இப்படித் தலைப்பைக் கண்டுவிட்டு, "அப்படி இப்படியான சங்கதிகளை" எதிர்நோக்கி வந்திருப்போரை ஏமாற்ற இருக்கிறேன். சமீபத்தில் வெளியான ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் பெயரிலேயே காண்டம் இருப்பதால்... என்பது போன்ற சில விஷயம் பொதிந்த சமாச்சாரங்களை ஃபேஸ் புக்கில் படித்தேன். உடனே சயின்டிபிக் அமெரிக்கன் இதழில் ஆணுறை தொடர்பாக படித்த கட்டுரை நினைவுக்கு வந்தது
ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனத்தின் வரலாறு குறித்த கட்டுரையினை பகிர்ந்து கொள்ளத்தான் எழுதுகிறேன்.
ஆணுறை எனும் சாதனத்திற்கு சுமார் 300 ஆண்டு வயசாகிறது, முன்பு விலங்குகளின் குடலைக் கொண்டு செய்து வந்தார்கள்;
இப்போதைய நவீன ஆண் கருத்தடை சாதனம் prophylactics எனும் ரப்பர் சங்கதியில் ஆனது. ஆண்களுக்கான மற்றொரு கருத்தடை ஆப்ஷன் வாசக்டமி எனும் கத்தி வைக்கும் சமாச்சாரம் ;vas deferens என்பதான விந்துக் குழாய்களை வெட்டி ஆணின் விந்து அணுக்கள் அதைத் தாண்டி பயணிக்காமல் செய்வது. இது ஒரு தரம் செய்து விட்டால் ரிவர்ஸ் செய்து கொள்ள இயலாது போலிருக்கிறது. இதற்கும் இப்போது தீர்வு காணும் வகையாக ஆராய்ச்சி நடக்கிறதாக சயின்டிபிக் அமெரிக்கன் சொல்கிறது ;
அதாவது விந்துக் குழாய்களை வெட்டுவதற்குப் பதிலாக அதை பாலிமர் ஜெல் போன்ற ஒரு வஸ்துவை வைத்து தடுப்பு உண்டாக்கி அது நாளாவட்டத்தில் கரைந்து போவது போல் செய்வது;
அந்தக் கட்டுரை அமெரிக்காவில் உண்டாகும் கர்ப்பத்தில் 50 சதவீதம் முன்னேற்பாடுகள் இல்லாமல் உருவானவை என சொல்கிறது
அதிலும் பாதி கருக்கலைப்பில் தான் முடிகிறதாம். பெண்களுக்கான கருத்தடை வழிமுறைகளை விட ஆண்களுக்கான முறைகளில் எப்படி முன்னேற்றம் காண்பது என்பது தான் இந்த விஷயத்தில் ஆராய்ச்சி செய்பவர்களிடம் அதிகம் காணப்படும் ஆர்வம் என்கிறது கட்டுரை. இதற்காக தனி ப்ராஜெக்ட்கள் உருவாகி வருகின்றன எனச் சொல்லி ஒரு தனி வெப்சைட் கூட இருக்கிறதாக சொல்கிறது
(http://www.newmalecontraception.org/)
கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அமோரி செய்துவரும் சுவாரசியமான ஆராய்ச்சிகளை கட்டுரை எளிமையாக விளக்குகிறது. மாதம் ஒரு கருமுட்டை என பெண்களும் ஒரு இதயத் துடிப்புக்கே 1000 விந்து அணுக்கள் என ஆண்களும் இரண்டு தரப்பட்ட ஸ்பீடில் கரு உருவாகும் சாத்தியங்களில் இயங்குவது அவருக்கு ஆராய்ச்சியில் பெரிய சவாலாக இருக்கிறதாம்.
இதைப் படிக்கும் போது எனக்கு Thomas Hunt Morgan நினைவு வந்தது
Thomas Hunt Morgan என்ற அமெரிக்க ஜெனடிக் இயல் விஞ்ஞானிக்கு 1933 ம்
ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிறக்கும் குழந்தை ஆணாகவோ
அல்லது பெண்ணாகவோ அமைய ஆணின் க்ரோமோசோம்களே காரணம் என்ற இவரின் ஆராய்ச்சி முடிவுக்காக இவருக்கு நோபெல்.
