Saturday 29 January 2011

34TH BOOK FAIR -CHENNAI - PART 4



மரக்கதவுக்கு வெளியே காத்திருந்தேன்.

உள்ளே அதட்டலான குரலும் அதற்கு பதில் சொல்லும் மென்மையான குரலுமான உரையாடல் கசிந்து கொண்டிருந்தது

காத்திருந்த அறையை கவனித்தேன் சுவற்றில் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி , காமராஜர் , சத்தியமூர்த்தி என ஒரே கதர். இதெல்லாம் ஒருவித கன்வென்ஷன் என நினைத்துக் கொண்டேன்

கதவு திறந்து ஒல்லியான ஒருத்தர் என்னிடம் வந்து , "சார் நீங்க வந்துட்டீங்கன்னு அண்ணன்கிட்ட சொல்லிட்டன்; ரெடியாய்ட்டு இருக்கார் . இப்ப வந்துருவார் . புறப்படுரலாம்"

"நீங்களும் வருவீங்கல்ல "

"நான் இல்லாம எம்.எல் ஏ என்னிக்கு சார் வெளில போயிருக்காரு ; கண்டிப்பாக வருவேன்"

கையில் வைத்திருந்த பைலை பிரித்து படித்தேன் . இந்த ஒரு வாரத்தில் அந்தக் கடிதம் மனப்பாடம் ஆகியிருந்தது

இணைப்பில் காணப்படும் அரசு செயலரின் நேர்முகக் கடித்தத்தின் பால் தங்களின் தனிப்பட்ட கவனம் ஈர்க்கப்படுகிறது....

என் தனிப்பட்ட கவனம், அந்த கடிதம் படிப்பதில் இருந்து விலகியது இப்போது அந்த மரக்கதவை திறந்து கொண்டு அதிகாரமாக வந்த நபர் கவனத்தை கவர்ந்தார்.

"வணக்கம் சார்"

"வணக்கம் வாங்க . செகரட்டரி டு த கவர்மெண்ட்டுக்கு எழுதி உங்களை மாதிரி ஆபிசருங்க்களை வரவழைக்க வேண்டிருக்கு . ருலிங் பார்டி எம்.எல்.ஏ கூப்பிட்டா ஓடுவிங்க"
"எம்.எல்.ஏ சார் என்னை மன்னிக்கணும் ; நான் இந்த போஸ்டிலே சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிருக்கு. இதுக்கு முன்னாலே ஒரு வருஷம் அந்த போஸ்ட் வேகன்ட்டா இருந்திருக்கு"

"ஒ அப்படியா ; இதுக்கு முன்னாலே எந்த ஊர்ல இருந்தீங்க "

" இது தான் என் முதல் வேலை"

"வாழ்த்துகள்.. வாங்க போகலாம் "

எந்த பந்தாவும் இல்லாமல் சகஜமாக பேசியபடி வந்தார்.

"பேராவூரணி டு பட்டுக்கோட்டை பத்து டிபரென்ட் ரோட் ரூட் இருக்கு.. அதுல ஒன்னு இப்ப நாம போயிட்டு இருக்குறது ஒன்னு . இங்க தான் நான் லெட்டர்ல எழுதின கிராமம் இருக்கு. அங்க தான் இந்த "நச்சுப்புல்" ஸ்கீம் வேணுமின்னு ஒரு வருஷமா பேசிட்டு இருக்கேன் "

"நச்சுபுல் ?"

"அதான் சார் களை. இங்கிலீஷுல வீட் . அதை நச்சுபுல் அப்படின்னு சொல்லுவோம்; நாம திரும்பி போகும்போது எனக்கு நினைவு படுத்துங்க . என் கிட்ட ஒரு நோட்டு புஸ்தகம் வச்சிருக்கேன் . எங்கம்மா பாட்டி இவங்க கிட்ட கேட்டு எழுதினது .. கிராம வழக்குல இருக்கும் சொற்கள் சுமார் பத்தாயிரம் இல்ல அதுக்கு மேலே இருக்கும் "

திரும்பும் பொது மறக்காமல் அந்த நோட்டுப் புஸ்தகத்தை வாங்கி வந்தேன் .. இரண்டு நாள் வைத்திருந்து விட்டு திரும்பிக் கொடுத்து விட்டேன் . ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு கொடுத்திருக்கலாம் என பின்னர் வருத்தப்பட்டேன்

நா. வானமாமலை தொகுத்திருக்கும் தமிழர் நாட்டுப் பாடல்கள் புத்தகத்தில் ஒரு பாடலில்

நாத்துகுள்ளே ஏலேலோ
நச்சுபுல்லு அகிலகிலா
நச்சுபுல்லு
நச்சுபுல்லை ஐ லப்பிடி
நறுக்கித் தள்ளு அகிலகிலா
நறுக்கித் தள்ளு


2 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - நாட்டுப்புற பாடல்கள் - படிக்கவும் இரசிக்கவும் மகிழவும் ஏற்ற ஒன்று. மிக மிக அருமை. நகல் எடுத்திருக்க்லாம - நோட்டுப்புத்தகம் திரும்பக் கொடுப்பதற்கு முன்னர். தொடர்க மௌளி - இடுகையின் நீளம் இரு / மும் மடங்கு அதிகரிக்கலாமே மௌளி - நல் வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பிரசாத் said...

நலாத்தான் எழுதுறீங்க ஆனால் ஒன்றுகொன்று தொடர்பில்லாமல் இருக்கிறது