Sunday, 6 March 2011

திராவிட இயக்க வரலாறு- ‍முத்துக்குமார் ஒரு பார்வை


கிழக்கு பதிப்பகம் பதிப்பித்துள்ள திராவிட இயக்க வரலாறு இரண்டு பாகங்கள்.. புத்தகம் வாங்கிய விபரத்தினை எனது முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்.

அந்த பதிவில் இந்த புத்தகத்திற்கான விரிவான விமர்சனம் எழுத வேண்டும் என்ற எனது ஆசையினையும் சொல்லியிருந்தேன்.

வரலாற்று நிகழ்வுகளைப் புத்தக வடிவில் பதியும் போது, ஒரு எழுத்தாளருக்கு உருவாகும் கருத்துப் பிம்பங்கள், யூகங்கள், சமூக நிகழ்வுகள் மீது தான் கொண்ட கருத்துகள் இந்த கண்ணோட்டத்தில் புத்தகம் செல்லும்.. நூலாசிரியர் முத்துக்குமார் அப்படி அல்லாது..

நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே சொல்லியிருப்பதை பாராட்ட வேண்டும் சபாஷ் முத்துக்குமார்

திராவிட இயக்க வரலாற்றினை எங்கிருந்து துவங்குவது என யோசித்த நிலையில்

இது பிராமணர் , பிராமணர் அல்லாதார் எனும் நிலையில் தொடங்கலாம் என்ற விபரத்தினை சொல்லி

1909 தொடங்கப்பட்ட சென்னை பிராமணர் அல்லாதார் சங்கத்தின் பிறப்பில் புத்தகத்தை தொடங்கியுள்ளார்.. இது புத்தக ஆசிரியரின் முன்னுரையில்..

புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் காலம் இதுவென குறிப்பிடாத ஆனால் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆண்டு கொண்டிருந்த காலம் என புரிந்து கொள்ளும்படியான ஒரு சம்பவத்துடன் புத்தகம் தொடங்குகிறது.. ஆங்கிலேயர்கள் ஏன் பிராமணர்களை வேலைக்கு வைத்துக் கொண்டனர் என்பதற்காக உத்தமதானபுரத்தில் நடந்த (! ? ) ஒரு சம்பவம் சொல்லியுள்ளார் முத்துக்குமார்.

சபாஷ்.

இந்த புத்தகம் எழுதுவதற்காக "ஆய்வுக்கும் ஒப்பீட்டு ஆய்வுக்கும்" என 50 புத்தகங்களை முதல் பாகத்திலும் 195 புத்தகங்களை இரண்டாம் பாகத்திலும் Bibliography குறிப்பிடும் திரு. முத்துக்குமாரின் மேலான கவனத்துக்கு

1982 ம் ஆண்டு அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலம் இரண்டாம் கமிஷனின் அறிக்கையின் முதல் பாகம் பக்கம் 6 மற்றும் 7 ல் காணப்படும் வாசகங்களை கவனத்தில் கொண்டு வர விழைகிறேன். அந்த அறிக்கை சொல்லும் காலத்தினையும் கவனத்தில் கொள்ள் வேண்டும்

அந்த கமிஷனின் தலைவர் அம்பாசங்கர் ஐ.ஏ.எஸ்

"During 1853 the British Government found the virtual monopoly of a single caste in Public Service. The reveneue Establishment in Nellore District was controlled by 49 Brahmins all from Same family" (Ambasankar Commission report Vol 1 page 6)

"Between 1894 and 1904 in Provincial Civil Service out of 16 Officers 15 were Brahmins; amonth 21 Assistant Engineers 17 were brahmins" (Ambasankar Commission report Vol 1 page 7)

இந்த விபரங்களையும் சேகரித்து புத்தகத்தில் பதிந்திருக்கலாம் என கருதுகிறேன்.

ஆங்கில ஆட்சியில் பிராமணர்கள் முக்கியத்துவம் பெற்றார்கள் எனும் கருத்தை பதிந்திருக்கும் நூலாசிரியரின் கவனத்துக்கு அதே ஆங்கிலேயர் ஆட்சியின் ஆவணத்தில் பல்வேறு சாதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்ட சான்றினையும் தெரிவிக்க கடமைப்பட்டவனாகிறேன்

"Collectors should be careful to see that the subordinate appointments in their districts are not monopolised by members of a few influential families. Endeavour should always be to divide the principal appointments in each district among the several caste

[Board of Revenue Proceedings dated 9th March 1854(B.S.O 128.2 of 1854)]

முத்துக்குமாரின் ரெபரன்ஸ் பட்டியலில் பிறரின் புத்தகங்கள் தலைவர்களின் சரிதங்கள் இடம் பெற்றுள்ளன .. ஆனால் அரசு ஆவணத் தொகுப்புகள் எதுவும் காணப்படவில்லை .. இது சற்றே அல்ல நிறையவே வியப்பளிக்கிறது..

