க்ருஷ்ணாவதாரம்-8
----------------------------------
"ஸ்வாமி.. இதென்ன சோதனை.. ஆயர்பாடி மக்கள் என்ன தவறு செய்தார்கள்.. கம்ச ராஜாவுக்கு எங்கள் மேல் என்ன கோபம்"
"
எனக்குத் தெரிந்த விபரத்தை சொன்னேனப்பா.. கம்சனின் சேவகர்கள் கோகுலத்தை
முற்றுகையிட்டு கஷ்டம் கொடுக்க இருப்பது எனக்கு மிகவும் தாமதமாகக்
தெரிகிறது.. அதனை உன்னிடத்தில் சொல்லிப் போகலாம் என வந்தேன்..
சொல்லிவிட்டேன்"----------------------------------
"ஸ்வாமி.. இதென்ன சோதனை.. ஆயர்பாடி மக்கள் என்ன தவறு செய்தார்கள்.. கம்ச ராஜாவுக்கு எங்கள் மேல் என்ன கோபம்"
நந்தகோபரின் கண்களில் மிரட்சியைப் பார்த்துவிட்டு ஆறுதலாக அவரது கரத்தினை இறுகப் பிடித்துக் கொண்டே கர்க்காச்சாரியார் வினவினார்
"எதுவும் லிகிதம் இருக்கிறதா.. இல்லை வாய் மொழிச் செய்தியா ????"
"ஸ்வாமி..
வாய்மொழிச் செய்தி தான்.. நமது நந்தகோபர் மதுராவுக்கு வந்து இளவரசர்
கம்சன் அவர்களை சந்திக்க வேண்டும் என்பது செய்தி.. இதனை என்னிடம் இளவரசரே
சொன்னதை அறியவும்.. அது மட்டுமில்லை.. இது வேண்டுகோளோ,, விருப்பமோ இல்லை..
அவசியம் என்பதை இளவரசர் கட்டளையாக தெரிவித்து வரச் சொன்னார்.. நந்த
கோபருக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்"
வந்த வீரன்
மறுமொழிக்கு காத்திருக்காமல், லாவகமாக கடிவாளம் இழுத்து குதிரையைத்
திருப்பிக் கொண்டு விரைந்து போனான்.. குளம்படிச் சப்தம்ம் மெதுவாக தேய்ந்து
கேட்பது நின்று போனது.. காற்றில் எழும்பிய புழுதியும் மெதுவாக ஓய்ந்து தரை
சேர்ந்தது.
அந்த வீரன் பேசிய கடைசி வரிகள் அடங்காமல்
நந்தகோபரின் யோசனையில் சுழன்று கொண்டே இருந்தன ---"இளவரசர் கட்டளையாக
தெரிவித்து வரச் சொன்னார்.. நந்த கோபருக்கு புரிந்திருக்கும் என
நினைக்கிறேன்"
"என்ன யோசனை நந்தகோபா"
"ஸ்வாமி
நமக்கு வேறு வழி இருக்கிறதா என்ன விருஷ்ணி குலத்தாருக்கும், யாதவருக்கும்
இருக்கும் கசப்பு, மன வேறுபாடுகள், சச்சரவுகள் என்று போகுமோ.. நமக்கு வழி
என்று பிறக்குமோ.. எது எப்படியோ.. நான் மதுராவுக்குப் புறப்பட தேவையான
ஆயத்தங்கள் செய்கிறேன்"
இத்தனையும் கவனித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த யசோதை மௌனம் கலைத்து பேசினாள்
"ஸ்வாமி..
நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. இவர் மதுராவுக்கு இப்போது போவது
உசிதமா.. ஆறு வருஷங்களாக இளவரசர் கம்சனின் கோபம் அதிகமாகியிருக்கிறது.."
"யசோதை.. என்னைத் தடுக்காதே.. நான் போய் வருகிறேன்.. எல்லாம் பகவான் பார்த்துக் கொள்வான்"
ஆதிசேஷா,, என்னமோ சொன்னாயே பக்தனுக்கு என் மீது சந்தேகம் என்று.. பார்த்தாயா,, நந்த கோபனை..
"ஸ்வாமி.. நிஜமாகவே என் ஆவல் அதிகமாகிறது.. தங்கள் அவதாரம் நிகழ இருப்பதற்குள் இன்னமும் என்ன என்ன நிகழ்த்திக் காட்டுவீர்களோ.. நந்தகோபருக்கு மதுராவில் ஏதும் ........"
"உனக்கு எப்போதும் அவசரம் தான்.. பொறுமையாகக் கவனி.. அதோ பார்.. நந்த கோபன் மதுராவை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டான்"
(தொடரும்)