Sunday 15 May 2011

எதிர் கட்சி தலைவர்


எந்த ஒரு சட்ட மன்றத்திலும் எதிர் கட்சி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். அந்தஸ்து நிலையில் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் ஒரு அமைச்சருக்குரிய அந்தஸ்த்தை உடையவராகிறார். சட்ட மன்ற வளாகத்தில் அவருக்கென தனியறை , உதவியாளர்கள், அரசு வாகனம், அரசு இல்லம் அனைத்தும் வழங்கப்படுகிறது

இப்போது அமைய உள்ள 14 வது சட்ட மன்றத்தில் தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் எதிர் கட்சித் தலைவராக உள்ளார்.

இதுவரை அமைந்து இருந்த 13 சட்ட மன்றங்களில் எதிர் கட்சித் தலைவராகப் பணியாற்றியவர்கள் பற்றிய இந்த சிறு குறிப்பினையே விஜய்காந்துக்கு வாழ்த்துகளாக தெரிவிக்கிக்கிறேன்

முதல் சட்ட மன்றம் 1952 முதல் 1957 வரை :

இந்த காலத்தில் சட்ட மன்றம் இரண்டு பெரும் கம்யூனிசத் தலைவர்களை எதிர்கட்சிகளாகக் கொண்டிருந்தது. திரு டி நாஹி ரெட்டி அக்டோபர் 1 1953 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். மார்க்ஸிய கோட்பாடுகள் மீது பற்று கொண்டவர்

பின்னர் தோழர் பி. இராமமூர்த்தி அந்த பொறுப்பினை அலங்கரித்தார். மார்க்ஸிய சிந்தாந்தப் பற்றாளர்களில் மிகக் குறிப்பிடத் தக்கவர் பி.இராமமூர்த்தி. இவர் சட்ட மன்றத்திற்கு தேர்வாகும் போது சிறையில் இருந்தார்

இரண்டாவது சட்ட மன்றம் : 1957 முதல் 1962 வரை

விகே இராமசாமி முதலியார் ; இவர் காங்கிரசாராயினும் சுயேச்சையாக சட்ட மன்றத்திற்கு உத்திரமேரூரிலிருந்து தேர்வானவர். அப்போதைய சட்ட மன்றத்தில் திமுகவுக்கு 16 உறுப்பினர்கள் இருந்த நிலை. அவர்களே எதிர் கட்சி அந்தஸ்த்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் மறுமலர்ச்சி காங்கிரஸை ஆதரித்த விகே இராமசாமி முதலியார் அதன் சார்பாக மாறி எ க தலைவரானார்

மூன்றாவது சட்ட மன்றம் 1962 முதல் 1967 வரை

எதிர் கட்சித் தலைவர் இரா நெடுஞ்செழியன்: முதல்வர் பதவிக்கான போட்டிகளில் மிகச் சுலப்மாகத் தோற்றுப் போனவர்

நான்காவது சட்ட மன்றம் 1967 முதல் 1971 வரை

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பில் முதன் முதல் அமர்ந்த கால கட்டம். அண்ணா அவர் மறைவுக்குப் பின் கருணாநிதி என்ற இரண்டு முதல்வர்களில் காலம். இதில் எதிர் கட்சித் தலைவர் பி ஜி கருத்திருமன்

ஐந்தாவது சட்ட மன்றம் 1971 முதல் 1976 வரை

திரு கருணாநிதி முதல்வராக இருந்த காலம். எதிர் கட்சித் தலைவர் பொன்னப்ப நாடார்

ஆறாவது சட்டமன்றம் 1977 முதல் 1980 வரை

திரு கருணாநிதி எதிர் கட்சித் தலைவர்

ஏழாவது சட்ட மன்றம் : 1980 முதல் 1984 வரை

சில காலம் திரு கருணாநிதியும் பின்னர் ஹாஜா ஷெரிஃப்ம் எதிர்கட்சித் தலைவர்கள்

எட்டாவது சட்ட மன்றம் 1985 முதல் 1988 வரை

ஓ. சுப்பிரமணியன் எதிர் கட்சித் தலைவர்

ஒன்பதாவது சட்ட மன்றம் 1989 முதல் 1991 வரை

செல்வி ஜெயலலிதா, எஸ் ஆர் இராதா, கருப்பையா மூப்பனார் என மூவர் இந்த பொறுப்பில் இருந்த காலம்

