர்வ நகல் உயர்நீதிமன்ற வலையில் இலவசமாகவே டௌன் லோட் செய்யலாம்

பொதுவில் சமச்சீர் கொலை என ஜல்லி அடிப்பதை விட இப்படி படித்து விட்டு வந்தால் ரொம்ப நல்லது

World Education Indicators என மிகவும் விபரமான ஆய்வுக் குறிப்புகள் தகுந்த புள்ளி விபரங்களுடன் யுனெஸ்கோவின் வலைத் தளத்தில் இலவசமாகவே பிடிஎஃப் கோப்பாக கிடைக்கிறது

அதிலிருந்து ஓரே ஓர் அம்சத்தினை குறிப்பிட வேண்டும். அந்த அந்த் வயதில் எவ்வளவு புரியுமோ அதைத் தான் பாடத்திட்டமாக வைக்க வேண்டும். அதை விடுத்து வெளியே உலகத்தில் விஞ்ஞானம் வளர்கிறது, டெக்னாலஜி வளர்கிறது என்பதற்காக அதனை முதல் வகுப்பு பயிலும் மாணவனுக்கே சொல்லிக் கொடுக்க முயல்வது தர வளர்ச்சி ஆகாது .. தற்கொலைக்கு சமம்

இப்போது ஜெ ஆட்சியில் நடந்துள்ள அவசரத்தினைக் கவனிக்கலாம்

1. முந்தைய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்திய கல்வித் திட்டத்திற்கு செய்துள்ள ஆய்வுகள் , அறிக்கைகள், விவாதங்கள் , புள்ளி விபரங்களை பதவி ஏற்ற 10 நாள் அவகாசத்திற்குள் அவை எல்லாம் தவறானது என இத்தனை வேகத்துடன் முடிவு செய்யும் அபத்தமான லாஜிக்; இதனை தவறு என அறிந்து கொள்ள புதிய அரசு என்ன ஆராய்ச்சி செய்தது அதுவும் 10 நாளுக்குள்

2. நிபுணர்களின் குழு அமைக்கப்பட்டு அவர்களின் அறிக்கை பெற்று சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெற்று அது பின்னர் நீதி மன்றத்தின் வழக்கு விசாரணைக்கும் உள்ளாகி அங்கும் தவறில்லை என தீர்ப்பான ஒரு சட்டத்தினை ஒரு Executive Order மூலம் மாற்றுவது எவ்வளவு தவறானது என்பதை தெரிந்தே செய்யும் ஏதேச்சிகாரம். சட்ட மன்றத்தில் சட்டமான ஒரு சட்டம் மறுவடிவம் பெற குறைந்த் பட்சம் ஆளுநரின் ordinance தேவை . இந்த அடிப்படை நன்றாகத் தெரிந்திருந்தும் அதனைக் கடைபிடிக்காத
மமதை

3. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்திற்கான அறிக்கைகள் தந்தவர்கள் இன்னமும் இருக்கின்றார்களே. அவர்களை அழைத்து என்ன அடிப்படையில் இப்படி கருத்துரைத்து அறிக்கைகள் அளித்தீர்கள் என கேட்டார்களா என்றால் அதுவும் இல்லை.

இவர்களாக புதிய ஆய்வுகள் மேற்கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை

எங்களிடம் தான் போதிய பெரும்பான்மை இருக்கிறதே. அது போதாதா

Wednesday, 25 May 2011

திஹார் சிறைச்சாலை

இந்த இடம் என்னவோ பெரும் குற்றம் செய்தவர்களுக்கான இடம் போலவே சித்தரிக்கப்படுவதால் நிஜத்தை சொல்லலாம் என தேடி எழுதிய பதிவு.

டெல்லி யூனியன் பிரதேச அரசின் சிறைத் துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் இரண்டு சிறை வளாகங்கள் திஹார், ரோஹினி

இதில் திஹார் வளாகம் தன்னகத்தே ஒன்பது மத்திய சிறைச்சாலைகளை உள்ளடக்கி உலகின் பெரிய சிறை வளாகம் எனும் பெருமையைக் கொள்கிறது. இட அளவில் பெரியதாக இருந்தாலும் எங்களூரில் பெரிய ஜெயில் இருக்கிறது என சொல்லிக் கொள்வதில் ஒரு சங்கடமும் இருக்கிறதோ !!!

1958 க்கு முன்பு வரை டெல்லி யூனியன் பிரதேச சர்க்காருக்கான சிறைச்சாலை மிகச் சிறியதாக டெல்லி கேட் அருகே இருந்தது. பின்னர் பெரிய சிறை வளாகம் அமைக்க டெல்லிக்கு மேற்கே இந்த திஹார் கிராமம் தேர்வு செய்யப்பட்டது ; முதன் முதலில் ஒரு மத்திய சிறைச்சாலை 1273 பேரை அடைத்து வைக்கும் அளவுடன் தான் தொடங்கப்பட்டது

1966 ம் ஆண்டு வரை திஹார் சிறை வளாகத்தின் நிர்வாகப் பொறுப்பு பஞ்சாப் மாநிலத்திடம் இருந்தது. 1988 ம் ஆண்டு டெல்லி சிறை வழிகாட்டும் முறைகள் அமுலுக்கு வரும் வரை பஞ்சாப் சர்க்கார் தான் இந்த சிறை நிர்வாகத்திற்கு பொறுப்பு வகித்திருக்கிறது

திஹார் வளாகத்தில் அமைந்துள்ள நம்பர் 6 என அடையாளம் கொண்ட மத்திய சிறைச்சாலை பெண்களுக்கானது. இங்கே தான் கனிமொழி ரிமாண்ட் வாசம் கொண்டிருக்கிறார்

இந்த 6 ம் எண் சிறைச்சாலையில் 400 பேரைக் காவலில் வைக்க இடமுண்டு ஆனால் டிசம்பர் 31 2010 அன்று கணக்குப்படி இங்கே 505 பேர் காவலில் இருந்துள்ளனர். இப்படி ஓவர் ஃப்ளோ ஆகும் அளவுக்கு நமது புலனாய்வு அமைப்புகள் கடமை ஆற்றுவதில் மிக்க மகிழ்ச்சி

பின்னர் இருக்காதா !!! சிபிஐ சமீபத்தில் Ruth T Zaplin எழுதிய Female offenders Critical Perspectives and Effective Interventions எனும் புத்தகத்தை தனது லைப்ரரிக்கு வாங்கியுள்ளது.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் http://cbi.nic.in/cbinews/cbilib_english.pdf என உங்கள் ப்ரவுசரில் லிங் தந்து உறுதி செய்து கொள்ளவும் . இந்த புத்தகத்தின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கங்களை கூகிள் புக்ஸில் படித்தேன்; தற்போது படித்துக் கொண்டிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் ஓரம் கட்டிவிட்டு இந்த புத்தகத்தை வரவழைத்து படித்துவிட வேண்டும் என ஒரு யோசனை துளிர்க்கிறது

மீண்டும் திஹாருக்கு வருவோம் : இந்த சிறை வளாகப் பாதுகாப்பு பொதுவாக டெல்லி சர்க்கார் வசம் இருந்தாலும் , சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக கமாண்டோக்கள் உள்ளனர்.

இவர்கள் மத்திய ரிசர்வ போலிஸ், இந்தோ திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படை , தமிழ்நாடு சிறப்புக் காவல் படை எனும் அமைப்புகளைச் சேர்ந்த கமாண்டோக்கள்.

