Friday 8 July 2011

அன்பின் மன்மோகன் சிங்


நிறைய சிரமப்படறீங்க போலிருக்கு. ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி, அவர்கள் அழிச்சாட்டியம் செய்யும் போது அவர்கள் கட்சித்

தலைமையிடம் பேசி சம்மதிக்க வைத்து, ஒரு அமைச்சரிடம் ராஜினாமா கடிதம் வாங்குவதற்குள் எத்தனை சிரமம் பாருங்கள்.

பற்றாக்குறைக்கு இந்த ராஜினாமா பட்டியலில் இவரைச் சேர்க்க வேண்டும் அவரை ஏன் சேர்க்கவில்லை எனக் கேள்விகள் வேறு.

என்னதான் செய்வதென்று குழப்பமாகத்தான் இருக்கும் உங்களுக்கு. ஆனால் மிக சிம்பிளாக ஒரு சொல்யூஷன் இருக்கிறது. அதுவும்

நீங்கள் வகித்துக் கொண்டிருக்கும் பிரதமர் பொறுப்பிலே ( வார்த்தையைக் கவனிக்க பிரதமர் ப்தவி என நான் சொல்லவில்லை பிரதமர்

பொறுப்பிலே !!!) இருந்த லால் பஹதூர் சாஸ்திரியார் செய்து காட்டியது தான். அவரைக் குறித்து தெரியும் தானே.. பின்னே தெரியாமல்

இருக்குமா. அவர் இருந்த ஆபிசுக்குத் தானே தினமும் நீங்களும் போய் வருகின்றீர்கள். அதுவுமில்லாமல் ஆகஸ்ட் 15 செங்கோட்டையில்

கொடியேற்றப் போகும் முன் சாஸ்திரியாரின் நினைவிடத்துக்கும் சென்று விட்டு தானே கொடியேற்றுகின்றீர்கள்

இந்த சாஸ்திரியாகப்பட்டவர் 1951 முதல் 1956 வரை மத்திய சர்க்காரில் ரயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது ஆந்திராவிலே மெஹபூப் நகரில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்தனர். சாஸ்திரி தார்மீகப் பொறுப்பேற்று இராஜினாமா செய்தார். அதனை நேரு ஏற்கவில்லை. பின்னர் அரியலூர் ரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். சாஸ்திரியார் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். நேரு இதனை ஏற்றுக் கொண்டார். சாஸ்திரியாரின் பொறுப்புணர்ச்சி அத்தனை அளவுக்கு இருந்தது. நீங்களும் அதே நாற்காலியில் இருக்கின்றவராயிற்றே எனச் சொல்லி வைத்தேன்.

வழக்கமாக என் நண்பர்கள் சர்தார்ஜி ஜோக்குகளை நிறையச் சொல்வார்கள் , ஆனால் சர்த்தார்ஜிகள் உழைப்பாளிகள், உழைப்பினை நம்பி வாழ்பவர்கள் பிச்சை எடுக்கவே மாட்டார்கள் எனச் சொல்லி அந்த சர்தார்ஜி ஜோக் சொன்னவர்களை நான் வாயை அடைப்பேன். இப்போதெல்லாம் அப்படி சொல்ல முடியும் என தோன்றவில்லை

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - ஆதங்கம் புரிகிறது - என்ன் செய்வது ...... மன்மோகன் சிங்கைத் திட்ட வேண்டுமானல் திட்டிக் கொள்ளுங்கள் = பாவம் சர்தார்ஜிகள் - ஜோக்கு சொல்பவர்களை வாயடைப்பதை நிப்பாட்டாதீர்கள். நல்வாழ்த்துகள் --நட்புடன் சீனா

VG said...

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ...

Venkatagiri said...

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ...