Sunday, 3 October 2010

எந்திரன்‍ ‍‍- சமூக பலவீனம்


இந்த கட்டுரை எந்திரன் திரைப்படம் குறித்த எனது விமர்சனமோ கருத்தோ அல்ல. நான் இன்னும் அந்த திரைப்படத்தினைப் பார்க்கவில்லை. எப்போது பார்ப்பேன் அல்லது பார்க்காமல் விடுவேனா எனவும் தெரியாது. நான் அப்படி ஒன்றும் சினிமாவை விரும்பிப் பார்ப்பவனாக இருந்ததில்லை.

எந்திரன் திரைப்படம் வெளியீடு குறித்து சன் டிவியில் வந்த வந்து கொன்டிருக்கும் விளம்பரங்கள் இந்த கட்டுரையினை எழுதத் தூண்டியது என சொல்லலாம்.

திரைப்படத்தின் முதல் நோக்கம் அதனால் வரும் வியாபார வருமானம் என்பதில் யாரும் கருத்து வேறுபாடு கொண்டிருக்க இயலாது. எந்திரனும் அதற்கு விதி விலக்கல்ல. எந்திரன் வெளிவருவதற்கு முன்பே அதன் வியாபர வெற்றி நோக்கி செய்த விளம்பரங்கள், அதீத அளவில் இருந்தன என்பது என் கருத்து.

திரைப்படம் வெளியான பின்பு அதனை ஒட்டியும் சன் டிவியில் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன‌

அது தயாரிப்பாளர்களின் உரிமை.. அவர்களின் வியாபார வெற்றி மீதான கண்ணோட்டம் அவர்களுக்கு இருக்கும் சமூக கடமையினை மறக்கடிக்கச் செய்து விட்டது.

திரைப்படம் உலகெங்கும் வெளியானதை ஒட்டிய நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு நிகழ்ச்ச்சி வெளிவருவதாக முன்னோட்டம் சன் டிவியில் இரண்டு நாட்களாக காணப்படுகிறது.

ஒரு திரையரங்கின் முதல் காட்சி கதவுகள் திறக்கப்படுகின்றன மந்தையென மக்கள் கட்டின்றி ஒழுங்கின்றி ஓடிப் பிரவகித்து உள் நுழையும் காட்சி

திரையரங்கம் ஒன்றின் வெளியே திரைப்படத்தின் விளம்பரமாக வைக்கப்பட்டுள்ள பேனர் அதில் ரஜினி காந்த். அதற்கு ரசிகர்களின் பாலாபிஷேகம்

திரைப்படத்தின் ப்ரிண்ட் திரையரங்கம் ஒன்றிற்கு கொண்டு வரப்படும் காட்சி. யானை மீது வைத்து ஊர்வலம். ஊர்வலத்தில் ஒருவர் அலகு குத்திக் கொண்டும் வருகிறார். தீச்சட்டி ஒத்த ஒரு அமைப்பினை சுமந்து வருவதாகவும் தெரிகிறது.. நிறைய பால்குடங்கள் சுமந்து பெண்கள் ஆண்கள் ஊர்வலம்

ரசிகர்கள் திரைப்படத்தின் வெளியீடு குறித்து மொட்டை அடித்துக் கொள்வதும் காட்டப்படுகிறது. எந்திரன் என தங்கள் சிகையின் ஊடே அலங்காரம் செய்து கொள்வதாகவும் காட்சிகள் வருகின்றன‌

திரைப்பட கதையின் நாயகன் ரஜினி காந்தும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் உற்சாகம் கொப்பளிக்கும் சிரிப்பினை சுமந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுகின்றனர். படம் வியாபார ரீதியில் வெற்றி பெற்றதன் அடையாளமாக அந்த தழுவலையும் சிரிப்பையும் கருதலாம்.

ஆனால் அவர்களும் பலரும் கவனிக்கத் தவறியது இப்படி சினிமா மோகம் எத்தகைய சமூக பலவீனம் என்பதே.

பாலாபிஷேகம் செய்வதும், பால்குடம் தூக்கிவருவதும், அலகு குத்திக் கொண்டும், யானை மீதும் ஊர்வலம் வருவது யார் யார்...

இந்த சமூகத்தின் அடையாளம் என கருதப்படும் இளைஞர்கள்..

அவர்கள் ஒரு சாதாரண வியாபார சினிமாவின் வெளியீட்டுக்கு இப்படி மோகித்து.. இப்படியான செய்கைகளில் ஈடுபடுவார்கள் அவர்களின் ரசனையும், பகுத்தறிவும், மெச்சூரிட்டியும் இந்த அளவுதான்

இப்படியான பலவீனத்தைத்தான் அந்த சினிமா எந்திரன் குழுவும் விரும்புகிறது. இப்படியான இளைய சமூகத்தின் பலவீனத்தின் மீது தான் எந்திரனின் வியாபார வெற்றி எழுப்பப்பட்டுள்ளது.

