Saturday, 26 March 2011

துக்ளக் 30 மார்ச் 2011


பொங்கரில் நுழைந்து வாவிபங்கயம் துழாவி
பைங்கடி மயிலைமுல்லை மல்லிகைப் பந்தர்தாவி
கொந்தலர் மணம் கூட்டுண்டு குளிர்ந்து
மெல்லென்று தென்றல் அங்கங்கே கலைகள்தேரும்
அறிவன்போல் இயங்கும் அன்றே'


இந்த திருவிளையாடல் புராண பாடலுக்கும் இந்தப் பதிவின் தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்கும்

பாடல் ஓர் அறிவன் எப்படி அறிவைத் தேடுவான் என்பதைக் குறித்து. தென்றல் எப்படி பல மலர் வாசனை , குளத்தின் குளிர்ச்சி இதெல்லாம் தேடி வந்து வீசுதோ அது போல அறிவன் இயங்குவான். இது அறிவனுக்குப் பொருந்தும்.

அதாவது தேடிப் பெறுவது

கூகிளில் தேடிக் கிடைக்கவில்லை என சாருநிவேதிதா துக்ளக்கில் சொல்லியிருக்கிறார்

என்ன கிடைக்கவில்லையாம். இதோ 1983 ம் வருடம் மறைந்த வைணவப் பெருந்தகை பிரதிவாதம் பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் பற்றிய விபரம் கிடைக்கவில்லையாம்.. அதற்கு இரண்டு நாள் சிரமப்பட்டதாக வேறு சொல்லியிருக்கிறார்

இதோ இந்த சமீபத்திய காலத்தில் மறைந்த ஒருவரின் விபரம் கிடைக்காமலா போகும்.. கூகிளில் நீங்கள் என்ன தேடுவீர்களோ அது தான் கிடைக்கும் என என் நண்பர் நலம் பெறுக அடிக்கடி கூறுவார்.

இந்த சுட்டியில் அன்னார் ஜூன் 21 1983 அன்று திருநாடு ஏகினார் எனும் தகவல் முதல் தேடலிலேயே கிடைக்கிறது


http://www.acharya.org/acharya/pba/Vaibhavam-PBA-TSR.htm

அன்னார் 1207 புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என மிகத் துல்லியமாக தேடித் தகவல் பெற இயன்றவருக்கு அன்னார் பிறந்தது, இறந்தது தேதி விபரங்களை தேடிப் பெற முடியவில்லையா ? ஆச்சரியம் தான்

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்களின் பேட்டி மார்ச் 1979 கீதாச்சாரியான் இதழில் வெளியாகியிருக்கிறது. துக்ளக்கில் சாருவின் கட்டுரையில் காணப்படும் தகவல்கள் அங்கே முழுவதும் இருக்கு

http://thiruvonum.wordpress.com/2010/11/01/an-interview-with-pba-swamy-1979/

எங்கே கிடைக்கும் அரிய பொக்கிஷம் என வேறு கேட்டிருக்கிறார். ரொம்ப தேடிக் களைத்தவருக்கு உதவிட வேண்டாமோ

http://www.maransdog.org/document/

இந்த சுட்டியில் டிசிஏ வெங்கடேசன் ஸ்வாமி என்பவர் தொகுத்திருக்கிறார் பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரின் வியாக்கானங்கள் அனைத்தும் இங்கே பிடிஎஃப் கோப்பாக கிடைக்கிறது

இந்த சுட்டியில் உள்ள ஓர் உப சுட்டியில் அண்ணங்கராச்சாரியாரின் சுயசரிதை (அவரது மொழியில் தன் சரிதை) சுமார் 23 எம்பி அளவில் பிடிஎஃப் கோப்பாக இலவச டௌன் லோடுக்கு கிடைக்கிறது

இந்த சுய சரிதை 1956ல் முதல் பதிப்பாகவும் 1970 ல் மறு பதிப்பாகவும் வந்திருக்கிறது

உப சுட்டி :http://www.maransdog.org/doc/VEDICS/TSS-PBA.zip

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரை குறித்து எழுத ஆசை எனச் சொல்லியிருந்தால். துக்ளக் ஆசிரியர் சோ. இராமசாமி அவர்களிடமே நிறைய குறிப்புதவிகள் கிடைத்திருக்கும்

இந்து மஹா சமுத்திரம், மஹாபாரதம் பேசுகிறது, வால்மீகி இராமாயணம் என நூல்களில் பல ரெபரென்ஸ் மூலம் தனது அத்தாரிட்டேட்டிவ் ரைட்டிங்கை மீண்டும் நிரூபித்திருக்கும் திரு சோ. ராமசாமி தனது பத்திரிக்கையில் வெளிவரும் ஒரு கட்டுரையின் தரம் குறித்து கவலைப்ப்டமாட்டாரா. அப்படி ஒரு கட்டுரை மிகவும் சரியான தகவல்களுடன் இருக்க வேண்டும் என நினைக்க மாட்டாரா ?

கண்டிப்பாக நினைப்பார் என நம்பிக்கை கொள்கிறேன்.

இந்தப் பதிவு குறித்த தகவலை அவருக்கு மின்னஞ்சல் செய்கிறேன்

8 comments:

Anonymous said...

