Saturday 29 January 2011

குருஷேத்ரம்-4




"ஒரு வேலையை செய்துட்டு அதுக்கு பலன் எதிர்பாராம இருப்பது புத்திசாலித்தனமா ?"

"நிச்சயமா இல்லை "

"ஆனா அதைத்தானே கிருஷ்ணர் சொன்னார் "

"மேலோட்டமா புரிஞ்சிண்டா அப்படித்தான் தோணும்"

"விளக்கமாத் தான் சொல்லேன் "

" சரி இப்ப நான் வரிசையாக் கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லு ; உனக்கு இப்ப ஒரு லட்சம் பணம் கிடைச்சா என்ன செய்வே "

" நல்ல இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் பாத்து முதலீடு செய்வேன் "

" அப்படி இன்வெஸ்ட் செய்ய நீ நல்ல யோசனை செய்து எங்கே இன்வெஸ்ட் பண்றியோ , அந்த இடத்தோட ஸ்திரத் தன்மை எல்லாம் விசாரிச்சு அப்புறம் தானே செய்வே"

"ஆமா "

"அப்படி முதலீடு செய்த பின்னாலே அந்த முதலீடு மெச்சூர் ஆகின்றவரை தினம் அந்த ஆபிசிலே போய் டிவிடன்ட் / வட்டி எல்லாம் ஒழுங்க தருவேளா அப்படின்னு விசாரிச்சிண்டே இருப்பியா "

"மாட்டேன் "

"நீ செய்ற வேலையெல்லாம் பகவானுக்கு அர்ப்பணம் செய்துட்டா அதுக்கான டிவிடன்ட் / வட்டி அவர் தருவாருன்னு நம்பிக்கை அதான் கடமை செய் பலனை பத்தி கவலைப் படாதேன்னு சொல்றார் "

"அதெப்படி ; பணத்தை இன்வெஸ்ட் செய்தா அதுக்கு இத்தனை வட்டி இப்ப வரும் ; இப்ப மெச்சூர் ஆகும் எல்லாம் தெரியும் ; அதாவது உத்திரவாதம் இருக்கு . கிருஷ்ணர் அப்படி தருவாரா "

"இதுக்கும் விளக்கம் சொல்றேன் "

(தொடரும் )

3 comments:

cheena (சீனா) said...

2009 ஜுலை - 2011 -ஜனவரி - எல்லோரும் மறந்து போன பின்னர் தொடர்கிறதா- அதுவும் ஒரு சிறு பகுதியாக - கொஞ்சம் சிரமம் பாராமல் - குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு பகுதியாகவாவது எழுதலாமே மௌளி - எல்லவற்றையும் சேர்த்து வைத்து ஒரே மூச்சில் படித்தால் நலமாக இருக்கும் என நினைக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

2009 ஜுலை - 2011 -ஜனவரி - எல்லோரும் மறந்து போன பின்னர் தொடர்கிறதா- அதுவும் ஒரு சிறு பகுதியாக - கொஞ்சம் சிரமம் பாராமல் - குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு பகுதியாகவாவது எழுதலாமே மௌளி - எல்லவற்றையும் சேர்த்து வைத்து ஒரே மூச்சில் படித்தால் நலமாக இருக்கும் என நினைக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

Dear Mr Mouli
I am a regular reader of blog.specilaly on writer sujatha and your stories in sorgan .i really enjoy it.Reacently i have read an article on sujatha's sicence knowldge
in jeyamohan's Blog.What is your view?http://www.jeyamohan.in/?p=7587
Regards
sathish