கமல்ஹாசன்,
உன்னைப் போல் ஒருவன் சினிமா பார்த்தேன்.
நிறைய பேர் படம் அப்படி இருந்தது இப்படி இருந்தது என எழுதி விமர்சனங்கள்ஓய்ந்த சந்தர்ப்பத்தில் நானும் அது மாதிரியே எழுதிக் கொண்டிருக்க நான்நிச்சயமாக உன்னைப் போல் ஒருவன் இல்லை
ஒரு படத்திலே லீகல் சிஸ்ட்த்துக்கு டிமிக்கி தந்துவிட்டு ஆஸ்திரேலியாபோய்விட்டு அங்கிருந்து போனில் போலிஸ் ஆபிசருடன் பேசுகிறார்
இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், லீகல் சிஸ்ட்த்திலே இருக்கும் ஒருபோலிஸ் ஆபீசர் சினிமாவின் கடைசி காட்சியிலே ,”’ “உங்க கையிலே இருக்கும்பாரம் ஜாஸ்தியா இருக்கும் போல இருக்கு, நான் வேணும்மினா தூக்கிட்டுவரவா” என கேட்கிறார்.
சமூகத்திலே சுத்தமான வாழ்க்கை என்பதை மேசேஜாக சொல்வதற்காகபுனையப்படும் சினிமாவிலே சுவாரசியம் சேர்ப்பதற்காக, சினிமாவின் ஹீரோசட்டத்தை தானே கையில் எடுத்துக் கொள்வதாக வரும் படங்கள் வியாபாரரீதியாக மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாக சொல்லலாம்.. என்னை விட அந்தபட்டியல் கமல்ஹாசனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் பட்டியலில் கவனம்செலுத்தாமல் இந்த கடிதத்தை தொடர்கிறேன்.
லஞ்சம் வாங்குபவர்கள், கடமையை சரியாக செய்யாதவர்கள், தீவிரவாதிகள்இப்படியானவர்கள் மீது சமூகம் கோபம் கொண்டிருப்பது மெய்தான். ஆனால்அவர்களை கையாள இப்படி சினிமாக் கணக்காக ஒரு ஹீரோ extraordinary சங்கதிகளுடன் போலிசுக்குத் தண்ணி காட்டி தண்டனை வழங்குவான் என்பதைசினிமா அளவில் மட்டுமே சாத்தியம் என்பதை சமூகம் தெரிந்து வைத்துதான்இருக்கிறது.
சினிமா என்பதை மெசேஜ் சொல்லும் யுக்தியாக, நீங்கள் வைத்திருக்கும்பட்சத்தில் சமூக அவலங்களுக்கு சினிமாவிலே ஹீரோ நடை முறையில் உள்ளலீகல் சிஸ்ட்த்திற்கு உட்பட்டே தண்டனை வாங்கித் தருவதாக, கதை அமைத்துஒரு படம் முயற்சி செய்து பாருங்களேன். என்ன கோர்ட் கேஸ் என படம் ஜவ்வடிக்குமோ என நீங்கள் கொஞ்சம் யோசிக்கலாம்.. ஆனால் அதையெல்லாம்தாண்டி சுவாரசியமாக கதை சொல்ல உங்களுக்குத் தெரிந்து இருக்கணும்னு நான் நம்புகிறேன்
இப்படி படம் செய்வதால் என்ன மேசேஜ் கிடைக்கும் எனவும் யோசித்தேன்.. சினிமாவிலே ஹீரோ ஒருவனும் இன்னும் சிலரும் மட்டுமே நல்லவர்கள்பிறரெல்லாம் சமூகப் பிரஞ்ஞையே இல்லாதவர்கள்.. குறிப்பாக அரசாங்கஅதிகாரிகள் சமூக அக்கறையே இல்லாதவர்கள் என்பது போல காட்டப்பட்டுவரும் வழக்கம் மாறிடலாம்.
