Monday 8 September 2008

குட்டிக் கதை- முட்டாள் மாறமாட்டான்

ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக் கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார்.

”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து வாங்கிக்றீயா”

” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமை மாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான்

மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இருந்த கடையில் நுழைந்தான்

“ஏங்க நான் இரவு மருந்து வாங்கினேன் 20 ரூபா பாகி தரணும் நீங்க”

கடைக்காரர், “ நீங்க கடை மாறி வந்திட்டீங்க. இது மளிகைக் கடை. மருந்து கடையில்லை”

“அட 20 ரூபாயை ஏமாத்த மருந்து கடையை ராத்திரியோட ராத்திரியா மளிகைக் கடையா மாத்திட்டீங்களா”

“ அட யார்யா இது.. இது ரொம்ப வருஷமா மளிகைக் கடை தான். நேத்தி ராத்திரி நீ என்னையா பார்த்தே”

“இத பார்யா. நீ தாடி ஒட்டி வச்சிகிட்டு வேஷம் போட்டாலும் என்னை ஏமாத்த முடியாது. எடு 20 ரூபாயை”

“இது என்னடா வம்பு. நான் பல வருஷமா தாடி வச்சிருக்கேன்யா. இது நிஜ தாடி. நம்புயா. ராத்திரி நீ இங்க வரலையா. அது வேற கடையா இருக்க்கும் நல்லா யோசிச்சு பாருயா”

வேலையாள் திடீரென பாய்ந்து கடைக்காரரின் தாடியைப் பிடித்து இழுத்தார். தாடி கையோடு வரவேண்டும் என்பது அவரது நம்பிக்கை. வரவில்லை ஆனாலும் ,

“ இத பாருங்க நீங்க 20 ரூபா தர வேணாம். ராத்திரியோட ராத்திரியா மருந்துக் கடையை மளிகைக் கடையா மாத்தினது எப்படினும் சொல்ல வேண்டாம். ஆனா ஒரே ராத்திரி எப்படி இப்படி தாடி வளர்த்தீங்க அத மட்டும் தயவு செஞ்சி சொல்லிடுங்க”

5 comments:

ஜோசப் பால்ராஜ் said...

சிறந்த நகைச்சுவை கதை. இயல்பான கதை நடை, ரொம்ப நல்லாருக்கு ஐயா.

மங்களூர் சிவா said...

ஹா ஹா கலக்கல்!!

cheena (சீனா) said...

முட்டாள் என்பது இவர்தானோ - எருமை மாடு நிற்கும் இடத்திற்கு எதிர்த்த கடை - இது ஒன்றையே பிடித்துக் கொண்டு ...........ம்ம்ம்ம்


நல்லா இருக்கு நகைச்சுவைக் கதை

butterfly Surya said...

அருமை...

Aravindh S Narayanan said...

நல்ல இருக்கு சார் , .. .