தமிழ்நாட்டிலிருந்து திஹார் சிறைக்கு குற்றம் சாட்டப்பட்டு ரிமாண்டில் மட்டும் ஆட்கள் செல்வதில்லை; சிறப்புக் காவல் பணிக்கும் ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதில் சின்ன ஆறுதல்

இந்த சிறை வளாகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்க வருபவர்களுக்கான முறையினைக் கவனிக்கலாம் ; திங்கள் முதல் வெள்ளி வரை தான் பார்வையாளர்கள் அனுமதி. அதுவும் சிறை எண் 1 முதல் 9 வரை உள்ள சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்து, கிழமை எனும் காம்பினேஷனில் தான் பார்வையாளர் முறை வைக்கப்பட்டுள்ளது . உதாரணமாக ஆங்கில எழுத்து கே வில் முதல் பெயர் தொடங்கும் ஒரு பெண் கைதி (இவர் சிறை எண் 6 ல் இருப்பார்) யை சந்திக்க
பார்வையாளர்கள் திங்கள் அல்லது வியாழன் அனுமதிக்கப்படுவர். ஆர் எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவருக்கு செவ்வாய் வெள்ளி என இரண்டு மங்கள நாட்களை சிறை நிர்வாகம் ஒதுக்கி உள்ளது இது போல மற்ற எழுத்துக்கள் நாட்கள் காம்பினேஷனில். இதற்கு டெலி புக்கிங் என தொலைபேசி வழி புக்கிங் செய்து கொள்ள வசதியும் உள்ளது. டெல்லி எஸ்டிடி கோட் சுழற்றி 28520202 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவரை சந்திக்க போன் புக்கிங் செய்வது மட்டுமல்ல ; உள்ளிருப்பவர்கள் வெளியே இருக்கும் தங்கள் உற்வுகளுடன் வாரம் ஒரு முறை பேச டெலிபோன் வசதியுள்ளது ; இந்த வசதி கடந்த2010 மார்ச் 28 ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. வாரம் ஒரு முறை 5 நிமிடம் மொத்தம் அதுவும் இரண்டு நம்பர்க்ளுடன் பேசலாம்.

“ஹலோ தலைவரே நான் --- பேசறேன். இங்க வரைக்கும் வந்தீங்க என்னைப் பார்கவேயில்லையே” என ஐந்து நிமிடத்துக்குள் பேசி விட முடியாதா என்ன. ஆனால் இன்னார் பேசுகிறேன் என சொன்ன உடன் லைன் கட்டாகி விட்டால் சிறை நிர்வாகம் பொறுப்பல்ல. அவர்களிடம் வடிவேலு சினிமாவில் சொல்வது போல் ஹலோ என்பது ஒரு பேச்சா என சண்டை போட முடியாது


திஹார் , ரோஹினி வளாகம் தவிர தற்போது மன்டோலி எனும் சிறை வளாகமும் தயாராகி வருகிறது இந்த ஆண்டு நவம்பர் மாதம் கிரஹப்பிரவேசம் இருக்கலாம் எனத் தெரிகிறது

Thursday, 19 May 2011

புதிய துறை by புதிய அரசு

சிறப்புத் திட்டங்களை செயலாக்க(தேர்தல் வாக்குறுதி) தனி துறை என அறிவித்த முதல்வர் அந்த துறை உருவாக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு பன்னீர் செல்வம் அவர்களை நியமித்துள்ளார் இவர் 31 ஜனவர் 2005 லேயே ரிட்டயர் ஆய்ட்டார். இப்ப சர்வீசில் இருக்கும் 300 + தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் ஆபிசர்களில் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லையா
விசேஷம் என்னவென்றால் ஏற்கனவே Planning, Development and Special Initiatives Department என ஒரு துறை கருணாநிதி காலத்தில் உருவாக்கி இன்னமும் இருக்கிறது .தலமைச் செயலர் அந்தஸ்த்தில் இருக்கும் திரு கிறிஸ்து தாஸ் காந்தி ஐஏஎஸ் அந்த துறைக்கான செயலர் அவர் தவிர சுர்ஜித் சௌத்ரி , இராஜாராமன் என இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தத் துறையில் செயலர் அந்தஸ்த்தில் இருக்காங்க
ப்ளானிங் துறைக்கு ஓ பன்னீர் செல்வமும் ஸ்பெஷல் இனிஷியேட்டிவிஸ் துறைக்கு தொழில் துறை அமைச்சர் சண்முக வேலுவும் பொறுப்பு ஆக Planning, Development and Special Initiatives Department இரண்டு அமைச்சர்கள் இப்போது ஸ்பெஷல் இம்ப்ளிமெண்டேஷன் என ஒரு துறை இதே வேலையைச் செய்ய !!! அதற்கு ஒரு அமைச்சர் எஸ்பி வேலுமணி.. இந்த டிபார்மெண்ட் பார்மேஷனுக்கு 10 வருஷம் முந்தி ரிடயர் ஆன பன்னீர் செல்வம் ஐஏஎஸ் மீண்டும் அரசு பணிக்கு ரி கால் !!!!

Tuesday, 17 May 2011

கவர்னர் கவனிக்க மறந்தாரா


மே 13 அன்று வாக்கு எண்ணிக்கையில் திமுக தோல்வி அடைந்தது அப்போதைய முதல்வர் திரு கருணாநிதி கவர்னரிடம் தனது மற்றும் தனது அமைச்சரவை பதவி விலகல் கடிதத்தை அளிக்கிறார். அதனை ஏற்று கவர்னர், மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை அவரை முதல்வராகவும் அவரது அமைச்சரவையும் தொடரட்டும் என சொல்கிறார்
இதற்கான கவர்னரின் கடிதத்தினை இந்த சுட்டியில் காண்க http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr13May11/pr130511_46.pdf
தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான பின்பு தேர்தலில் வெற்றி பெற்ற அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான அதிமுக தனது சட்ட மன்ற கட்சித் தலைவராக ஜெ வை 15 மே 2011 அன்று தேர்வு செய்கிறது. அன்றே அவர் ஆட்சி அமைக்கும் உரிமையினை கவர்னரை சந்தித்து கோருகிறார். அவரை ஆட்சி அழைக்க கவர்னர் அழைக்கிறார். ஜெ. சீஃப் மினிஸ்டர் டெசிக்னேட் அல்லது சீஃப் மினிஸ்டர் எலெக்ட் ஆக அந்தஸ்து பெறுகிறார்.. கவனிக்க அவர் அந்த தருணத்தில் முதல்வர் இல்லை ( அப்போதும் முக தான் முதல்வர்) . அன்றே தன்னுடன் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளவர்கள் பட்டியலை இலாகா ஒதுக்கீடு உட்பட கவர்னரிடம் வழங்குகிறார். அதனை பரிந்துரையாக ஏற்று ( கவனமாக பார்க்கவும் பரிந்துரையாக) கவர்னர் ஒப்புதல் வழங்குகிறார்
கவர்னரின் ஒப்புதல் செய்தி வெளியீடு சுட்டி :http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr15May11/pr150511_274.pdf
இதில் என்ன என கேட்பவர்களுக்கு
மாநில அமைச்சரவையில் அமைச்சர் நியமனத்துக்கான வழி முறை குறித்து இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது
ஷரத்து 164(1)

164. (1) The Chief Minister shall be appointed by the Governor and the other Ministers shall be appointed by the Governor on the advice of the Chief Minister, and the Ministers shall hold office during the pleasure of the Governor