பத்தாவது சட்ட மன்றம் 1991 முதல் 1996 வரை

எஸ் ஆர் பாலசுப்ரமணியன் எதிர் கட்சித் தலைவர்

பதினோராவது சட்ட மன்றம் 1996 முதல் 2001

எதிர் கட்சி தலைவர் சோ பாலகிருஷ்ணன்

12 வது சட்ட மன்றம் 2001 முதல் 2006 வரை

எதிர் கட்சி தலைவர் க அன்பழகன்

13 வது சட்ட மன்றம் 2006 முதல் 2011 வரை

ஓ பன்னீர் செல்வம், செல்வி ஜெயலலிதா என எதிர் கட்சித் தலைவர் இரண்டு முன்னாள் முதல்வர்களால் அலங்கரிக்கப்பட்ட காலம்

இந்த விபரத்திலிருந்து கேப்டன் ஒன்றைக் கவனிக்கவும் எதிர் கட்சி தலைவர் பதவியில் இருந்தவர்கள் முதல்வராகவும் முதல்வராக இருந்தவர்கள் பின்னர் எதிர் கட்சித் தலைவராகவும் இடம் மாறியுள்ளனர்

ஆல் தி பெஸ்ட் கேப்டன்

4 comments:

snkm said...

ஆஹா நீங்களும் விஜயகாந்தை உசுப்பி விட்டுடீங்களா! சரிதான்! முதல்வராகட்டும் முதலில் கிடைத்துள்ள எதிர் கட்சித் தலைவராக சரியான முறையில் மக்கள் பணி செய்யட்டும்! தன் காசிலிருந்து அனைத்தையும் செய்வது பெரிய விஷயம் இல்லை. பொதுப் பணத்தை சரியான முறையில் செலவழிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் பிரச்னைகளைப் பற்றி சட்ட சபையில் சரியான படி விவாதங்கள் செய்ய வேண்டும்.
மக்களுக்கு மட்டுமல்லாது தன் தொலைக்காட்சி , பத்திரிகைகளுக்கு மட்டுமல்லாது அனைத்து தொலைக்காட்சி, பத்திரிகை, இணையம் வழியாகவும் மக்களை சந்தித்துக் கொண்டு இருக்க வேண்டும். நன்றி!

snkm said...

ஆஹா நீங்களும் விஜயகாந்தை உசுப்பி விட்டுடீங்களா! சரிதான்! முதல்வராகட்டும் முதலில் கிடைத்துள்ள எதிர் கட்சித் தலைவராக சரியான முறையில் மக்கள் பணி செய்யட்டும்! தன் காசிலிருந்து அனைத்தையும் செய்வது பெரிய விஷயம் இல்லை. பொதுப் பணத்தை சரியான முறையில் செலவழிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் பிரச்னைகளைப் பற்றி சட்ட சபையில் சரியான படி விவாதங்கள் செய்ய வேண்டும்.
மக்களுக்கு மட்டுமல்லாது தன் தொலைக்காட்சி , பத்திரிகைகளுக்கு மட்டுமல்லாது அனைத்து தொலைக்காட்சி, பத்திரிகை, இணையம் வழியாகவும் மக்களை சந்தித்துக் கொண்டு இருக்க வேண்டும். நன்றி!

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - பல அரிய தகவல்கள் - திரட்டிப் பகிர்ந்தமை நன்று. ஒரே ஒரு உறுப்பினர் இன்று 29 ஆகி - எதிர்க்கட்சித் தலைவர் என்னும் பதவியும் தெடி வந்திருக்கிறது இவ்வளவு குறைந்த கால்த்தில் ......... வாழ்க வKஅமுடன் மௌளி - நட்புடன் சீனா

Amirthanandan said...

முதலில், இரண்டாம் நிலைக் கதாநாயகர்கள் பற்றிய வரலாற்றினை நவில்ந்ததற்கு நன்றி சகோ! விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவரானது ஒரு அதிர்க்ஷ்டம் தான்(கடந்த காலங்களில் அரசியல் அறிவு கொண்டு மக்களுக்காக குரல் எழுப்பவில்லை, மேலும் இதுவரை அவரது கட்சிக் கொள்கைகளை வரையறுத்து கூறவேயில்லை.. வரலாற்று அறிவையோ, நிர்வாகத் திறனையோ, நாட்டின் பிரச்சினைகளுக்கான தீர்வு சொல்லும் திறனையோ, நாளிடைவில் இவர் வளர்த்துக் கொள்ளவில்லை எனில், வி.சி மற்றும் பாமக போல இவரது கட்சியும் நலிந்தே போய்விடும்.)
மற்றொரு சிறப்பானத் தகவலும் உங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன். தான் ஆட்சியில் இல்லாவிட்டால் கருனாநிதி எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றுவதில்லை. தற்போதும் கூட திமுக வின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராகப் பொறுப்பேற்கவில்லை.என்னே ஒரு தொண்டு!