Thursday 20 October 2011

How to Hug


அவனுக்கு ட்ரெயினுக்கு நேரமாகிவிட்டது.. ரொம்ப வேகமாக ஸ்டேஷனுக்குள் ஓடி வந்து கொண்டிருக்கிறான்.. எந்த ப்ளாட்பாரம். எந்தப் ப்ளாட்பாரம்.. அய்யோ 4 வது ப்ளாட்பாரம்.. படியேறி ,, எதிரே வந்தவர்.. முன்னே போய்க் கொண்டிருப்பவர் எல்லாரையும் தள்ளி விட்டபடி பாய்கிறான்.. போச்சு.. அதோ ட்ரெயின் வந்து .. ஐயோ கிளம்பி விட்டதே.. பல படிகளை தாவித் தாவிக் கடக்கிறான். படி இறங்குமிடத்தில் புக் ஸ்டால்.. மிகப் பெரிசாக ஒரு புத்தகம் How to Hug என்று தலைப்பு.. ஆகா சுவாரசியமாகப் படித்துக் கொண்டே போகலாம்; கிளு கிளுப்பான கதை போலும்.. கடைக்காரரிடம் காசைத் தூக்கி எறிந்து அந்தப் புத்தகத்தைக் கவர்ந்து பையில் திணித்து.. வேக வேகமாக ஓடி.. எப்படியோ ட்ரெயினுக்குள் ஏறிவிட்டான்.. ஆனால் அவன் ஏற வேண்டிய கோச் இது இல்லை.. பக்கத்துக் கோச்.. டிக்கட் பரிசோதகர் , “ சார் என்ன இது .. இப்படி சாகசம் செய்து கொண்டு ,, மிகவும் ஆபத்தான் வேலை நீங்கள் செய்தது” அன்பாக கடிந்து அடுத்த கோச்சுக்கு போகும் வெஸ்ட்யூபில் கதவினைத் திறந்து விட்டார்.
அப்பாடா.. இதோ என்னுடைய சீட்.. மடக் மடக் என்று ஒரு பாட்டில் தண்ணீர் குடித்தான். இப்போது அந்த ரசமான புத்தகத்தை படிக்கலாம். திணித்த இடத்திலிருந்து அந்த தாட்டியான புத்தகத்தை உருவினான்
அது ஆங்கிலப் பேரகராதி தொகுப்பில் 12 வது வால்யூம் How எனும் வார்த்தையில் தொடங்கி Hug எனும் வார்த்தையில் முடிகிறது

5 comments:

Giri Ramasubramanian said...

Class :-)

Palaniappan said...

அவனை போல நானும் ஆவலுடன் இந்த பக்கத்தினை படிக்க வந்தேன்..இப்படி ஒரு கடியை நான் எதிர்பார்கவில்லை

Guru Prasad Pandurengan said...

Nice :)

cheena (சீனா) said...

அய்யோ மௌளீ - இப்படிக் கடிக்கறீங்க - இதுதான் ஹவ் டு ஹக்கா ...... ம்ம் வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Yaathoramani.blogspot.com said...

சொல்லிச் சென்ற விதம் அருமை
முடிவில் என்னையறியாது சிரிப்புவந்துவிட்டது
அருமையானபதிவு
தொடர வாழ்த்துக்கள்