Tuesday 27 July 2010

நல்லதோர் வீணை


அழகர் கோவில்- குடும்ப சகிதம் சென்றாலும் கோவிலுக்குள் செல்லவில்லை. நல்லதாக ஆயிற்று. ஆலயத்தின் வெளியே வந்து நிற்கும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கார்கள் வரும் வழியிலிருந்து திடீரென உதயமாகி முண்டாசு நடந்து வருவதைப் பார்த்தேன். வழியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையுடன் பேசுவதற்காக உட்கார்ந்து கொண்டான்.

நான் விரைந்து சென்று அவனையடைந்து பக்கத்தில் நின்றேன். உட்கார்ந்த நிலையிலிருந்தே என்னை நிமிர்ந்து பார்த்தான்

"நீர் இங்கு தான் இருப்பீர் என யூகித்தே வந்தேன்"


" என்னை நீங்கள் தேடினீர்களா " .. நிஜமாகவே எனக்கு ஆச்சர்யம்


"உமக்கு அதில் என்ன சந்தேகம். நீர் பொழுது சாய்ந்து பொழுது விடிந்தால் என்னைத் தேடிக் கொண்டே இருக்கின்றீர்"


எனக்கு சிரிப்பு வந்துவிட்டது ..


"என்ன ஸ்வாமி. இப்படி நகைக்கின்றீர். நாம் இரண்டு தரம் சந்தித்திருகின்றோம். அப்போதெல்லாம் உம்மைத் தேடி நான் வந்தததாக தோன்றும். ஆனால் அகத்தளவிலே நீர் என்னைத் தேடியதால் நான் வந்தேன். நான் சரியாகத்தான் சொல்கின்றேனா"


"நீங்கள் சொல்வதில் என்றைக்குமே பிசகிருக்காது என்பதில் எனக்கு நம்பிக்கை "


"உதட்டளவில் இருக்கிறதோ உங்கள் நம்பிக்கை" என கண் சிமிட்டினான் முண்டாசு


" உங்களிடம் மறைக்க முடியுமா .. எனது சந்தேகம் உங்களைக் குறித்தல்ல. அந்தப் பாட்டில் என்ன சொல்ல வருகின்றீர் என தெளிவு செய்து கொள்ள ரொம்ப நாளாக ஆசை"


"நீர் பாடலைச் சொல்லும் .. அல்ல அல்ல .. பாடியே காண்பியும் "

நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி - எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்வல்லமை தாராயோபட்ட - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கேசொல்லடி சிவசக்தி - நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ


விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்நசையறு மனம் கேட்டேன் - நித்தம்நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன்


தசையினைத் தீச்சுடினும் - சிவசக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்அசைவுறு மதி கேட்டேன்


இவைஅருள்வதில் உனக்கேதும் தடையுளதோ

"என்ன உமது ஐயம்"

"உங்களுக்கு சரியானதொரு அங்கீகாரம் கிட்டலைன்னு ஒரு வருத்தம் தெரியறது பாட்டிலே"

"எப்படி இவ்வாறு சொல்கின்றீர் என அறியலாமா ?"

"நலம் கெட புழுதியில் ... சுடர் மிகும் அறிவு .. என்பதாக தாக்குதல் உளதே"

"பராசக்தி !!! இப்படியுமா நினைப்பார் "

"நீங்கள் விளக்கம் சொல்லிவிட்டால் எனக்கு மனசு அமைதியாகும் "

"ஒரு பெரும் முயற்சியில் இருப்பவனுக்கு அது குறித்த அறிவு மட்டும் போதுமா இல்லை அதை செயலாக்க திடமும் மனவுறுதியும் வேண்டுமா "

"இரண்டும் தான்"

"அறிவைக் கொடுத்த சரஸ்வதியிடம் திடமும் மனவுறுதியும் கேட்டுப் பாடியிருக்கின்றேன்"

நான் யுக புருஷனாய் மதிக்கும் அவனை நமஸ்கரித்தேன்

"என் பரி பூர்ண ஆசிர்வாதங்கள். அதோ உமது குடும்பத்தார் வந்துவிட்டனர்"

காற்றிலே கலந்தான்

7 comments:

cheena (சீனா) said...

அன்பின் சந்திரமௌளீஸ்வரன்

புதியதோர் விளக்கம் அருமை - எழுதுபவனின் சிந்தனை - படிப்பவன் ஒவ்வொருவனின் சிந்தனையிலும் இருந்து வேறுபடும். இது இயல்பு.

பாரதியின் சிந்தனையை - சிந்தித்து ஒரு இடுகையாக இட்டமை நன்று -

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Geetha Sambasivam said...

நல்ல வளமான கற்பனைப் பதிவு. நன்றி. பாரதியின் கவிதைகளின் தாக்கத்தின் வீச்சு பலரிடமும் இன்னும், இன்னும், இன்னும் என வந்து கொண்டே இருக்கும். அதான் இறவா மனிதன் என்று பெயரோ?

pushparag60 said...

"அறிவைக் கொடுத்த சரஸ்வதியிடம் திடமும் மனவுறுதியும் கேட்டுப் பாடியிருக்கின்றேன்"

மாறுபட்ட கோணத்திதலருநது உதித்த
இந்த சிந்தனை சிந்திக்கவைக்கிரது.

அன்புடன் - ராகவன்

Unknown said...

சிந்தனை நன்று!
ஆனால் முண்டாசு கட்டியவர் வரும்போது அவர் பாரதி என்று தெரியாது,(தலைப்பும் ஓவியமும் இருந்தாலும்!) ஆகவே அவரை நீங்கள் ஒருமையில் விளிப்பது முண்டாசு கட்டுபவர்களை ஒருமையில் விளிக்கலாம் என்பதுபோல தோற்றத்தைத் தருகிறது.
தாங்கள் முன்பு எழுதிய எழுத்துருவும் தற்போது கையாளும் எழுத்துருவும் வெவ்வேறானவையோ? ஏனென்றால் இக்கட்டுரையில் எழுத்துக்கள் சிதைந்து தெரிகின்றன!

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

திரு சீனா,திருமதி சாம்பசிவம், திரு இராகவன் நன்றி

அன்பின் ஷம்பு

எழுத்துருவில் மாற்றமில்லையே. முண்டாசு கவிஞனை ஒருமையில் அழைப்பது எனக்கும் அவனுக்கும் உண்டான இணக்கத்தை காண்பிப்பது

பத்மநாபன் said...

முண்டாசு கவிஞனின் படம் மிக அருமை. இம்மாதிரி படத்தை முதன்முறையாக பார்க்கிறேன். அவனது கவிகளை போலவே கம்பிரமாக இருந்தது. பாரதியின் கவிகளை நித்தம் படிப்பவர்களிடம் உடனே இணங்கி உரிமை தோழன் ஆக்கிவிடுகிறான்.

// விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்நசையறு மனம் கேட்டேன் - நித்தம்நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் // உயிர்ப்பான பாடல் மெய் சிலிர்க்க வைத்தது.

Aathira mullai said...

விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன். அந்த வரிகளை வேறு மாதிரி கூறுவாரும் உளர். ஆனா இக்கவிதையில் ஒவ்வொரு சொல்லும் அழுத்தமானது. தங்களின் கோணம் மிக அருமை.