இப்படி படம் எடுத்தால் எனக்கு கமர்ஷியலாக பாதிப்பு வரலாம் என நீங்கள்யோசிக்கலாம்.. இப்படி ரிஸ்க் எடுப்பதில் உன்னைப் போல் ஒருவன் இல்லையேகமல்.. அதனால் தான் இதை உங்களிடம் சொல்கிறேன்
இப்படி செய்தால் மட்டுமே நீங்கள் சொல்லும் moral anger சரியாகப் பொருந்திவரலாம்.. இல்லேன்னா anger மட்டும் இருக்கும். தான் மாரல் இருக்காது

7 comments:
பொதுவாக சினிமா என்பது சட்டதிட்டங்களுக்கு அந்தந்த நாடுகளில் உட்பட்டது என்றாலும், சட்டங்களிலும் அதன் நடைமுறைகளில் ஏற்படும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ரசனை என்பது வேறு நடைமுறையில் ரசிகன் நடந்துகொள்ளும் முறை வேறு. நாம் இன்னும் மேற்கத்திய மொழி உடை உணவு நடைமுறை ஏன் மதத்தை கூட பின்பற்றுவதை பெருமையாக நினைக்கிறோம் அவர்களின் சினிமா போல இதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே? அழிப்பதாக இருந்தால் மிச்சம் எதற்கு?
அன்பின் மௌளி
அருமையான மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கப்பட்ட ஒரு விமர்சனம். உண்மை - புரிகிறது.
ஆனால் இது மாதிரி எதிர்மறையான சிந்தனைகளினால் தான் படம் ஓடும்
என்ன செய்வது
நல்வாழ்த்துகள் மௌளி
ஏம்பா உங்களுக்கு கமல் படம் எடுத்தா மட்டும் இவ்ளோ வெறி ..... ஏன் ரஜினியோட சிவாஜில இல்லாத அபதங்களா? ஒரு மனுஷன் கொஞ்சம் வித்தியாசமா முயற்சி பண்ணுனா பாராட்டுங்க.. இல்லனா அமைதியாவாது இருங்க... உங்களுக்கு புடிச்ச மசாலா உருண்டைகளை பாத்துகிட்டு.....
வீணா அவர ஏன் திட்டுறீங்க? இப்டி வித்தியாசமா எந்த முயற்சியும் செய்யாம இருக்குற ரஜினிய திட்டுங்க? முயற்சிகள் தப்பா இருக்கலாம் ஆனா முயற்சிக்காமலே இருக்கலாமா?
Respected Mowli sir,
You may be correct from one view. There is an another view,If you have seen the Guru(hindi) film, you can think from that perspective, At the climax he says that at every era or a time of period there is a man who fights against law for Dharma. he also says the Gandhi ji also a Criminal(law breaker) when English men rules us. Now you may say that Law breaker stories are not help moral. If you born in Iraq are Pakistan where terrorism is a daily activity you may welcome the story.(Some time our Dharma depends of surroundings (Environment).ஆனால்அவர்களை கையாள இப்படி சினிமாக் கணக்காக ஒரு ஹீரோ extraordinary சங்கதிகளுடன் போலிசுக்குத் தண்ணி காட்டி தண்டனை வழங்குவான் என்பதைசினிமா அளவில் மட்டுமே சாத்தியம் என்பதை சமூகம் தெரிந்து வைத்துதான்இருக்கிறது.
Once upon a time Bhagath singh and Vanginathan are Heros according to me . This story may tell new type of or Future heros Charecteristics...
நீங்க படத்தை சரியா பாக்கலியோன்னு தோணுது (a tangent approach to invisible nodes..?)
திவிஸிடியில் பார்த்திருப்பீர்களேயானால்.. ஒரு அன்பிற்காக உங்களுக்கு லீகல் சிஸ்டத்தை உரைக்கக் கடமைப் பட்டவனாகிறேன்.
ஜெகநாதன்
திரைப்படத்தை சென்னையில் ப்ரார்த்தனா ட்ரைவ் இன் திரையரங்கில் பார்த்தேன்
மெளளீ,
மறுஉருவாக்க வகை படைப்பைப் பற்றி விமர்சிக்கும் போது மூலப்பிரதியுடனான ஒப்பீடுகளே முக்கியம்.
உபோஒ-னின் கனம், சாமார்த்தியம், சாத்தியங்கள் Wednesday-வுடனான ஒப்பீட்டின் மூலம் அறிந்து கொள்ளப் படவேண்டியது என்பதே என் கருத்து.
Post a Comment