Saturday 19 March 2011

பக்கம் பக்கமாய் 5


எனக்கு "அ"னாவுக்கும் ராசி அதிகம். இந்த ராசியில் அநிருத்தன்,அனானிமஸ் கமென்ட்டர்கள், அனாமதேயங்கள் போன்றவையும் அடக்கம். கவனிக்க இங்கே.

இதல்லாமல் "அ"னாவோடு அற்புதம், அம்சம், அட்டகாசம் என்பதான சுபச் செய்திகளும் உண்டு.. இந்தப் பதிவு சுபச் செய்தி குறித்து.

எப்போதோ அங்கும் இங்குமாய் வாசித்து அனுபவித்த அசோகமித்திரன் அவர்களின் கட்டுரைகளின் அருமையான தொகுப்பு . இது இரண்டாம் பாகம். முழு தொகுப்பையும் இங்கே சிலாகித்துக் கொண்டிருந்தால்.. அதற்கு மட்டுமே நேரம் முழுமையும் தேவைப்படும்.

சில சில இடங்களைத் தொட்டுக் காட்டினால் படிப்பார்வம் உள்ளவர்க்ள் தேடிப் போய் வாங்கி வந்து படித்துவிடுவார்கள்..

மிகத் தீவிரமான சங்கதிகளைக் கூட எளிமையாகச் சொல்ல இயலும் என்பதற்கு அசோகமித்திரன் அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.. இன்னும் அழுத்தமாகச் சொல்லப்போனால் தீவிரம் என்பதாக சிலர் ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எளிமையாகத் தான் சொல்லவேண்டும் என்பது அவர் மறைமுகமாக உரைக்கும் சங்கதி

வில்லியம் ஃபாக்னர் குறித்த கட்டுரையில்

ஃபாக்னர் இறுதி வரையில் தம்முடைய நாவல்களில் குரூரமும் விபரீதச் சேர்க்கையும் பாப உணர்ச்சியும் பயங்கரமும் திசையற்ற மனநிலையும் பற்றியே அதிகம் எழுதினார். ஆனால் மிகவும் சூட்சுமமான பார்வை கொண்டு மனித வாழ்கையின் அடித் தளத்தையே பிரதிபலிக்க எழுதினார் என்பதும் எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடியது. மனிதப் பிறப்பின் அபத்த நிலையும், இன்றைய சூழ்நிலையை எதிர்க்க சக்தியற்றவனாக மனிதன் இருப்பதுவும் தான் அவர் எழுதியதன் சாரம் என்பார்கள் (The absurdity of the human condition and moder man's inability to cope with existence)

விமர்சனம் எழுதுவதற்கு முன்பு நிறைய உழைக்க வேண்டும் என்பது என் சித்தாந்தம். தகவல்கள் அளவிலும் . கோணம், பர்சப்ஷன் என்பதிலும் ஒரு தேர்ந்த வாதத்தின் கல்யாண குணங்கள் கொண்டு விமர்சனத்தில் ஸ்ருதி கூட வேண்டும். இதில் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை என ஒரு பிடிவாதம் வைத்திருக்கிறேன்.

நான் படித்த ப்ரேமித்த விமர்சனங்களில் க.நா.சு அவர்களுடையதை முதன்மையானதெனச் சொல்லலாம்

க.நா.சு அவர்கள் குறித்த அசோகமித்திரன் அவர்களது கட்டுரைகளிலிருந்து சில வரிகளைக் கவனிக்கலாம்.

அவர் அறிவுபூர்வமாக தன் கணிப்புகளை எடுத்துக் கூறுவது அதற்கு மறுப்பு கூற இடமில்லாமல் அவர் வாதங்கள் இருப்பதால் எவ்வளவோ பேருக்கு கோபமூட்டியிருக்கிறது. கோப மூட்டுகிறது


க.நா.சு வின் பரிஷார்த்த முயற்சிகள் குறித்து அசோகமித்திரனின் வரிகள்

எவ்வளவு எளிமையாகவும் ஆழமானதும் என கவனியுங்கள்

ஒருவர் முதன் முதலாக ஏதோ கூறியிருக்கிறார் என்பதால் மட்டும் அது நித்ய சத்யமாக ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை. ஆனால் ஒருவர் எடுத்துக் கூறுவதால்தான் அப்பொருள் குறித்து மேற்கொண்டு பரிசோதனை நடத்த ஒரு தளம் அமைகிறது. ஆதலால் முதன்முதலாக ஒன்றைப் பற்றி ஒருவர் கூறும் கருத்தும் கணிப்பும் முக்கியத்துவமும் மதிப்பும் பெறத்தான் செய்கின்றன‌

கிழக்குப் பதிப்பகத்தை பாராட்டுகிறேன். நேர்த்தியான அச்சு. மிகச் சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இன்டெக்ஸ் அமைத்து புத்தகங்கள் வருவதில்லை. ஆனால் இந்த புத்தகம் மிகச் சிறப்பாக இன்டெக்ஸ் செய்யப்பட்டுள்ளது. ரெஃப்ரன்ஸ்க்கு மிகவும் வசதியாக இருக்கும்.

வெல்டன் கிழக்கு

சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கத் தொகுப்பின் முன்னுரையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொன்னது நினைவுக்கு வருகிறது

சுஜாதா இந்தப் பத்திகளில் எத்தனை விதமான பொருள்கள் குறித்தும், ஆளுமைகள் குறித்தும் , படைப்புகள் குறித்தும் பேசியிருக்கிறார் என ஒரு பொருளடைவு தயாரித்தால் அது மிகவும் பிரமிப்பூட்டுவதாக இருக்கும்,


அது போல அசோகமித்திரனின் கட்டுரைகளின் தொகுப்பில் உள்ள இன்டக்ஸைக் கவனிக்கும் போது பிரமிப்பும் மதிப்பும் உண்டாகிறது.

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

அசோகமித்ரனின் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பினைப் பற்றிய - தொட்டுக் காட்டிய சில இடங்கள். தேடிப்போய் வாங்கி விடுகிறேன்.

//விமர்சனம் எழுதுவதற்கு முன்பு நிறைய உழைக்க வேண்டும் என்பது என் சித்தாந்தம். தகவல்கள் அளவிலும் . கோணம், பர்சப்ஷன் என்பதிலும் ஒரு தேர்ந்த வாதத்தின் கல்யாண குணங்கள் கொண்டு விமர்சனத்தில் ஸ்ருதி கூட வேண்டும். இதில் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை என ஒரு பிடிவாதம் வைத்திருக்கிறேன்.// - நல்லதொரு விம்ர்சனின் முக்கிய குணங்கள்.

கணையாழியின் கடைசிப் பக்கத் தொகுப்பு (சுஜாதா)- புரட்டி இருக்கிறேன். படித்ததில்லை. படிக்கிறேன்.

நல்லதொரு விமர்சனம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

RVS said...

உங்களது 'அ'னா 'ஆ' போட வைக்கிறது. நல்ல மதிப்புரைக்கு நன்றி சார்! ;-)

Rathnavel Natarajan said...

உங்கள் பதிவு இப்போது தான் படிக்கிறேன். மகிழ்ச்சி சார்.