Monday 28 March 2011

யார் மாதிரி ஆளுக்கு ஓட்டுப் போடணும்


காமராஜருக்கு நிகரான தொண்டுள்ளமும், நேர்மையும், கண்ணியமும், தேசப் பற்றும் , எளிமையும் உள்ளவரா உங்களிடம் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர் என சிந்தியுங்கள். இல்லையெனில் நிராகரியுங்கள்.

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

பெருந்தலைவர் காமராஜரைப் போன்ற தலைவர்கள் இனிமேல் இந்தியாவில் இருக்க மாட்டார்கள். அவரின் காலம் முடிந்து விட்டது. சிந்தித்தால் அனைவரையும் நிராகரிக்க வேண்டி வரும். இருப்பவர்களில் சிறந்தவர்கள் யார் எனத்தான் பார்க்க இயலும்.

நல்ல சிந்தனை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

இதே வாக்கியத்தினை ப்ரிண்ட் எடுத்து என் இல்லக் கதவில் ஒட்டி வைத்திருக்கிறேன். வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம் அதை படிக்க சொல்லப் போகிறேன். வரி செலுத்துபவன் எனும் முறையிலும். ஜனநாயகத்தில் எனது பிரதிநிதி எப்படி இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பினை மிக எளிமையாக சொல்ல விழைகின்றேன். இது ப்ராக்ட்டிகலாக எந்த அளவு சாத்தியம் சாத்தியம் இல்லை எனும் வரன்முறைகள் தெரிந்தது தான். எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டுமல்லவா
தொடங்குவோம். இன்றைக்கு இல்லையெனினும் வருங்காலத் தலைமுறைக்காவது கிடைக்கலாம் அல்லவா.. என் மகள், உங்கள் குழந்தைகள்., நம் பேரப் பிள்ளைகளுக்கு கிட்டும் அல்லவா

S B Ravi said...

திரு மெளளி அவர்களே,

உங்கள் எண்ணம் வரவேற்கதக்கது தான்,ஆனால் இன்றைய சூழ்நிலையில், காமராஜருடன் ஒப்பிட்டு பார்க்க கூட ஒருவரும் கிடையாது. அதனால் இது நடைமுறைக்கு சாத்தியமா என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள். வரவேற்ப்போம் மாற்றங்களை....