மௌளீ,

துக்ளக் பின்னட்டை விளம்பரம் பார்த்திருகின்றீர்களா, லேகிய வைத்தியர்கள் விளம்பரம் தான் இருக்கும்

சாரு காசு கொடுத்து துக்ளக்கில் எழுதும் லேகிய வைத்தியன்

விட்டுத் தள்ளுங்கள்

ராம்

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

கவலை வேண்டாம். சாரு தானே - அப்படித்தான் இருக்கும் - சோவிற்கு இதனை எல்லாம் படித்து திருத்தம் செய்ய நேரம் இருக்காது. உதவியாளர்கள் கவனிக்க வில்லை போலும். நட்புடன் சீனா

Karthick said...

ஒரு எழுத்தாளன் எழுதுவதைவிட, தன் எழுத்துக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டவும்,அப்படிக்கிடைத்த ஆதாரங்களை சரிபார்த்தலிலும் அதிக நேரம் செலவழிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.ஏற்கனவே,பாரதியின் மொழியாக்கம் பற்றிய தவறான ஆதாரங்களைக் கொடுத்து பிறகு மழுப்பினார்.இம்முறை,அண்ணங்காச்சாரியாரைப்பற்றி.சாரு, இதை ஒத்துக்கொள்வதும்,மழுப்புவதும் அவரது விருப்பம்.ஆனால்,தமிழ் வாசகனின் தரம் தாழ்வானது அல்ல என்பது நிறைய முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.இன்னொரு முறை அதை நிறுவியதற்கு நன்றி.

நலம் பெறுக said...

அன்பின் சந்திரமௌளீ
வணக்கம் நலமா

பிரதிவாதி பயங்கரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் சுப்பு செட்டியார் எழுதியது இங்கே நமது சென்னை கன்னிமரா நூலகத்திலே இருக்கிறது.
ஐரனி என்னவென்றால் அந்த பழைய புத்தகத்தின் பதிப்பாளார் நிவேதிதா பதிப்பகம்
தனது புத்தகம் அமெரிக்க லைப்ரரியில் இருக்கிறது என புகழ் பாட விழைந்த சாரு இந்த புத்தகம் இங்கே சென்னையிலேயே இருக்கிறது என்பதை சரி பார்த்துக் கொள்ள விழையவில்லை என்பது சிந்தைக்குரியது

நலம் பெறுக said...

ஜெயமோஹன் தனது தளத்தில் திவ்ய ப்ரபந்த தளம் ஒன்றைக் குறித்து அறிமுகம் செய்ததைப் படித்திருப்பீர்கள் அதில் பிரதிவாதி குறித்த குறிப்பு இருக்கிறது.

இவருக்கும் ஆர்வம் துளிர் விட இந்தக் காரணம் போதாதா

நலம் பெறுக said...

சந்திரமௌளீ

வடகலை தென்கலை சம்ப்ரதாயங்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் பிரதிவாதி பயங்கரம் அவர்கள் ப்ரைவி கௌன்சில் வரை சென்று தீர்ப்பான விபரம் அதே மாரன் டாக்ஸில் பார்த்திருப்பீர்களே
http://www.maransdog.net/RRamanujam/PRIVY_COUNCIL.pdf

Anonymous said...

Every writer has a unique style and the reader comes to him expecting that style only. If a reader comes with a different expectation, woe betide him, as it has done to u !

CN is an ordinary man with the pretensions of an extra ordinary.

'Love me and love my dog' is an Eng proverb. He seems to b reminding us of that !

I love his pretensions.

Abt PBS, see my next comment pl

Anonymous said...

There r many types of Hindu. But for present purpose, let me take 3;

1. The strict adherents of Northern brand of Srivaishnavism (Vadagalaiyaar)

2 The strict adherents of Southern brand of Srivaishnavism (Thengalaiyaar)

3. The common Hindus.

Srivaishnavism is TN based, its core philosophy or theology flows from Azhwaars, nursed and developed by Ramanujar and florished under succeeding Acharyaars.

Vadagaiyaars are also Srivaishnavites in the sense they take Ramanujar their guru; but between Azhzvaars' paasurams and Sanskrit Vedas, they give primacy to the latter.

PBS belongs to no.2. Whether u r no 1 or 2,in both cases, the adherents do not accept Sivan and His family as their Gods.

PBS led a life of devotion and adherence to Thengalai. Naturally he had many occasions to attack Saivites like Periyavaal. His attack on arranging a combined function to celebrate Thiruppavai and Thiruvembaavai done by Periyavaal was well known.

In general life, all that I wrote above is unknown and unimportant. No 3 takes that view to which belongs Cho, Dondu Ragavan and innumerable Hindutava adherents, according to them, no division exists in Hindu religion.

This explains why Cho does not care what CN writes about PBS.

My lib at home has a collection of PBS works; and all that I am writing on Thengalai Srivaishnavism in internet fora, is sourced from PBS.

PBS is new to many, including CN and hated by such Hindus who comment in DR's blog as he contended with others for the sake of Thengalai Srivaishnavism.

But he is the beloved acharyaa to his followers.