Sunday, 14 November 2010

திருவள்ளுவர் 1(மீண்டும் சுஜாதா‍)


"சார் அது ஒன்னுமில்லை.. நீங்க எழுதினதுக்கும் இப்ப பூமில தமிழ்ல மத்தவங்க எழுதறதுக்கும் என்ன வித்தியாசம்".

'சிம்பிள் அது நான் எழுதினது. அது அவங்க எழுதினது"..

"அதில்லை சார்.. நீங்க ஒரு பெரிய ட்ரன்ட் செட்டர்.. உங்க மாதிரி வரணும்னு பலர் ஆசைப் படறாங்க அதனாலே கேட்டேன்"

"என்னை ஒரு பெஞ்ச் மார்க் ரேஞ்சுக்கு நான் என்னிக்குமே நினைச்சுன்டது கிடையாது.. நான் எழுதினதை நானே இவாலுவேட் பண்ணி நான் இத்தனை எழுதிருக்கேன் .. இதுல இத்தனை செறிவு இருந்தது .. இருக்கு. அப்படினு சொல்றதுக்கு எனக்கு தகுதியும் ஸ்டாண்டும் இருந்ததா நினைச்சுன்டதே இல்லை. எனக்கு நல்ல பாப்புலாரிட்டி இருந்ததுனு தெரியும்.. அதனாலே நான் யாரைப் பத்தி ஒரு வரி எழுதினாலும் அவங்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம்.. அவர்கள் அதை ஒரு நல்ல ஐடென்டிபிகேஷனாக எடுத்துன்டாங்க.. நான் படிப்பேன் நல்லாருந்தா ஒரு வரி எழுதுவேன்னு ஆசைப்ப்பட்டு நிறைய பேர் எனக்கு பொஸ்தகம் அனுப்புவாங்க‌

நானு படிச்சுட்டு பிடிச்சிருந்தா.. நல்லாருக்குனு ரென்டு வரி சொல்லுவேன். பிடிக்கலேன்னா ஐ வில் கீப் மை ஒப்பினியன் வித் மி.. நான் யாரையும் இவர் சரியா எழுதறதில்லைனு சொன்னதா நினைவில்லை.. அப்படி சொல்லிருந்தா நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.. பொதுவாக ஒன்னு சொல்லலாம், தமிழ் இலக்கியம், இன்டியன் பிலாசபி படிக்க ஆரம்பிச்சாலே காதுகிட்ட கொஞ்சம் ஜிவ்வுனு இருக்கும் .. நமக்கு எல்லாமே தெரிஞ்சுடுத்துனு ஒருமாதிரி ஆய்டும்.. இது உலகத்திலே வேற யாருக்குமே தெரியலேன்னு ஒரு மாதிரி அகங்காரமான மோகம் வந்துடும்.. ஆனால் இதெல்லாம் மேம்போக்கா எனக்கு தெரிஞ்சிருக்குனு உனக்கு தெரியலேன்னு காட்டிக்க படிக்கிறவங்ககிட்ட இருக்கும்.. இந்தியன் பிலாசபி பத்தி இராதாகிருஷ்ணனும்.. நம்ப காஞ்சி ஸ்வாமிகளும் தெரிஞ்சி வச்சின்டு இருந்ததைவிட இப்ப அது பத்தி மாஞ்சு மாஞ்சு எழுதறவங்களுக்கு தெரியும்னு சொல்ல முடியாது.. பரமாச்சார்யாளும் இராதகிருஷ்ணனும் இப்படி ஜிவ்வுனு காத்துல மிதக்கலை"

அப்போது அவர்களுக்கு கைட் போல நியமிக்கப்பட்டவர் தனது ஜிப்பா பாக்கெட்டில் சப்தமிட்ட ஒரு கருவியை எடுத்து அதில் தெரிந்த செய்தியைப் படித்தார்..

" ரங்கராஜன்.. உங்களது முதல் மேலுலக சந்திப்பு இன்னும் ஒரு மணி நேரத்தில்.. அடுத்து இருக்கும் வசந்த மண்டபத்தில்.. நீங்கள் சந்திக்க இருப்பது திருவள்ளுவரை"

சுஜாதா அவரை நோக்கி நட்புடன் புன்னகைத்தார்..

" ஓ வள்ளுவரா எனக்கு குறள்ல நிறைய சந்தேகம்.. அதும் தர்ட் பார்ட்லே..."

கணேஷ் வசந்தின் முதுகில் "பளார்" என ஒன்று வைத்தான்

(தொடரும்)

2 comments:

BalHanuman said...

>>இந்தியன் பிலாசபி பத்தி இராதாகிருஷ்ணனும்.. நம்ப காஞ்சி ஸ்வாமிகளும் தெரிஞ்சி வச்சின்டு இருந்ததைவிட இப்ப அது பத்தி மாஞ்சு மாஞ்சு எழுதறவங்களுக்கு தெரியும்னு சொல்ல முடியாது.. பரமாச்சார்யாளும் இராதாகிருஷ்ணனும் இப்படி ஜிவ்வுனு காத்துல மிதக்கலை"

Very well said !!

cheena (சீனா) said...

2008ல் எழுதிய சுஜாதா ப்ற்றிய அத்தனை பதிவுகளுக்கும் பதில் எழுதி இருக்கிறேன் ஆனால் இது எப்படி விட்டுப் போனதென்று தெரியவிலை. பரவாய் இல்லை இப்பொழுதாவது படித்தேனே ! வாழ்க வளமுடன் நட்புடன் சீனா