ஆக அமைச்சர்கள் நியமனத்துக்கு கவர்னர் முதலமைச்சரின் பரிந்துரையினைத் தான் ஏற்க வேண்டும் ஆனால் சீஃப் மினிஸ்டர் டெசிக்னேட் அல்லது சீஃப் மினிஸ்டர் எலக்ட் பரிந்துரையினை ஏற்று இருக்கிறார்; அவர் பரிந்துரை ஏற்கும் போது முக தான் முதல்வர்; மிகச் சரியாக சொல்ல வேண்டுமெனில் இந்த விஷயத்தில் சட்டப்படி முதல்வர் அல்லாத ஒருவரிடம் பரிந்துரை பெற கவர்னருக்கு அதிகாரம் இல்லை
இதை எப்படி நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டுமெனில். முதல்வராக பதவி ஏற்க அழைத்து அதன் பின் ஜெ முதல்வராக பதவி ஏற்று அந்த கணமே அவரிடம் பரிந்துரை வாங்கி உடனே மற்ற அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திர்க்க வேண்டும்

சின்ன சறுக்கல் தான் ஆனாலும் தவிர்த்து இருக்கலாம்

புரட்சித் தலைவி காணவில்லை


தலைப்பினைக் கவனித்து விட்டு யாரும் பதற வேண்டாம்.
அடை மொழிக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு
இராஜாஜி அவர்களை மூதறிஞர் என்றும் அவரின் இனிய நண்பர் ஈ.வெ.ரா அவர்களைப் பெரியார் என்றும் அவர் வழி வந்த அண்ணாவை அறிஞர் என்றும், அவரைத் தொடர்ந்த கருணாநிதியைக் கலைஞர் என்றும் அவர் நண்பர் இராமசந்திரனை தொடக்க காலத்தில் புரட்சி நடிகர் என்றும் பின்னர் புரட்சித் தலைவர் என்றும், அவர் அறிமுகம் செய்த ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்றும் அடை மொழி கொடுத்து மகிழ்ந்திருக்கிறது தமிழ்நாடு.
முன்பு முதல்வராக இருந்த சமயம் ஜெ புரட்சித் தலைவி எனும் அடை மொழியாலேயே விளிக்கப்பட்டார் ஏன் துதிக்கப்பட்டார் என்றே சொல்லலாம். சட்ட மன்றத்தில் ஒவ்வொரு துறை அமைச்சரும் துறை தொடர்பான செய்திகளையோ விவாதத்தையோ அவையில் தொடங்குவதற்கு முன்பு புரட்சித் தலைவி பெயரில் சற்றேறக் குறைய ஒரு காப்பு செய்யுள் படித்து விட்டு தான் தொடங்கினர்.
ஒன்றை மறக்காமல் குறிப்பிட வேண்டும் ; இந்த துதி கலாச்சாரத்தினை தொடங்கிய பெருமை கருணாநிதியினைச் சாரும். அவரின் பழைய காலத்தில் தமிழ் வேள்,, எக்ஸ்சட்ரா... அவர் சமீபத்தில் முதல்வராக இருந்த போது “காப்பு செய்யுள் “ கலாச்சாரத்தின் எல்லையினை அவரது உடன்பிறப்புகள் தொட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.. அடை மொழிக்கு வள்ளுவர் தொடங்கி அரிஸ்டாட்டில் வரை இழுத்து வந்தார்கள்
இதற்கு முந்தைய ஜெ ஆட்சி காலத்தில் எங்கு நோக்கினும் “புரட்சித் தலைவி” அரசு விழா, அழைப்பிதழ், தோரணங்கள் என எங்கும் சர்வ வியாபியாக புரட்சித் தலைவி
ஆனால் இந்த புதிய ஆட்சி காலத்தில் அடை மொழி காணப்படவில்ல . புரட்சித் தலைவி காணவில்லை. அமைச்சர்கள் முதல்வர் அம்மா என்பதாய் மட்டுமே உரைக்கின்றனர். ஜெயா தொலைக் காட்சியும் செல்வி . ஜெயலலிதா என்பதாக மட்டுமே விளிக்கின்றனர்
புரட்சித் தலைவி காணவில்லை என்பது நன்மையே அவருக்கும் அவரைச் சார்ந்தவருக்கும்

புதிய தலைமைச் செயலாளர்

புதிய தலைமைச் செயலாலராக திரு. தேபேந்திரநாத் சாராங்கி நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி கவனித்த உடன் இந்தப் பதிவு

திரு தேபேந்திரநாத் சாரங்கி 01 ஜனவரி 1953 ல் பிறந்தவர். ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவராயினும் தமிழ் பேசத் தெரிந்தவர்

டெல்லியில் பொலிடிக்கல் சயின்ஸில் முதிநிலைப் படிப்பும் பின்னர் வேல்ஸில் பொருளாதாரத்தில் முநிலைப் கல்வியும் கொண்டவர்

12 ஜூலை 1977 அன்று தனது ஐ.ஏ.எஸ் பயணத்தினை தொடங்கிய திரு சாரங்கி அவர்கள் முதன் முதலில் உதவி கலெக்டர் (பயிற்சி ) எனும் பொறுப்பில் மதுரையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்

பின்னர் ஈரோடு சப் கலெக்ட்ராக 1981 வரை பொறுப்பு வகித்தார்

வணிக வரித் துறையில் உதவி ஆணையர் , பின்பு துணை ஆணையர் எனும் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்

பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் துணைச் செயலராகவும் பின்னர் வணிகவரித் துறையின் துணைச் செயலராகவும் பொறுப்பு வகித்தார்

பின்னர் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், பொதுப்பணித் துறையின் இணைச் செயலர் , மீண்டும் கலெக்டராக கடலூர் , பின்னர் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் இணைச் செயலர் என அவரது அரசு பணி தொடர்ந்தது

பின்னர் தமிழ்நாடு லிட்டரரி மிஷனின் உறுப்பினர் செயலர் , சிஎம்டிஏவின் சீஃப் எக்சிகியூடிவ் ஆபிசர், சிட்கோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் , பின்னர் தொழிலாளர் துறையின் ஆணையர் எனும் பொறுப்புகளை வகித்துள்ளார்

பின்னர் சிறு தொழில் துறை , வீட்டு வசதித் துறை செயலராகவும் அதன் பின்னர் டான்காஃப் எனும் கூட்டுறவு அமைப்பின் தலைவர் நிர்வாக இயக்குநராகவும் அதன் பின்னர் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை, போக்குவரத்து துறை , வருவாய் துறை இவற்றின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்

பின்னர் மாநில வணிகவரித் துறை ஆணையாளர், மாநில மனித உரிமை ஆணைய செயலர் என மிக முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்

பின்னர் முதன்மைச் செயலர் என பதவி உயர்வு பெற்று போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலர் சுற்று சூழல் வனத் துறையின் முதன்மைச் செயலர் என பொறுப்பு வகித்துள்ளார்

பின்னர் அரசின் தலைமைச் செயலர் எனும் அந்தஸ்த்திற்கு பதவி உயர்வு பெற்று அதே வனத்துறையில் தொடர்ந்தார்

பின்னர் டிட்கோவின் தலைவராக பணி மாற்றம் செய்யப்ப்பட்டு அங்கிருந்து தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

அன்னாரின் பணி சிறக்க வாழ்த்துகள்

Monday, 16 May 2011

தலைமைச் செயலகம் - பார்ட் 2


தலைமைச் செயலகம் எனும் எனது பதிவினை ஒரு சிறு தொடர் பதிவாக தொடரப் போகின்றேன்.
எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா, கருணாநிதி இவர்கள் ஆட்சிக் காலங்களில் புதிய வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த தகவல்களுடன் எழுத யோசித்து விபரங்கள் சேகரித்துள்ளேன்
அடுத்த பகுதி தலைமைச் செயலகம் - பார்ட் 3

Sunday, 15 May 2011

எதிர் கட்சி தலைவர்


எந்த ஒரு சட்ட மன்றத்திலும் எதிர் கட்சி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். அந்தஸ்து நிலையில் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் ஒரு அமைச்சருக்குரிய அந்தஸ்த்தை உடையவராகிறார். சட்ட மன்ற வளாகத்தில் அவருக்கென தனியறை , உதவியாளர்கள், அரசு வாகனம், அரசு இல்லம் அனைத்தும் வழங்கப்படுகிறது

இப்போது அமைய உள்ள 14 வது சட்ட மன்றத்தில் தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் எதிர் கட்சித் தலைவராக உள்ளார்.

இதுவரை அமைந்து இருந்த 13 சட்ட மன்றங்களில் எதிர் கட்சித் தலைவராகப் பணியாற்றியவர்கள் பற்றிய இந்த சிறு குறிப்பினையே விஜய்காந்துக்கு வாழ்த்துகளாக தெரிவிக்கிக்கிறேன்

முதல் சட்ட மன்றம் 1952 முதல் 1957 வரை :

இந்த காலத்தில் சட்ட மன்றம் இரண்டு பெரும் கம்யூனிசத் தலைவர்களை எதிர்கட்சிகளாகக் கொண்டிருந்தது. திரு டி நாஹி ரெட்டி அக்டோபர் 1 1953 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். மார்க்ஸிய கோட்பாடுகள் மீது பற்று கொண்டவர்

பின்னர் தோழர் பி. இராமமூர்த்தி அந்த பொறுப்பினை அலங்கரித்தார். மார்க்ஸிய சிந்தாந்தப் பற்றாளர்களில் மிகக் குறிப்பிடத் தக்கவர் பி.இராமமூர்த்தி. இவர் சட்ட மன்றத்திற்கு தேர்வாகும் போது சிறையில் இருந்தார்

இரண்டாவது சட்ட மன்றம் : 1957 முதல் 1962 வரை

விகே இராமசாமி முதலியார் ; இவர் காங்கிரசாராயினும் சுயேச்சையாக சட்ட மன்றத்திற்கு உத்திரமேரூரிலிருந்து தேர்வானவர். அப்போதைய சட்ட மன்றத்தில் திமுகவுக்கு 16 உறுப்பினர்கள் இருந்த நிலை. அவர்களே எதிர் கட்சி அந்தஸ்த்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் மறுமலர்ச்சி காங்கிரஸை ஆதரித்த விகே இராமசாமி முதலியார் அதன் சார்பாக மாறி எ க தலைவரானார்

மூன்றாவது சட்ட மன்றம் 1962 முதல் 1967 வரை

எதிர் கட்சித் தலைவர் இரா நெடுஞ்செழியன்: முதல்வர் பதவிக்கான போட்டிகளில் மிகச் சுலப்மாகத் தோற்றுப் போனவர்

நான்காவது சட்ட மன்றம் 1967 முதல் 1971 வரை

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பில் முதன் முதல் அமர்ந்த கால கட்டம். அண்ணா அவர் மறைவுக்குப் பின் கருணாநிதி என்ற இரண்டு முதல்வர்களில் காலம். இதில் எதிர் கட்சித் தலைவர் பி ஜி கருத்திருமன்

ஐந்தாவது சட்ட மன்றம் 1971 முதல் 1976 வரை

திரு கருணாநிதி முதல்வராக இருந்த காலம். எதிர் கட்சித் தலைவர் பொன்னப்ப நாடார்

ஆறாவது சட்டமன்றம் 1977 முதல் 1980 வரை

திரு கருணாநிதி எதிர் கட்சித் தலைவர்

ஏழாவது சட்ட மன்றம் : 1980 முதல் 1984 வரை

சில காலம் திரு கருணாநிதியும் பின்னர் ஹாஜா ஷெரிஃப்ம் எதிர்கட்சித் தலைவர்கள்

எட்டாவது சட்ட மன்றம் 1985 முதல் 1988 வரை

ஓ. சுப்பிரமணியன் எதிர் கட்சித் தலைவர்

ஒன்பதாவது சட்ட மன்றம் 1989 முதல் 1991 வரை

செல்வி ஜெயலலிதா, எஸ் ஆர் இராதா, கருப்பையா மூப்பனார் என மூவர் இந்த பொறுப்பில் இருந்த காலம்

பத்தாவது சட்ட மன்றம் 1991 முதல் 1996 வரை

எஸ் ஆர் பாலசுப்ரமணியன் எதிர் கட்சித் தலைவர்

பதினோராவது சட்ட மன்றம் 1996 முதல் 2001

எதிர் கட்சி தலைவர் சோ பாலகிருஷ்ணன்

12 வது சட்ட மன்றம் 2001 முதல் 2006 வரை

எதிர் கட்சி தலைவர் க அன்பழகன்

13 வது சட்ட மன்றம் 2006 முதல் 2011 வரை

ஓ பன்னீர் செல்வம், செல்வி ஜெயலலிதா என எதிர் கட்சித் தலைவர் இரண்டு முன்னாள் முதல்வர்களால் அலங்கரிக்கப்பட்ட காலம்

இந்த விபரத்திலிருந்து கேப்டன் ஒன்றைக் கவனிக்கவும் எதிர் கட்சி தலைவர் பதவியில் இருந்தவர்கள் முதல்வராகவும் முதல்வராக இருந்தவர்கள் பின்னர் எதிர் கட்சித் தலைவராகவும் இடம் மாறியுள்ளனர்

ஆல் தி பெஸ்ட் கேப்டன்

Saturday, 14 May 2011

தலைமைச் செயலகம்


12 மே 2007 அன்று சட்ட மன்றத்தில் நடைபெற்ற தனது சட்ட மன்ற பொன் விழாப் பேருரையில் தமிழக்த்துக்கென புதிய சட்ட மன்ற வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பினை திரு கருணாநிதி வெளியிட்டார். அதனைத் செயல்படுத்தும் விதமாக உரிய அரசாணை பொதுப்பணித் துறையால் 04‍ ஜூலை 2007 அன்று வெளியானது . அரசாணை எண் 209. அதன் படி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்
சுமார் எட்டு லட்சம் சதுர அடிப் பரப்பில் சுமார் 200 கோடி செலவில் சட்ட மன்ற வளாகம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது . அதன் படி புதிய வளாகத்தில் சட்ட மன்றம், முதல்வரின் அறை/ அலுவலகம், பிற அமைச்சரின் அறைகள், தலைமச் செயலர் அறை/ அலுவலகம், உள்துறை நிதி போன்ற முக்கிய துறைச் செயலர்களின் அறைகள் அலுவலகங்கள் அமைக்க்க ஆணையிடப்பட்டது

பணியினைத் தொடங்க ஏதுவாக பொதுப்பணித் துறை தலைமப் பொறியாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்திட அரசு 5 நவம்பர் 2007 அன்று அரசாணை வெளியிட்டது . இதன்படி அந்தக் குழு இந்த கட்டிடப் பணிக்கான டென்டரை இறுதி செய்யும் குழுவாகவும். கட்டிட வடிவமைப்பினை இறுதி செய்யும் குழுவாகவும் அதிகாரம் கொண்டதாக ஆக்கப்பட்டது

இந்த உயர் நிலைக் குழு கட்டிட வடிவமைப்புக்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களை பரிசீலித்து ஜி.எம்.ப் இன்டர்நேஷனல் எனும் ஜெர்மன் நிறுவனத்தை அங்கீகரித்து அதனை ஆர்கிடெக்சுரல் பணிக்கான கல்சல்டன்டாக அங்கீகரித்தது

அரசாணை எண் 371 பொதுப் பணித் துறை நாள் 10 டிசம்பர் 2007ன் படி அரசு செயலர்கள் கொண்ட குழுவினை அமைத்து அந்தக் குழு கட்டிடப் பணியில் பொதுப்பணித் துரையின் கட்டிடப் பிரிவு தலைமப் பொறியாளருக்கு ஆலோசனை வழங்கிட ஆணையிட்டது

26 மார்ச் 2008 அன்று முதல்வர் கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் இந்த வளாகத்திலேயே தலைமைச் செயலகத்தினை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு அதன் பின்பு அதன் வழியே பணிகள் தொடங்கப்பட்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பிரதமர் கலந்து திறப்பு விழா நடைபெற்று .. சட்ட மன்ற கூட்டத் தொடரும் நிகழ்ந்து கவர்னர் உரை நிகழ்த்தப்பட்டு அங்கே தலைமைச் செயலகப் பணிகள் இயங்கத் தொடங்கின.

ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த தொன்மையான சட்ட மன்ற பேரவை கூடம் , அதுவரை சென்னை காமராஜர் சாலை பாலாறு கட்டிடத்தில் இயங்கிய மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் நூலத்தின் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு சட்டமன்ற செயலக ஆணை எண் 90 நாள் 02‍ ஜூன் 2010ன் படி ஆணையிடப்பட்டு அந்த நூலகம் அங்கே செயல்படவும் தொடங்கியுள்ளது

ஆனால் தற்போது ஆட்சி அமைக்க உள்ள செல்வி ஜெயலலிதா அவர்கள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள் புதிய சட்ட மன்ற வளாகத்தினையும் தலைமைச் செயலக வளாகத்தினையும் பயன்படுத்தப் போவதில்லை எனவும் பழைய படி இவற்றினை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்கே இட மாற்றம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன‌

புதிய கட்டிடங்கள் இனி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு காலத்திற்கு கிடப்பிடலிடப்படுமா

காரணம் வெகு சிம்பிள் : இந்தக் கட்டுரையின் முதல் வரியினைப் மீண்டும் படிக்கவும் காரணம் தெரிந்து விடும்


செலவு சுமார் 430 கோடி

எல்லாம் குடியரசே

முரசொலி கவிதை


தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த 'சுப வேளை'யில் மிக மும்முரமாக அலுவல் பணியில் ஈடுபட்டிருந்தேன். அவ்வப்போது இணையத்தின் உதவியில் செய்திகளைக் கவனித்து வந்தேன். மாலை எந்த போக்குவரத்து சிக்னலிலும் சிக்காமால் ஒரு சின்ன ஆச்சர்யத்தை வியந்து கொண்டே இல்லம் திரும்பினேன். என்னை திமுக அனுதாபியாக உருவகம் செய்து வைத்திருந்த அண்டை வீட்டார், 'என்ன சார் உங்க ஐயா தோத்துட்டார் போலிருக்கே" என வர வழைத்துக் கொண்ட சோகம் கப்பிய முகத்துடன் விசாரித்தனர். எனக்கே உரித்தான பாவனையில் ,'ஏதோ உங்க அம்மா செய்த புண்ணியம்' என பதில் சொல்லி இல்லம் புகுந்தேன்.

இரவு உணவுக்குப் பின் வழக்கமாகப் பழகும் அந்த நாளைய சிந்தனைத் தொகுப்பு பயிற்சியினை ”உங்க ஐயா !!! உங்க அம்மா !!! “ எனும் சொற்றொடரின் பின் புலச் சிந்தனைகள் வெட்டிக் கொண்டே இருந்தன.

அரசியல் நிகழ்வுகளில் நாம் கொள்கைகளாகப் பிரிந்துள்ளோமோ எனில் சந்தேகம் தான். காரணம் அந்தக் கொள்கைச் சொந்தக்காரர்களுக்கே அவற்றின் மீது எத்தனை விழுக்காடு நம்பிக்கையும் பற்றும் இருக்கும் என்பது சந்தேகம். ஆனாலும் அந்த சொந்த்க்காரர்களை ரசித்து விட்ட காரணத்தால் அவர்களின் அபத்த பயணங்களில் நாமும் பயணமாகி நம் இலக்கைத் தொலைக்கின்றோம். பார்த்தால் மொத்த வாக்காளர்களும் இலக்கைத் தொலைத்த கூட்டம் போல் தான் தெரிகிறது. பயணத்தின் இறுதியில் நாம் இலக்கு மாறி பயணித்திருப்பது தெரிகிறது. அடுத்த நிகழ்வுக்கு காத்திருந்து பயணிக்கும் போதும் இது மறுபடி நிகழ்கிறது

இந்த சிந்தனை ஓட்டம் துறந்து எனது புத்தக அலமாரியை நாடினேன்

மெக்காலேவின் கவிதைகள் "இதோ நான்" எனச் சொல்வது போல் இருந்தது; புத்தகம் சேகரித்து பக்கங்களைப் புரட்டினேன்

Idealised Rome குறித்த வரிகள்

Then None was for a party
Then all were for the state
Then great man helped the poor
and the poor man helped the great
Then lands were fairly portioned
Then spoils were fairly sold;
The Romans were like brothers
In the brave days of Old

இதை தமிழில் மொழி பெயர்ப்பது அவசிய்மில்லை என நினைக்கிறேன்

இப்போதும் அந்த கவிதை என்னுள் முரசொலித்துக் கொண்டிருப்பதால் தலைப்பை இப்படி வைத்தேனல்லாது வேறு காரணம் ஏதுமில்லை

Thursday, 12 May 2011

IAS


செய்திகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் முண்ணனி எனச் செய்தி வந்த உடன் இந்தப் பதிவினைப் பதிகிறேன்.

பணி என்பது பாரம் அல்ல; மாறாக அது துலாபாரம் போன்றது. ஒவ்வொரு கோப்பிலும் ஒரு ஏழையின் வாழ்க்கை அடங்கி இருக்கிறது. கோப்பில் ஒரு தாயின் கண்ணீரோ, விதவையின் வேதனையோ அடங்கி இருப்பதால் அது கனக்க்கிறது; இதை மனதில் வைத்துக் கொண்டு துணிச்சலுடன் நேர்மையுடனும் முடிவுகள் எடுக்கப்படுகின்ற ஒரு பணிக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணிக்கத் துணிந்தவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுதலாம். ஒரு மாநிலத்தின் தலைவிதியைக் கூட மாற்றுகின்ற மந்திரக் கோல் நம் கையில் தரப்படப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருக்கிற போது அதற்கு முற்றிலுமாக தகுதியுடைவரகளாக நாம் இருக்க ஆத்ம பரிசோதனை தேவைப்படுகிறது.

இந்த வரிகள் திரு வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களுடையது. அவரது ஐ.ஏ.எஸ் தேர்வும் அணுகுமுறையும் எனும் புத்தகத்தில் அணுகுமுறைகளைச் சொல்லி விட்டு இந்த வரிகளை சொல்லியிருப்பார்.

இந்த ஆண்டு தேர்வு பெற்றுள்ள வெற்றியாளர்களுக்கு இதையே என் வாழ்த்தாக சொல்வதில் மிக்க சந்தோஷம்

Monday, 9 May 2011

நீதிபதி கேவல்


கேவல் எனும் சொல் தமிழில் விசும்பல் , அழுகை எனப் பொருள் தருகிறது
நான் சொல்ல நினைப்பது அதுவல்ல
GAVEL
GAVEL என்பது நீதிபதி கையிலுள்ள அலங்காரச் சுத்தியல் இதைத் தட்டித்தான் ஆர்டர்ஆர்டர் என்பார்

GAVEL நீதிபதி கையில் மட்டுமல்ல - மக்கள் சபையிலும் சபாநாயகரின் கைய்லிருக்கும்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஓர் அங்கமான செனட்டின் சபாநாயகர் அமெரிக்க
துணை குடியரசு தலைவர்.. (இந்தியாவிலே ராஜ்ய சபையில் நமது து,கு.த வும் அப்படித்தான்)

அமெரிக்க செனட்டிலே இப்போது இருக்கும் GAVEL இந்தியாவின் அன்பளிப்பு

அந்த சுவையான சம்பவத்தை அமெரிக்க செனட்டின் இணைய தளத்திலே பாருங்கள்
http://www.senate.gov/artandhistory/history/minute/The_Senates_New_Gavel.htm

அப்போதைய இந்திய துணைக் குடியரசுத் தலைவர்.. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அதை இந்தியாவின் சார்பில் அன்பளிப்பாக வழங்கினார்

இந்தியன் பீனல் கோட்


1860 ம் வருடம் இந்தியன் பீனல் கோட் ( Indian Penal Code) அமுலுக்கு
வந்தது. அவ்வப்போது கால சூழலுக்கு ஏற்ற மாற்றங்களுடன் இன்னும் அது இந்திய கிரிமினல் சட்ட நடைமுறைகளில் ஒரு முக்கியமான சட்டம்.

இபிகோ என்பது தண்டனைச் சட்டம்

மஹாபாரதத்தில் யுத்தம் முடிந்த பின் இருதரப்பிலும் இறந்துபட்ட குருவம்சத்தாரின் உடல்களின் அடக்கம் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்கடன்களை மஹரிஷி தௌம்மியரைக் கொண்டு தர்மன் செய்கிறான். ஈமக் கடன்கள் செய்து முடித்த நிலையிலே அவன் மிகுந்த சோகத்திலே இருக்கிறான், இத்தனை மரணங்களா என்ற எண்ணம் அவனை மிகவும் துயரப்படுத்துகிறது

இந்நிலையில் தான் அரசனாகப் பொறுப்பும் ஏற்க வேண்டும். உறவினர்களின் மரணம் என்ற கவலை ராஜ்யப் பொறுப்பேற்க்க வேண்டிய கடமைமையினையும் தாண்டி அவனை வாட்டுகிறது.

தனக்கு அரசப் பதவி வேண்டாம். காட்டுக்குப் போய் தவ வாழ்க்கை மேற்கொண்டு
அங்கேயே மடிகிறேன் என்ற நிலைக்கு வருகிறான்

அவனை திருதராஷ்டிரன், தௌம்மியர், வியாசர், கிருஷ்ணர், அர்ஜுனன், பீமன்,
நகுலன், சகாதேவன், திரௌபதி எல்லோரும் தேற்றுகின்றனர்

இதிலே மற்றெல்லோரது அறிவுரைகளைவிட அர்ஜுனனது அறிவுரை முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது (கிருஷ்ணனிடம் கீதை கேட்ட Effect போலும் !!!!)

அர்ஜுனனின் பேச்சு அரசனின் தண்டனை அதிகாரங்களைப் பற்றிய அறிவுரையாகவும் அற உரையாகவும் இருக்கிறது

இந்த இடத்திலே க்ருத யுகத்திலே ஆக்கப்பட்ட ஒரு லட்சம் ஸ்லோகங்களால் ஆன வைசலாட்சகம் என்ற தண்டனை சாஸ்திரம் குறித்தும் அது பின்னர் எப்படி
படிப்படியாக Concise ஆக்கப்பட்டது என்பதைப் பற்றியும் வியாசர் சொல்கிறார்

வைசலாட்சகம் பிரம்மாவால் 1,00,000 ஸ்லோகங்கள் கொண்டதாக முதலில்

சமைக்கப்பட்டது. இது என்ன இத்தனை ஜாஸ்தியாக இருந்தால் எப்படி எல்லோரும் இதை படித்து பின்பற்ற சிரமமாக இருக்குமே என சிவபெருமான் அதை 10,000 ஸ்லோகங்களாக சுருக்கினார்.பின்னர் இந்திரன் அதை 5,000 ஸ்லோகங்களாகவும், அதன் பின்னர் பிரஹஸ்பதி 3,000 ஸ்லோகங்களாகவும் அதன்பின் அசுர குருவான சுக்கிராச்சாரியார் 1,000 ஸ்லோகங்களாகவும் சுருக்கியதாகவும் வியாசர் குறிப்பு தருகிறார்.

இன்று இபிகோ விலே 511 செக்‌ஷன் தான்

(இந்தப் பதிவுக்கான படத்துக்கும் அடுத்த பதிவுக்கும் தொடர்பு ஜாஸ்தி)

Sunday, 8 May 2011

கனிமொழி வாதங்கள் By ராம்ஜெத்மெலானி


கனிமொழி சார்பாக ஆஜரான ஜெத்மெலானி இராஜாதான் எல்லாத்துக்கும் காரணம் என சொன்னதாக பலர் நினைக்கின்றார்கள் அதுவல்ல 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்பது அந்த துறை அமைச்சர் இராஜா தொடர்புடையது அவரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என் கட்சிக் காரரிடம் கேட்பது எப்படி. என் கட்சிக் காரார் கனிமொழி அரசில் அந்த கோப்புகளை பார்வையிட அதிகாரம் கொண்டவரில்லை. ஆகவே நீங்கள் இராஜாவிடம் விசாரியுங்கள் என சொல்லிருக்கார் ஜெத்மெலானி--இந்த்
வகையான வாதம் எப்பவும் போல ஊடகங்கள் சென்சேஷனுக்காக திரித்தன‌

Jethmalani recorded a caveat saying his arguments for Kanimozhi were being made without prejudice to the case of the other accused including Raja

இதென்ன ராஜாவை சிக்கவைக்கும் வாதம் என நினைப்பவர்களுக்கு :

ராஜா மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணம் ஆகும் நிலையில் தான் அவர் சார்பில் கனிமொழி முறையற்ற வெகுமதி பெற்றார். இராஜாவை குற்றம் செய்ய ஊக்குவித்தார் தூண்டினார் என கனிமொழி மீது சுமத்தப்படும் குற்றத்தை நிரூபிக்க முன்னெடுக்க இயலும்;

இதைக் கருத்தில் கொண்டுதான் ஜெத்மெலானி அந்த கேவியட்டை நீதிமன்றத்தில் உரைத்திருக்கிறார்

பிகு: எனது முந்தைய பதிவிற்கு எனக்கு கிடைத்த ஓர் எதிர்வினை நான் மேதாவிலாசத்தைக் காட்ட எழுதியிருப்பதாக பதிந்திருக்கிறார்.
அவருக்கு என் நன்றி . நான் பொதுவில் சாத்தியங்களை எழுதுகிறேனேயல்லாது. யார் சார்பாகவும் அல்லது எதிராகவும் எழுதவில்லை.

இந்த வழக்கில் குற்றம் நடந்து விட்டது ஏன் இன்னமும் தாமதம் எனும் மனோபாவம் என்னுடன் உரையாடும் பலரிடம் காணப்படுகிறது. எனது எழுத்தின் நோக்கம் அரசியல் சார்பு கொண்டதல்ல. ஊடகங்கள் உருவாக்கும் சிந்தனையில் கவனிக்க மறந்த அல்லது கவனமாக தவிர்க்கப்படும் சில விஷயங்களை கவனத்துக்கு கொண்டுவர எழுதுகிறேன்.