பாண்டவர்கள் 5 பேர் என்பதால் அவர்களின் பெயர்கள் நமக்கு சுலபமாக நினைவில் இருக்கிறது.
ஆனால் கௌரவர்கள் 100 பேர். பொதுவுல் துரியோதனன், துச்சாசனன் இவர்கள்
இருவரும் தான் பாப்புலர். மீதி 98 பேரைப் பற்றி பொது வழக்கில்
கேட்கப்படும் பாரதக் கதையில் சொல்லப்படுவதில்லை. அந்தக் குறை இல்லாமல் ஒரு அந்த் 100 பெயரையும் இங்கே சொல்லி செஞ்சுரி அடிச்சுடறேன்
1. துரியோதனன்
2. யுயுத்ஸு
3. துச்சாசனன்
4. துஸ்ஸஹன்
5. துச்சலன்
6. துர்முகன்
7. விவிம்சதி
8. விகர்ணன்
9. ஜலஸந்தன்
10. சுலோசனன்
11. விந்தன்
12. அனுவிந்தன்
13. துர்தர்ஷன்
14. சுபாஹு
15. துஷ்ப்ரதர்ஷணன்
16. துர்மர்ஷணன்
17. துர்முகன்
18. துஷ்கர்ணன்
19. கர்ணன்
20. சித்திரன்
21. உபசித்திரன்
22. சித்திராஷன்
23. சாரு
24. சித்ராங்கதன்
25. துர்மதன்
26. துர்ப்ரதர்ஷன்
27. விவித்ஸு
28. விகடன்
29. ஸமன்
30. ஊர்ணநாபன்
31. பத்மநாபன்
32. நந்தன்
33. உபநந்தன்
34. சேநாபதி
35. சுஷேணன்
36. குண்டோதரன்
37. மஹாதரன்
38. சித்திரபாஹூ
39. சித்திரவர்மா
40. சுவர்மா
41. துர்விரோச்னன்
42. அயோபஹு
43. மஹாபாஷு
44. சித்திரசாபன்
45. சுகுண்டலன்
46. பீமவேகன்
47. பீமபலன்
48. பலாகி
49. பீமன்
50. விக்கிரமன்
51. உக்ராயுதன்
52. பீமசரன்
53. கநகாயு
54. த்ருடாயுதன்
55. த்ருஷ்டவர்மா
56. த்ருஷ்டத்ரன்
57. சோமகீர்த்தி
58. அநூதரன்
59. ஜராசந்தன்
60. த்ருடசந்தன்
61. சத்தியசந்தன்
62. ஸஹஸ்ரவாக்
63. உக்ரச்ரவஸ்
64. உக்ரசேனன்
65. ஷேமமூர்த்தி
66. அபராஜிதன்
67. பண்டிதகன்
68. விசாலாஷன்
69. துராதனன்
70. த்ருடஹஸ்தன்
71. ஸுகந்தன்
72. வாதவேகன்
73. ஸுவர்ச்சன்
74. ஆதித்ய கேது
75. பஹ்வாசி
76. நாகதத்தன்
77. அநுயாயி
78. சுவசி
79. நிஷங்கி
80. தண்டி
81. தண்டாதரன்
82. தநுக்ரஹன்
83. அலோலுபன்
84. பீமரதன்
85. வீரன்
86. வீரபாஹு
87. அலோலுயன்
88. அபயன்
89. ரௌத்ரகர்மா
90. த்ருட்ரதன்
91. அநாத்ருஷ்யன்
92. குண்டபேதி
93. விராவி
94. தீர்க்கலோசனன்
95. தீர்க்கபாஹு
96. மஹாபஹூ
97. வ்யூமேரு
98. கனகாங்கதன்
99. குண்டஜன்
100. சித்ரகன்
இது தவிர திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் துச்சலை என்ற பெண் மகவு
உண்டு. திருதராஷ்டிரனுக்கும் ஒரு பணிப்பெண்ணுக்கும் யுயுத்சு என்று ஒரு
பையன் பிறந்தான். மேலே சொன்ன பட்டியலில் இரண்டாவதாக இருக்கும் யுயுத்ஸு வும் இந்த யுயுத்சுவும் வேறு வேறு
திருதராஷ்டிரனுக்கு பிறந்த 100+1+1 குழந்தைகளில் 101 ஆண் மகவுகள்.
