Sunday 3 July 2011

இட ஒதுக்கீடு-1

நண்பர் ஹரன்பிரசன்னா அவர்களுக்கு நன்றி சொல்லியும் அவருக்கே இந்த பதிவினை சமர்ப்பிக்கவும் செய்கின்றேன்.

பஸ்ஸில் அவர் நண்பர்களுடன் செய்து கொண்டிருக்கும் கருத்து பரிமாற்றங்களை கவனித்த பின்பு இட ஒதுக்கீடு குறித்து சிறிய அளவில்
அறிமுகம் தரலாம் என இதனை எழுதுகிறேன்

1854 ம் ஆண்டு வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளிலான ஒரு நிலை ஆணையில் காணப்பட்ட அவதானிப்பினைக் கவனிக்கலாம்
"Collectors should be careful to see that the subordinate appointments in their distric are not monopolised by members of a few influential families. Endeavour should always be made to device the principal appointments in each district among the several castes ( Board of Revenue
Proceedings dated 9-march 1854 BSO 128.2 of 1854)

ஆக இட ஒதுக்கீட்டுக்கான முதல் குரல் என இதனைக் கொள்ளலாம்; தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு என முதலில் வழி வகுத்தது நீதிக் கட்சி. தனது 1920 ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பின் 1921 ல் நீதிக் கட்சியின் தீர்மானம் அரசு பணிகளில் பிராமணர் அல்லாதாருக்கு உள்ள் இடங்கள் அதிகப்படுத்த வேண்டும் எனவும் இதனை வருவாய் துறை தவிர ஏனைய துறைகளுக்கும் விரிவு செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டு முதல் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப்பிக்கப்பட்டது (அரசாணை எண் 1071 ‍பொதுத் துறை நாள் 4‍ நவம்பர் 1927)

இந்த அரசாணையின் படி இட ஒதுக்கீடு விபரம் வருமாறு

1. பிராமணர் அல்லாதார் : 41.67 %

2. பிராமணர் : 16.67 %

3. ஆங்கிலோ இந்தியரும் கிறிஸ்துவரும் : 16.67 %

3. முகமதியர்கள் : 16.67 %

4. நசுக்கப்பட்டவர்கள் (தாழ்த்தப்பட்டவர்களும் மலைஜாதியினரும் ) 8.33 %


இந்திய விடுதலைக்குப் பின் 1947 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி ஓர் அரசாணை பிறந்தது ( அரசாணை எண் 3437 பொதுத்துறை நாள் 21 நவம்பர் 1947)

இந்துக்களில் பிராமணர் அல்லாதார் எனும் பிரிவினை முதலில் கொண்டு வந்தது இந்த ஆணை தான்

1. இந்துக்கள் பிராமணர் அல்லாதார் 42.86 %
2.பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் 14.29 %
3. பிராமணர்கள் 14.29 %
4. தாழ்த்தப்பட்டவர்கள் 14.29 %
5. ஆங்கிலோ இந்தியர்கள் / இந்திய கிறிஸ்துவர்கள் 7.14 %
6. முகமதியர்கள் 7.14 %

1950 இந்திய அரசமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த பின் அதன் அடிப்படை உரிமைகள் பிரிவில் இட ஒதுக்கீட்டுக்கான சாத்தியங்கள் இல்லாமையால் அதுவரை அமுலில் இருந்த இட ஒதுக்கீடு பழக்கம் சட்டப்படி செயல் இழந்தது . சம்பகம் துரை ராஜன் என்பவர் சென்னை இராஜதானி அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழி நின்று உரைத்த
தீர்ப்பினால் அதுவரை அமுலில் இருந்த இட ஒதுக்கீடு பழக்கம் சட்டப்படி செயல் இழந்தது

இது அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு அடிகோலியது.

அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து 15 ல் 4 என ஓர் உப பிரிவு சேர்ந்தது

Article 15(4) Nothing in this article or in clasue 2 of Article 29 shall prevent the state from making any special provision for the advancement of any socially and educationally backward class citizens or for the Scheduled caste an Scheduled Tribes

இந்த திருத்தத்திற்கு பிறகு 1951 ல் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை அரசு வெளியிட்ட ஆணை எண் 2432 நாள் 27 செப்டம்பர் 1951

இதன்படி இட ஒதுக்கீடு

1. தாழ்த்தப்பட்டவர் மலைசாதியினர் 15 %
2. பிற்படுத்தப்பட்டவர்கள் 25 %
3 பொது தொகுப்பு 60 %

1954 மொழிவாரி மாநிலப் பிரிவுக்குப் பின் இந்த விகிதம் சற்று மாற்றி அமைக்கப்பட்டது


1. தாழ்த்தப்பட்டவர் மலைசாதியினர் 16 %
2. பிற்படுத்தப்பட்டவர்கள் 25 %
3 பொது தொகுப்பு 59 %

1969 ல் சட்ட நாதன் தலைமையில் உருவான முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தனது அறிக்கையினை 1970ல் வழங்கியது .

அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு விகிதங்கள் திருத்தப்பட்டன‌;அதற்கான அரசாணை நாள் 7 ஜூன் 1971ல் வெளியானது அரசாணை எண் 695 சமூக நலத்துறை

அதன்படி

1. தாழ்த்தப்பட்டவர்கள் 18%
2.பிற்படுத்தப்பட்டவர்கள் 31 %
3. பொது தொகுதி 51 %

பிற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம் 9000க் கும் கீழே உள்ளவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு என எம். ஜி. ஆர் ஆட்சியில்

ஆணையிடப்பட்டது அரசாணை 1156 சமூக நலத் துறை நாள் 2 ஜூலை 1979. பின்னர் இதற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வரவே இது கைவிடப்பட்டது

1989 ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவரில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என உருவாக்கி அவர்களுக்கு தனியாக 20 சதவீதம் ஒதுக்கீடு

செய்யப்பட்டது அரசாணை 242 பிற்படுத்தப்பட்டோர் நலம் நாள் 28 மார்ச் 1989

இந்த ஒதுக்கீடு சதவிகிதங்களைப் பார்க்கையில் ஒன்று கண்கூடாகத் தெரியும். யாருக்காவது ஒதுக்கீடு செய்வதெனில் பிற பிரிவுகளில்

கை வைப்பதில்லை ; பொது தொகுதியைக் குறைத்து அதை குரங்கு ஆப்பத்தினைப் பிய்த்து பங்கிடுவது போல செய்தால் தீர்ந்தது

இந்த ஒதுக்கீடு சதவிகிதங்களைப் பார்க்கையில் ஒன்று கண்கூடாகத் தெரியும். யாருக்காவது ஒதுக்கீடு செய்வதெனில் பிற பிரிவுகளில் கை வைப்பதில்லை ; பொது தொகுதியைக் குறைத்து அதை குரங்கு ஆப்பத்தினைப் பிய்த்து பங்கிடுவது போல செய்தால் தீர்ந்தது

1953 ல் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் அறிக்கையினை பரிசீலித்த மத்திய அரசு சொன்னதைக் கவனிப்போம்

Government of India also consider that while the state government have discretion to choose their own criteria for defining backwardness, in the view of the government of india it would be better to apply economic tests that to go by caste

ஆனால் மண்டல் கமிஷனின் அறிக்கையில் .. But the substitution of caste by economi tests will amount to ignoring the genesis of social backwardness in the Indian society என்பதாக சொல்லியுள்ளது (Mandal Commission Report Volume 1 chapter 1 page 4)

அதிக மதிப்பெண் பெறும் உயர் சாதி மாணவன் இடம் பெறாது போவதையும் அதே சமயம் மிக குறைந்த மதிப்பெண் பெறும்

பிற்படுத்தப்பட்ட மாணவன் இடம் பெற்றே ஆக வேண்டும் என பரிந்துரைக்கும் மண்டல் கமிஷனின் வாதம் எப்படித் தெரியுமா

அதிக மதிப்பெண் பெறும் உயர் சாதிப் பையன்

அவன் நகரில் வசிக்கிறான்
அவன் பெற்றோர் பட்டதாரிகள் அதுவுமில்லாது அரசு பணியில் இருப்பவர்கள்
அதிகாலை அலாரம் வைத்து அவனை எழுப்புகிறார்கள்
எழுந்ததும் ஆவி பறக்கும் காபி தருகின்றனர்
பின்னர் நாற்காலியில் அமர்ந்து மேசையில் வைத்து மின் விளக்கு ஒளியில் படிக்கின்றான்
ஐயம் உண்டாயின் பெற்றோர் துணை செய்கின்றார்கள்
கூப்பிடும் தூரத்தில் பள்ளி
பள்ளியில் முதல் மணி அடித்த உடன் புறப்பட்டால் போதும் பள்ளிக்கு சென்றுவிடலாம்
அவன் உழுவதில்லை; ஆடு மாடுகளுக்கு தீனி வைப்பதில்லை
தனிப் பயிற்சியான டியூஷன் வேறு

ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிப் பையனைப் பாருங்கள் என கேட்கும் மண்டலை

என்ன சொல்வது. அவர் அடுக்கிய எல்லா கேள்வியும் பொருளாதாரம் சார்ந்தது தான் என அவருக்குத் தெரியாதா

மண்டல் கமிஷனின் பக்கம் பக்கமான அறிக்கையில் நல்ல ஆங்கிலம் இருக்கிறது. லாஜிக் இருக்கிறதா எனத் தேட வேண்டியிருக்கிறது.

எங்கள் பல தலைமுறைக்கும் முந்திய சந்ததியினர் அடிமைப்படுத்தப்பட்டனர் ஆகவே எங்களால் மார்க் வாங்க இயலாது. நாங்கள் குறைவாகவே மார்க் வாங்குவோம் ஆகவே எங்களுக்கு இதெல்லாம் வேண்டும் என வசதி வந்த பின்பும் கேட்டுக் கொண்டே இருப்பவர்கள் இருக்கும் வரை குரங்கு ஆப்பம் பிய்த்து எச்சல் ஆப்பத்தை பங்களித்துக் கொண்டே தான் இருக்கும்

(உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டம் இடுபவர்கள் கவனத்திற்கு.. ஆராய்ச்சி, சர்வே, நீதி மன்ற விவாதங்கள், புள்ளி விபரங்கள் என இன்னும் விரிவான் முறையில் தொடர எனக்கு வாய்ப்பளித்தவராவீர்கள்., )


11 comments:

Anonymous said...

இதெல்லாம் நம் இணைய சமூக நீதி காக்கும் வீரர்களுக்குத் தெரியாது. பிராமணர்கள் எல்லோரும் கோடீஸ்வரர்கள் (!!!!!) அவங்க யாரும் படிக்கக்கூடாது படிச்சாலும் இந்தியாவில் வேலை செய்யக் கூடாது அதான் அவங்க எண்ணம்,. உருப்படாத பசங்க. ஜாதியை ஒழிக்கணும்னு சொல்லுவாங்க. ஆனால் பிராமணர்களை திட்டுவார்கள். பேசினா பிரச்சனை தீராது கண்டுக்காம விடுங்க. கொஞ்சம் வருஷம் கத்திட்டு ஓஞ்சு போய்டுங்க

Venkat said...

Sir,
Thank you for the research and for enlighening us.
" எச்சல் ஆப்பத்தை" - strong words?

Ganpat said...

தீண்டாமை என்பது ஒரு மேல் சாதி(எனக்கருதப்படுகின்ற) மருத்துவர் ஒரு கீழ் சாதி(எனக்கருதப்படுகின்ற) நோயாளிக்கு மருத்துவம் பார்க்க மறுப்பது.இதற்கு நாம் கண்டுபிடித்த தீர்வு,கீழ் சாதியிலும் இடஒதுக்கீடு மூலம் மருத்துவர்களை உருவாக்குவது.
அதாவது திறமையை பின்தள்ளி சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது.
நான் கீழ் சாதி என்றால் இதை வரவேறகப்போகிறேன்.மேல் சாதி என்றால் எதிர்க்கப்போகிறேன்.
சுருங்கச்சொன்னால் இது அதிகபட்ச மக்களுக்கு நனமையாகவும் குறைந்தபட்ச மக்களுக்கு தீங்காகவும் உள்ளது.எனவே இதில் மாற்றம் எதுவும் வர வாய்ப்பில்லை.ஏனென்றால் democracy is just a game of numbers

Prince said...

nice research..! Thanks for the share..!

Amirthanandan said...

இட ஒதுக்கீடு என்பதே தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அசிங்கப் படுத்துவதாகவே உணர்கிறேன். அவர்களை மற்ற சமூகத்திற்குச் சமமானவர்கள் இல்லை என்று அரசாங்கமே முத்திரை குத்துகிறது.

