Sunday 17 July 2011

திரைச்சீலை - ஜீவா


கே கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் ஓவியர் ஜீவா அவர்களின் திரைச் சீலை புத்தகம் கலந்துரையாடல் நிகழ்ச்சி என ஃபேஸ் புக்கில் அழைப்பு வந்தது. ஜீவா அவர்களை சந்தித்து என் சகபயணிக்கு காந்தி வரைந்து தந்தமைக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக சென்றிருந்தேன். ஜீவா தனக்கு வழங்கப்பட்ட புகழுரைகள், விமர்சனங்கள் மாற்றுக் கருத்துகள் அனைத்திற்கும் அளித்த பதிலைக் கேட்ட போது எனக்கு நேரு Glimpses of World History(சிறைச்சாலையில் இருந்தவாறு அவர் தன் மகளுக்கு எழுதிய உலக வரலாறு தொடர்பான கடிதக் கட்டுரைகள் ) நூலுக்கு ஜனவரி 1 1934 ல் எழுதிய முன்னுரை நினைவுக்கு வந்தது.


I do not know when or where these letters will be published, or wether they will be published at all, for India is a strange land to-day and it is difficult to prophesy. But I am writing these lines while I have the chance to do so, before events forestall me

சிறைச் சாலையில் குறிப்புகளுக்காக புத்தகங்கள் கிடைப்பதில் இருக்கும் சிரமங்களைச் சொல்லும் நேரு there are no libraries or reference books at the command of the prisoner, and under these conditions to write on any subject, and especially history is foolhardly undertaking.

ஆனாலும் தான் படிக்கும் புத்தகங்களுக்கு நோட்ஸ் எடுக்கும் பழக்கம் இருந்ததால் வரலாற்றினை எழுதும் பணி சிரமமில்லாமல் இருந்ததாக சொல்கிறார் நேரு. இன்றளவும் எனக்கு வரலாற்றில் முதல் ரெஃபரன்ஸ் என்பது அந்தப் புத்தகம் தான்.

ஜீவாவும் இப்படி திரைச்சீலை என தனது ரசனை இதழ் கட்டுரைகள் தொகுக்கப்படும் அது தேசிய விருது பெற்றுத் தரும் என நினைக்கவில்லை என சொன்னார். ஜீவாவின் புத்தகம் எனது ரெபரென்ஸ் புத்தகங்களில் மிக மதிப்புற்குரிய இடம் பெறும்.

நேரு உலக சமூக நிகழ்வுகளின் மீது எத்தனை passion வைத்திருந்தாரோ அதே போல் ஜீவா தான் பார்த்த சினிமாக்களின் மீது வைத்திருந்ததால் தான் இப்படி தகவலாகவும் ரசனையாகவும் படைப்பு வந்திருக்கின்றது

எனக்கு 13 வயது இருக்கும் போது பள்ளிப் பாடத்தில் Andy Roony என ஒரு கதை பாடத்தில் இருந்தது அதில் ஆண்டி ரூனி முட்டாள் ஹீரோ. தப்பு தப்பாக காரியம் செய்வதில் நம்மைச் சிரிக்க வைக்கும் கதாபாத்திரம். சற்றேறக் குறைய மிஸ்டர் பீன் வடிவம் எனச் சொல்லலாம். அதை பள்ளி ஆண்டு விழாவில் நாடகமாக்கினார் ஆங்கில ஆசிரியர். எட்டாம் வகுப்பில் இருக்கும் 5 செக் ஷனிலும் உன்னளவுக்கு ஆங்கிலம் பேச யாருமில்லை என தந்திரமாக பேசி எனக்கு அந்த கதாபாத்திரம் சுமத்தப்பட்டது. விழாவில் அந்த நாடகம்
மேடை ஏறிய போது விழாத் தலமையேற்ற முதன்மைக் கல்வி அதிகாரி திரு இராஜகோபால் விழுந்து விழுந்து சிரித்தார். எனக்கு அந்தப் பாத்திரம் கன கச்சிதமாகப் பொருந்தியதாக சிறப்பு பரிசு கூட வழங்கினார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்தப் புத்தகத்தில் ஜீவா கேலி சித்திரங்கள் என்ற கட்டுரையின் முகப்பில் the most difficult charectar in comedy is that of a fool and must be no simpleton who plays the role என்ற Miguel de Cervantes ஸ்பானிஷ் இலக்கியவாதி Don Quixot எனும் நாவலில் சொன்னதை மேற்கோள் காட்டியிருக்கிறார் அதைப் படிக்கும் போது எனக்கு என் andy roony நினைவுக்கு வந்தது