இந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான மான்டேகு செம்ஸ்போர்ட் அறிக்கையினைக் குறித்து முத்துக்குமாரின் பதிவுகளைப் மிகவும் பாராட்ட வேண்டும்.. ஆனால் மான்ட்போர்ட் அறிக்கை எனப்படும் இந்த அறிக்கையின் முக்கிய சங்கதிகள் 3 என குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

ஆனால் மான்ட்போர்ட் அறிக்கையின் முக்கிய சங்கதிகள் 4

1. There should be as far as possible, complete popular control in Local Bodies and the largest possible independences for them of outside control

2. The provinces are the domain in which the earlier steps towards the progressive realisation of responsible government should be taken. Some measures of responsibility should be given at once, and our aim is to give complete responsibility as soon as the condition permit. This

involves at once giving the provinces the largest measure of independence, legeslative, administrative and financial of the Government of India which is compatible with the due discharge by he latter of its own responsibilities.

3. The Government of India must remain wholly responsible to Parliament and saving such responsibility its authority in essential maaters must remain undisputable pending experience of the effect of the changes now to be introduced in the provinces. In the meantime the Indian Legislative Concil should be enlarged and made more representative and its opportunities of criticizing the Government increased

4. In proportion as the foregoing changes take effect, the contrl of Parliament and the Secretary of State over the Government of India and provincial governments must be relaxed

இந்திய அரசமைப்பின் வரலாற்றினை குறித்த ஒரு சிறந்த புத்தகத் தொகுப்பு


Indian Consitutional Documents By A.C Banerjee இதனை அவசியம் வாசிக்க வேண்டும் என திரு. முத்துக்குமாரினை அன்புடன் வேண்டுகிறேன்.

அதே போல் மான்டேகுவின் மனைவி வெனடியா மான்டேகு தொகுத்த மான்டேகுவின் இந்தியன் டைரி‍ ‍இந்த புத்தகமும் முத்துக்குமார் படிக்க வேண்டும்.

மான்ட்போர்ட் அறிக்கையினை தயார் செய்ய மிகவும் பிரயத்தனப்பட்டிருப்பதனை அந்த டைரி வடிவத்தில் காணலாம் .. சாம்பிளுக்கு

ஒன்று பார்க்கலாம்

ஏப்ரல் 16, 1918 ம் தேதியின் டைரி வாசகம்

This Morning Duke Roberts and I Went on hammering away at the report, pruning, altering , changing, every day it gets better; but this work from ten in the morning till twelve in night, with also some work before breakfast, is very very very waering. If the work was hard the report
ranks, "with the great state papers which are landmarks of constitutional progress in the history of the British Empire". Even a critic like Craddoc is made to concede that the report was a wonderful piece of work.

இட ஒதுக்கீட்டு வரலாற்றில் ஒரு மைல் கல் கம்யூனல் ஜி.ஓ இதனைக் குறித்து ஒரு சாப்டர் முத்துக்குமார் தந்துள்ளார்

ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசு ஆவணம் குறித்து இன்னும் விபரமாக சொல்லியிருக்கலாம்.

முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை என்ற அந்ததஸ்து கொண்ட அரசாணை

G. O Ms No 1071 of Public Department dated 4th Novemeber 1927

இந்த அரசாணையின் படி ஐந்து விதமான இட ஒதுக்கீடு ஆணையிடப்பட்டது

1. பிராமணர் அல்லாதார் 41.67 %
2. பிராமணர் 16.67%
3. ஆங்கிலோ இந்தியரும் கிறிஸ்துவரும் 16.67%
4. முகமதியர்கள் 16.67%
5. தாழ்த்தப்பட்டவ்ரும் மலைஜாதியினரும் 8.33 %

இந்த அரசாணையில் சில மாற்றங்கள் செய்து 1947 நவம்பரில் ஓர் அரசாணை வெளியானது

G. O Ms No 3437 Public (Services) dated 21-11-1947

இந்த அரசாணையில் தான் பிராமணர் அல்லாதாரில் பிற்படுத்தப்பட்டவர்கள் என தனிப்பிரிவு முதன் முதலில் ஏற்படுத்தப்பட்டது.

இந்திய அரசமைப்புசட்டம் 26 ஜனவரி 1950 முதல் அமுல் செய்யப்பட்ட உடன் இந்த இரண்டு அரசாணைகளும் சக்தி இழந்தன

காரணம் சம்பகம் என்பவர் சென்னை இராஜதானி அரசுக்கு எதிராக தொடர்ந்த வ்ழக்கில் உச்ச நீதி மன்றம் 1951ல் அளித்த தீர்ப்பு

இந்திய அரசமைப்பு சட்டம் ஷரத்து 14 மற்றும் 15ன் கீழ் வழங்கிய சம உரிமைகளுக்கு எதிரான அம்சஙள் கொண்ட அந்த அரசாணைகள்

செயலிழந்தன‌

அரசமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த பின் அதற்கு முந்தைய அரசு ஆணைகள் சட்டங்கள் அரசமைப்பு சட்டத்தின் ஷரத்துகளுக்கு

முரண்பட்டவை ஆயின் அவை செல்லாதவை ஆகும்

சம்பகம் வழக்கின் தீர்ப்பு சென்னை இராஜதானியில் போராட்டத்தை தோற்றுவித்தது

இந்த போராட்டங்கள் குறித்து முத்துக்குமார் பதிவு செய்திருக்கலாம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் ஏற்படக் காரணமான இந்த போராட்டமும் அதை தொடர்ந்து நாடாளுமன்ற விவாதங்களும் நேருவின் முயற்சியும் நூலாசிரியர் கவனத்திற்கு கொன்டு வர ஆசைப்படுகிறேன்

நேருவின் நாடாளுமன்ற விவாத உரையினை இங்கே குறிப்பிடவும் ஆசைப்படுகிறேன்

The House knows very well and there is not need for trying to hush it up that his particular matter in this particular shape arose because of certain happenings in Madras ( Parliamentary Debates Volume XII - XIII Par 2 Column 9615)

இப்படி சில விடுதல்கள் இருந்தாலும் நூலாசிரியர் முத்துக்குமாரின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

மிகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், சரித்திர நூலாசிரியர் இராமசந்திர குஹா தனது காந்திக்குப் பின் இந்தியாவில் ஒரு செய்தி சொல்லியுள்ளார்.

"ஐரோப்பாவின் சில நாடுகளின் புவியியல் பரப்பை விட அதிக பரப்பளவு கொன்ட தமிழ்நாடு அதன் தலைவர்கள் , இயக்கம் குறித்து விரிவான் புத்தகங்கள் அந்த மொழியில் இல்லை"

இராமசந்திர குஹாவின் ஆதங்கம் முத்துக்குமாரி திராவிட இயக்க வரலாறு நூல் மூலம் தீர்க்கப்பட்டிருக்கிறது என திட்டமாகச் சொல்லலாம்

இது போன்ற ஆராய்ச்சி மனப்பாங்கு கொண்ட இளைஞரை ஊக்குவித்து நூலெழுத வாய்ப்பு தந்து , அதனை செம்மையாக அச்சிட்டு அழகுற வடிவமைத்து வெளியிட்டுள்ள கிழக்கினை மனதாரப் பாராட்டுகிறேன்.

முத்துக்குமாரின் முயற்சியில் விளைந்த இந்த நூல் தொகுதியினை ஒரு ரோஜாவைப் பார்க்கும் ஆர்வமுள்ள சராசரி ஆசாமி போல் இல்லாது அந்த ரோஜா மலர்வதில் அந்த தோட்டக்காரனின் உழைப்பினை ஒரு சகாவாக வியக்கிறேன். உழைப்பு, விடா முயற்சி இதனை இந்த நூலின் எல்லா இடத்திலும் காண முடிகிறது

நேரடியாக பின்னர் வாய்ப்பு கிட்டும் போது பிசிக்கலாகவே செய்கிறேன். இப்போது இணையம் வழியாக செய்கிறேன். எனது கரத்தினை முத்துக்குமாருக்கு நீட்டி கரம் குலுக்குகிறேன். நீங்கள் என் எதிரே இப்போது நிற்பதாக நினைத்து ஒரு சல்யூட் செய்கிறேன் முத்துகுமார்

கிரேட் வொர்க்..

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளிழ்

எனதறிவுக்கு அப்பாற்பட்ட செய்திகள் - ஆராய பொறுமை இல்லை - நூலாசிரியர் முத்துக்குமாரின் உழைப்பினை விட தங்களின் உழைப்பு அதிகம். கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்பதற்கேற்ப நூலாசிரையரைப் பாராட்டும் பாங்கு போற்றத்தக்கது. நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா