சென்னையில் நான் மிகவும் விரும்பி, மீண்டும் மீண்டும் செல்லும் இடங்கள் இரண்டு; எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம், புனித
ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம். அது போல ஒரு அருங்காட்சியகத்துக்குள் சென்று வந்த உணர்வு தொ.பரமசிவத்தின்
"பண்பாட்டு அசைவுகள்" படித்து முடித்தபின்.
இந்தப் புத்தகத்தை கமல்ஹாசன் சிலாகித்ததாயும் நன்றாக இருப்பதாகவும் சொல்லி கார்த்திக் அனுப்பி வைத்திருந்தார்.
இளம் மனைவி ஒருத்தி., கருவுற்றிருக்கிறார்.. பாவம் கணவன் மரணமடைந்து விடுகிறான். அந்த துக்க வீட்டில் அந்தப் பெண்
கருவுற்றிருக்கும் செய்தியைச் சொல்லும் நாகரீகத்தினைக் குறித்த பதிவு என்னை யோசிக்க வைத்தது.
இன்றைக்கு தவிர்க்க வேண்டிய சங்கதிகளையே தினசரி பிசினஸ் எடிக்கட்ஸ் எனும் பெயரில் கூச்சப்படாமல் செய்து கொண்டிருக்கிறோம்.. அதற்கு மேனர்ஸ் என பெயர் கொடுத்திருக்கிறோம்
தமிழனிடம் தாலி பழக்கம் இருந்ததா இந்த கேள்விக்கு "இல்லை" எனும் முன் முடிவுடன் சான்றுகள் அணுகப்பட்டிருக்கின்றன.. இதற்கு தொ.ப வும் விலக்கில்ல்லை
பண்டைக் காலத்தில் தாலி இருந்திருக்க வேண்டும் என நான் யூகிக்கிறேன் காரணம் ....
அயோத்தியா காண்டத்தில் நகர் நீங்கு படலத்தில் ஒரு காட்சி, தசரதன் கைகேயியை பார்த்து சொல்வதாக
பழிக்கும் நாணாய்; மாணாப் பாவி! இனி என் பல? உன்
கழுத்தின் நாண், உன் மகற்குக் காப்பின் நாண் ஆம்
இங்கே கழுத்தின் நாண் என்பது தாலியைக் குறிப்பதாக இருக்கலாமோ
ஆனால் சீதை இராமன் திருமணத்தில் தாலி அணிவிக்கு சங்கதியினை கம்பன் சொல்லவில்லை.. ஆனாலும் சீதையின் தாலி குறித்து
அனுமன் சொல்வதாக பாடல்
வாடி வதங்கி துயரம் நிறைந்த கோலத்தில் அனுமன் சீதையைப் பார்க்கிறான்
அவள் அணிகலன்களைத் துறந்தவளாக இருக்கிறார்
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழித்து நீத்த
மற்றை நல் அணிகள் காண்உன் மங்கலம் காத்த மன்னோ
நீ தாலியைத் தவிர(மற்றை) எல்லாவற்றையும் கழற்றி வீசி விட்டாய்
சிலப்பதிகாரத்தில் துயரக் கோலத்தில் கண்ணகி
"மஙகல அணியிற்பிறிதணி
மகிழாள்"
கோவலனைப் பிரிந்து வாடும் கண்ணகியும் இப்படித்தான்
தாலி ஆராய்ச்சியில் கண்ணதாசன், மபொசி ஈடுபட்டார்கள் என தொப பதிவு செய்திருக்கிறார்
இவர்களுக்கு இந்தப் பாடல்கள் தெரியாதா என்ன. தெரிந்திருக்கும் ஆனால்
It is a sort of convinience to get settled over a conceived opinion
6 comments:
உண்மை நண்பரே ! Conceived Opinion - தவிர்க்க இயலாது. நல்லதொரு இடுகை. பாராட்டுகள்
இளங்கோ அடிகள் காலம் கி.பி. 2 முதல் 6 -ம் நூற்றாண்டு எனவும், கம்பர் அதற்குப் பிந்தியவராகவுமே [கி.பி. 9-ம் நூற்றாண்டு] வரலாறு சொல்கிறது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்று, அதற்கு முந்தைய பழந்தமிழ் வரலாற்றில், தாலி பற்றிய குறிப்பு இல்லை என்பதே!
அன்பு வி.எஸ்.கே
தொ.ப அவர்களின் நூலில் ம.பொ.சி அவர்களை குறித்து சொல்லப்பட்டுள்ள சங்கதி சிலம்பிலிருந்தே.. அவருக்கு சிலம்பு செல்வர் என பெயருண்டே.
அதன் காரணமாகத்தான் சிலம்பிலிருந்தே மேற்கோள் செய்தேன்
விரத காலங்களில் ஜைனர்கள் கல்வியறிவு கொடுத்தல், பௌர்ணமி,தீபாவளி,போன்றவற்றின் இன்றைய பண்பாட்டுத் தொடர்ச்சி ஆச்சரியமூட்டின.
மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களின் சங்க இலக்கியம் குறித்த ஆய்வுப்புத்தகங்களிலும்,ம.பொ.சி அவர்களின் சிலப்பதிகாரம் குறித்த கட்டுரைத்தொகுதிகளிலும் தாலி பற்றிய செய்திகள் ஏதேனும் அகப்படுகிறதா என அறிவு விருத்திக்காக ஆராய்ந்து பார்க்கலாம்.
தொ.பரமசிவனின் “மக்களின் தெய்வங்கள்” கிடைக்கிறதா எனப் பாருங்கள்.
தனிப்பாடல் திரட்டு கம்பர்,அவ்வையார் உட்பட 31 புலவர்களின் பாடல்களை உள்ளடக்கிய புத்தகம்.அதில் அவ்வையாரின் தாயோடு அறுசுவைபோம் என்ற ஒரு பாடலில் ”பொற்றாலியோடு எவையும்போம்” என்ற வரிகள் உள்ளன. அதாவது,தாலி கட்டிய மனைவி கணவனை விட்டுப்போனால் எல்லா நலனும் போய்விடும் என்பது.
கம்ப ராமாயணம் தமிழனின் இதிகாசம் அல்ல .. அது ராமாயணத்தின் தமிழ் மொழி பெயர்ப்பே..
Post a Comment