Sunday, 16 October 2011

படுக்கையறைக் கதை

தினமும் இரவு பெட் டைம் ஸ்டோரியாக என் மகளுக்கு டெல்லியின் கதை சொல்லி வருகின்றேன்.. இதை முன்பே சொல்லியிருந்தேன்.

வெகு நாட்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் Mein Delhi Hoon..என ஒரு மெஹா சீரியல் வந்தது.. டெல்லி நகரமே தன் வரலாறு கூறுவது போல.. அந்த தொடரையும்.. Bakshi எழுதிய Delhi Through Ages என்ற புத்தகத்தையும் வைத்து இந்தக் கதையினை நகர்த்தி வருகின்றேன்.

தனது மாணவர்கள் சிலருடன் ஒரு பேராசிரியர், டெல்லிக்கு கல்விச் சுற்றுலா செல்வதாக கதைக் களம் அமைத்துக் கொண்டேன்

தமிழில் இது போல் டிவி சீரியல்கள் செய்யலாம்.. சென்னை, மதுரை, திருச்சி என சரித்திரம் நிரம்பிய நிறைய வாய்ப்புகள் உள்ளன

டெல்லி சரித்திரம் என்றால் என்னால் William Dalrymple ஐயும் அவரது Last Mughal புத்தகத்தையும் நினைக்காது இருக்க முடியுமா;

முகலாய வம்சத்து கடைசி பாதுஷாவாக அறியப்பட்ட Zafar கைதான பின்பு எழுதியதாகக் கருதப்படும் ஒரு ஆங்கிலக் கவிதையின் ஒரு பத்தியில்

Delhi was once a paradise
Where Love held sway and Reigned
But its charm lies ravished now
and only ruins remain

என்று சொல்வதாக தனது முன்னுரையில் William Dalrymple எழுதியிருக்கின்றார்

அது மட்டுமல்ல டெல்லியின் புராதானம், சரித்திரம், கட்டிடங்கள் பராமரிப்பு குறித்த அவரது வருத்தம் tragic neglect of Delhi's Magnificent Past என வெளிவருகிறது

Visiting Najafgrah, 20 kilometers beyond Indira Gandhi International Airport and scene of one of the most important battles in the siege of Delhi, I found that no one in the town had any knowledge or family memories of the battle; but instead recruitment posters for call centres were plastered all over the last surviving Mughal ruin in the town Delhi gate

பவன் வர்மா தனது Mansions at Dusk எனும் புத்தகத்தில் குறிப்பிட்ட டெல்லி சரித்திர இடங்கள் பத்தாண்டுகளுக்குள்ளேயே குப்பைமேடாகி விட்டது என்ற வருத்தமும் கலந்து தான் இரவுக் கதைகள் தொடர்கிறது

3 comments:

பாரதி மணி said...

உண்மையான வார்த்தைகள்... சந்திரமெளளீஸ்வரன். இப்போது தில்லியிலிருக்கிறேன். வெளியே போகவே தோன்றவில்லை. நான் பார்த்த தில்லியே வேறு!

பாரதி மணி

Ram said...

வழக்கம் போல் நன்கு ஆராய்ந்து புனையப்பட்ட பதிவு. ஆனால் ஒரு விஷயம் - இதே போல தமிழகத்தின் பிரதான நகரங்கள் பற்றியும் செய்யலாமே என்று நீங்கள் சொல்வது நடைமுறையில் தீய விளைவுகளையே தோற்றுவிக்கும் - ஏனென்றால் நிகழ்கால நிகழ்வுகளையே (ஒரு குறிப்பிட்ட கும்பலுக்கு பயந்துகொண்டு) திரித்துக் கூறும் நம் ஊடகங்களா சரித்திரத்தை உள்ளபடி எடுத்துரைக்கும்?

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - தில்லியினை பற்றிய அறிமுகக் கதைகள் செல்ல மகளுக்கு பெட் டைம் ஸ்டோரியாகக் கூறி வருவது நன்று. வரலாற்றினைப் பாடமாக, கதையாக வளரும் குழந்தைகளுக்குச் செல்வது நல்ல செயல் - நல்ல சிந்தனை. நல்வாழ்த்துகள் மௌளீக்கும் செல்ல மகளுக்கும். நட்புடன் சீனா