Monday 18 July 2011

கமல்ஹாசனும் பெருமாளும்


கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம் படித்த அனைவருக்கும் திருவெண்காடு , நமச்சிவாய வைத்தியர், பரஞ்சோதி எனும் பெயர்கள் நினைவிருக்கும்

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே

இது திருவெண்காடு தலத்திலே அப்பர் பாடிய பதிகம்

நல்லாத் திரியைக் கிள்ளி தூண்டி விடப்பட்ட விளக்கின் சுடர் போல உடம்பு அதும் சுத்தபத்தமா குளிச்ச உடம்பு
சூலத்தைக் கையிலேந்திக் கொண்டு.. பாம்பை உடம்பிலே சுத்திக்கிட்டு,, காதிலேயும் பாம்பையே அணிகலனாக சூடிக்கிட்டு
சடை முடி தாழ்ந்து புரள,, வெண்நூல் அணிந்து பிறை நிலவை சூடிக்கொண்டு வீதி வழியா நடந்து வந்து வேறெங்கேயோ போவாரானு பார்த்தா என் நெஞ்சத்துக்குள் அல்லவா புகுந்தார்;யாருனு கேட்றீங்களா;எருது வாகனம் கொண்ட சிவபெருமான்

இதே சாயலில்

நம்மாழ்வாரின் பெரிய திருமொழியிலிருந்து-

பருவக் கருமுகி லொத்து

முத்துடை மாகட லொத்து

அருவி திரள்நிகழ் கின்ற

வாயிரம் பொன்மலை யொத்து

உருவக் கருங்குழ லாய்ச்சி

திறத்தின் மால்விடை செற்று

தெருவிள் திளைத்து வருவான்

சித்திரக் கூடத்துள் ளானே

நல்ல மழை மேகம் கணக்கா, கடல் கணக்கா, அருவியாலே தினம் குளிக்கும் மலை கணக்கா இருக்கும் இந்த சித்திரக் கூடத்தான் வீதில நடந்து வரான்

இது சித்திர கூடம் என்பது சிதம்பரம்.. இந்தக் கோவில் தான் தசாவதாரம் படத்தின் முதல் காட்சி

ஆனால் தசாவதாரம் பட்த்திலே ஒரு பிசகு செய்துவிட்டார்கள் உற்சவர் பெருமாளை நின்ற திருக்கோலத்திலே காட்டிவிட்டார்கள் ஆனால் அங்கெ உற்சவர் அமர்ந்த திருக்கோலம்..

கமல்ஹாசனுக்கும் விஷ்ணுவுக்கும் என்ன பொருத்தமோ தெரியவில்லை . இப்படித்தான் குருதிப்புனல் படத்திலே க்ருஷ்ண ஜெயந்தி மே மாத்த்திலேயே வருவதாக காட்சி இருக்கும்

அருவி திரளாக விழும் என நம்மாழ்வார் படித்துக் கொண்டே வந்தால் குறுந்தொகை நினைவுக்கு வருகிறது

கோவேங்கை பெருங்கதவனார் பாடல் பார்க்கலாம்

அம்ம வாழி தோழி நம்மொடு

பிரிவு இன்று ஆயின் அன்று மற்றில்லை

குறும் பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்

பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கி

கல் பொருது இரங்கு கதழ் வீழருவி

நிலங்கொள் பாம்பிம் இழிதரும்

இதுக்கு என்னப்பா அர்த்தம்னு யாரும் கேட்பதற்குள் சொல்லிடலாம்

தோழி ! பாறை மீது வேர் படர்ந்து பரவி கிளைகளில் மலர் நிரம்பியுள்ள வேங்கை மரம் அதிரும் வண்ணம் பெரும் சப்தத்துடன் விழுந்து கற்களில் மோதி நுரைத்து சமவெளிக்கு வந்து பாம்பு போல நெளிந்து போகும் ஆறு உற்பத்தியாகும் மலையின் தலைவன் ஒரு போதும் பிரியாமல் இருக்கனும்

இந்த இரண்டு பாட்டுமே சங்கமம் குறித்து தான்

இது கடவுள் நம்பிக்கை குறித்த பாடல்களை குறித்தானதாயினும் நான் அந்த நோக்கம் குறித்த சிந்தனைகளை ஆராயப் போவதில்லை. மொழி வளம். ஒத்த கருத்துள்ள பாடல்கள் அவ்வளவே

இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஆர். கே நாராயணன் அவர்களின் சிறு கட்டுரைத் தொகுப்பான Writerly Life என்ற தொகுதியில் இருக்கும் God and the Atheist எனும் தலைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்க சிபாரி செய்கிறேன்

அது கடவுளுக்கும் கடவுள் மறுப்பவர் ஒருவருக்கும் இடையேயான உரையாடல் ஸ்டைலில் எழுதியிருக்கார். அதிலே கடவுள் தான் இருப்பதற்கான சாட்சிகளாக சிலவற்றைச் சொல்வதும் அதை கடவுள் மறுப்பவர் மறுத்து உரையாடுவதுமாக வரும். அதன் இறுதி சில வரிகளை மட்டும் தருகிறேன்

கடவுள் கேட்கிறார்

Are you now convinced of my existence?

கடவுள் மறுப்பவர் சொல்கிறார்

Not Yet. How am I to be sure that our talk is real and not just a piece of self-deception

மீண்டும் கடவுள் கேட்கிறார்

What does it matter; what difference could it make

13 comments:

Geetha Sambasivam said...

நல்ல பகிர்வு. உங்கள் கட்டுரையை நன்கு ரசித்தேன். :))

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Ram said...

மிகவும் அருமை, மௌலி

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Amirthanandan said...

சமகால பிரச்சினைகளை ஆராய்ந்து கட்டுரைகள் எழுதிய தருனங்களில் எம் மனதில், விரக்தி, கோபம் மற்றும் உத்வேகத்தை உருவாக்கினீர்கள். இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதுங்கள் சகோ! மனதை இலகுவாக்கி புளகாகிதம் அடையச்செய்த்தது இந்தப் பதிவு. மீண்டும் பல நன்றிகளைச் சமர்பிக்கின்றேன் சகோ!

pushparag60 said...

கமல்ஹாசனும் பெருமாளும்"
தலைப்பு மொட்டை தலைக்கும், முழங்காலும் முடிச்சு போல் உள்ளது
அன்புடன்
ராகவன்

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

ராகவன் சாருக்கு, நாடறிந்த நாத்திகருக்கு நாராயணன் வழி பதில் சொல்ல ட்ரை செய்துருக்கேன். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது பார்த்திருக்கலாம், " கடவுள் இல்லேங்கறேளா"... " அய்யோ நான் அப்படி சொல்லலை இருந்தா நல்லாருக்கும்னு சொன்னேன்" என க்ளைமாக்ஸ் வைத்த தசாவதார சீனிவாச புத்திரனுக்கு பதில் சொல்ல ட்ரை செய்திருக்கேன்

Geetha Sambasivam said...

@புஷ்பா ராகவன்,

திரு சந்திர மெளலீஸ்வரரின் கிண்டல் நன்றாகவே புரிந்தது ஐயா. தசாவதாரம் திரைக்கதை தெரிந்திருக்கும் இல்லையா உங்களுக்கு! :)))))))

haiyorama said...

முக்கியமான ஒன்றை நீங்கள் கவனிக்கவில்லை. எந்த கோவில் உற்சவ விக்ரஹத்தை பொம்மை போல தூக்கி கொண்டு ஓட முடியும். தசாவதாரத்தில் இதுவும் ஒரு பிழை தான்.

Geetha Sambasivam said...

haiyorama//

உலகநாயகரால் முடியாததும் உண்டா? :)))))))

virutcham said...

ராம், உற்சவரைத் தூக்க முடியாதா ? மூலவர் என்று இருக்க வேண்டும்

http://www.virutcham.com/2010/02/பகுத்தறிவு-கமலின்-படங்கள/
(
பகுத்தறிவு கமலின் படங்களில் இழையோடும் உள்ளார்ந்த ஆன்மிகம் )

Geetha Sambasivam said...

விருட்சம், ஐம்பொன்னால் ஆன உற்சவரைத் தூக்க முடியாது தனி ஒரு ஆணாலேயே. பெண்ணால் எப்படி முடியும்? அந்த சினிமா நான் பார்க்கவில்லை; ஆனால் வீட்டில் பார்த்தவங்க சொன்னாங்க; அதைத் தூக்கிக்கொண்டு அசின்? ஷ்ரேயா? யாரு ஹீரோயினோ அவங்க மைல்கணக்கா ஓடுவாங்களாம். சாத்தியமே இல்லை.

உங்க தகவலுக்கு,
எங்க வீட்டில் ஐம்பொன்னால் ஆன ஆறங்குலம் உள்ள விக்ரஹங்கள் இருக்கின்றன பூஜையில் வைத்திருக்கோம். அந்த விக்ரஹங்களைத் தூக்கித் தேய்க்க முடியாது. கனம். எந்தக் கோயில் மூலவரும் ஐம்பொன்னால் ஆனவர் இல்லை. உற்சவர் அதைவிட அதிக கனம் இருக்கும்.

Geetha Sambasivam said...

மூலவரைத் தூக்கிக் கொண்டு ஓடி இருக்க முடியாது. பீடத்திலிருந்து பெயர்த்து எடுத்தாலே சாத்தியம்.