Saturday, 9 May 2009

குருஷேத்ரம்-1


மைதிலி அப்படியான ஓர் அகால வேளையில் போன் பண்ணி விசும்புவாள் என நானோ என் பெண்டாட்டியோ எதிர்பார்த்திருக்கவில்லை. இது மாதிரி விஷயங்களில் என்னைவிட என் மனைவி இங்கிதமாக ஹாண்டில் பண்ணுவாள் என்பதால் ரிசீவரை அவளிடம் நீட்டினேன், “ இந்தாம்மா மைதிலி மாமி லைனிலே இருக்கா; என்னவோ பிரச்சனை போலிருக்கு; என்ன்னு கேளு; லேசா அழற மாதிரி தெரியறது.

“என்னது மாமி அழறாளா. கொண்டாங்கோ நான் பேசறேன்

நாங்கள் அங்கே போனபோது சிவராமன் அப்படின் ஒன்றும் நிலை தடுமாற்ப் போயிருக்கவில்லை. மைதிலி கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிவிட்டாள்.

“சிவராம் ! என்னாச்சு ! திடீர்னு. இப்படி அப்செட் ஆகியிருக்கேள். அதுவும் லிக்கர் கன்ஸ்யூம் பண்ணிட்டு தடுமாறுகிற அளவுக்கு

“அதெல்லாம் ஒன்னும் இல்லேப்பா; இவ தான் உனக்கு போன் பண்ணி கலாட்டா பண்ணிட்டாள்

“அப்படி தெரியலையே; நீங்க ரொம்ப அப்செட் ஆகியிருக்கிறது நன்னாவே தெரியறது

“உன் கிட்டே சொல்றதுக்கென்ன; எங்க கம்பெனில ஒரு பெரிய ப்ராஜக்ட் ஆரம்பிச்சோமில்லையா

“ஆமா சொல்லிருக்கீங்க. அமெரிக்கன் க்ளையண்ட்; நல்ல சாலஞ்சிங் ரோல் கிடைச்சிருக்கு அப்படினு

“அதான். அதோட ஆப்ரேஷனல் க்வாலிட்டி டெஸ்டிங் நடக்கப் போறது. க்ளையண்ட் ப்ளேசிலே. அந்த டீமிலே நான் இல்லை; இந்த ப்ராஜக்டிலே இது வரை சம்பந்தமே படாதவா எல்லாம் பொண்டாட்டி குழந்தை சகிதம் அமெரிக்கா போக கம்பெனி எல்லாம் செய்றது; ஐம் ஜஸ்ட் எ ஸ்பெக்டேட்டர் நௌ

“நீங்க தானே ப்ராஜக்ட்டையே டிசைன் பண்ணினது

ஆமா. நான் தான் பேஸ் டிசைனிலிருந்து ஆரம்பிச்சு ஆர்க்கிடெக்சர் வரைக்கும் கொண்டு வந்தவன். டெவெலெப்மெண்டிலே ஒவ்வொரு வரியா பார்த்து பார்த்து க்வாலிடிக்கு மாரடிச்சேன்; ஆனா இப்ப க்வாலிடி டெஸ்டிங்கிலே நான் இல்லை

“இவ்வளவு தானா ! இதுக்கு தானா இத்தனை சோகம் ! என்ன சாப்பிட்டேள் ! வெறுமனே பீர் தானா இல்லை ரொம்ப காட்டமா இருக்கட்டுமேனு ரம் வரைக்கும் போய்ட்டேளா

“என்னப்பா இத்தனை சாதாரணமா சொல்ற. என் கஷ்டம் உனக்குப் புரியலையா

“சிவராம். இதிலே கஷ்டப்பட வேண்டிய அவசியமேயில்லை

“என்ன சொல்றே நீ. சாஃப்வேர் ப்ராஜக்ட்டுக்காகவும் ஒன்னோட கிருஷ்ணர் எதாவது ஸ்லோகம் சொல்லிருக்கார் கீதையிலே அப்படின்னுவே|

“அதே தான்

(தொடரும்)

2 comments:

cheena (சீனா) said...

வாழ்வினில் - அதிலும் மென்பொருள் துறையினீல் இவ்வாறு நடப்பது சர்வ சாதாரணம் ! அட்னையும் பீர் அடிக்காமல் ரம் அடிக்காமல் யதார்த்தமாக கீதையினை எடுத்துக்காட்டும் பாங்கு பாராட்டத்தக்கது. போகட்டும் கண்ணனுக்கே பாலிசி எனக்குப் பிடித்த ஒன்று

அடுத்த அத்தியாயம் பார்ப்போம்

BalHanuman said...

ஆரம்பமே ஆவலைத் தூண்டுகிறது....