Thursday 26 February 2009

சுஜாதா சார்... WE ALL MISS YOU A LOT











நாளை பிப்ரவரி 27. இன்றோடு ஓராண்டாகிறது. நாட்காட்டிகளின் தேதிப்படி. அவர் எப்படி எப்போதும் சுவாரசியமாக இருந்தார் என்கிற ரகசியத்தை அவர் ஒளித்து வைக்கவே இல்லை.


சுஜாதா என்பவர் ஓர் எழுத்தாளராக, வெறுமனே கதை சொல்பவாராக எங்களுக்கு தோன்றவில்லை. அவர் ஓர் இயக்கம்.






தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது மரணம் எனக்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை எனச் சொல்ல முடியாது










அவரது மரணம் ஒட்டிய மன சஞ்சலத்தைப் பகிர்ந்து கொள்ள முயன்ற போது கிடைத்த நண்பர்கள் அநேகம். மிக்க் சொல்ல வேண்டுமெனில். திரு. தேசிகன். திரு கார்த்திக் சுப்ரமண்யன் எனச் சொல்ல்லாம்

சுஜாதாவிற்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும். இப்படி எல்லாத் தளங்களிலும் கால் பதித்து நடனம் ஆடி, வெற்றிக் கொடி நட்டு..



அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொஞ்ச நாள் ஸ்வாதீனமே இல்லாமல் இருந்து விட்டு தேசிகன் ,சிற்றம் சிறுகாலே.. “ என பாசுரம் படிக்க அதைக் கேட்டபடியே கண்மூடி..

இந்த மனுஷனுக்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும். இப்படி எழுத்து , எழுத்து என மாய்ந்து போனதற்கு..

எனக்குத் தெரிந்து ஒரே நோக்கம் தான்

அவர் சொன்னதும் சொல்ல முயன்றதும் ஒன்றே ஒன்றைத் தான்.











நல்ல எழுத்துகள் படிக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் நிறைய வெளிவர வேண்டும். நல்ல புத்தகங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும்






இளம் எழுத்தாளர்களை, இளம் கவிஞர்களை, நல்ல புத்தகங்களை எப்படியெல்லாம் அறிமுகம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்தார்






அவரது கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் எல்லாவற்றிலும் புத்தகம், புத்தகம் புத்தகம் தான்.

அவர் கற்றதும் பெற்றதும் கட்டுரைத் தொடரில் (அறிமுகப்படுத்திய புத்தகங்களைத் தான் நண்பர் கார்த்திக் சுப்பிரமணியன்(karthik.manian@gmail.com ) தொகுத்து தன் கைப்பட எழுதியதை இங்கே பதிந்து இருக்கிறேன்.



அவரால் வசீகரிக்கப்பட்டவர்கள் அவரால் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என சுஜாதா ஓர் இயக்கம்.

அவரது மறைவுக்கு இரங்கல் எழுதிய எழுத்தாளர் திரு. இராமகிருஷ்ணன் சொன்னதை நினைத்துக் கொள்கிறேன், போய் வாருங்கள் வாத்யாரே.. எழுத்தாய் எப்போதும் இருப்பீர்கள்




அந்த வாத்யாருக்கு மாணவர்கள் செய்யும் வணக்கம் ஒன்றே ஒன்று தான். நல்ல புத்தகங்கள் படிப்பது. நல்ல புத்தகங்களைப் பற்றி செய்திகள் பகிர்ந்து கொள்வது. அதை ஒரு இயக்கமாகத் தொடர்வது

சுஜாதா சார்... WE ALL MISS YOU A LOT

10 comments:

Unknown said...

ஒரு வருடம் ஆகிவிட்டதா நம்ப முடியவில்லை, யார் யாரோ சூரியன் என்கிறார்கள், எழுத்துலகுக்கு அவர்தான் உண்மையான சூரியன், புதிய பழய எழுத்தாளர்கள் யாராய் இருந்தாலும் அவரின் எழுத்து ஒரு அற்புதமான பாடம்.

