Uniform Civil Code-9
இந்திய அரசியல சாசனச் சட்டத்தின் தந்தை எனும் தனிப்பட்ட பெருமையினையும் அடைமொழியினையும் அம்பேத்காருக்கு மட்டும் வழங்கி, நாடு மகிழ்கிறது
ஆயினும் அரசியல் சாசனம் உருவானதில் அவருக்கு சற்றும் குறையாத பங்காற்றிய பலரின் பெயர்கள் அம்பேத்காரின் புகழ் வெளிச்சத்தின் காரணமாக அத்துனை அதிகம் தெரியாமலே போயின.
அப்படி ஒருவரே பெனகல் நரசிங் ராவ்.
நரசிங் ராவ், இந்திய அரசியல் சாசனச் சட்டம் உருவாக ஆற்றிய பங்களிப்பினை, அரசியல் சாசன சபையின் விவாதங்களின் வழி, சற்று காண்போமா
அன்றைக்கு திங்கட் கிழமை, டிசம்பர் 9 , 1946ம் வருஷம்.. புதுடில்லியில், நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில், மைய மண்டபத்தில் இந்திய அரசியல் சாசன சபையின் முதல் கூட்டம்.. மிகப் பிரசித்தியான சரித்திர நிகழ்வு.
சபையின் தற்காலிகத் தலைவராக, இருந்து வழிகாட்ட சச்சிதானந்த சின்ஹாவினை அழைத்தார், பெரியவர் ஆச்சார்ய க்ருபளானி அவர்கள் .
சபையின் முதல் நடவடிக்கைகள் தொடங்கின.. அமெரிக்க வெளியுறவுத் துறை, சீனாவின் தூதரகம் அனுப்பியிருந்த வாழ்த்து தந்தி வாசகங்களை அவைக்கு வாசித்துக் காட்டினார் சச்சிதானந்த சின்ஹா
அதன் பின்பு அவை நடவடிக்கைகள் தொடர்ந்தன.. இந்தியாவின் அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கம் எனும் சரித்திர நிகழ்வு , ஒரு சர்ச்சையுடன் தொடங்கியதென்பதை அறிந்து கொள்வதில் பலருக்கு ஆச்சரியமிருக்கும்
ப்ரிடிஷ் பலுச்சிஸ்தானம் ப்ரதேசத்தின் பிரதிநிதியாக மொகமத் கான் ஜோஹாசியைத் தேர்வு செய்தது செல்லாது என முறையீடு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார் கான் அப்துஸ் சம்த் கான். அதனை அவையின் கவனத்துக்கு கொண்டு வந்தார், தற்காலிகத் தலைவர் சின்ஹா,
பின்னர் தலைவரின் உரை .. இந்திய அரசியல் சாசன சபையின் முதல் உரை என்பதாகக் கூட சொல்லலாம்.. ஆனால் சச்சிதானந்த சின்ஹா தனது உரையின் வடிவத்தினை பெனகல் நரசிங்க ராவ் தன் சார்பாக வாசிப்பார் என்று சொல்லிவிட்டார்
பாரிஸ்டரும், சிறந்த இலக்கியவாதியுமான சச்சிதானந்த சின்ஹாவின் உரை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை உருவாக்கும் சரித்திர நிகழ்வுகளின் தொடக்க உரையினை வாசித்தவர் பெனகல் நரசிங் ராவ்
ஆமாம் யார் இந்த பெனகல் நரசிங் ராவ்..
(தொடரும்)
2 comments:
அன்பின் மௌளி - பல அரிய தகவல்கள் - யார் இந்த பெனகல் நரசிங்க ராவ் ? அடுத்த பகுதி எப்பொழுது ? - விரைவில் எதிர் பார்க்கலாமா ? நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா
அன்பின் மௌளி - பல அரிய தகவல்கள் - யார் இந்த பெனகல் நரசிங்க ராவ் ? அடுத்த பகுதி எப்பொழுது ? - விரைவில் எதிர் பார்க்கலாமா ? நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா
Post a Comment