திரைப்படம் வெளியான அன்று விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாராம் வைத்த விழிப்பினைச் சுமந்து திரையரங்க வாசல் அடைந்து, அங்கிருந்தபடியே அங்கு தன்னைப் போலவே பிரஞ்ஞையுடம் வந்திருக்கும் ஏராளனமானவர்களின் எண்ணிக்கையினை எஸ். எம் .எஸ் , டுவிட்டர், இமெயில் என எல்லா நவீன சாதனங்களின் உதவியுடன் உலகிற்கு சொல்லி சமூக சேவை செய்தவர்கள்

முதல் காட்சி கண்ணுற்று வெளிவந்த கணம் முதல் மனதுக்குள் வாக்கியங்களை தட்டச்சு செய்தபடி விரைந்தோடி வந்து கணிணி முன் அமர்ந்து விமர்சனம் எழுதிய பதிவர்கள் .. இதில் கவிதை மட்டுமே எழுதுபவர்கள், திருப்புகழ்/ கந்தரலங்காரம் விளக்கம் என ஆத்திகம் மட்டுமே எழுதுபவர்கள் கூட விதிவிலக்கில்லாமல் ஒரு பெரும் கோஷ்டி முதல் விமர்சனம் எழுதி கட்டாயம் பார் என பரிந்துரைக்கும் நல்ல காரியம் செய்தவர்கள்

இப்படியான சமூக பலகீனங்களின் அடையாளம் எந்திரன்.. அதன் வியாபார வெற்றி இப்படியான பல்கீனத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது. அதன் தொடர் வியாபார வெற்றி இப்படியான பலவீனங்கள் மேலும் பலவீனமடைவதின் அறிகுறி

தமிழ் சார்ந்த ஊடகங்களின் பிதாமகனான சன் டிவிக்கு ஒரு வேண்டுகோள் .. நீங்கள் திரைப்படம் எடுப்பதை நான் சாடவில்லை. அதற்கு விளம்பரம் செய்வதையும் நான் ஒன்றும் சொல்லவில்லை. அந்த நிகழ்ச்சிகளில்,, பாலாபிஷேகம், பால்குடம், யானை ஊர்வலம், அலகு குத்தி ஊர்வலம் வருதல்,
இதெல்லாம் நிஜமாகவே உங்களுக்கு பலமாகத் தெரிகிறதா..

மனம் தொட்டு சொல்லுங்கள்

இதெல்லாம் சமூக பலவீனமாகத் தெரியவில்லையா..

இப்படியான சமூகத்தினையா நம் சமூகம் என அடையாளம் காட்ட விழைகின்றீர்கள்..

இப்படியான பலவீனத்தையா நம் சமூகம் என தொலைக்காட்சியில் உலகெங்கும் ஒளி/ஒலி பரப்ப இருக்கின்றீர்கள்

இது தான் நம் சமூகத்தின் கலை ரசனை என சொல்லப் போகின்றீர்களா

14 comments:

DrPKandaswamyPhD said...

மக்கள் மாக்களாக இருக்கிறார்கள். பிச்சைக்காரனுக்கு காசு போடுவது ஒரு சமூகச் சீர்கேட்டுக்கு துணை போவதுக்கு ஒப்பாகும் என்று நான் நினைக்கிறேன். பிதோஷ தினத்தன்று நந்திக்கு குடம் குடமாக பாலபிஷேகம் செய்வதையும், ரஜனியின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வதையும் மக்கள் ஒன்றாகத்தான் கருதுகிறார்கள்.

யாரும் இந்த சீரழிவை தடுக்கமுடியாது.

rajkumar said...

முதலில் பிரச்சினை என்ன? அதைப் பற்றி தெளிவு உங்களிடம் உள்ளதா?

சந்திரமௌளீஸ்வரன் said...

//முதலில் பிரச்சினை என்ன? அதைப் பற்றி தெளிவு உங்களிடம் உள்ளதா?//

எளிமையாகத்தான் எழுதிருக்கேன்..

www.ands. said...

A very realistic article. For many people, a motion picture has become a life in motion. Over dose of cinema.

Raghu said...

let's think in the solution space rather than the problem space.

How are we suggesting to change the fans ? what can we show them which they would consider higher than doing milk offering to rajini's cutouts ?

venkat said...

Films are only for entertainment.
Sun Tv misleading the young generation by broadcasting and promoting "weakness of young generation".I am also like superstar.
But not crazy,u can not do "Palamisegam & Katpurachatty"
By doing this we insulting our religion.

VSK said...

ராஜ்குமார் கேள்வி மிகவும் யதார்த்தமானது!

R.Mukundarajan said...

1963-64களில் கர்ணன் திரைப்படத்தின் நெகடிவ் பிலிம் சுருளை அன்றைய காங்கிரஸ் தலைவர் பி.ராமச்சந்திரன் யானை மீது அமர்ந்து சுமந்து வந்திருக்கிறார் திரைப்படப் பேனர்களுக்கு சினிமா ரசிகர்கள் கொடுக்கும் மதிப்பு ஒன்றும் தமிழகத்திற்குப்புதிதல்ல..

snkm said...

நன்று! மக்களுக்கு இதையெல்லாம் புரிய வைக்க அவர்கள் தயாராக இல்லை! மட்டுமல்ல மக்கள் சரியாக புரிந்து கொண்டு விட்டால் இவர்கள் பிழைப்பில் ....தான்! தாங்கள் மட்டுமே ஹிந்தி,சரியாக ஆங்கிலம் மேலும்தேவையான மொழிகளை படித்துக் கொண்டு அதே நேரம் மக்களை படிக்க விடாமல் செய்தவர்கள் இல்லையா இவர்கள்! நன்றி!

Prathap R said...

We don't need to worry about this sir, These guys may be the set up of sun pictures. Many fans have changed

சுரேகா.. said...

மிகச்சரியான தளத்திலிருந்து சிந்தித்திருக்கிறீர்கள் சார்..!

இதில் வியாபார நுணுக்கம் என்பதைவிட...வியாபார வெறி தலைதூக்கியிருப்பதுதான் கொடுமை!

BalHanuman said...

மிகவும் அருமையான பதிவு. உங்கள் பணி தொடரட்டும்.

Hari said...

I totally accept with what u have said. Idhu kandipaga "SAMOOGA BALAVINAM" than. Matrum oru vizham indha padam uruvaga karamai irundha SUJATHA vaium marandhu vitargal....

Hari said...

I accept with what u have said. Idhu kandipaga "SAMUGA BALAVINAM" than.