விழியன் said...

சுஜாதாவின் இடத்தை யாரும் நிரப்பமுடியாது. அவரின் எத்தனையோ புது முயற்சிகள் அத்தனையும் வெற்றியே. அஞ்சலி செலுத்துவோம்

மெளலி (மதுரையம்பதி) said...

ஏதோ இப்போ மாதிரி இருந்தது...ஒரு வருடம் ஓடிவிட்டதா?.

cheena (சீனா) said...

ஒரு ஆண்டு ஆகிவிட்டதா .... காலம் வேகமாக ஓடுகிறது - எல்லோராலும் சுஜாதாவினை மறக்க முடியாது. அவரது எழுத்துகளில் அவர் வாழ்கிறார். அவர் அறிமுகப் படுத்டிய புத்தகங்களின் தொடுப்ப்பு அருமை. நன்று. நல்வாழ்த்துகள்

selventhiran said...

'சுஜாதா எக்ஸ்பைர்டு' என தோழியிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தபோது நேரம் இரவு பத்தரையை தாண்டி இருந்தது. 'எக்ஸ்பைர்டு' என்றால் காலாவதியாகிவிட்டது என்று பொருளா அல்லது காலத்தைக் கடந்து விட்டது என்று பொருளா என்ற குழப்பம் ஒருபுறமிருக்க, மரணமெனும் பெருஞ்செய்தியைக் கூட காலம் 'குறுஞ்செய்தி'யாகக் குறுக்கி விட்டதை பார்த்தீர்களா?!
இந்த செய்தியை உறுதி செய்துகொண்ட பின்னரே வேறு எதுவும் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தேன் நான். எனக்குத் தெரிந்த ஓரிரு எழுத்தாள நண்பர்களையும், பத்திரிக்கையாளர்களையும் அழைத்து விசாரித்தால் யாருக்கும் உறுதியான தகவலில்லை. பல பேருக்கு அகாலத்தில் எழவு சொன்ன பெருமையோடும், சுஜாதா குறித்த சிந்தனைகளோடும் படுக்கையில் சாய்ந்த வேளையில் கணபதி சுப்ரமண்யம் அழைத்தார். பின்னனியில் ஒலிக்கும் பிரிண்டிங் மிஷின் இரைச்சலைத் தாண்டியும் அவரது கேவல் சத்தமாய் இருந்தது. அவரை ஒருவழியாய் சமாளித்து முடிக்கையில் தொடர்ந்து ஜல்லிபட்டி பழனிசாமி, பிரசாத், விஸ்வம், ஜெயராஜ் என தொடர்ந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. எப்படி மரித்தார்? எப்போது மரித்தார்? எப்போது அடக்கம்? போன்ற கேள்விகள் மறுநாள் காலைவரை என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தது. இறப்பதற்கு முன் சுஜாதா என்னைத் தன் இலக்கிய வாரிசாக அறிவித்துவிட்டாரோ என்ற இயல்பான சந்தேகம் எழுந்து அடங்கியது.
அவருக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வரலாமென மாணிக்கம் அழைத்தபோது உறுதியாக மறுத்து விட்டேன். நல்ல வாசகன் எழுத்தாளனை ஒருபோதும் தேடி வருவதில்லை என்ற வரிகளை வாசித்த எவரால்தான் போக முடியும்?!
தீர்க்கதரிசனம் என்கின்ற வார்த்தை பகுத்தறிவிற்கு முரணானதுதான் என்றபோதும் சுஜாதாவின் கட்டுரைகளை அவர் எழுதிய காலம் தாண்டி வாசிக்கையில், இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், சினிமா குறித்த அவரது அவதானிப்புகள் அனைத்தும் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருவதைப் பார்க்கையில் அவர் எதிர்காலத்தைக் கூறும் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரோ என்ற எண்ணம் வருகிறது.
எழுத துவங்கும் அல்லது எழுதப் பழகும் எவருக்கும் தன் அபிமான எழுத்தாளன் தனது எழுத்தை ரசிப்பானா என்கிற வினா ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே வந்துவிழும். அந்த வகையில் எனது எழுத்தாசானாகவும், ஆதர்சமாகவும் விளங்கிய சுஜாதாவை அசத்திவிடும் சிறந்த படைப்போடு வெளிவரவேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. அவரால் அடையாளம் காட்டப்பட்ட எழுத்தாளனில் ஒருவனாக அறியப்படவேண்டும் என்ற எனது தீராதவேட்கை அவரது மரணத்தின் மூலம் ஒருபோதும் நிகழாத ஒன்றாகி விட்டது.
சுஜாதா எழுத்தாளர்களை உருவாக்குபவராக இருந்தார். அவரது எழுத்தில் இருந்த எளிமை எவரையும் எழுதத் துண்டுவதாக இருந்தது. கணையாழியின் கடைசி பக்கங்களில் துவங்கி கற்றதும் பெற்றதும்வரை அவர் தனது அன்றாடங்களையும் அனுபவங்களையும் பத்திகளாக்கியது பெரும் வாசகப் பரப்பை ஈர்த்தது. இதுமாதிரியான அனுபவ கட்டுரைகளை, டைரி குறிப்பு போன்ற பதிவுகளை எழுதும் ஆயிரமாயிரம் பதிவர்களை உருவாக்கியது. அவரது பாதிப்பு இல்லாத பதிவர்களே இல்லை என்பது எனது அபிப்ராயம்.
பின்குறிப்பு:
டைம்ஸ் இன்று - தீபாவளி மலரை நண்பர் சுப்ரமணியம் நேற்று பரிசளித்தார். அதில் சிறப்புப் பகுதியாக 'சுஜாதா - சொல்லில் ஒளிரும் சுடர்' என்ற பகுதி மனுஷ்யபுத்திரனால் தொகுக்கப்பட்டு இருந்தது. அவரது எழுத்துக்களைப் போலவே நினைவுகளையும் ஓரே மூச்சில் படித்து முடித்ததனால் ஏற்பட்ட காலம் கடந்த கேவல் இது.

Venkatramanan said...

சந்திரமௌலி! இந்தப் பட்டியல் உண்மையில் ஒரு சிறந்த தொகுப்பு! முடிந்தால் ஒருங்குறியில் தட்டச்சிப் போடுகிறேன். உங்க சுஜாதா தொடர் என்னாச்சு?!

அன்புடன்
வெங்கட்ரமணன்

rudras prasadams said...

sujathavirkku ungal anjaliyum mattrum mattra sujatha aarvalarkalin pathivukalaiyum parkkum pozhuthu, idhu, sujathavai nicchayam magizhchi kolla seithirrukkum… "ennaal ivvallavu ekalaivargalaa endru…...."

Venkatramanan said...

மௌலி!
இந்தப் பட்டியலை ஒரு விக்கியாக (யாராயிருப்பினும் எடிட்டலாம்) வடித்திருக்கிறேன் முடிந்தளவு அனைத்து நூல்களுக்கும் இணைப்புக் கொடுத்துள்ளேன் (அமேசான், எனிஇந்தியன், அல்லது புத்தக மதிப்புரைகள், விமர்சனங்கள்). விடுபட்டவற்றையும் விரைவில் செய்து விடுகிறேன். கார்த்திக்கிற்கு நன்றி சொல்லவும்!

அன்புடன்
வெங்கட்ரமணன்

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

அன்பின் வெங்கட் ராமன்

தங்களின் முயற்சி பிரமிக்க வைக்கிறது

பாராட்டுகள்

நன்றி

Karthick said...

Venkat,
Great Job.Amazing.

Regards,
Karthick S