நடிகர் திலகம் குறித்தும் அவருக்கு பெஸ்ட் ஆக்டர் அவார்ட் தரவில்லை என்ற உங்கள் வருத்தத்திற்கு நான் நண்பர்களுக்கு இதே வினாவுக்கு தந்த பதிலையே சொல்கிறேன். சிவாஜிக்கு ஒரு வருஷம் பெஸ்ட் ஆக்டர் அவார்ட் தந்திருந்தால் அது ஒரு பெஞ்ச் மார்க் ஆகியிருக்கும். அதன் பின்பு அடுத்த வருஷம் யாருக்குத் தருவது. அவருக்கே தான் தரணும்.. இந்த காரணம் தான் அவருக்குத் தரவில்லை

விழாவில் பேசும் போது ஜீவா சொன்ன இன்னொரு வாக்கியம், இந்தக் கட்டுரைகள் என் நினைவில் இருந்து எழுதியவை 20 ம் தேதி வர
வேண்டிய இதழுக்கான கட்டுரையினை நான் 17ம் தேதி தான் யோசித்து டைப் அடிப்பேன் அதனால் தகவக் பிழைகள் இருக்கலாம் என திரு வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் தனது பத்தாயிரம் மைல் பயணம் கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையினை, இந்நூலில் இருக்கும் விவரங்களில் சில குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் விவரங்களைத் தாண்டி விளைவுகள் முக்கியமானவையாக இருப்பதால் அவற்றைப் பதிவு செய்வது நான் பயணம் மேற்கொள்ள ஊக்கியாக இருக்கும் என்பதால் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன‌ என சொல்லி நிறைவு செய்திருப்பார்.



ஜீவா சார் உங்கள் திரைச்சீலையும் அப்படித்தான்.

திரை என்பது எதையாவது மறைக்க விரிக்கப்படும் . நீங்கள் விரித்துள்ள திரை மறைந்திருப்பவை வெளியே தெரிய விரிக்கப்பட்டுள்ளது..

நான் முன்பு சொன்னது போல் எனது ரெஃபரன்ஸ் தொகுப்பில் திரைச்சீலை இருக்கிறது என்பதில் எனக்கு தனி பெருமை.

9 comments:

Thenammai Lakshmanan said...

அருமையான பகிர்வு சந்த்ரமௌலீஸ்வரன் சார்..:)

cheena (சீனா) said...

அன்பின் மௌளீ - அருமையான அறிமுகம் - பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி அணிந்துரை அளித்தது பாராட்டுதலுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ( சக பயனியில் காந்தி படம் நன்றாய் இருக்கிறது. )

Prince said...

அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..!!! :) :)

Ram said...

அருமையான பகிர்வு மௌலி, அதிலும் நேரு குறிப்புகள் மிகவும் அருமை

Amirthanandan said...

இதன் மூலம் அடியேனுக்கு மேலும் இரு நூல்களை பரிந்துரைத்திருக்கிறீகள் சகோ! இரண்டு நூல்களையும் மேலடுக்கில்(புத்தக அலமாரியிலும்) நிச்சயம் ஏற்றி வைப்பேன்.

Vediyappan M said...

அருமையான பதிவாக எழுதியுள்ளீர்கள் தோழர் , படித்தேன் மகிழ்ந்தேன்!

பாலகிருஷ்ணன் said...

Super comments

பாலகிருஷ்ணன் said...

Nice comments, sir!

Anonymous said...

taken right out of your chest.. gr8 tribute:)-suresh seenu