"எங்கே இந்தப் பக்கம் ".. மெரினாவிலே அதிகாலை நடந்து போகையில் பின்னாலிருந்து குரல். மிகப் பக்கத்திலே கேட்ட குரல்.. அதிலிருந்த கம்பீரம்..
யாரது முண்டாசுவா..
அவனே தான்..
ஸ்நேகிதமாகப் புன்னகைத்தேன்..
"என்னைக் குறித்து தான் ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கின்றீர் என யூகம்"
"நீங்கள் அறியாத டெவில் பழமொழியா.."
"சொல்லுமையா என்ன ஐயம் இப்போது"
"உங்களுக்கு திமிர் அதிகம் என சொல்வார்களா.. உங்கள் காலத்தில்"
"இருக்கலாம்.. ஆனால் நான் இல்லை எனச் சொல்வேன்"
"புரியலை"
"என் பாடல் ஒன்றைக் கொண்டே விளக்கலாம். உமக்கு மிகவும் பிடித்த எனது கவிதை ஒன்றைச் சொல்லும்"
"இது என்ன கேள்வி.. உங்கள் கவிதை எல்லாமே அந்த ரகம் தான் எனக்கு"
"அதில்லை ஸ்வாமி.. அடிக்கடி சொல்வீரே .. இது தான் முண்டாசுவின் மாஸ்டர் பீஸ் என அந்தப் பாடலைச் சொன்னேன்"
"அதுவா

தேடிச் சோறு நிதந்தின்று _பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி _ மனம்
வாடித் துன்பம் மிக உழன்று பிறர்
வாடப்பல செயல்கள் செய்து_நரை
கூடிக்கிழப் பருவமெய்தி _கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்_பல
வேடிக்கை மனிதரைப் போலே_ நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ
"இப்படியான் வேடிக்கை மனிதரிடம் இருக்கும் திமிரையும் எனக்கான செருக்கையும் ஒப்பிட எப்படித் துணிந்தீர்"
"அப்படியானால் வேடிக்கை மனிதரிடம் செருக்கு இருக்காதா.. "
"உமது கால திரைப்பட பாணியில் சொல்வதானால் எனக்கு சொல்ல நா எழவில்லை ஆனாலும் சொல்லாமால் செல்ல மனமில்லை"
"சொல்லிவிடுங்கள்"
"இப்படியான வேடிக்கை மனிதரிடம் கிறுக்கு தான் இருக்கும் செருக்கு இருக்காது"
அந்த யுக புருஷன் மிகத் தைரியமாக கடல் அலைமீது நடந்து மறைந்தான்
3 comments:
அன்பின் மௌளி
நல்ல சிந்தனை - நல்ல இடுகை
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
உமது கற்பனை மிக நன்று.
நல்லதொரு சிந்தனையுடன் கூடிய கற்பனை.
வாழ்த்துகள்.
Post a Comment