Wednesday, 1 August 2012

Uniform Civil Code-1

Uniform Civil Code என்பது குறித்து சின்ன சின்ன கட்டுரைகள் இங்கே எழுதலாம் என யோசித்து வைத்திருக்கிறேன்

அதன் முதல் படியாக‌

காட்டிலே அரசவை கூடியிருக்கு... அது அரசவை மட்டுமில்ல.. வழக்குகளை விசாரிச்சு நீதி சொல்ற இடமும்

சிங்க ராஜா.. இன்னும் எல்லா மிருகமும் இருக்கு..

“சிங்கம் கேட்குது இன்றென்ன வழக்கு... யார் இந்த ஐந்து பெண் ஒட்டகங்கள்... ஏன் அழுத படி உள்ளன”

சபையின் பொறுப்பாளரான , யானை எழுந்தது...,”அரசே இதோ இங்கே தங்கள் முன்பு நீதி கேட்டு நிற்கும் இந்த ஐந்து பெண் ஒட்டகங்களும்... அதோ திமிராக நிற்கிறதே அந்த ஆண் ஒட்டகத்தால் வஞ்சிக்கப்பட்டவை”

“ இன்னும் விளக்கமாக சொல்ல இயலுமா”

“சிங்க ராஜனின் கட்டளைப்படி... அந்த ஆண் ஒட்டகம் தான் இந்த ஐந்து பெண் ஒட்டகங்களை மணந்து கொண்டது.. ஆனால் இப்போது இவை ஐந்தையும் விலக்கிவிட்டு வேறொரு ஒட்டகத்தை மணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறது..”

சிங்கம் அந்தப் பெண் ஒட்டகங்களைப் பார்த்து கேட்டது,, “நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்...”

“அரசே நாங்கள் ஒட்டகமாய்ப் பிறந்ததே பாவம் என நினைக்கின்றோம்.. அதுவும் இந்த கொடிய ஆண் ஒட்டகத்தின் மனைவியாக இருக்க எங்களுக்கும் விருப்பமில்லை.. எங்களுக்கு விடுதலை பெற்றுத் தாருங்கள்... எங்கள்
வாழ்க்கைக்கு ஜீவாதாரமாக ஏதாவது தரச் சொல்லுங்கள்.. அதை வைத்து நாங்கள்
எதாவாது செய்து கொள்கிறோம்”

“ஏனப்பா ஆண் ஒட்டகமே.. நீ என்ன சொல்கிறாய்”

“சிங்க அரசருக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.. எங்கள் ஒட்டகக் கூட்டத்துக்கென ஒரு நியதி இருக்கிறது.. நாங்கள் எந்தக் காட்டுக்கு குடியேறினாலும் எங்கள் நியதிப்படிதான் நடப்போம்.. நாங்கள் குடியேறும்
காட்டில் இருக்கும் நியதிகள் எங்களை கட்டுப்படுத்தாது”

“அது என்ன நியதி.. கையில் வைத்திருக்கிறாயா... கொடு படித்துப் பார்க்கிறேன்”

“இந்தாருங்கள் படித்துப் பாருங்கள்”

“ஏனப்பா இதில் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என நியதி
இருக்கிறதே... அதை இந்தக் காட்டிலே அப்படியேவா செய்ய வற்புறுத்துகிறீர்கள்.... இதில் ஒவ்வொரு குற்றத்துக்கு ஒரு நியதி சொல்லப்பட்டுள்ளதே.. இந்த நியதிகளின் படி ஒட்டகங்களுக்கு மட்டும் தண்டனை தரலாம்.. ஏனையவருக்கு இந்த வனத்தின் பொதுவான் நியதிகளின் படி தண்டனை தரலாம்.. என்ன ஒட்டகமே ஒப்புக் கொள்கிறாயா...

இங்கிருக்கும் ஒட்டகங்களே ஒப்புக் கொள்கிறீர்களா... உங்களின் நியதிப் படியே நீங்கள் திருமணம் செய்வதற்கு , மனைவியரை அக்கறையின்றி துரத்தி விடுவதற்கு எல்லாம் நியதி வைத்திருக்கின்றீர்கள் அதே போல் நீங்கள்
திருடினால் இன்ன , கற்பழித்தால் இன்ன, என குற்றங்களுக்கும் ஒட்டகங்களுக்கென நியதி வைத்திருக்கின்றீர்களே அந்த நியதிகளை நீங்க குடிபோகும் எல்லா காட்டிலும் அமுல்படுத்த ஏன் சொல்ல வில்லை...”

சிங்கம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதை விட ஓடுவதே மேல் என நினைத்து ஒட்டகங்கள் ஒடிவிட்டன

3 comments:

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

ஒட்டகமெல்லாம் அப்படி ஓடத் தயாரில்லை; அவை என்ன சொகிறதென்றால் அந்த தண்டனைச் சட்டங்களை ஒட்டக் நீதிமன்றங்கள் மட்டுமே விசாரிக்கவேண்டும்; ஒட்டக அரசுகள் மட்டுமே அந்த தண்டனைகளை அமுல்படுத்த முடியும்; எனவே இதற்கெல்லாம் தோதாக முழழுமையான ஒட்டக அரசு வேண்டும் என்கின்றன. -கண்ணன்

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - துவக்கமே அருமை - ஓட்டகங்கள் சில விதிமுறைகளை மட்டுமே தங்களுக்கென ஏற்படுத்தப்பட்ட நியதிகளீல் இருந்து ஏற்க வேண்டுமெனவும் - மற்ற விதிமுறைகள் பொது சிவில் சட்டத்தில் இருந்து ஏற்றுக் கொள்ளப்படலாமென்றும் முடிவெடுத்துள்ளன என்பது ஏற்க இயலாத ஒன்றல்லவா ? அடுத்த பகுதிகளையும் பார்ப்ப்போம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

பின் திடர்பதற்காக