Thursday 2 October 2008

கடிதம்- 5


நான் இப்படியான உருக்கமான கடிதம் வாசித்ததேயில்லை எனச் சொல்லலாம். இனிமேலும் வாசிப்பேனா என்பதும் சந்தேகம்தான்.
அந்தக் கடிதம் வார்த்தை வார்த்தையாக இன்னதென்று எனக்குத் தெரியாது. ஆனால் யார் யாருக்கு எது பற்றி எழுதினார் எனத் தெரியும்

ஒரு சின்னப்பையன். புகைபிடித்தது தப்பென்று மனசுக்குப்பட்டதால், தன் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டு எழுதுகிறான். அதுவும் படுத்த படுக்கையாக இருக்கின்ற அப்பாவிடம். அவரின் ரியாக்‌ஷனிலிருந்து அந்தக் கடிதம் எப்படியானதொரு மனோபாவத்தை அந்த அப்பாவுக்கு சொல்லியிருக்கலாம் என யூகிக்கலாம். அந்தச் சிறுவனே எழுதுகிறான் :

”அவர் முழுவதும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கண்களில் கண்ணீர்....... “

அந்தக் கண்ணீர் தன்னை அப்பா மன்னித்துவிட்டதை உணர்த்தியதாக எழுதும் சிறுவன் இன்னும் சொல்கிறான்..

“இவ்விதமான் உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று; கோபமடைவார். கடும் சொற்களைக் கூறுவார். தலையில் அடித்துக் கொள்வார் என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே இதற்கு காரணம் என நம்புகிறேன். மன்னிப்பு அளிக்க உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தை செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்கு சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது என்னைப் பற்றி கவலை இல்லை என்று என் தந்தையை உணரும்படி செய்தது என்பதை அறிவேன்”
அந்த சின்னப் பையனுக்கு இன்றை தேதிக்கு 139 வயசாகி விட்டது. ஆனாலும் அவன் கடிதமோ அந்த எழுத்தோ அந்த சிந்தனையோ இன்னும் இளமையாகத் தான் இருக்கு.
I would strongly say HE IS STILL relevant

6 comments:

VSK said...

Fantastic post sir!

Very timely!

சுரேகா.. said...

நல்ல பதிவு!

அந்தப்பையனுக்கு இன்னும் எத்தனை வயசானாலும்..அவரது படைப்புகள் இளமையாகத்தான் இருக்கும்.

சுதந்திர இந்தியா உட்பட....!

ஏ.எ.வாலிபன் said...

Nice one touching
Y dont u give the letter too as an attachement to this article ?

ஏ.எ.வாலிபன் said...

Nice and touching one.
Y dont u attach the letter too with this article ?
I read once in english searching for a tamil version.

Ŝ₤Ω..™ said...

எனக்கு அந்த பையனைப் பிடிக்காது.. ஆனாலும் "மன்னிப்பு அளிக்க உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தை செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்கு சரியான வகையில் வருத்தப்படுவதாகும்." இந்த வரிகள் வரவரிகள்.. என் வாழ்வில், நானும் அதனை அனுபவித்து இருக்கிறேன்..

cheena (சீனா) said...

நல்ல பதிவு

மன்னிப்பு வழங்க உரிமை உள்ளவரிடம் குற்றத்தினை ஒப்புக்கொண்டது மாத்திரமல்ல - இனி செய்ய மாட்டேன் என்ற உறுதி மொழியும் கொடுத்தது அண்ணலின் குண நலன்களைக் காட்டுகிறது