மேலும் இட ஒதுக்கீடை விரும்புவோர்/அளிப்போர்/பெறுவோர் அனைவரும், மெண்டெலீஃப், டார்வின் போன்றோரகளை முட்டாள்கள் என்பது போலுள்ளது.
எல்லாத் தொழிலும் எல்லோருக்கும் பொது எனத் திறந்து விட்டபின், சாதி அடைப்படையில் தடையொன்றும் இருப்பதாகப் படவில்லை. தொழிலை நேர்த்தியாகக் கற்றுக் கொண்டு செயலாற்றினால், உழுவதில் பார்ப்பனரும், வேதம் ஓதுவதில் பள்ளரும் முதல்நிலை பெறுவர் என்பதில் ஐயமொன்றும் இல்லை.

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அலச்சி ஆராய்ந்து அள்லீத் தெளித்து விட்ட்டீர்கள் - இட ஒதுக்கீட்டின் மூலத்தினை. கடைசியில் இன்னும் தேவை எனில் அனைத்துத் தரவுகளூம் அள்ளித் தரப்படும் என் குறிப்பு வேறு. நல்லதொரு தகவல் களஞ்சியம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Anonymous said...

இட ஒதுக்கீடு புள்ளிவிவரம் தந்து அசத்திவிட்டீர்கள்!

idleman said...

அருமையான பதிவு!!!

idleman said...

அருமையான பதிவு!! நன்றி!!

vedamgopal said...

An over view of Reservation

1. In most of the states except for Brahmin community other forward communities has got some sub groups identified as OBC/MBC. These forward community people gets bogus certificate of the sub groups and avails the reservation benefit. Similar in case of OBC/MBC to SC/ST

2. The Government should pass a law with a time limit stating whoever got the bogus certificate and availed the reservation benefit should announce the same. Those people are warned with a nominal fine and left out. Beyond that time frame if any one caught with bogus certificate they should be severely punished.

3. To-day’s politicians are all mostly bogus certificate holders and they only raise their voice for more reservation and also oppose the creamy layer concept.

4. The families of (OBC/SC/ST) having got the reservation benefit for all the family members once and there is no justification in extending the same to their future generation. Hence Government should publish those family names in the Gazette time to time so that the benefit can be extended to other needy persons.

5. Except in Hindu religion cast division is not there in other religion and our constitution also clearly says that cast base reservation is not applicable to other religion. But most of the converts are having two certificates with a Hindu name and availing the reservation benefit in Hindu religion and also in minority institution. No one is bothered to verify the same.

6. Suppose a forward community male or female marries a lower cast person their children should be identified only as forward community.

vedamgopal said...

7. Now the Government has introduced creamy layer concept in higher education. Initially for this purpose the annual income was fixed at 2.5 lacs. But the bogus certificate holding politician opposed this limit and now the same was revised to 4.5 lacs. That means those who are earning an annual income of less than 4.5 lacs are considered to be poor. Then why the Government is taxing the salaried people who are earning an annual income of more than 1.5 lacs per annum. The Government should increase the tax ceiling to 4.5 lacs and establish social justice.

8. It is Justifiable giving reservation in education and there is no logic in extending the same in employment also. It is not stopped at this stage reservation is still extended in promotion also.

9. Backward people are allowed to apply in general quota as well as in reserved quota. If he gets a seat in general quota one number is reduced in general quota for the forward community and there is no reduction in backward quota at the same time but the left out number is carried over to the next year. Is it OK?

10. Upon introduction of reservation in educational institution every body forgot character building along with the education. Thus a generation of educated character less people has been created and we are now witnessing the tragic end of the same to-day in all the administrative mechanism. Without bribing you can not do any work from burial ground to parliament. State assembly & Parliament is functioning like a fish market. Doctors are engaging in long strike without bothering about the valuable human life. Very often Lawyers are breaking the law and behave like a street rowdy.

11. A trend is set that every community wants to identify them as backward.

12. Hence cast base reservations are to be abolished and creamy layer system only helps the needy people. If required we can have 2 or 3 income limits for reservations. This alone will eradicate the cast barrier on the long run.

13. Swami Vivekananda said “True equality has never been and never can be on the earth. How can we all be equal here? This is impossible kind of equality implies total death. Inequality is the basis of creation. At the same time the forces struggling to obtain equality are as much a necessity of creation as those which destroy it” That is why the Supreme Court restricted the reservation to 50% maximum. Providing reservation beyond this only leads to pushing the forward classes to backwardness.