Sunday 15 April 2012

மீண்டும் சுஜாதா.. தொடர்கிறது

முன்பு மீண்டும் சுஜாதா எனும் பொதுத் தலைப்பிலே என் ப்ளாக்கிலே எழுதி வந்தேன்.. அதனைத் தொடராமல் இருந்தேன்.. பின்னர் ப்ளாக்கில் ஆக்டிவிடியினைக் குறைத்துக் கொண்டேன்.. அது அத்தனை இன்ட்ராக்டிவாக இல்லை என்பது என் ஒப்பீனியன்.. அதனால் ஃபேஸ் புக்கிலும், கூகிள் + லும் ஜாஸ்தியாக எழுதத் தொடங்கினேன்..

இந்த மீண்டும் சுஜாதாவினை தொடரலாம் என உத்தேசித்திருக்கின்றேன்

இதன் முந்தைய பதிவுகளை அன்பர்கள் சிரமம் பாராமல் இந்த லிங்கில் படிக்கவும்.. இது என் பளாக்கில் (http://mowlee.blogspot.in/search/label/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE
)


" ரங்கராஜன்.. உங்களது முதல் மேலுலக சந்திப்பு இன்னும் ஒரு மணி நேரத்தில்.. அடுத்து இருக்கும் வசந்த மண்டபத்தில்.. நீங்கள் சந்திக்க இருப்பது திருவள்ளுவரை"
சுஜாதா அவரை நோக்கி நட்புடன் புன்னகைத்தார்..

" ஓ வள்ளுவரா எனக்கு குறள்ல நிறைய சந்தேகம்.. அதும் தர்ட் பார்ட்லே..."

கணேஷ் வசந்தின் முதுகில் "பளார்" என ஒன்று வைத்தான்

இந்த இடத்தில் தொடரை நிறுத்தினேன் இனி மேலே படிக்கவும்

-------


"ஏம்பா வசந்தை இப்படி அடிக்கறே.".

"பின்ன என்ன சார் எப்ப பாரு காமத்துப்பால் சம்பந்தமாவே பேசிட்டு இருக்கான்.. திருக்குறள்லே எத்தனை சங்கதிகள் இருக்கு.. அதெல்லாம் பேசறானா பாருங்க"

"பாஸ்.. இது தானா விஷயம்.. இதுக்கா இப்படி வலிக்கிற மாதிரி அடிக்கிறது..என்னைச் சொல்லிட்டு நீங்க மட்டும்.. திருவள்ளுவரை அசிங்கப்படுத்தற மாதிரி நடந்துக்கலையா.. நீங்களே சொல்லுங்க சுஜாதா சார்'

"உங்க சண்டைக்கு நான் வரலைப்பா... நீயே என்ன விஷயம்னு சொல்லிடு"

"சொல்லலாம் சார்.. இப்படித்தான் ஒரு சப்பார்டினேட்டை டிஸ்கரெஜ் செய்யறதா.. இதெல்லாம் வள்ளுவர் கண்டிச்சிருக்கார் தெரியுமில்லையா"

"போட்டன்னா தெரியுமா.. உன்னோட லூட்டிக்கெல்லாம் வள்ளுவரை சப்போர்ட்டுக்கு இழுத்துக்காத வசந்த்.. பாருங்க சார் எப்படிப் பேசறான்னு"

"பாஸ் நீங்க சொல்றதப் பார்த்தா நான் என்னமோ எனக்கு வசதிக்காக வள்ளுவரை திரிச்சி சொல்றேன்னு நினைக்கிறீங்க போலிருக்கு"

'இல்லையா பின்ன"

"பாஸ் .. திருக்குறளை மேலும் இம்ப்ரூப் பண்றதோ ..இல்லை திருத்தி சொல்றதோ அதை சிதைக்கும்"

"என்னடா இது உளறல்"

"இது நான் சொன்னதில்ல பாஸ்.. லாசரஸ்னு ஒரு பாதிரியார் சொன்னதை அப்படியே சொல்றேன் பாருங்க...The Kural cannot be improved nor its plan made more perfect. It is a perfect mosaic in itself. The slightest change in the size, shape or colour of a single stone would mar the beauty of the whole" அப்படினு சொல்லிருக்கார் தெரியுமில்ல"

"சுஜாதா சார்.. என்னமோ இவன் அடிச்சு விடறான்னு தோணறது.. இப்ப இவனை விசாரிக்க டைமில்லை.. வாங்க நாம திருவள்ளுவரைச் சந்திக்கலாம். அவர் கிட்ட பேசினதுக்குப் பின்னால இவனை வச்சுக்கலாம்"

3 comments:

Ganpat said...

//பின்னர் ப்ளாக்கில் ஆக்டிவிடியினைக் குறைத்துக் கொண்டேன்.. அது அத்தனை இன்ட்ராக்டிவாக இல்லை என்பது என் ஒப்பீனியன்.. //

இதற்கு முக்கிய காரணம் Bloggers தான் என்பது என் ஒப்பீனியன்..

பல Bloggers தம்மை Jeffrey Archer level க்கு கற்பனை செய்து கொண்டு,வரும் பின்னூட்டங்களை அசட்டை செய்வது அல்லது ஏதாவது குறை சொல்பவர்களை அநாகரீகமாக மட்டம் தட்டுவது பரவலாக காணப்படுகிறது.

பொதுவாக மேற்கண்ட முறையில் செயல்படும் blog களை நான் தவிர்த்து விடுகிறேன்.இதைப்போல பலர் செய்தால் தானாக interactivity குறைந்து விடுகிறது.

வாசகர்களிடம் உள்ள பெரும் பலவீனம் அவர்களில் பலர் light readers என்பதே.அதோடு அவர்கள் bloggers தவிர சக பின்னூட்டமிடுபவர்களுடன interact செய்ய பொதுவாக விரும்புவதில்லை.

Anyway,many blogs exist just because they are FREE OF COST..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

I am also agreeing with sri Ganpat.
your blog is interesting to read.

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - மறுமொழிகள் வருவதில்லை என்ற ஒரு வருத்தம் இருக்கிறதா - ம்ம்ம் -வரும் மறுமொழிகளுக்கு ஒரு பதில் - தங்களின் கவனத்திற்கு வந்ததெனத் தெரியப் படுத்த - ஒரு வரி - அனைத்து மறுமொழிகளின் இறுதியில் - ஒரே ஒரு வரி எழுதலாமே. வாழ்க வலமுடன் - நட்புடன் சீனா