Monday, 20 August 2012

Uniform Civil Code-8

Uniform Civil Code-8


இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் வரைவு, அரசியல் சாசன நிர்ணய சபையில் விவாதங்களுக்காகவும், ஒப்புதலுக்காகவும் முன்னிறுத்தப்பட்டு , பொது சிவில் சட்டத்தின் அவசியம் , அதனை மறுப்பவர்களின் ஆதங்கம், மறுப்பதற்கான காரணம் இவற்றினை மிக சுருக்கமாக நாம் சென்ற அத்தியாயங்களில் கவனித்தோம்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பகுதி 3 ஆகிய அடிப்படை உரிமைகள் ( Fundamental Rights) , பகுதி 4 ஆகிய Directive Principles of State Policy (அரசின் கொள்கை நிர்ணயத்துக்கான வழிகாட்டி) இவை இரண்டுக்கும் இடையேயான மிக முக்கியமான வேறுபாடு, பகுதி மூன்றானது உறுதி செய்யப்பட்ட, நீதி மன்றத்தின் வழியாக உரிமையாக கோரிப் பெற உத்திரவாதம் அளிக்கப்பட்ட ஷரத்துகள்.. ஆயின் பகுதி நான்கானது அப்படியானது அல்ல.

இதனாலேயே பொது சிவில் சட்டம் என்பதை ஓர் அடிப்படை உரிமை ஷரத்தாக உறுதி செய்து விட வேண்டும் என அம்பேத்கார் விரும்பினார். அவருடைய கருத்தை மிகவும் வலுவாக ஆதரித்தவர்க்ள் மஸானி, ராஜ்குமாரி அம்ரித் கௌர், ஹன்சா மேத்தா.

இந்த தொடரை வாசிக்கின்றவர்கள் இந்த மூவரைக் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

மஸானி என சுருக்கமான பெயரால் அழைக்கப்பட்ட மினோசெர் ருஸ்தும் மஸானி , லண்டனில் சட்டக் கல்வி பயின்ற பாரிஸ்டர், இந்திய அரசியல் சாசன நிர்ணய சபையின் உறுப்பினரில் ஒருவர்.. ராஜாஜி, என்.ஜி ரங்கா இருவருடன் இணைந்து ஸ்வதந்திரா கட்சியை ஸ்தாபிதம் செய்தவர்

ராஜ்குமாரி அம்ரித் கௌர்... ராஜ்குமாரி என்பது அடைமொழி.. பஞ்சாப் பிரதேசத்தின் கபூர்தலா ராஜவம்சத்தினை சேர்ந்தவர் என்பதால் அவர் ராஜகுமார். பள்ளி, கல்லூரிக் கல்வி லண்டனில் கொண்டவர். சுமார் பதினைந்து வருஷங்கள், மஹாத்மா காந்தியாரின் காரியதரிசியாக பணி புரிந்தவர். நாட்டின் விடுதலைக்குப் பின் நேருவின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பணி செய்தவர். இந்தியாவில் மத்திய மந்திரி சபையில் காபினெட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட முதல் பெண் அமைச்சர்.. All India Institute of Medical Science எனும் மிகப் பிரசித்தியான மருத்துவ அமைப்பு தொடங்கிட இவரும் ஒரு காரணம்.. சென்னையில் இயங்கும் மத்திய தொழு நோய் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட இவர் ஒரு காரணம்.

ஹன்சா ஜீவராஜ் மேத்தா. புகழ்பெற்ற மனுபாஹ்ய் மேத்தாவின் புதல்வி. பெண் உரிமைகளுக்கான போராட்டத்தில் மிக முக்கியமானவர்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை வரைவு செய்யும் குழுவின் தலைவராக அம்பேத்கார் இருந்தார்.. அந்த வரைவுக்கு குழுவுக்கு துணைக் குழுவும் இருந்தது.. அதன்றி, இந்திய அரசியல் சாசன வரைவுக்கென வெளியிலிருந்தும், நிபுணர்களின் கருத்துகளும் பெறப்பட்டு, துணைக்குழு பிரதானக் குழு இவற்றில் விவாதிக்கப்பட்டன.

இப்படியான நிபுணர்களின் பெனகல் நரசிங் ராவ் மிகவும் முக்கியமானவர்.

இந்திய அரசியல் அமைபுச் சட்டத்தின் வரைவின் முதல் வடிவத்தினைத் தந்தவர் பெனகல் நரசிங் ராவ் தான்.. அவருக்குத் துணையாக எஸ் என் முகர்ஜி..

(தொடரும்)

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - ஒரு முறை படித்து விட்டேன் - மீண்டும் படித்து, செய்திகளை உள் வாங்கி, பிறகு மறுமொழி இடுகிறேன். வருகிறேன் பிறகு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - மறுபையும் படித்தேன் - மிக முக்கியமான மூன்று பேரின் அறிமுகம் நன்று - அம்பேத்காருக்கும் - அவருடைய சிந்தனைகளுக்கும் உறுதுணையாக இருந்த இந்த மூன்று பேரினையும் இன்று எத்த்னை பேருக்குத் தெரியும் ? பெனகல் நரசிங்க் ராவ் - எஸ் என் முகர்ஜி - வரைவின் முதல் வடிவம் தந்தவர்கள் - அரிய தகவல்கள் பல தந்தமைகு நன்றி மௌளி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா