Sunday, 5 June 2011

தலைமைச் செயலகம் பார்ட் 4



இப்படியாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது என அப்போதைய ஜெ அரசு முடிவு செய்த இடத்தில் அமைய உள்ள கட்டிடத்தின் வடிவமைப்பினை தயார் செய்யும் நிறுவனத்தினை இறுதி செய்ய டென்டர் விடப்பட்டு அதில் ஆறு பேர் கலந்து கொண்டு அதில் சி.ஆர் நாரயண ராவ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அரசாணையும் வெளியடப்பட்டது .
பொதுப்பணித் துறை கட்டிடங்கள் பிரிவு அரசாணை எண் : 1184 நாள் 8 அக்டோபர் 2003

கட்டுமானப் பணிகள் தொடங்க இருந்த நிலையில் இந்த திட்டத்தினை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இப்படி கட்டிடம் கட்டுவது சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் புறக்கணிப்பதாக உள்ளது, ஏற்கனவே மஹாபலிபுரம் அருகே அரசு நிர்வாக நகரம் அமைக்க அரசு உத்தேசித்துள்ள நிலையில் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது ஒரு தற்காலிக முயற்சி இதற்கு இத்தனை செலவு தேவையா, உள்ளிட்ட பல கோணங்களில் பலர் இதனை நீதி மன்றத்தில் எதிர்த்தனர்

நீதி மன்றம் அரசு கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்க தடையேதும் இல்லை என சொல்லி மனுவைத் தள்ளுபடி செய்தது

ஆனாலும் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தினை ஜெ அரசு தொடரவில்லை

இதற்கு முன் இராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் அந்த கல்லூரியினை இடித்து விட்டு அங்கே தலைமைச் செயலக வளாகம் அமைக்கலாம் எனும் முந்தைய ஜெ அரசின் திட்டம் ( ?! ) குறித்துப் பார்க்கலாம்

1914 ம் வருடம் மதராஸ் பெண்கள் கல்லூரி எனத் தொடங்கப்பட்ட மிகப் பழமையானதொரு கல்வி நிறுவனம் சென்னைக் கடற்கரைக்கு எதிரே தமிழக காவல் துறை தலைமை அலுவலகத்தின் அருகே உள்ள இராணி மேரிக்கல்லூரி. இப்படியானதொரு சரித்திரப் புகழ்வாய்ந்த கட்டிடம் முந்தைய ஜெ அரசின் பார்வையில் விழுந்தது. தலைமைச் செயலகம் கட்ட இந்த வளாகம் தேர்வானது ; இருக்கும் கட்டிடம் இடிக்கப்படவும் ஆணை பிறந்தது

(தொடரும்)

3 comments:

Venkat said...

Sir!
I have a query regarding the difference in purpose and value of the two entites :
1.Government Order (Vs)
2.A law passed in state assembly

Could the state govt always issues GOs for all its orders,in place of passing a law?

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

Venkat

GO is an executive order issued to implement

Law is statute enacted in legislatures

Venkat said...

Sir,Can a govt implement everything it wants vi GO,instead of passing a law?
for ex,a govt having a tender lead in assembly achieve all its needs via go rather than risking the pass of a bill?