கனிமொழி vs சிபிஐ


கனிமொழி என்ற எனது முந்தைய பதிவு பெற்றுத் தந்த உற்சாகம் அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவு

கனிமொழி மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் அவர் மீது Prevention of Corruption Act Section 7 & 11 மற்றும் Indian Penal code Section 120 B கீழ் குற்றம் இழைத்தவர் எனும் அடிப்படையில் அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது

இந்த சட்டப் பிரிவுகளின் தன்மைகளைத் தெரிந்து கொள்வது நலம்;

என்னுடன் உரையாடியவர் பலருக்கு இந்த சங்கதிகளுக்கு ஏன் இவ்வளவு கால அவகாசம் உடனே பிடித்து உள்ளே தள்ள வேண்டியது தானே எனும் அளவில் அவசரம் இருப்பது தெரிந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றம் இழைக்கவில்லை எனக் கருதும் போது ஏன் முன் ஜாமீன் கோரணும் அதுவே அவருக்கே அவர் மீது நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறதே என்ற கேள்வி என்னிடம் இணைய உரையாடலில் கேட்டார்கள். எனக்கு அந்த கேள்வி அறியாமையா அல்லது ஒருதலைப் பட்சமாக யோசிக்க மக்களை நிர்பந்தித்துள்ள ஊடகங்களின் கைவரிசை காரணமா என சிந்திக்க தூண்டியது. இரண்டும் தான் இருக்க வேண்டும்.

இப்போது அந்த சட்டப் பிரிவுகளை கவனிக்கலாம் இது சாரம் தான் புரிந்து கொள்ள வசதியாக எளிமையாக சொல்லிருக்கேன்

ப்ரிவென்ஷன் ஆஃப் கரப்ஷென் ஆக்ட் செக்சன் 7ன் சாரம்

பொது ஊழியர் (ப்ப்ளிக் சர்வன்ட்) அல்லது பொது ஊழியராக ஆக இருப்பவர் தனக்கோ அல்லது பிறர் சார்பாகவோ அரசு மற்றும் அரசு சார்பு துறையில் பணியினை செய்வதற்கோ அல்லது பணி செய்யாமல் இருப்பதற்கோ ஊதியம் அல்லது ஊதியம் சார்ந்த வருமானம் தவிர பிற எவ்விதமான வெகுமதியினையும் பெறுவது குற்றமாக கருதப்படும்

அதே ஆக்டின் செக்சன் 11ன் சாரம்

பொது ஊழியர் தான் சார்ந்துள்ள பணி தொடர்புடைய எவருடனும் வர்த்தகப் பறிமாற்றங்கள் செய்வது குற்றம்

இப்ப ஐபிசி செக்சன் 120பி

இது சதி செய்தல் அல்லது கூட்டுச் சதி செய்தல்

இந்த இரண்டு வகை குற்றச் சாட்டிலும் முன்னாள் அமைச்சர் இராசா நேரடியாக தொடர்புடையவராகிறார் ; காரணம் அவர் அந்த துறைக்கு அமைச்சராக இருந்ததால் இந்த குற்றச் சாட்டுகளில் கனிமொழியினை இராசவின் சார்பில் கலைஞர் தொலைக் காட்சி பெயரில் பணம் பெற்றார் எனக் குற்றம்

சாட்டப்பட்டுள்ளது

இப்போது கவனிக்க

தான் பங்குதாரராக இருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரில் இவர் வாங்கிய பணம் இராசவின் சார்பில் பெறப்பட்ட முறையற்ற

வெகுமதிதான். அது கடனல்ல. வழக்கமாக கடன் வாங்கும் போது பெறப்படும் ஆவணங்கள் இல்லை என்பது சிபிஐ வாதம்
சார்பில்” எனும் வாதத்தினை முன்வைக்க இவர் அவரை அடிக்கடி சந்தித்தார். பேசினார். அவர் அமைச்சராக இவர் எவருடனோ பேசினார் என பொதுவாக யூகத் தன்மை கொண்டு இருக்கிறதேயல்லாது. இந்திய குற்றவியல் நடைமுறைக்குத் தேவையான சந்தேகத்திற்கு இடமில்லாத நிரூபணமாக இல்லை

இந்தப் பதிவுக்கும் படத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அந்த கயிறு இழுக்கும் வீரர்கள் எல்லோரும் சிபிஐ அதிகாரிகள். இந்த ஆண்டு சிபிஐ விளையாட்டுப் பந்தயத்தின் போது எடுக்கப்பட்ட படம்.. சுட்டி

Saturday, 7 May 2011

கனிமொழி


கைது கைது என எங்கே பார்த்தாலும் சத்தம், எழுத்துக்கள். டிவியை ஆன் செய்தால் இணையத்தில் நுழைந்தால் இதே வார்த்தை தான்.

மக்களுக்கு ரிமான்ட் எனச் சொல்லிப் பழக்கமில்லையோ அல்லது தமிழில் ரிமான்டுக்கு கைது தான் சரியான நிகர்ச் சொல் என நினைக்கின்றார்களோ என்னவோ. காவல் எனும் வார்த்தை பொருத்த்ம்

பன்மொழிப் புலவர் அப்பாத்துரை என்ன சொல்கிறார்; ரிமான்ட் என்றால் திரும்ப அனுப்பு என சொல்கிறார்.. இவர் வேண்டாம்..

நாம் லாஜிக்கலாக பார்ப்போம்.

நடைபெற்றதாக நம்பப்படும் குற்றப் பிண்ணணி குறித்து புலன் விசாரண அமைப்பு விசாரிக்கிறது நபர் 1, நபர் 2 , நபர் 3 இதிலே தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என கருதுகிறது. குற்றப் பத்திரிக்கை தயார் செய்யத் தேவையான சாட்சிகள் ஆவணங்கள் சேகரிக்க இவர்கள் இடையூறு தரக் கூடும் என நினைத்து அவர்களை கைது செய்கிறது. நீதி மன்றத்தில் ஆஜர் செய்கிறது . ரிமான்ட் கோருகிறது .

இவர்கள் குற்றம் இழைத்ததாக கருதுகிறோம். இவர்கள் மேல் விசாரணைக்கு தேவைப்படுகிறார்கள் ஆயினும் இவர்கள் வெளியில் சுதந்திரமாக உலவினால் சாட்சிகளை கலைக்கும் அபாயம் இருக்கு ஆகவே ப்ளீஸ் ரிமான்ட் எனக் கேட்பது.

நீதிபதி, " என்னங்க நீங்க என்ன சொல்றீங்க"

குற்றம் சாட்டப்பட்டவர், " ஐயா அதெல்லாம் இல்லீங்க. " எனக் கூறி தன் தரப்பு நியாங்களை சொல்கிறார். இதை நீதிபதி ஏற்காத தருணத்தில் ரிமான்ட் ஆகிறது. தமிழில் சொன்னால் காவலில் வைக்கப்படுகிறார்

சம்பவங்களைச் சரியாக கவனிக்க வேண்டும். குற்றம் குறித்து விசாரணை நடக்கிறது. அய்யோ இவர் வெளிலே இருந்தா ஆபத்து.. புடிச்சி காவலில் வை.. அய்யா நீதிபதி இவர் வெளிலே இருந்தா ஆபத்து புடிச்சி வச்சிட்டோம். இவர் விசாரணைக்கு குந்தகம் செய்வார் ஆகையாலே நீங்க இவரை காவலில் வைக்க ஆர்டர் தரணும் என வரம் கேட்பது தந்தேன் என சொல்வதும் நடந்திருக்கு .. அவங்க மேல் அப்புறமா தான் குற்றப் பத்திரிக்கை தாக்கல் ஆகிருக்கு.

