Sunday 3 July 2011

இலங்கை‍ -தனி ஈழம்- தமிழ்நாடு


சமீபத்தில் சென்னைக் கடற்கரையில் இலங்கைத் தமிழர்கள் நினைவாக மெழுகுவர்த்தி சுடர் ஏந்திய நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. ஆங்கே எதிர்பார்த்தது போல விடுதலைப் புலிகளை ஆதரித்த கோஷங்கள் கேட்டன. புலிக் கொடி ஐநாவிலே விரைவில் பறக்கும் எனும் தனி நாடு கோரும் பேராவல் மிக்க குரலும் அதிலே கலந்திருந்தது.

இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் பெருமளவில் உயிரிழந்தமைக்கு அங்கிருக்கும் அரசின் போர் நடவடிக்கைகள் மட்டுமே காரணம் எனும் நினைப்பும் யூகமும் பரவலாக இருக்கின்றது. ஆனால் ஒரு யாதார்த்தத்தினை மறந்து விட்டதன் விளைவும் அந்த மரணங்களுக்கு காரணமாக இருக்கின்றதென்பதனை மறந்துவிடலாகாது

தமிழீழம் எனும் மாயக் கனவே அத்தனை உயிர்ப்பலிக்கும் காரணம். இதனை மாயக்கனவு என நான் சொல்வதால் சிலர் காயப்படலாம்.

ஆனால் இந்திய கடல் எல்லையில் ஆயுதம் வழியாக ஒரு நாடு உருவாக்கிட இந்தியா துணையிருக்கும் எனும் சாத்தியமில்லாத அம்சத்தினை துணை கொண்ட போராட்டம் புலிகளின் போராட்டம். . புறத்தே இருந்து ஆதரவு பெறாது தங்களால் இலங்கை அரசினை எதிர்த்து தனி நாடு அமைத்து அதனை நிர்வகித்துக் கொள்ளும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததில்லை.

இன்றைக்கு அங்கே தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைகளை பேசிப் பெறுவதற்கு ஓர் அரசியல் ரீதியான அமைப்பினை அமைத்துக் கொள்ளும் சாத்தியத்தினை முற்றிலும் இல்லாமல் செய்து விட்டது புலிகளின் போராட்டம்

இன்றைக்கு நம்பிக்கை எந்த அளவில் இருக்கிறதென்றால்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் குரல் எழுப்பி, அதனால் ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டு பின்னர் புதிய தலைமை அமைந்து.... கானல் நீரினும் மாயை கொண்ட அம்சமாக அல்லவா இருக்கின்றது.

இந்த கானல் நீரையும் தங்கள் தாகம் தணிக்கும் நீராக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவ்வப்போது நம்பிக்கை துளிர்க்க, செய்தி

ஊடகங்கள் ஐநா அறிக்கை... அவர் கண்டனம் இவர் கண்டனம் என செய்திகளை வாரி வழங்குகின்றன. இது போன்ற செய்திகளை கவனிப்பவர்கள் கவனத்திற்கு இரண்டு முக்கிய அறிக்கைகளை முன் வைக்கலாம்

Francisians International எனும் அமைப்பு ஐநாவுக்கு அளித்த அறிக்கை. அதனை இந்த சுட்டி வாயிலாக வலை ஏற்றியுள்ளேன்.


புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த போராட்டத்தின் போது புலிகளின் பிடியிலிருந்து தப்பித்து முகாம்களுக்கு செல்ல முயன்ற தமிழர்கள் புலிகளால் தடுக்கப்பட்ட உண்மை அந்த அறிக்கை சொல்லுகிறது ; அப்படி தப்பிச் சென்றவர்களை சுட்டுக் கொன்ற விபரத்தினையும் Asian Forum For Human Rights and Development எனும் அமைப்பு ஐநாவுக்கு அளித்த அறிக்கையில் (இந்த சுட்டியில்
வலையேற்றியுள்ளேன்) விபரமாக சொல்லியுள்ளது. http://www.scribd.com/doc/59211011/G0911990

புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை; காரணம் நாம் எப்போதும் தமிழ்ப் பெருமை பேசுவது வழக்கம்

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்


பசுக் கூட்டம், பார்ப்பனர், பெண்கள், பிணியால் பீடிக்கப் பட்டவர், மறு உலகம் (அதான் சொர்க்கம்/ நரகம் )(இது தான் தென்புலம்) போய்ட்டவங்களுக்கு செய்ய வேண்டிய கடன்களோ செய்ய் பிள்ளையே இல்லாதவங்களையும் போர் நடக்கும் இடத்திலிருந்து விலக்கி வைப்பர்

ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதை நாமெல்லாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம்.

ஒசாமாவின் அல்கொய்தா குறித்த சிறந்த வரலாற்றுப் பார்வையும் பதிவும் செய்திருக்கும் ப்ரிடிஷ் பத்திரிகையாளர் Glen Jenvey சொல்வதைச் சற்று கவனிக்கலாம் ( பார்க்க இந்த சுட்டி)

http://www.asiantribune.com/index.php?q=node/4518

சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் உச்சம் என அறியப்பட்ட அல்கொய்தா விடுதலைப் புலிகளின் வழி நின்று பயங்கரவாதம் செய்யும்

சங்கதியை அவர் தெரிவிக்கும் எச்சரிக்கை செய்தி.

இஸ்லாமிய உரிமை , ஜிகாத் எனும் பெயரில் அல்கொய்தா செய்வதும் தமிழ் தமிழர் எனும் பெயரில் புலிகள் செய்ததும் ஒன்றே... தீவிரவாதம்.

புலிகளையே இன்னும் தங்கள் காவலர்களாக ஏன் காவல் தெய்வங்களாக நினைக்கும் இலங்கை வாழ் தமிழர்களும் அவர்களுக்கு இங்கே ஆதரவுக் குரல் எழுப்பும் அன்பர்களுக்கும் மீண்டும் நினைவு செய்ய விரும்புவது

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் பரந்த கடற்பரப்பில் மட்டும் உப்பு கலந்திருக்கவில்லை. இந்தியா மனிதாபிமான அடிப்படையில் செய்த / செய்து கொண்டிருக்கும் அத்தனை உதவி நிவாரணத்திலும் உப்பு கலந்திருக்கிறது; அந்த உப்புக்கு எதிர்மறையாக நடந்து கொண்ட புலிகளுக்கு ஆதரவான குரல் இலங்கைத் தமிழரின் குரலில் கலந்திருக்கின்றதைக் கவனித்தே இருக்கின்றோம்.

அன்பின் வடிவமான பௌத்தத்தினையும் நாங்களே உங்களுக்கு வழங்கினோம். எங்களுக்கு பௌத்தம் மட்டுமே தரத் தெரியும் என நினைக்க வேண்டாம்




4 comments:

Ramachandranwrites said...

நெஜமாகவே புரியலைங்க, நீங்க என்னதான் சொல்ல வரேங்க ? இக்கட்டான ஒரு சுழலில் நாம் நமது சகோதர்களை கை விட்டு விட்டோம் என்பது உண்மை. புலம் பெயர்த்து இங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை நாம் கவனிக்கவே இல்லை என்பதும் உண்மை. இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று சிங்கள அரசாங்கத்தை சொல்ல வைத்தோம். முப்பது மைல் தொலைவில், இனம் அழிவதை வேடிக்கை பார்த்தோம். சக மனிதர்களாக கூட எண்ணம் வராமல், செய்வது அறியாமல் இருந்தோம். பிரச்சனயை திசை திருப்பும் எல்லா வேலைகளையும் நாமே செய்தோம். பொறுப்பை எடுக்காமல் மற்றவர் மீது பழி சுமத்தினோம்.

இந்த பாவத்தின் கறை இனி நம் மீதும் நம் தலைமுறைமீதும் மாறாத வடுவாக இருக்கும். வரலாற்றின் பக்கங்கள் நம்மை பேசா மடந்தைகள் என்றே பதிவு செய்யும்.

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை செய்தோம், நாம் வெறும் வாய் சொல்லில் வீரர்கள் தான்.

vshe.blogspot.com said...

hi Moulee,

My compliments for presenting a contrarian view when the sentiments are running high.

LTTE destroyed every single opportunity that came its way (Read as Japanese and Danish help) for autonomy to the North Eastern Region.

They got into trafficking, drug/weapon running earning the International wrath and sanctions.

Had LTTE resorted to peaceful way of negotiations and converting themselves to a political party under the constitution of SL, things would have ended different.

They continued to be a fearful terrorist and anti-democratic organization with nefarious links.

While no one can discredit LTTE for empowering Tamils and standing up against Sinhalese atrocities, LTTE should have softened when things were going in their favor.

Today they have become the single largest cause for SL Tamil's plight today.

By eliminating Rajiv within Indian territory they have lost the support of the ruling Indians forever.

No amount of candle light vigil is going to restore what is lost in SL Tamil territory.

SL Tamils need to start afresh from the scratch, probably the same way, how their forefathers landed in SL few centuries ago.

கருணாகார்த்திகேயன் said...

என்ன சொல்ல வரிங்க மௌலி தெளிவு படுத்தவும் ...

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

Amirthanandan said...

//இன்றைக்கு அங்கே தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைகளை பேசிப் பெறுவதற்கு ஓர் அரசியல் ரீதியான அமைப்பினை அமைத்துக் கொள்ளும் சாத்தியத்தினை முற்றிலும் இல்லாமல் செய்து விட்டது புலிகளின் போராட்டம்// இது எனது நீண்ட நாள் கருத்து சகோ! அரசியல் தீர்வு காணக் கிடைத்த பல நல் வாய்ப்பினை உதறித் தள்ளியது புலிகளின் மிகப் பெரிய குற்றங்களில் ஒன்று. நார்வேயின் முயற்சிகள் அனைத்தையும் புலிகள் தனது வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்தியது ஊரறிந்த ரகசியம்.
http://agappaattu.blogspot.com/2011/05/blog-post_17.html
(சும்மா எனக்குத் தெரிந்த அரகுறை விபரத்தை வைத்து கிறுக்கி வைத்துள்ளேன்.)

//இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் பரந்த கடற்பரப்பில் மட்டும் உப்பு கலந்திருக்கவில்லை. இந்தியா மனிதாபிமான அடிப்படையில் செய்த / செய்து கொண்டிருக்கும் அத்தனை உதவி நிவாரணத்திலும் உப்பு கலந்திருக்கிறது; அந்த உப்புக்கு எதிர்மறையாக நடந்து கொண்ட புலிகளுக்கு ஆதரவான குரல் இலங்கைத் தமிழரின் குரலில்//
எனது நீண்ட நாள் சந்தேகமும் அதுதான். நிஜமாகவே ஈழம் எனும் தனி நாடுதான் தேவை எனில், அதற்காக போராடாமல் புலிக் கோசம் மட்டுமே போடுவது, "தன்னை முன்னிருத்திக் கொள்வதற்கான முனைப்பே" ஒழிய வேறென்ன சொல்ல?