ஒரு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி, அதிலிருக்கும் சங்கதிகளை உறுதி செய்து கொள்ள, அங்கிருந்து இன்னொரு புத்தகத்திற்கு தாவி, இப்படியாக ரிலே ரேஸ் போன்றது என்னுடைய படிக்கும் வாடிக்கை.. ஆனால் இதெல்லாம் புத்தகத்தின் உள்ளே பல பக்கங்கள் கடந்த பின்பு நடக்கும், தாவுதல் மீண்டு வருதல் எனும் எனும் நடவடிக்கைகள்
ஆனால் ஒரு புத்தகத்தின் முகப்பிலேயே இப்படி தாவும் சாத்தியம் உண்டானது, The Emperor of All Maladies - by Sidhartha Mukherjee எனும் புத்தகத்தில்..
கான்சர் குறித்ததான இந்த புத்தகத்தை எழுதிய கான்சருக்கான வைத்தியரான முகர்ஜி இருப்பது நியூயார்க்கில்.
இந்தப் புத்தகத்தின் முகப்பில் ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் A Study in Scarlet எனும் கதையிலே ஷெர்லக் ஹோம்ஸ் பேசுவதான வசனம் , In Sloving a Problem of this sort, the grand thing is to be able to reason backgrounds. That is a very useful accomplishment, and a very easy, but people do not practice it much என்று படித்தவுடன்,ஷெர்லக் ஹோம்ஸ் கதைத் தொகுப்புகளுக்குப் தாவிபோய் மீண்டும் ஒரு முறை சிலாகித்துப் படித்துவிட்டு மீண்டும் இப்போது மறுபடி கான்சர் புத்தகத்துக்கு வந்திருக்கேன்
ஆனாலும் ஷெர்லக் ஹோம்ஸ் ஆச்சரியத்தினையும் விட மனசில்லாமால், பத்ரி சேஷாத்திரி, A Study in Scarlet ஐ ஒரு மோதிரம் இரு கொலைகள் என்று மொழி பெயர்த்திருக்கின்றார். அதனை மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கின்றேன். மேலே சொன்ன ஷெர்லக் ஹோம்ஸ் ஆங்கிலத்தை பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்ப்பில் , இது போன்ற சிக்கலைத் தீர்ப்பதில் முக்கியமானது பின்னோக்கியபடி காரணங்களைச் சொல்லிக் கொண்டு போவது தான். இது உபயோகமானது, எளிதானதும் கூட. ஆனால் மக்கள் இதை அவ்வளவாக
செய்வதே இல்லை...
என்பது வரை வந்துவிட்டேன்...
இதை இங்கே ஏன் எழுதுகிறேன் என்றால்,, சித்தார்த்த முகர்ஜி , வி எஸ் ராமசந்திரன் போன்றோரின் புத்தகங்களையும் எளிமையான தமிழில் கொண்டு வர வேண்டும்...
...
ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் என்னிடம் முழுமையாக இருந்தாலும்.. பிடிஎஃப் வடிவத்தில் கிடைக்குமே என இணையத்தில் தேட நவீன நாலந்தாவின் வலைத் தளம் சிக்கியது
http://www.nalanda.nitc.ac.in/
இதில் Classic Fiction கிடைக்கும் என உப சுட்டி
http://www.nalanda.nitc.ac.in/index.html
1 comment:
அன்பின் மௌளி - நானும் அடிக்கடி இணையத்தில் தாவித்தாவி - கடைசியில் எங்கிருக்கிறேன் - எதெது பாதிப் பாதியில் விட்டேன் - ஏதேனும் கவனத்தில் இருந்து விலகிவிட்டதா எனக் குழப்பத்தில் அடிக்கடி ஆழ்கிறேன். இதற்கு என்ன செய்யலாம். நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா
Post a Comment