Sunday 18 September 2011

கீதை இடைச் செருகலா- பகுதி 2


ஜெயமோகனின் பதிவில் உள்ள வினாக்களை அடுக்கி அதற்குரிய பதிலைத் தருவதன் மூலம், இந்தப் பதிவினைப் படிப்பவர்களுக்கு வசதி செய்து தரலாம்

வினா எண் :1

காவியகர்த்தன் ஒரு போர் தொடங்கப் போகும் தருணத்தில் பல்லாயிரம் பேர் ஆயுதங்களுடன் போர் வெறியுடன் திரண்டிருக்கும் முனையில் நிதானமாக தத்துவ விவாதம் புரிவதாக எழுதுவானா என்ன?

வினா எண் : 2

அந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் கூறும் அத்தனை விரிவான வேதாந்தக் கருத்துக்கள் அந்த நேரத்துத் தேவைக்குப் பொருத்தமாகவே இல்லை. போர் புரியமாட்டேன் என்பவனிடம் ஆத்மாவின் அழிவின்மை பற்றி பேசுவது சரிதான். பக்தி, யோகம், விபூதி பற்றிய நுண்ணிய விளக்கங்கள் எதற்கு?

கீதையின் கால கட்டத்திற்கு ஜெயமோகன் துணைக்கு அழைக்கும் வாதம்

நடராஜ குரு அவரது நூலின் முன்னுரையில் ஜெ.என்.·பார்குஹார் (J.N.Farquhar) கூறிய வரிகளை இதற்கு மேற்கோள் காட்டுகிறார்.

‘ஸ்வேதாஸ்வேதர உபநிடதத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்ட ஒரு பழங்கால உபநிடதம் பிற்காலத்தில் கீதையாக உருமாற்றம் செய்யப்பட்டு கிருஷ்ண பக்தர்களால் மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டது. கிறிஸ்துவ யுகத்தின் தொடக்கத்தில் இது நடந்தது.’

இந்தியவியலாளரான ரிச்சர்ட் கார்பே கீதையின் காலகட்டம் கி.மு.2ம் நூற்றாண்டு என்று கூறுகிறார். நடராஜகுரு இதை தர்க்கப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாகவே படுகிறது. டி.டி.கோசாம்பி முதலியோர் கி.பி.5ம் நூற்றாண்டில், அதாவது குப்தர் காலகட்டது இந்து எழுச்சியின்போது, கீதை உருவாகி மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டது என்று எண்ணுகிறார்கள்;என் நோக்கில் முக்கியமான இந்தியவியலாளர்களான லாக்கோம்ப், கார்பே போன்றவர்களே பெருமளவு நடுநிலையில் நின்று காலக்கணிப்புகளைச் செய்துள்ளார்கள். எப்போதும் கறாரான புறவயத் தருக்கத்திற்கு முக்கியத்துவம் தரும் அறிவியலாளரான நடராஜகுருவும் இவர்களையே ஏற்கிறார்

இந்த மூன்று கருத்துகளுக்கும் இருக்கும் சாத்தியத் தரப்பினை வரிசையாகப் பார்க்கலாம்

முதலில் கார்பேயின் & ஜெ.என்.·பார்குஹார் கருத்திலிருந்து தொடங்கி பின்னர் ஜெமோவின் வினா எண் 2 அடுத்து வினா எண் 1 எனச் செல்லுவோம்


"an Old verse upanishad written later than the sevtasvatra and worked upon into the gita in the interest of krisnaism by a poet after the christian era

இது Farquhar (Religions of India Page 389)

இதே கருத்தை தனது Outlines of the Religious Literature of India வில் பின்னரும் Farquhar சொல்கிறார்

இந்தக் கருத்துகளில் இருக்கும் ஏனைய கண்ணோட்டங்கள் குறித்து எதையுமே குறிப்பிடாது தன் தரப்பிற்கு ஒத்து வரும் கண்ணோட்டத்தினை மட்டும் குறிப்பிடும் வண்ணமாகத்தான் இந்தக் கருத்தினை ஏற்கலாம்

கார்பே எழுதுவதைக் கவனியுங்கள் நண்பர்களே

It is difficult to determine the period of composition of the work ; We shall not however go materially wrong if we assign composition of the Original Gita to 2nd Century BC its redecation to the 2nd century of our own era

(R. Garbe -Bhagavad Gita Hastings of Enclyclopedia of Religion and Ethics Volume II page 538)

அதாவது கீதை எழுதப்பட்ட காலத்தினை கணிப்பது சிரமம் எனினும் அதனை கி.மு 2 ம் நூற்றாண்டு என சொன்னால் தவறாக இருக்காது எனச் சொல்லும் கார்பேயின் தடுமாற்றத்தினைத்தான் முன் வைக்கிறார் நம் எழுத்தாளர்

கார்பே அதே நூலில் சொல்கிறார் It has long been known that we do not posses the Bhavad-Gita in its Original Form , but in a form which is the result of essential Modification

நீதியரசர் காசிநாத் திரிம்பக் திலங், சட்டமும் தத்துவமும் பயின்றவர். கீதைக்கு உரையெழுதியவர்களில் மிகவும் முக்கியமானவனர் .

