Saturday 18 July 2009

குருஷேத்ரம்-3


இதற்கு முந்தைய பதிவுகளை கீழ்க்கண்ட சுட்டிகளிலே படிக்கலாம்

குருஷேத்ரம் அறிமுகம் பதிவு

http://mowlee.blogspot.com/2009/02/blog-post.html

குருஷேத்ரம்-1

http://mowlee.blogspot.com/2009/05/1.html

குருஷேத்ரம்-2 பதிவு

http://mowlee.blogspot.com/2009/05/2.html

------------------------------


அப்ப நாங்கெல்லாம் அதை மேம்போக்காக புரிஞ்சிண்டோம்னு சொல்றியா “

அப்படி இல்லைப்பா. வேலை செய்யறது தான் உசத்தியானதுனு சொல்ற பகவான்.. அந்த வேலைக்கு கூலி எதிர்பார்க்காதேனு சொல்வாரா.. யோசிச்சுப்பாரு. நீ செய்ற வேலையை எனக்கு செய்ற பூஜையாக நினைத்துக் கொள் அப்படினு சொல்றார்

“வேலையை பூஜையா எப்படி நினைக்க முடியும்

“சரி இப்படி யோசிச்சுப் பாரு.. வேலை செய்ய purpose இருக்கே. அந்த பர்ப்பஸ் தான் முக்கியம்னு நினைக்கிறது பூஜை. இதை பஹவத் அர்ப்பணம் அப்படினு சொல்லிருக்கார் பகவான்

அப்ப ஒவ்வொருவருக்கும் ஒரு பர்ப்பஸ் இருக்குமே. அது நல்ல காரியமாகவும் இருக்கலாம். கெட்ட காரியமாகவும் இருக்கலாம்.. திருடனுக்குக் கூடத்தான் திருடறத்துக்கு பர்ப்பஸ் இருக்கும்.. அதுனாலே திருடனுக்கும் பகவான் ஆதரவு தருவாரா

ஆக்‌ஷன் என்பது வெறுமனே செய்கை மட்டுமில்லை சிவராம்.. ஆக்‌ஷனுக்கான மனோபாவமும் சேர்த்துத்தான்

எப்ப மனோபாவம்னு வருதோ.. அது செல்ஃப் டிசிப்ளினுக்கு உட்பட்ட்தாய்டுதே

கரெக்டா சொன்னே. இதை சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அழகாச் சொல்லிருக்கார்.. SELF DISCIPLINE IS NOT A MATTER OF INTELLIGENCE. IT IS A MATTER OF WILL AND EMOTIONS..” அப்படினு

“அப்படின்னா WILL தான் உசத்தியா

Will அப்படிங்கறதை காரியம் செய்ய தேவையான திட சித்தம்னு மட்டும் அர்த்தம் கொள்ளக் கூடாது

பின்ன அது என்னவாம்

“காரியத்தோட சம்பந்தமான எல்லா நிகழ்வுகளையும் தாங்கிக்கிற மனோபாவம் தான் அந்த WILL. வெறும் பிடிவாதம் WILL இல்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த நிகழ்வுகளினால் தடுமாறாம இருக்கறது தான் அந்த வில்

“சரி நான் அமெரிக்கா போக அடம்பிடிக்கிறேன்னு சொல்றியா

“நீ அந்த ப்ராஜக்டிலே ஈடுபட பர்ப்பஸ் இருந்தது. அந்த பர்ப்பஸுக்கு நீ உனக்கான கடமையைச் செஞ்சாச்சு.. ஆனா அதுக்கு அமெரிக்கா போறதுதான் பலன் அப்படினு பலனை நீயே தீர்மானம் செய்துட்டாய்... அதுனாலே அது மீதான ஈடுபாடு காரணமாக நீ அதை விடமுடியாம இருக்கிறாய்.. ஆனால் உன்னோட பலன் அமெரிக்கா போறதுத்தான் அப்படினு நீயா தீர்மானம் பண்ணிண்ட்து உன்னோட மனோபாவம்.. அது உன்னோட செல்ஃப் டிசிப்ளினிலே வந்த தடுமாற்றம் “

“புரியற மாதிரியும் இருக்கு .. கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கு

சரி உடைச்சே சொல்றேன்.. நான் செய்தேன் நான் செய்தேன்.. நான் செய்யப்போறேன் அப்படினு உன்னை முன்னே நிறுத்திண்டு இருக்கே.. அந்த நான் எனும் அகங்காரம் தான் கவலையாகவும்.. துக்கமாகவும் இப்ப உனக்கு தோணுது.. ப்ராப்ளம் உன்னோட இமோஷன்.. வேறெதும் இல்லை’’

(தொடரும்)

3 comments:

Nathanjagk said...

ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில்​ பெருமகிழ்ச்சியடைகிறேன்!

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - நான் என்னும் பாத்திரம் இப்பொழுது தான் வெளி வருகிறது - அது அழியும் போது எல்லாம் நல்லவையாகவே நடக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - நான் என்னும் பாத்திரம் இப்பொழுது தான் வெளி வருகிறது - அது அழியும் போது எல்லாம் நல்லவையாகவே நடக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா