இங்கே தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இப்போது சட்டம், அரசியல் என பல ரூபங்களை எடுத்து எப்போது கமிட்டி ரிப்போர்ட் தரும் எப்போது கோர்ட் விசாரிக்கும் எப்போது தீர்ப்பு வரும் அதை எதிர்த்து அப்பீலுக்குப் போவார்களா என்பதான விடை தெரியாத கேள்விகளுக்கு இடையே தினம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உபரியாக ஒரு தகவலைச் சொல்லலாம்
சயின்டிபிக் அமெரிக்கனில் வாசித்தேன்.
அமெரிக்க சர்க்காருக்கு விஞ்ஞானம் தொழில் நுட்பத்தில் ஆலோசனை சொல்லும் National Academies, என்ற அமைப்பு கவலையுடன் ஒரு சங்கதி சொல்லியிருக்கிறது. அதாவது பணக்கார நாடுகள் 29 ல் அமெரிக்காவின் விஞ்ஞானம் மற்றும் இன் ஜிநியரிங் மாணவர்கள் 27 வது இடத்தில் தான் இருக்கின்றார்கள். இப்படி சொல்லிவிட்டு அந்த அமைப்பு அமெரிக்காவின் அனைத்து மாஹாண சர்க்காருக்கும் ஃபெடரல் அமெரிக்க சர்க்காருக்கும் ஓர் அறை கூவல் விடுத்திருக்கிறது : பள்ளி அளவில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் பாடத் திட்டம் போதனை முறைகளில் பெருமளவில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும் ; இதில் ஆசிரியர்களுக்கான பயிற்சியும் தேவை
சயின்டிபிக் அமெரிக்கன் 1000 நாட்களில் 1000 விஞ்ஞானிகள் எனும் திட்டத்தினை தொடங்கியிருக்கிறது. இதில் பள்ளி மாணவர்களின்
வகுப்பறை சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் பதிலளிக்க ஏற்பாடு செய்யப்படும் ; இதில் தொலைத் தொடர்பு என்ற நிலையில் இருந்து விஞ்ஞானிகளை பள்ளிகளுக்கு விசிட் செய்ய வைப்பதும் உண்டு;
இங்கே கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகளில், மற்ற் நிகழ்ச்சிகளில் சர்வ தேச அளவில் இயங்கும் விஞ்ஞானிகள் சப்ஜெக்ட் மேட்டர் எக்ஸ்பெர்ட்களை வரவழைத்துப் பேச வைக்கின்றார்கள். கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. அப்படியே அவர்களை அருகே இருக்கும் பள்ளிக்கு ஒரு மணி நேரம் வாருங்கள் என அழைத்துச் செல்ல யாராவது முன் வர வேண்டும்
2 comments:
இங்கே தான் புதிதாக ஒரு திட்டமோ அல்லது மாற்றுத் திட்டமோ கொண்டுவந்தால் அரசியலாக்கி விடுவோமே?... வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில், நம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கண்களுக்கு இது போன்ற நல்ல விசயங்கள் படாதது ஏன்?
அன்பின் மௌளி - சிந்தனை நன்று - நடைமுறைப்படுத்த இயலுமா ? வருபவர்களோ சர்வதேச புகழ்பெற்ற விஞ்ஞானிகள் - அவர்களைப் பள்ளீக்கு அழைத்து - பள்ளிப் பிள்ளைகளிடம் உரையாட வைப்பது இயலுமா ? இருப்பினும் முயல்லாம். நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா
Post a Comment