மும்பை உயர்நீதி மன்றத்தில் நீதியரசராக பணியாற்றியவர். மிக இளம் வயதிலேயே ( 36 வயதிலேயே) மும்பை பல்கலைக் கழக்த்தின் துணை வேந்தராக பதவி வகித்தவர்

அவர் கார்பேயின் உரைக்கு தெரிவிக்கும் மறுப்பினைக் கவனிக்கலாம்


It appears to me, I own , very difficult to accept that as satisfactory argument , amounting , as it does to no more that is that interpolation which must needs to be referred to in narrating the main story even to make it intelligible, are nevertheless to be regarded as evidently the
product of brahamanical age' and presumably also a later age because , forsooth, they are irrelevant and incongruous according the 'tastes and ideas' not of the time , be it remembered when the main story is supposed to have been written but of this enlightened 19th century


The Bagavadgita is later than the great movement represented by the early upanishads and earler than the period of development of philosophic systems and their sutras. From the archaic constructions and the internal references, we may infer that is definitively a work of pre-christian era. Its date may be assigned to the fifth century BC though the text may have received many alternations in subsequent times

இது ராதாகிருஷ்ணன் (Indian Philosophy Volume 1 page 522-525)

It is argued that the teacher, Krsna could not have recited the seven hunderd verses to arjuna on the battle field. He must have said a few pointed things which were later aloborated by the narrator into an extensive work; According to Garbe, the bhavadgita was orinally a samkhya
yoga treatise with which krishna-vasudeva cult got mixed up and in the third century BC it became adjusted to the vedic tradition by the identification of krishna and vishnu. The original work arose about 200 BC and it was worked into its present form by some follower of vedanta in the Second century AD. Garbe's theory is genrally rejected

RadhaKrishnan (Introductory Essay- The BaghavadGita page 14)

கார்பேயின் கருத்து பொதுவில் நிராகரிக்கப்பட்டது என ராதாகிருஷ்ணன் சொல்வதைக் கவனிக்கவும்

ஜெயமோகன் மேற்கோளிட்டு துணைக்கு அழைத்த வாதங்களை மறுத்து முன்னரே அறிஞர்கள் உரைத்துள்ளார்கள் என்பதை குறிப்பிட்ட

நூல்களின் தரவுகளுடன் சொல்லி இந்தப் பகுதியினை நிறைவு செய்து இனி வினா எண் 1 மற்றும் வினா எண் 2 க் கான் மறுப்புகளைக் அடுத்த பாகத்தில் கவனிக்கலாம்

(தொடரும்)

3 comments:

ஆனந்தர் said...

Farquhar மற்றும் Garbe இந்த இருவரில் கார்பேவுடையதை மற்றவர்கள் மறுத்திருப்பதைச் சுட்டி உள்ளீர்கள். ராதாகிருஷ்ணன் மற்றும் நீதியரசருடைய மறுப்புகளும், அந்த முடிவிற்கான ஆதாரங்களைத் தரவில்லை.

Farquhar மறுக்கப்பட்டதை பிந்தைய பகுதிகளில் சொல்வீர்கள் என யூகிக்கிறேன்.

குழந்தைக்கு மம்மம் கொடுக்கிற மாதிரி ரொம்ப கொஞ்சமாக தருகிறீர்கள் :)

.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

ஆனந்தர்

ஒரு கருத்தை மறுத்துள்ளவர்கள் புத்தகம் பக்கத்துடன் விபரங்கள் தந்திருக்கின்றேனே. தேடிப்படிப்பதில் சுவாரசியத்தினை வரவழைக்கின்றேன்

:-)

அதன்றி கார்பேயில் கருத்திலிருக்கும் நீர்த்த தனமையினை சொல்லியும் இருக்கின்றேன்

Anonymous said...

அன்பின் மௌலி,


வழக்கம் போல மிகவும் painstaking-ஆக ஆராய்ந்து கோர்வையாக படைத்துள்ளீர்கள். ஆனால் ஒரு விஷயம் - சோ-வுக்கு அடுத்ததாக ஜெயமோகன் ஒரு "ஆண்பிள்ளை". மனித இனத்திற்கே இழுக்காகப் பிறந்து விட்ட அந்த அசிங்கத் தலைவனை அவன் எழுதுவது எல்லாம் தமிழே அல்ல என்கிற உண்மையை எடுத்து இயம்புகிற ஆண்மை பொருந்திய ஜெமோவுக்கு ஜே. அதுவும் தவிர திருவள்ளுவர் ஒரு baptised christian, திருக்குறள் ஒரு அப்பட்டமான கிறிஸ்தவ கிரந்தம் என்கிற துஷ்ப்ரசாரத்தையும் ஆண்மையுடன் எதிர்த்த மிக மிக சிலரில் ஜெமோவும் ஒருவர். ஆகையால், ம.போ.சி க்கு அடுத்ததாக ஐவரும் ஒரு தமிழ் காப்பாலரே.

ராம்