Wednesday, 1 October 2008

ஆயுதம் செய்வோம்


இப்படியாக ஒரு தலைப்பை வைத்து ப்ளாக்கில் இலவசமாக வெப்பன் கலாச்சாரம் வளர்க்கிறேன் என பிராது வராது என நம்புகிறேன்.

இருந்தாலும் ஆயுத பூஜை சமீபத்தில் வருவதால் தமிழ் வாசகர்களுக்கு சில தேவையான ஆயுதங்களை சிபாரிசு செய்துவிட்டால் தேவைப்படுபவர்கள் யூஸ் பண்ணலாம் அல்லவா

ஆயுதம் 1

நல்ல முறுக்கான கயிறு. ஒரு பத்தடி நீளம் இருந்தால் சிலாக்கியம்.
இது பொதுவான கயிறன்று. எங்கே எதற்கு எதிராக பிரயோகம் செய்யலாம் என்ற லிமிட்டேஷன் கொண்டது. “குட்டிக் கதைகள்” என்ற பெயரில் உசத்தியான ”பாரிலே” போய் குடிப்பதைப் பற்றியே பிரஸ்தாபம் செய்து வருவதிலிருந்து தடுக்க. குடிகாரன் என ஊருக்கே தெரிந்த பிறகு அதை சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை எனச் சொல்லி கையைக் கட்டிப் போட வைத்துக் கொள்ள வேண்டும். கட்டிப் போட்டு விட்டால் வாய் சும்மா இருக்குமா அதனால் .

ஆயுதம் 2

ஒரு பெரிய சைஸ் பிளாஸ்திரி

என்னை தினசரி 21 தேசத்திலிருந்து 20 ஆயிரம் கல்லூரி மாணவ மாணவிகள் சந்த்தித்து வருகின்றனர். நான் அவர்களுடன் பேசவில்லை என்றாலோ அவர்களுக்கு லெட்டர் எழுதவில்லை என்றாலோ அவர்களுக்கு ஒரு மாதிரி பசலை நோய் வந்துவிடும் என்கிறதான அபாராமான சித்தபிரம்மை உளறலை நிறுத்த..

உளறலை நிறுத்திவிட்டால் பைத்தியம் சும்மா இருக்குமா. இருக்காது முரண்டு பிடிக்கும்.. அதனால்....

ஆயுதம் 3


உண்டியல்...

பைத்தியத்துக்கு தான் பைத்தியம் என்பதும் தெரியாது. பைத்திய நிலையிலேயே கட்டிப்போட்ட கையோடு, மூடப்பட்ட வாயோடு எப்படி ஜீவனம் செய்யும். சாப்பாட்டுக்கு காசு வேண்டும் எனக் கேட்க முடியாது. அதனால் அதும் பக்கத்திலேயே ஒரு உண்டியலை வைத்து விட்டால் யாசகம் ரொம்பவே சுலபமாகிவிடும்..

ஆயுதம் 4

ஒரு பெரிய சைஸ் பிளாஸ்டிக் சுத்தியல்

இதென்னடா பிளாஸ்டிக் சுத்தியல் என யோசிக்க வேண்டாம். முகம் பார்ர்கும் கண்ணாடியில் பைத்தியம் தன்னையே பார்த்து வியந்து கொள்ளும் போது இன்னும் நிறைய பிம்பம் இருந்தால் அதீத சந்தோஷமாகும். அதனால் அந்தக் கண்ணாடியையே சுக்கலாக உடைத்தால் ஒவ்வொரு துண்டிலும் தன் மூஞ்சி தெரியுமல்லவா

இத்தனை ஆயுதம் வாங்க காசு வேண்டுமே. என்ன செய்வது. யாராவது பைத்தியங்களை போஷிக்கும் நல்லிதயமாக தேடவேண்டியது தான்

7 comments:

Anonymous said...

ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் ஞாபகம் வருகிறது.

ஒரு நாற்சந்தியில் ஒருவன் பெரிய வாளை எடுத்து பயங்கரமாக மிரட்டுவான். சிறிது நேரம் பார்ப்பர், பிறகு துப்பாக்கி எடுத்து சட்டெனச் சுட்டுவிட்டுச் செல்வார்.

அது மாதிரி ஏதாவது நடந்தால் சரி.

Vasu. said...

Dear Mr.Mowlee,

Good post. Just hope this reaches the concerned person. Kutti kathaigal imsa thaanga mudila.

Regards,
Vasu.

ஜோசப் பால்ராஜ் said...

இன்றுதான் முதலில் உங்கள் வலைக்கு வருகிறேன்.

கட்டாயம் நீங்க சொன்ன ஆயுதத்த எல்லாம் செஞ்சிடனும் அய்யா. ஆயுதம் செஞ்சா மட்டும் பத்தாது, அதை உபயோகிக்கனும்.
அவரு தொந்தரவு தாங்க முடியல.

மங்களூர் சிவா said...

ஹா ஹா எல்லாம் ரெடியா இருக்கு உங்க கைய கட்டி வாய்ல ப்ளாஸ்தர் ஒட்டி சுத்தியலால தலைல ஒரு போடலாம்னு நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க!?!?

:))))

cheena (சீனா) said...

அது சரி சிவா - வரம் கொடுத்தா தலைலேயே கை வைச்சிடறதா

Anonymous said...

he is supposed to be in jail for being in a relationship with teenage girls..perumaiya vera ezhudharan. Idhula mathavangaluku adivse vera!

புதுகை.அப்துல்லா said...

சூப்பர் பதிவு :)

சுண்டல் மட்டும்தான் இல்லை