Thursday 28 July 2011

இன்றைக்கு என்ன ஆனது 28-ஜூலை-2011

டின்னருக்கு போய் வந்து உறங்கி காலையில் சீக்கிரமே துயில் கலைந்தது. நேற்று கார்த்தி மூலம் வந்த Woody Allen Complete Prose படிக்கலாம் எனப் பிரித்தேன். தபால் வழியே செஸ் ஆடும் இரண்டு பேரின் கடிதங்கள் கண்ணில் பட்டது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்ன இப்படி சிரிச்சா நாங்க எப்படி தூங்குவது என மனைவியும் மகளும் புகார் செய்ததால் சரி சிரிக்காமல் சீரியசாக ஒன்றைப் படிக்கலாம் என எனது பழைய கலெக்‌ஷனில் இருந்து குடுமியான்மலை சங்கரன் என்பார் எழுதிய காஞ்சிமடத்து ஆச்சாரியார்கள் வரலாறு என்ற திட்டும் நூலை எடுத்து வைத்துக் கொண்டேன். இந்த நூலைப் பலதரம் வாசித்திருக்கிறேன். இது தொடர்பான வேறு சில நூல்களும் அன்பர்கள் உதவியால் கிடைத்து வாசித்திருக்கிறேன். எல்லாம் திட்டு தான். வசை காந்தம் என யாராவது இன்றைக்கு சொற்ப திட்டு வாங்கினதற்கே பட்டம் கொடுத்துக் கொண்டு இருப்பதைக் கவனித்தால் அவர்களுக்கு இந்தப் புத்தகங்களை அனுப்பி வைக்கலாம் எனத் தோன்றும். இந்த திட்டுகளில் மஹா ஹாஸ்யம் ஒளிந்திருக்கிறது என தெரிந்தும் எடுத்து வைத்துக் கொண்டேன் பாருங்கள். இதற்கும் சிரிப்பு வந்தது. சரி இதெல்லாம் தோதுப்படாது என Rottenberg எழுதிய The Structure Of Argument என்ற எனக்கு மிகப் ப்ரீதி எனும் லிஸ்டில் இருந்து எடுத்து வைத்துக் கொண்டேன். மஹா பித்துக்குளித்தனமாக ஆர்க்யு செய்பவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம். அதற்கு எதிர் திசையில் பயணிக்கவும் சொல்லித் தருகிறார் ராட்டன்பெர்க். இதுவும் சிரிப்பை வரவழைக்கிறது. சரி மெயில் பார்ப்போம் என லாப்டாப் திறந்தேன். சயிண்டிபிக் அமெரிக்கன் கோஷ்டியார் வசீகரமாக ஒரு மெயில் அனுப்பியிருந்தனர். yes no button to Sex / Violence என தலைப்பு. இதல்லவோ வேண்டும் என ஓப்பன் செய்தேன். சிம்பு சில காலம் முன்பு நயன் தாராவின் உதட்டினைக் கடிப்பதாக படம் செய்தி வந்ததே. அது போல இதிலும் அமெரிக்க இளைஞன் , மாது படத்துடன் செய்தி போட்டிருந்தார்கள். இந்த ஹைபோதலமஸ் செக்சின் போது எப்படியெல்லாம் வேலை செய்கிறது என சொல்லி ஆலன் ப்ரயின் இன்ஸ்டிட்யூட்காரர்கள் என்ன என்ன ஆராய்ச்சி செய்கிறார்கள் என விபரம் தந்திருந்தார்கள். இந்த கட்டுரையில் smartest mouse of the world என யுடியூப்பிலே தேடுங்கள் ஒரு எலியின் சாகச வீடியோ கிட்டும் என சொன்னார்கள். தேடினேன். பார்த்தேன் ; நீங்களும் பாருங்கள்.

7 comments:

Vetri said...

Super!!!!!!!!!!!!!!!!!!!!!

cheena (சீனா) said...

எலியின் சாகசம் கண்டேன் - சூப்பர்

Anonymous said...

நிஜ எலியா அல்லது ஏதாவது கிராஃபிக்ஸ் வேலையா? அபாரம். ஹும் இந்த எலிக்கு இருக்கும் மூளையில் ஒரு மூலை எனக்கு இருந்திருக்குமானால்..................... நல்ல எலி. இனி எலிகளை ஏளனமாகப் பார்க்கக் கூடாதுதான்

ச.திருமலைராஜன்

Ganpat said...

இந்த முகப்பு படம் நம்ம தளத்திற்கு சரியபடல!.தயவு செய்து எடுத்து விடுங்கள் நண்பரே!நன்றி

Ganpat said...

Thank you and you are a winner!

BalHanuman said...

இந்த தளத்திற்கு ஒத்து வராத முகப்புப் படத்தைச் சுட்டிக் காட்டிய Ganpat-க்கும், அதை உடனே நீக்கிய மௌளிக்கும் மனமார்ந்த நன்றி...

Ganpat said...

Dear BalHanuman,

To find fault is human!
But to acknowledge & correct it is
DIVINE

Regards,