பாடப் புத்தகங்கள் தாண்டி மற்ற புத்தகங்களை எப்போது படிக்க ஆரம்பித்தேன் என என் நினைவுகளில் தேடினால் கிடைக்கவில்லை.. அரசாங்கம் சார்த்த வேலையில் இருக்கும் போது ஒரு அரசியல் தலைவர் எனக்கு பரிசாக வழங்கிய சுபாஷ் சந்திரபோஸ் குறித்த புத்தகம்.. பாரதிய வித்யா பவனின் ,"பவான்ஸ் ஜர்னல்" என என் ஆதி நினைவுகளில் இரண்டு புத்தகங்களின் நினைவுகள் முன் வந்தன.. "என்னைத்தான் நீ முதலில் படிச்சே" என இரண்டும் சண்டை பிடிப்பதாக ஒரு காட்சி அமைத்துப் பார்த்தேன்.
சில்வர் டங் சீனிவாச சாஸ்திரி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். I am not a man of one book or of a few Select Books என
அது போலத்தான் நானும்..கிடைத்ததை வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பதிலும் புத்தகங்களை தேடிக் கொண்டே இருப்பதிலும் எனக்கு ஒரு போதும் சலிப்பு வருவதில்லை..
நண்பர்கள் வட்டத்தையும் அப்படியே அமைத்துக் கொள்வதில் கவனம் செய்கிறேன்.. புத்தகப் பிரியர் எனில முதல் வரிசை .
நான் சோஷியல் நெட்வொர்க்கிங்கில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை ஆயினும் இப்போது சமீபமாக ஃபேஸ் புக். டிவிட்டர் என சில நிமிடங்கள் செலவு செய்கிறேன்.. இந்த தளங்களை நல்ல புத்தகங்களை குறித்த தகவல் பரிமாறும் இடமாக உபயோகிக்கலாம் என ஓர் ஐடியாவில்.. இந்த பக்கம் பக்கமாய் தொடர்
இங்கே நான் படித்த படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள். கேட்ட நல்ல சங்கீதம் இப்படி சொல்லலாம் என நினைத்து தொடர்கிறேன்.
பக்கம் பக்கமாய் என்றால் பேஜ் பேஜாக எனவும் அருகாமை எனவும் அர்த்தம் வருகிறதே என நண்பர் சொன்னார்.. ரெண்டும் ஒன்னு தான்னு சொல்லிட்டேன்.
முதல் அத்தியாயப் படம் நான் விரும்பி படித்த சிலரின் படத்துடன் தொடங்கிவிட்டால் ஒத்த சிந்தனை உள்ளவர் பக்கமாய் வருவர்.. அல்லாதார் இந்த பக்கமே வரமாட்டார் இரண்டுமே உனக்கு நல்லது என அந்த நண்பரின் ஐடியா
(இந்தப் பக்கம் வந்தவர் என் பக்கம்.. இந்தப் பக்கம் வராதவர் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது)
2 comments:
அன்புள்ள மௌளீ,
இந்தப் பக்கம் வந்து விட்டேன். நான் உங்கள் பக்கம் தான் :-)
நானும் உங்க பக்கம்தான்
Post a Comment