Thomas Hunt Morgan திருதராஷ்டிரனின் க்ரோம்சோம்களைப் பற்றி ஆய்வு
நடத்தினால் இன்னொரு நோபெல் நிச்சயம். ஆனால் திருதராஷ்டிரனும் உயிரோடு இல்லை; Thomas Hunt Morgan 1945 லேயே போய்ச் சேர்ந்துட்டார்
9 comments:
அன்பின் மௌளி - வழக்கம் போல அரிய தகவல்கள் - இறுதியில் திருதராஷ்ட்ரணின் குரோமோசம்களை ஆராய வேண்டும் என்ற விபரீத ஆசையோடு - ம்ம்ம்ம்ம் -- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Hi - I am really glad to discover this. great job!
மெளலி,
இப்ப தான் முதல் முறையாக கெளரவர்களின் பெயர்களை உங்கள் மூலம் அறிந்தேன். ஆமா இதில் பல பெயர்கள் து, த வில் ஆரம்பிக்கின்றனவே! ஏதேனும் விசேஷ காரணங்கள் உண்டா?
@manjoorraja..
இதே கேள்வியைத்தான் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன் காந்தாரி தன் கணவனிடம் கேட்டாள்.(ஏங்க,ஏன் நம்ம குழந்தைகள் முக்காவாசி பேருக்கு து து என்று ஆரம்பிக்கும் பெயரா வச்சிருக்கீங்க?)அதற்கு அவர் சொன்னார்..
"7000 வருஷத்திற்கு பிறகு,கலியுகத்தில்
ஒரு ப்ளாக் சைட்டில் இதற்கான விடை கிடைக்கும்! அதுவரை காத்திரு"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருதராஷ்ட்ரனுக்கு பெண் குழந்தை வேண்டுமென ரொம்ப ஆசை.ஆனால் ஒவ்வொரு குழந்தை பிறந்து அது ஆண் என தெரிந்ததும்,அவர் "தூ இதுவும் பிள்ளையா!" என்று சொன்னதனால் அந்த குழந்தைகளுக்கு
து என்று ஆரம்பிக்கும் பெயர் வைக்கப்பட்டது.
The names of the 100 Kauravas, most of us would never know - not that it matters. The 98 of them were in the category of "also seen in the picture". But Mr. Ganpat's rejoinder is hilarious indeed!
வியத்தகு விளக்கம். கட்டாயம் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம் இந்த 102 பேர்கள். ஆனால் 101 குழந்தைகள் பெற்றெடுக்க காந்தாரி அம்மாவிற்குக் குறைந்த பட்சம் எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்? இதற்கு ஏதேனும் விளக்கம் உண்டா சகோ?
இந்த 101 ஒரு பெயர்களைப் பற்றி நன்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது அவர் கூறியது... ஹும்..இதென்ன பிரமாதம்..? அவர்கள் அத்தனை பேரு ஃபோட்டோவும் போட்டாத்தான் அவரை அறிவாளின்னு ஒத்துக் கொள்வேன் என்கிறார். ஏற்பாடு பண்ணுங்க சகோ... நாம யாருன்னு அவருக்கு காட்டுவோம்.
அமிர்தானந்தன்,
உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள், நான் அறிவாளி இல்லை எனச் சொன்னதாக
//அவர்கள் அத்தனை பேரு ஃபோட்டோவும் போட்டாத்தான் அவரை அறிவாளின்னு ஒத்துக் கொள்வேன்//
//உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள், நான் அறிவாளி இல்லை எனச் சொன்னதாக//
என்ன சார் இது! 2001,2006 மற்றும் 2011 தமிழக அமைச்சரவை போட்டோக்கள் இல்ல உங்களிடம்?
Post a Comment