Sunday 9 January 2011

34TH BOOK FAIR -CHENNAI - PART 1


ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் போது வாங்க வேண்டிய பட்டியல் இல்லாமல் செல்வதில்லை. அந்தப் பட்டியலில் சில மாற்றங்களும் நிகழும். அப்படியாக அமைந்தது இந்த 2011 வருட சென்னை புத்தகக் கண்காட்சி. சின்ன விஷேசம் ஹரன் பிரசன்னாவிடமும். பா.ராகவனிடமும் ஆட்டோகிராப் வாங்கினேன். நான் ஆட்டோகிராப் வாங்கும் 3 வது 4 வது பிரபலங்கள் இவர்கள். இதற்கு முன் நான் கவாஸ்கரிடமும், குண்டப்பா விஸ்வநாத்திடமும் மட்டும் தான் வாங்கியிருக்கிறேன். ஒவ்வொரு புத்தகம் வாங்கும் போது அதனை வாங்குதற்குரிய காரணம் இருக்கும். இன்னார் சொன்னார் ; இங்கே ரிவ்யூ படித்தேன் என்பதாய். அதையும் தாண்டி புத்தகம் வாங்குதற்குரிய வலுவான பின் புலக் காரணம் இருக்கும். இந்த 2011 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களுக்கான அப்படியான பின்புலம் குறித்த பதிவுகளாக எழுத ஆசை..

வாங்கிய புத்தகப் பட்டியலை வரிசையிட்டு சொல்லிவிட்டு ஒவ்வொரு புத்தகம் வாங்கிய காரணப் பின்புலம் குறித்து தொடர் பதிவுகள் எழுதுகிறேன்


1. கிழக்கு பதிப்பகம்‍ ‍ திராவிட இயக்க வரலாறு இரண்டு பாகங்கள்

2. கிழக்கு பதிப்பகம் காந்திக்குப் பின் இந்தியா இரண்டு பாகங்கள்

3. கிழக்கு பதிப்பகம் ஹரன் பிரசன்னாவின் கவிதை தொகுப்ப் நிழல்கள்

4. கிழக்கு பதிப்பகம் உணவின் வரலாறு

5. காலச்சுவடு பதிப்பகம்‍ ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும்

6. கிழக்கு பதிப்பகம் மஹாத்மா காந்தி கொலை வழக்கு

7. பூம்புகார் பதிப்பகம் தொல்காப்ப்பிய பூங்கா

8. பாரதிய வித்யா பவன் க்ருஷ்ணாவதாரம். கே.எம் முன்ஷி ஏழு பாகங்களும்

9. கிழக்கு பதிப்பகம் ப்ராஜெக்ட் மானேஜ்மென்ட்.. இரா.மு

10. கிழக்கு பதிப்பகம் அசோகமித்ரன்‍ 18வது அட்சக் கோடு

11. காலச்சுவடு பதிப்பகம் உப்பிட்டவரை

12. நர்மதா பதிப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்ட 220 பாராயணப்பாடல்கள்

13. புதிய தலைமுறை பத்தாயிரம் மைல் பயணம் ( இறையன்பு)

14. காலச்சுவடு பதிப்பகம் திலக மஹரிஷி

14. பரதன் பப்ளிகேஷன்ஸ் ‍ கண்ணனைத் தேடி

15. என்.சி.பி.ஹெச். நா. வானமாமலை.. தமிழர் நாட்டுப் பாடல்கள்

16. கிழக்கு பதிப்பகம் உருப்படு

17. உயிர்மை கணையாழியின் கடைசி பக்கங்கள்

18. உயிர்மை சுஜாதவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி

19. பெங்குவின் பதிப்பகம் நாரயணமூர்த்தி பெட்டர் இந்தியா பெட்டர் வேர்ல்ட்


கிழக்கு பதிப்பகம் பதிப்பித்துள்ள திராவிட இயக்க வரலாறு இரண்டு பாகங்கள்:

