Thursday, 2 October 2008

கடிதம்- 5


நான் இப்படியான உருக்கமான கடிதம் வாசித்ததேயில்லை எனச் சொல்லலாம். இனிமேலும் வாசிப்பேனா என்பதும் சந்தேகம்தான்.
அந்தக் கடிதம் வார்த்தை வார்த்தையாக இன்னதென்று எனக்குத் தெரியாது. ஆனால் யார் யாருக்கு எது பற்றி எழுதினார் எனத் தெரியும்

ஒரு சின்னப்பையன். புகைபிடித்தது தப்பென்று மனசுக்குப்பட்டதால், தன் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டு எழுதுகிறான். அதுவும் படுத்த படுக்கையாக இருக்கின்ற அப்பாவிடம். அவரின் ரியாக்‌ஷனிலிருந்து அந்தக் கடிதம் எப்படியானதொரு மனோபாவத்தை அந்த அப்பாவுக்கு சொல்லியிருக்கலாம் என யூகிக்கலாம். அந்தச் சிறுவனே எழுதுகிறான் :

”அவர் முழுவதும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கண்களில் கண்ணீர்....... “

அந்தக் கண்ணீர் தன்னை அப்பா மன்னித்துவிட்டதை உணர்த்தியதாக எழுதும் சிறுவன் இன்னும் சொல்கிறான்..

“இவ்விதமான் உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று; கோபமடைவார். கடும் சொற்களைக் கூறுவார். தலையில் அடித்துக் கொள்வார் என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே இதற்கு காரணம் என நம்புகிறேன். மன்னிப்பு அளிக்க உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தை செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்கு சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது என்னைப் பற்றி கவலை இல்லை என்று என் தந்தையை உணரும்படி செய்தது என்பதை அறிவேன்”
அந்த சின்னப் பையனுக்கு இன்றை தேதிக்கு 139 வயசாகி விட்டது. ஆனாலும் அவன் கடிதமோ அந்த எழுத்தோ அந்த சிந்தனையோ இன்னும் இளமையாகத் தான் இருக்கு.
I would strongly say HE IS STILL relevant

Wednesday, 1 October 2008

ஆயுதம் செய்வோம்


இப்படியாக ஒரு தலைப்பை வைத்து ப்ளாக்கில் இலவசமாக வெப்பன் கலாச்சாரம் வளர்க்கிறேன் என பிராது வராது என நம்புகிறேன்.

இருந்தாலும் ஆயுத பூஜை சமீபத்தில் வருவதால் தமிழ் வாசகர்களுக்கு சில தேவையான ஆயுதங்களை சிபாரிசு செய்துவிட்டால் தேவைப்படுபவர்கள் யூஸ் பண்ணலாம் அல்லவா

ஆயுதம் 1

நல்ல முறுக்கான கயிறு. ஒரு பத்தடி நீளம் இருந்தால் சிலாக்கியம்.
இது பொதுவான கயிறன்று. எங்கே எதற்கு எதிராக பிரயோகம் செய்யலாம் என்ற லிமிட்டேஷன் கொண்டது. “குட்டிக் கதைகள்” என்ற பெயரில் உசத்தியான ”பாரிலே” போய் குடிப்பதைப் பற்றியே பிரஸ்தாபம் செய்து வருவதிலிருந்து தடுக்க. குடிகாரன் என ஊருக்கே தெரிந்த பிறகு அதை சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை எனச் சொல்லி கையைக் கட்டிப் போட வைத்துக் கொள்ள வேண்டும். கட்டிப் போட்டு விட்டால் வாய் சும்மா இருக்குமா அதனால் .

ஆயுதம் 2

ஒரு பெரிய சைஸ் பிளாஸ்திரி

என்னை தினசரி 21 தேசத்திலிருந்து 20 ஆயிரம் கல்லூரி மாணவ மாணவிகள் சந்த்தித்து வருகின்றனர். நான் அவர்களுடன் பேசவில்லை என்றாலோ அவர்களுக்கு லெட்டர் எழுதவில்லை என்றாலோ அவர்களுக்கு ஒரு மாதிரி பசலை நோய் வந்துவிடும் என்கிறதான அபாராமான சித்தபிரம்மை உளறலை நிறுத்த..

உளறலை நிறுத்திவிட்டால் பைத்தியம் சும்மா இருக்குமா. இருக்காது முரண்டு பிடிக்கும்.. அதனால்....

ஆயுதம் 3


உண்டியல்...

பைத்தியத்துக்கு தான் பைத்தியம் என்பதும் தெரியாது. பைத்திய நிலையிலேயே கட்டிப்போட்ட கையோடு, மூடப்பட்ட வாயோடு எப்படி ஜீவனம் செய்யும். சாப்பாட்டுக்கு காசு வேண்டும் எனக் கேட்க முடியாது. அதனால் அதும் பக்கத்திலேயே ஒரு உண்டியலை வைத்து விட்டால் யாசகம் ரொம்பவே சுலபமாகிவிடும்..

ஆயுதம் 4

ஒரு பெரிய சைஸ் பிளாஸ்டிக் சுத்தியல்

இதென்னடா பிளாஸ்டிக் சுத்தியல் என யோசிக்க வேண்டாம். முகம் பார்ர்கும் கண்ணாடியில் பைத்தியம் தன்னையே பார்த்து வியந்து கொள்ளும் போது இன்னும் நிறைய பிம்பம் இருந்தால் அதீத சந்தோஷமாகும். அதனால் அந்தக் கண்ணாடியையே சுக்கலாக உடைத்தால் ஒவ்வொரு துண்டிலும் தன் மூஞ்சி தெரியுமல்லவா

இத்தனை ஆயுதம் வாங்க காசு வேண்டுமே. என்ன செய்வது. யாராவது பைத்தியங்களை போஷிக்கும் நல்லிதயமாக தேடவேண்டியது தான்