திரு. மாலன் அவர்களின் ஜனகணமன அதற்கு என் விமர்சனம், அதற்கு திரு. மாலன் அவர்களின் பதில்( என கடந்த பதிவுகள்
திரு.மாலன் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை
மாலன் அவர்கள் நீண்ட கடிதத்தின் வாயிலாக சொல்ல விழைவது தான் அந்தப் புத்தகத்தை எழுதியது 1980 எனவும் Manohar Malgonkar ன் புத்தகம் அதற்குப் பின் வெளியாகி இருக்கலாம் என்று யூகிப்பதாகவும் சொல்லியிருக்கார்
மாலனின் வரிகளை மீண்டும் பாருங்கள்
//நீங்கள் ஒரு THE MEN WHO KILLED GANDHI யைப் படித்து விட்டு எழுதுகிறீர்கள். MALGONKAR ருடைய அந்தப் புத்தகம் 1981ம் ஆண்டு வெளிவந்ததாக ஞாபகம். (நான் இன்றுவரை அதைப்படித்ததில்லை) ஆனால் நான் என் நாவலை 1980லேயே எழுதி விட்டேன்.81ல் அது பிரசுரமாகிவிட்டது//
1980 ல் தானே கூகிள் இல்லை இண்டெர்நெட் இல்லை . இப்போது இருக்கிறதே. எனக்கு மெயில் அனுப்புவதற்கு முன்பு Manohar Malgonkar என்பவர் The Men Who Killed Gandhi என்ற புத்தகத்தை எப்போது எழுதினார் என சரி பார்த்துவிட்டு எனக்கு மெயில் அனுப்பியிருக்கலாமே. இன்றைய தேதி மாலன் சீனியர் தானே
படிப்பவர்களுக்கு தெரிய வேண்டாமா
Manohar Malgonkar என்பவர் The Men Who Killed Gandhi என்ற புத்தகத்தை 1978 லேயே வெளியிட்டுவிட்டார். அப்போதே காந்தி கொலை தொடர்பாக 6 புத்தகங்கள் வந்துவிட்டன . ஆக மாலன் ஜனகணமன வெளியிடும் சமயத்தில் இந்தப் பொருளில் புத்தகங்கள் இருந்திருக்கின்றன
Manohar Malgonkar எழுதிய The Men Who Killed Gandhi சமீபத்திய பதிப்பு 2008 ல்
மாலன் அவர்கள் சொல்லியிருக்கும் சமாதானம் / விளக்கம்
//உங்கள் விமரிசனத்தில் நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். என்னுடையது Fiction வரலாற்றின் அடிப்படையில் அமைந்த Fiction.அதை நான் கதையைத் துவக்கும் முன் Prologueலேயே சொல்லி விட்டேன். ஒரு கதாசிரியனுக்கு சில உரிமைகள் உண்டு.எப்போதுமே சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும் எந்த எழுத்தாளரும் தான் திரட்டும் எல்லாவற்றையும் எழுதிவிடுவதில்லை. கதையின் கட்டுமானம், இலக்கு இவற்றைக் கருத்தில் கொண்டு H/She will use his/her discretion.//
இது FICTION என மாலன் சொல்லியிருப்பது நிஜம். அதே Prologue ல் சம்பவங்கள் நிஜம் , சம்பாஷனைகள் தான் கற்பனை என்றும் ஒவ்வொரு விபரமும் சரி பார்க்கப்பட்ட பின்னரே எழுதியதாகவும் க்ளெயிம் செய்திருக்கிறாரே. சரி பார்த்தேன் எனச் சொல்லி வெளியிட்டால் அதிலே தப்பு இருந்தால் சொல்வது தானே விமர்சனம். அதைத் தானே செய்துள்ளேன்
இதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டும்.
ஆப்தே ஒரு பெண்ணுடன் சல்லாபித்திருந்தார் என பொதுவாகச் சொல்லவில்லை. ரேணு என்ற பெயரைச் சொல்லியிருக்கிறார்
அந்தப் பெண்ணின் பெயர் மனோரமா சால்வி என ஆதாரத்துடன் சொன்னால் அது முக்கியமில்லை எனச் சொன்னால் என்ன சொல்வது
இன்னொன்று
ஆப்தே , கோட்சேயின் குவாலியர் பயணம். இதற்கு மாலன் தரும் சமாதானம் விளக்கம்
//உடனே டிரெயின் மூலம் ? நமக்கு அவர்கள் கிளம்பிய டிரெயினின் நேரம் தெரியாது. தில்லி வந்த நேரம் தெரியாது.தில்லி வந்து டிரெயின் மூலம் குவாலியர் போவதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் போலீஸ் கண்ணில் படாமல் எங்கு தங்கியிருக்க முடியும்? அங்கே கற்பனைக்கு இடமிருக்கிறது அதை நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். தப்பா?//
கோட்சேவும் , ஆப்தேயும் 27-ஜனவரி-1948 மும்பையிலிருந்து விமானம் மூலம் போலி பெயரில் டெல்லி வந்த உடன் விமான நிலையத்திலிருந்து நேராக பழைய டெல்லி ரயில் நிலையம் சென்று டிரெயினில் குவாலியர் போனது ஆப்தேவிடமும், கோட்சேவிடமும் பெறப்பட்ட ஸ்டேட்மெண்ட்களில் பதிவாகியுள்ளது. எந்த டிரெயின் என்ன நேரம் என்பது உட்பட
ஆக நமக்கு தெரியாது என்று மாலன் சொல்லும் நமக்கில் நான் சேர்த்தி இல்லை.