எண் 8:காண்டீபன் வேதாசலம் தெரு, செங்கல்பட்டு இந்த விலாசத்தில் இரண்டு வருடங்களுக்கு மேல் குடியிருந்தேன். அந்த வீடு சம்பத் என்பாருக்கு சொந்தமானது. சம்பத்தின் தந்தை மறைந்த திரு பலராமன். நான் மாடி போர்ஷனில் ஒரு சிறிய அறையில் குடியிருந்தேன். ஈ.வே. இராமசாமி தொடங்கி பல திராவிட இயக்க தலைவர்களுடன் திரு. பலராமன் நட்பு கொண்டிருந்தார் எனும் தகவலை திருமதி. பலராமன் மூலம் அறிந்திருந்தேன். அவரது அபூர்வ photo collection எனது நினவுகளில் எப்போதும் வந்து போகும் .. திரு. பலராமன் ஈ.வே.கி சம்பத் நினைவாகத்தான் சம்பத் என பெயரிட்டார் என அந்த அம்மையார் சொல்லியிருக்கிறார். திரு.பலராமன் வீட்டுக்கு வந்து அவருடன் உணவு அருந்தாத திராவிட இயக்க தலைவர்களே இல்லை என அந்த மூதாட்டி சொல்லும் போது அறியாமையும் , அதையும் தாண்டிய ஒரு பெருமையும் மிளிரிடும்.. இப்படி திராவிட இயக்கம் தொடர்பான பிரமுகர்களின் நிகழ்வுகளை யதார்த்தமாக ஒரு மூதாட்டியிடம் கேட்டுப் பெறும் வாய்ப்பு...

அப்போதிலிருந்தே திராவிட இயக்கம் தொடர்பான தகவல்களில் அதனை விழைந்து சேகரிக்கும் ஆர்வம்..

அரசாணை 44 ஆதி திராவிட நலத்துறை.. இட ஒதுக்கீட்டு வரலாற்றில் முக்கிய இடம் கொண்ட அரசாணை. இதனை அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த அரசு சார்பு நிறுவனத்தில் அமுல் செய்ய அப்போதைய இயக்குநரான ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி முனைந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம்.. அந்த நிறுவனத்தின் பணியாற்றும் பொறியாளர் சங்கத்தின் தலைவர் நான்.. இட ஒதுக்கீடு தொடர்பான வரலாற்றினை தெரிந்து கொள்ள கன்னிமரா நூலகம், புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நூலகம், சட்ட மன்ற நடவடிக்கைகளின் ஆவணங்கள் என தேடி தேடி படித்த போது.. அதனோட ஜஸ்டிஸ் கட்சி , சமூக நீதி, திராவிட இயக்கங்கள் என இணைந்த வரலாற்றினையும் படிக்க வேண்டியதானது.. அப்போது தொகுத்த ரெபரென்சுகளை இப்போது மீண்டும் எடுத்துப் பார்க்கிறேன்

இப்படியான ஆர்வப் பயணத்தில் ஒரு தருணம் தான் நான் இந்தப் புத்தகத்தை வாங்கிய இந்த தருணம். இரண்டு பாகங்களையும் படித்து முடித்தபின்பு விரிவாக விமர்சனம் எழுத வேண்டும்

(தொடரும்)

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி,

நால்களை வாசிக்கும் - நேசிக்கும் மனம் வாழ்க. புத்தகக் கண்காட்சியில் வாங்கியது இத்தனை புத்தகங்களா ? - விருப்பமே வித்தியாசமாக இருக்கிறது. திராவிட இயக்க வரலாறு - இரு பாகங்கள் வாங்கியதற்கான காரணம் - அறிந்து கொள்ளும் ஆர்வம் - பிரமிப்பாக இருக்கிறது. ஆமா தொழிற் சங்கத் தலைவரா ? - பலே பலே - தேவைப்படும்போது - தேடித் தேடிப் படிக்கும் குணம் நன்று. எத்தனை இத்தனை இடங்களில் தேடி விபரங்கள் சேகரித்தது நன்று.

ஆர்வப் பயணம் தொடர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

manjoorraja said...

வித்தியாசமான புத்தக தேர்வுகள்.

உங்கள் மாறுபட்ட ரசனை வியக்கவைக்கிறது.