அதே வழக்கிலே நபர் 4 , நபர் 5, நபர் 6 சம்பந்தப்பட்டிருக்காங்கனு சந்தேகத்துல அவங்களை விசாரிக்கிறாங்க. விசாரிக்கிறாங்க .ஆனா கைது செய்யலை. ஏன் இவங்க சாட்சி கலைப்பாங்க இடைஞ்சல் செய்வாங்கனு தோணலை. இல்லை தேவை இல்லை.. ஆனா குற்றம் செய்திருக்காங்கனு தோணுது . கோர்ட்லே சொல்லியாச்சு கோர்ட்டும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து அதை வாங்கிக்க இத்தனாம் தேதி வா என சொல்லியாச்சு.

கவனிங்க விசாரணை நடந்ததுக்கும் , குற்றப் பத்திரிக்கை தாக்கல் ஆனதுக்கும், அதை வாங்க வானு கோர்ட் சொன்ன நாளுக்கும் இடையிலே எத்தனை இடைவெளி. ஆக இவங்க எல்லாம் சாட்சி கலைப்பு இதெல்லாம் செய்ய வாய்ப்பில்லைனு விசாரிச்ச போலிசு நினைத்தது உறுதியாச்சு

ஆக இப்ப குற்றப் பத்திரிக்கை வாங்க வந்தப்போ ஜட்ஜ் அய்யாகிட்ட சாட்சி கலைச்சிருவாங்கனு சொல்ல சான்ஸ் இல்லை ; சொல்லலைனு நினைக்கிறேன்.


இவங்கள்ளாம் விசாரணைக்கு தேவைப் படுவாங்க .


என்னங்க எப்ப கூப்பிட்டாலும் வரணும். வரேன். வெளிநாடு போகக் கூடாது.

ஏன் சந்தேகம் இந்தா என்னோட பாஸ்போர்ட்..

நீங்க என்னங்க சொல்றீங்க .. எங்களுக்கு ஓகே


ரிமான்ட் என்றால் என்ன எளிமையாகப் புரிய வைக்க இனிமையான மொழியில் ஐ மீன் கனிவான் மொழியில் சொல்ல முயற்சி செய்தேன் இதில் மேலும் சட்ட பூர்வமாக சிஆர்பிசி , ஐபிசி, பல வழக்குகளின் முன்னுதாரணம் இதெல்லாம் சொல்லி விளக்கமா வேணுமின்னா எனக்கு தனியா மெயில் அனுப்பவும்


நான் அரசியல் சார்ந்த பதிவுகள் எழுதுவதில்லை ஆகையால் இந்தப் பதிவினை அரசியல் எனக் கருதாது படிக்கவும். பின்னர் ஏன் தலைப்பினை இப்படி வைத்தாய் எனக் கேட்டால் கனிமொழி என்பதற்கு இனிய மொழி என பெயர் உண்டு என விளக்கம் சொல்லக் கடமைப்பட்டவனாகின்றேன். அந்த அம்மா படத்தை ஏன் இந்தப் பதிவில் இணைத்தாய் எனக் கேட்டால் கூகிள் இமேஜ்ஜில் தேடினால் இந்தப் படம் மட்டும் தான் கிடைக்கிறது

Tuesday, 3 May 2011

அந்த அம்மா அப்பாவுக்கு நன்றி


சான்றோன் எனக் கேட்ட தாய்

அவை தனில் முந்தியிருக்கச் செய்த தந்தை


அந்த பிள்ளை என்ன செய்தது,, இந்த புத்தகத்தை படி அந்தப் புத்தகத்தை படி, இந்த சங்கீதம் கேள், இந்த சயின்ஸ் சங்கதி படி என எப்ப பாரு படிக்கச் சொன்னது அந்தப் பிள்ளை... கணக்கில்லாமல் படிக்கிறதுக்கு எழுதி வச்ச பிள்ளை.. பலதரப்பட்ட ரசனைகளை சொல்லிக் கொடுத்தஅந்த பிள்ளைக்காக அந்த அப்பா அம்மாவுக்கு தாங்க்ஸ் சொல்லிக்கிறேன்


இவங்க பிள்ளைக்கு(சுஜாதா) இன்னிக்கு பிறந்த நாள்

Sunday, 1 May 2011

சக பயணி 5

சக பயணி 5

இதன் பாகம் 4 ஐ படிக்க இங்கே க்ளிக்

"என்ன சொல்கின்றீர்கள்". எனது வாக்கியம் அவரிடம் ஒரு சின்ன அதிர்வை வரவழைத்திருந்தது. எங்கள் உரையாடலை கவனித்து வந்திருந்த மற்றவர்களும் நான் ஏதோ சொல்லக் கூடாத ஒரு செய்தியைச் சொன்னது போல் பார்த்தனர். ஒருவர் ,'அப்படின்னா காந்தியடிகள் நாஸ்திகரா " என்றே என்னிடம் நேரடியாக வினவினார்.

"இதற்கு நான் விரிவான விளக்கம் தர வேண்டியிருப்பதால், அதுவும் அதனை எளிமையாகவும் சிக்கலின்றி சொல்ல விழைவதால் ஒரு புராண கதையுடன் தொடங்க ஆசைப்படுகிறேன்"

"தாராளமாகச் சொல்லுங்கள்; நமது பயணம் இன்னும் பல மணிநேரம் இருக்கிறதே"

"மிக்க நன்றி ; இந்த கதை வராஹ புராணத்தின் தொடக்கத்தில் இருக்கிறது;

அஸ்வசிரஸ் எனும் மன்னன்; மிகவும் நேர்மையானவன், பண்பாளன், கனிவானவன்;அவன் ஒரு யாகத்தை மேற்கொண்டான். அதிலே

அந்தணர்களுக்கு தானம் அளித்தான். அவனை நாடி இரண்டு அந்தணர்கள் வந்தனர். ஒருவர் பெயர் கபிலர். மற்றொருவர் ஜெய்கிஷவ்;

இருவருக்கும் உரிய மரியாதைகள் செலுத்தியபின் அவர்களிடம் மன்னன் கேட்டான், " நாராயணனை எப்படி வணங்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டும்"

"நாரயணனா அது யார்". இருவரது பதில் கேள்வியும் மன்னருக்கு ஆச்சர்யம் தந்தது. அதுவுமில்லாமல் அடுத்து ,"நாங்கள் தான் நாராயணன்" எனவும் சொன்னார்கள்

"நீங்கள் இருவரும் பெரும் தவம் இயற்றியவர்கள்; கல்வியில் சிறந்தவர்கள் அதிலெல்லாம் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் பஞ்சாயுதம் தாங்கிய நாராயணன் நீங்கள் இல்லை; அவன் கருட வாகனத்தில் இருப்பவன்"

"ஓ ஆயுதங்களும் கருட வாகனமும் தான் உனது பிரச்சனையா ! இதோ பார்"

அவர்கள் இருவரில் ஒருவர் கதை, சங்கு, சக்கரம், வில் துளசி மாலை தரித்த நாரயண வடிவமும் மற்றொருவர் அசல் ராட்சஷ அளவிலான கருடனாகவும் மாறி விட்டனர்

மன்னன் மயங்கவில்லை .. அவர்களிடம் மீண்டும் பேசினான்

(பயணம் தொடரும்)