Tuesday 8 July 2008

குட்டிக் கதை-4 கோணல் புத்தி

ஒரு வேட்டைக்காரன். அவனிடம் இருந்த வேட்டை நாய் தண்ணீரின் மேல் நடக்கும். தன் நண்பன் ஒருவனிடம் இந்த நாயின் அபார சக்தியை காண்பிப்பதற்காக வேட்டைக்கு கூட்டிச் சென்றான். ஒரு குளக்கரையில் இருந்து கொண்டு அங்கே நீந்திக் கொண்டிருந்த வாத்துகளை சுட்டான்.. ஒவ்வொரு முறையும் அந்த விசித்திர நாய் தண்ணீரில் நடந்து போய் சுடப்பட்ட வாத்துகளை கவ்வி எடுத்து வந்தது.

வேட்டைக்காரன் நணபனைப் பார்த்து “எப்படி என் நாய் ”

“ஆமாம். உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே”

நீதி: சிலருக்கு எப்பவுமே கோணல் புத்தி

(ஷிவ் கேராவின் You Can Win புத்தகத்திலிருந்து)

3 comments:

மங்களூர் சிவா said...

/
“ஆமாம். உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே”

நீதி: சிலருக்கு எப்பவுமே கோணல் புத்தி
/

ஹிஹி

:))))))))

cheena (சீனா) said...

இது கோணல் புத்தி அல்ல - இயற்கையாக நாய் நீந்த வேண்டும் - அது நடக்கிறது - இயல்பிலிருந்து மாறுபடுகிறது - பாராட்ட வேண்டிய செய்தி தான் - ஆனால் ஏன் மாறுபடுகிறது - நடக்கத் தெரிந்த நாய்க்கு நீந்தத் தெரிய வில்லையா ? சிந்திக்கிறான் - அவ்வளவே

எப்பவுமே கோணல் புத்தி உள்ளவர்கள் உண்டு - இல்லை என்று சொல்ல வில்லை.