தப்பா என மாலன் அவர்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் - வாசகர்களிடமே விட்டுவிடலாம்
அதே போல் 21-ஜனவரி-1948 ஜேடி நகர்வாலா என்ற அதிகாரி மொரார்ஜி தேசாயை பம்பாய் ரயில் நிலையத்தில் தான் சந்தித்தார். மாலன் எழுதியிருப்பது போல மொரார்ஜி தேசாயின் அலுவலகத்தில் இல்லை. இதற்கு மாலன் அவர்கள் பதில் சொல்லவில்லை
காந்தியின் கொலை அரசின் மெத்தனத்தால் என மாலன் ரமணன் மூலம் சொல்வதாகச் சொல்லியிருக்கார்
அதைத் தான் தீர்ப்பு சொன்ன நீதிபதி ஆத்ம சரன் சொல்லிருக்கார்னு தீர்ப்பு வரிகளை அப்படியே தந்திருக்கேனே
மாலனின் கீழ்கண்ட வரிகளைப் பாருங்கள்
//என்ன, மல்கோங்கர் ஆங்கிலத்தில் வரலாறாக எழுதினார். (என் உங்கள் குறிப்புக்களிலிருந்து நான் ஊகிக்கிறேன்) நான் தமிழில் சில பரிசோதனை முயற்சிகளோடு புனைகதையாக எழுதினேன்.
என்றைக்குமே தமிழ் எழுத்தாளனது முயற்சிகளுக்கு எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடாது. அது இளப்பமாகத்தான் கருதப்படும்.//
இதையும் மாலன் என்ற இன்றைய சீனியரிடம் நான் எதிர்பார்க்கவில்லை
4 comments:
சபாஷ் சரியான போட்டி....புத்தகத்தை விட சுவாரசியமாக இருக்கும் போல உள்ளது.......
If you would have not mentioned in your Review on the flaws of the Book,would the mistakes have been identified and corrected in the next edition of the book?I doubt.
In this 28 years,how many readers must have read this book.
May God Bless Tamizh Readers.
Regards
Karthick S
"விமர்சனம் ஒரு வினோத ஒட்டகம் அது இலைகளை விலக்கி முட்களை தின்கிறது" என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது, உங்கள் விமர்சனங்கள் மீதும் அது குறித்தான பின்னூடங்கள் மீதும். ஒரு படைப்பை நீங்கள் உற்று நோக்கி விமர்சிக்க உங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்பதற்காக படைப்பாளியை குற்றவாளி கூண்டில் ஏற்ற முயற்சிப்பது தவறு என்றே தோன்றுகிறது. நீங்கள் வாசகனாய், திரிபு படுகின்ற வரலாற்று பதிவுகளுக்கு எதிராய் கேள்வி எழுப்பும் சாத்தியத்தை இன்றுள்ள வசதிகள் உங்களுக்கு அளித்திருக்கலாம், ஆனால் படைப்பு என்கின்ற ரீதியில் அது குறித்தான இடம் பொருள் ஏவலை கருத்தில் கொண்டே ஆக வேண்டும். சரி ஒரு நியாயத்துக்கு நீங்கள் நீரூபிப்பது சரியாயினும், உங்களால் எல்லா fiction களையும் இவ்வாறு ஆதாரம் கொண்டு நிறுவ முடியாது.
மற்றப்படி ஊடக சுதந்திரத்தில், பதிலிடுவதில் மாலன் கொண்டுள்ள பக்குவத்தை உங்களின் பக்கத்தில் உள்ளவர்களில் பார்க்கமுடியவில்லை. கல்லெறியும் வேகத்தில் நாகரீகம் காணமல் போகிறதோ என்னவோ..
துர்க்கா வணக்கம்
குற்றவாளிக் கூண்டில் யாரையும் நிறுத்தவில்லை
“நான் சொல்வதெல்லாம் உண்மை” என்கிற ரீதியில்
“ ஜின்னாவின் செக் திரும்பி வந்தது முதல், கடைசி நாளில் கோட்சே அணி்ந்த உடைவரை சிறிய தகவல் கூட சரிபார்க்கப்பட்ட பின்பே இந்நாவலில் பயன் படுத்தப்பட்டுள்ளது”
(இது திரு. மாலனின் வரிகள் முன்னுரையில்)
வாக்குமூலம் இருந்தால் அதை சரிபார்ர்கும் போது , என்ன இது முரணாக இருக்கிறதே” எனச் சொன்னால் அது குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதாக இருப்பதாக குறுகுறுத்தால் அதன் பெயர் மனசாட்சி என எடுத்துக் கொள்ள வேண்டியது தான்
சமாளிப்பது எப்போதுமே பக்குவமாக இருக்க வேண்டும் அதுவும் தன் தரப்பில் சறுக்கல் இருந்ததால் அந்தப் பக்குவம் கூட இல்லையென்றால் என்ன செய்வது
Post a Comment